புதன், 18 அக்டோபர், 2017

வில்லவராயர் மரபினர்

வில்லவதரையர், வில்லவதரையனார், வில்லவராயர், வில்வராயர் என்பது கள்ளர் பட்டங்களில் ஒன்று. இப்பட்டமுடையவர்கள் சோழ மற்றும் பாண்டிய மண்டலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.


வில்லவராயன்பட்டி – தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் கோயில்பத்து ஊராட்சியில் வில்லவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.


ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது…………..(தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2 , பக்கம் 168).

இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ‘ அரையன் மகன்’ என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் ‘இவன்’ உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்’ என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.






புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயிலில் பரிவட்டம் கட்டி மரியதையை ஏற்றுக்கொள்ளும் 
திரு. ஜெயராம் இராசகண்டியருடன் திரு அருணாச்சலம் வில்லவராயர்.  


வில்லவராயர்‌ பட்டமுடைய  கள்ளர்கள் வாழும் திண்டுக்கல்




திருமங்கலக்குடி கோயில் கல்வெட்டு



பொன்னி எனும் காவிரியின் வடகரையில் அமைந்த திருத்தலம்தான் திருமங்கலக்குடி சிவாலயமாகும். சோழர்கால கல்வெட்டுக்களில் இவ்வூர் விருதராஜ பயங்கர வளநாட்டு வேம்பற்றூரான எதிரிலி சோழ சதுர்வேதி மங்கலத்து பிடாகை (சிற்றூர்) மங்கலக்குடி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டிலோ விருதராஜ பயங்கர வளநாட்டு, மண்ணி நாட்டு திருமங்கலக்குடி என்ற குறிப்பு காணப்பெறுகின்றது.

சுங்கம் தவிர்த்த முதலாம் குலோத்துங்க சோழனின் பதினாறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1086) வில்லவராயன் என்ற அலுவலன் செய்த அரசு நடவடிக்கைகளைப்பற்றி மகாமண்டபத்து தென்புறச் சுவரிலுள்ள ஒரு கல்வெட்டு விளக்குகின்றது. மூன்றாம் இராஜராஜ சோழனின் இருபத்து நான்காம் ஆண்டு கல்வெட்டுச் சாசனமொன்று அதே மண்டபத்தின் தென்புறச் சுவரில் காணப்பெறுகின்றது.

கோப்பெருஞ்சிங்கன் என்ற பிற்கால பல்லவ மன்னனின் இருபத்தைந்தாம் ஆண்டு (கி.பி. 1268) சாசனமொன்று இவ்வாலயத்து வடபுறச் சுவரில் இடம்பெற்றுள்ளது. அச்சாசனத்தில் விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டுத் திருமங்கலக்குடி உடையாரான ஈசனார் புராண நாயனார் கோயில் முதல் பிராகாரத்தின் மேலைத் திருநடை மாளிகையின் வடபக்கத்தில் உள்ள நாயகர் திருமண்டபத்துத் தெற்கில் பத்தியில் அரையன் உதையஞ் சேந்தானான தொண்டைமான் என்பவர் ஆளப் பிறந்தீஸ்வரமுடையார் என்ற சிறிய சிவாலயம் ஒன்றினை எடுப்பித்தார் என்று கூறுகின்றது.

அத்தொண்டைமானாரின் சொந்த ஊர் பாண்டி குலாசனிவளநாட்டு ஆற்காட்டுக் கூற்றத்துப் பெருமங்கலம் என்ற குறிப்பும் அங்கு கூறப்பெற்றுள்ளது. இவ்வூர் தற்போது தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் அம்மன்பேட்டை என்ற பெயரில் திகழ்கின்றது.

திருமங்கலக்குடி கல்வெட்டு கூறும் ஆர்காட்டு கூற்றத்து பெருமங்கலத்தினனாகிய தொண்டைமான் என்பான் திருமங்கலக்குடி திருக்கோயிலுக்குள்ளேயே ஆளப்பிறந்தீஸ்வரமுடையார் என்ற சிற்றாலயத்தை எடுப்பித்ததோடு அக்கோயிலுக்காக நிலக்கொடையையும் அளித்துள்ளான். இன்றும் அம்மன்பேட்டை தொண்டைமான், வாண்டையார், நாட்டார் , தேவர் பட்டமுடைய கள்ளர் மரபினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தொண்டைமான்






குற்றம்‌ பொறுத்த நாதர்‌ கோவில் கல்வெட்டில்



நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ள தலைஞாயிறு குற்றம்‌ பொறுத்த நாதர்‌ கோவில் கல்வெட்டில் குலோத்துங்க சோழனின்‌ அதிகாரி ராஜராஜதேவரான வில்லவராயர்‌ குறிப்பிடப்படுகிறார். இந்த கல்வெட்டில் கையெழுத்து இடும் அதிகாரிகளாக காடுவெட்டியார், மழவராயர், விசயராயர், கொங்கராயர், வைராயர், பாண்டியராயர் , வேணுடையார் (வேணாடுடையார்)போன்றோர்.




வேணுடையார் (வேணாடுடையார்)




காடுவெட்டியார்

மழவராயர்
விசயராயர்
கொங்கராயர்

வைராயர்
பாண்டியராயர் 








உஞ்சினி, ஆனந்தவாடி செப்பேடுகள்‌

காலம்‌ : மல்லிகார்ஜுனராயர்‌, சக வருஷம்‌ 1385, இ.பி. 1463. 

இடம்‌ : உஞ்சினி பெருவழியப்பர்‌ ,கோயில்‌ தர்மகர்த்தா திரு.சாமிநாத படையாச்சியிடம்‌ உள்ள செப்புப்பட்டையம்‌. 


செய்தி : வில்லவராயர்‌ என்பவர்‌ இப்பகுதியின்‌ நிருவாக அதிகாரியாக இருந்த  போது பஞ்சவராயர்‌, வள்ளையார்‌, அங்குராயர்‌, பக்கமழகியார்‌ ஆகிய நான்கு பேர்களுக்கு காணியாட் சியாக நிலம்‌, வீட்டுமனைகள்‌ கொடுக்கப்பட்டன. அவை சானைக்குறிச்சி, சென்னிவனம்‌, இராச கம்பீரபுரம்‌, உஞ்சினி ஆகிய ஊர்களில்‌ இருந்தன. பெருவழியப்பார்‌ கோயில்‌ முதல்‌ மரியாதை உள்ளிட்ட உரிமைகளும்‌ கொடுக்கப்‌ பட்டுள்ளதைத்‌ தெரிவிக்கிறது. 

மல்லிகார்ஜுனராயர்‌ தன்னை இதில் வன்னிய குலகாலன்‌ என்று குறிப்பிடுகிறார். 

வில்லவராயர்‌, பஞ்சவராயர்‌, வள்ளையார்‌, அங்குராயர்‌, பக்கமழகியார்‌ என்ற கள்ளர்  குடும்பங்கள் இன்றும் தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதியில் உள்ளனர்.





வில்லவராயர்‌ பட்டமுடைய  கள்ளர்கள் வாழும் திண்டுக்கல்



அங்கராயர் பட்டமுடைய  கள்ளர்கள் வாழும் புதுக்கோட்டை வத்தனாக்கோட்டை அங்குராப்பட்டி







வள்ளையார்‌ பட்டமுடைய  கள்ளர்கள் தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வட்டாரத்தில் அமைந்துள்ளது கண்ணுகுடி மையம்











பஞ்சவராயர் பட்டமுடைய  கள்ளர்கள் புதுக்கோட்டை பாலண்டாம்பட்டி 


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்