தமிழர்களின் ஆதிகுடிகளான நாகர்களின் வழித்தோன்றல் தான் இந்த கள்ளர்கள். கள்ளர்களின் (முக்குலத்தோரின்) வழித்தோன்றல்கள் தான் சோழ, சேர, பாண்டிய, பல்லவ, முத்தரையர் மற்றும் பலர்.
இச்செந்தமிழ் நிலத்தில் வடக்கில் வேங்கடமலையும் தெற்கில் குமரியாறும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லையாகக் கொண்ட இத்தமிழ் நிலம் முடியுடை மூவேந்தர் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் ஆளப்பட்டு வந்திருக்கிறது.
தமிழக வரலாற்றில் மிகத்தொன்மையான காலம் முதற்கொண்டு சிறப்புற்று வாழும் கள்ளர்குடி தனிச் சிறப்புடையதாகும். இவ்வினப் பெருமக்கள் தமிழகத்தை ஆண்ட பல்வேறு அரச குடும்ப தோற்றல்களாகவும், தொடர் புள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு இலக்கியம், கல்வெட்டுகள், ஓலைசுவடிகள் மற்றும் செப்பேடுகள் காட்டுகின்றன.
சங்ககாலம் முதற்கொண்டு மிகப் பிற்காலம் வரையில் கள்ளர் மரபினர் நாட்டாச்சியோடு தொடர்புடன் விளங்கியுள்ளனர்.
1) நாகர்,
2) இலம்பகர்ணர்
3) வேளிர்,
4) செம்பியர், சோழர்,
5) சேரர்,
6) புல்லி,
7) பாண்டியர்,
8) தொண்டைமான்,
9) கங்கர்,
10) முத்தரையர்,
11) பல்லவர்,
12) மலையர், மழவராயர்,
13) அதியமார்,
14) பழுவேட்டரையர்,
15) சேதிராயர்,
16) வாணாதிராயர்,
17) கண்டியர்,
18) இராசாளியார்,
19) காடுவெட்டியார்,
20) கலியராயர்,
21) வேலர்,
22) வல்லவராயர், வல்லத்தரசு
23) பல்லவராயர்,
24) கோபாலர்,
25) புவிராயர்,
முதலிய கள்ளர் குலத்தவர் நாடாண்டுள்ளனர் என்பது வரலாறு.
நாகர்களில் இருந்து தோன்றிய, அதில் இருந்து பிரிந்து போன ஆப்ரிக்க குடிகளிலும் , அதே போல சிந்து சமவெளி பகுதியில் காணப்படும் சில ஊர்கள் கள்ளர் பெயர்களையும் மற்றும் தமிழ் பெயர்களையும் தாங்கி நிற்கின்றன.
இறுதியாக தமிழகத்தில் 325 ஆண்டுகளாக ஆட்சி செய்த தொண்டைமான்கள் கலசமங்கலம், சிங்கமங்கலம் பகுதியை இணைத்து புதிய கோட்டையை மையப்படுத்தி புதுக்கோட்டையை உருவாக்கி அதனை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் முன்பு திருமயத்தை ஆண்ட கள்ளர் குல தொண்டைமான் மன்னர்கள் ஆவார்கள்.
ஒருநாட்டின் வரலாறு பெரும்பாலும் அந்த நாட்டின் அரசுகளின் தோற்றமும் மறைவும் பற்றியதாகவே அமைந்திருக்கும். அரசர்களின் செயல்கள், பெற்ற வெற்றிகள், கண்ட நன்னெறிகள் ஆகியவற்றை ஒட்டியே வரலாறுகளும் அமைந்துள்ளன. அரசர்களை அடுத்து அந்நாட்டின் சான்றோர்களை கொண்டு வரலாறுகள் புதிய திருப்பங்களையும் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
கள்ளர் குடியில் மன்னாதி மன்னர்கள் , சான்றோர்கள் வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொரு கள்ளருக்கும் , கள்ளர்குடிக்கும் பல தனி சிறப்பு உள்ளது:
1) எந்த இனத்திற்கும் எந்த சாதியினரும் இல்லாத, உலக வரலாற்றில் ஈராயிரத்திற்கு மேல் பட்டப்பெயருள்ளவர்கள்.
2) இவர்களது தனிப்பட்ட வளரி ஆயுதம்.
3) இவர்கள் வாழும் பகுதிகளின் நாடு என்ற அமைப்புகள்.
4) கள்ளர்களின் வீர விளையாட்டான 'சல்லிக்கட்டு'.
5) தமிழ் மொழி மீதுள்ள ஆர்வம்
(அரித்துவாரமங்கலம் பெரும் புலவர் இரகுநாத ராசளியார் ” தொல்காப்பியருக்கு முதன்முதலில் சிலை வைத்தவர் வா.கோபாலசாமி இரகுநாத ராசாளியார் , சுந்தரராச நாட்டார் - கரந்தை தமிழ்ச் சங்கம்)
6) நாட்டின் புற மண உட்பிரிவுகள்: வகுப்பு, தெரு, கரை, கிளை என்பன.
7) தலைவன்பட்டம் - அம்பல(க்)காரன், நாட்டான்
8) குலப்பட்டம் - தேவர், தொண்டைமான், இராசாளி, நாட்டார், வன்னியன், பிள்ளை, அம்பலகாரன், முத்தரையன், மாளுசுத்தியான், காளிங்கராயன், சம்புவராயன், வாண்டையார், சேர்வைகாரன், சோழகன், சம்பட்டியார், பழுவேட்டரையர் மேலும் பல பட்டங்கள்.
9) போன நூற்றாண்டு வரை கள்ளர் இன ஆண்மகனுக்கு என தனி கொண்டை, தலையில் உருமால், காதுகளில் வண்டிகடுக்கன் மற்றும் துளையிடப்பட்ட காது மடல்கள், நீட்டிக்கப்பட்டு அதில் தடிமனான உலோக காதணிகள்.
குறிப்புகள்:
மேலே உள்ள எல்லாவற்றிக்கும் உள்ள ஆதாரங்கள் என்ன என்பதை அடுத்த அடுத்த பகுதியில் காணலாம்.