சனி, 21 அக்டோபர், 2017

இலங்கையை ஆட்சி செய்த லம்பகர்னர் என்பவர்கள் கள்ளர்கள்





கள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று நாம் அறிந்ததே, இதனையே நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் "கள்ளர் சரித்திரம்" நூலில் கூறுவர். அந்த நாகரில் ஒரு பிரிவினரான இலம்பகர்ணர் இலங்கையை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர். இலங்கையை ஆண்ட இலம்பகர்ணர் என்னும் வம்சத்தில் நாகன் என்ற பெயர் தாங்கிய பலர் உள்ளனர். 

இலம்பகர்ணர் என்ற குழுவினர் தென் னிந்தியாவில் இருந்ததாகவும் மகாவமிசம் கூறும்.



யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது.
#/{
இந்தியா கிட்ட இருப்பதாலும் வாடைக் காற்றுக் காலத்திலும், சோழகக்காற்றுக் காலத்திலும் கடற்பிரயாணஞ் செய்யக்கூடிய வசதி இருத்தலாலும் அங்கிருந்து மக்கள் வந்து குடியேறியிருக்க வேண்டும்.” என்று று.யு.ளு. போக் என்பவர் கூறியுள்ளார்.
இதே கருத்தை சேர். உவில்லியம் யோன்ஸ், லூயிஸ் நெல், ஊ.ளு. நவரத்தினம் என்போரும் வெளியிட்டிருக்கின்றனர். விஜயன் நகுலேஸ்வர ஆலயத்தைப் புதுப்பித்தான் என்று கூறப்பட்டிருத்தலாலும், திருமூலர் இலங்கையைச் சிவபூமி என்று கூறியிருத்தலாலும் மிகப்பழைய காலத்தில் தமிழர்கள் இங்கே குடியேறினர் என்று கருத இடமுண்டு. அப்படியானால் அவர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது.
அவர்கள் தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய கள்ளர் என்னும் சாதியார் என்று கூறலாம். கள்ளருடைய காதுகள் பாரமான காதணிகளுடன் தூங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள், கள்ளர் மறவரைச் சார்ந்த “சாதியார். ஆவர்கள் கொள்ளை, கொலை , களவு முதலிய மறத்தொழிலைச் செய்யும் இயல்புடையவர். போர் புரிதலிலும் வல்லவர்கள் என்று “சேர் வால்றார் எலியெற்’ கூறியுள்ளார். ஆவர்கள் இலங்கையின் வடபகுதியை 200 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
தமிழர் ஆதிக்கம்
யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்த நாகர், லம்பகர்னர் என்போருடைய ஆட்சிகள் முறையே கி.பி. 303 கி.பி, 556. என்னும் ஆண்டுகளோடு முடிவடைந்தது. இதன் பின்னர் குடியேறிய படைவீரர்களுடைய ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மறலர்பன் வட கிழக்கிலும், தென்கிழக்கிலும் பாணர்கள் தென்மேற்குப் பகுதிகளிலும் ஆட்சிப் பீடங்கள் அமைத்தனர். அவை வடமறாச்சி (வடமறவர் ஆட்சி), தென்மறாட்சி (தென்மறவர் ஆட்சி) என்னும் பெயர்களைப் பெற்றன.
கிபி. 6ம், 7ம், 8ம் நூற்றபண்டுகளில் சிங்கள அரச குடம்பங்களுக்குள் ஏற்பட்ட கலகங்கள் காரணமாக அநேக அரசர்களும், பிரமுகர்களும் கொல்லப்பட்டனர் இது காரணமாக யாழ்ப்பாணத்திற் சிங்களவருடைய ஆதிக்கம் நிலைகுலைந்தது. இதைக்கண்ட மறவர், பாணர் முதலிய தமிழ்ப்ப்பிரமுகர்கள் சிங்கள அரசுக்கு மாறக வரிகொடா இயக்கத்தையும்,நிலச் சுவீகரிப்பு இயக்கத்தையும் தொடங்கிப் பூரணவெற்றி பெற்றனர். இவ்வெற்றி சிங்களவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறச் செய்தது. சகல வாய்ப்புகளும் நிரம்பிய இந்த நேரத்தில் தமிழ்ப்ப் பிரமுகர் ஒன்றுகூடி யாழ்ப்பாணத்தில் ஓர் தமிழரசைத் தாபிக்க முடிவுசெய்து தங்கள் தலைவனாகிய பாண்டி மழவனை மதுரைக்குப்போய் ஒரு இராசகுமாரனை அழைத்து வருமாறு அனுப்பினர்.
பாண்டியமழவன் மதுரைக்குப் போய், சேதுவை காவல் செய்யுமாறு நியமிக்கப்பட்ட இருவரின் வழித்தோன்றலும், சேதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும், பாண்டிய மன்னனின் சேனைத் தலைவனுமாக விளங்கிய சிங்கையாரியனை (கூழங்கையனை) அழைத்துவந்து முடிசூட்டி யாழ்ப்பாணத்துக்கு அரசனாக்கினான். ஆரியன் என்னும் சொல் ஓர் உபசாரப் பட்டமேயன்றி பிராமணத் தொடர்பைக் குறிக்காதென்பது “ஆரியன் என்னும் சொல் ஓர் உபசாரப் பட்டடேனற்நி பிராமணத் தொடபைக் குறிக்காதென்பது “ஆரியவேந்தனென்றணிமணிப் பட்டமும் நல்கி” என்றும் செகராச சேகரமாலைப்பாட்டால் விளங்கும்.
அரசர்கள் தங்கள் உயர்பதவிக்கேற்ப உயர்குலப் பட்டங்களைத் தங்கள் பெயரோடு சேர்த்து எழுதுதல் மரபு. கலிங்க அரசர்கள் தங்களளைக் கறகா குலத்தவரென்றும் சேர அரசர்கள் தங்களை அக்கினி குலத்தவரென்றும், பாண்டிய அரசர்கள் தங்களைச் சந்திர குலத்தவர் என்றும் கூறுவது அக்கால வழக்கமாக இருந்தது.
கலப்பு விவாகம் பிராமணருக்கும், மறவருக்கும் இடையில் நடக்கும் வழக்கம் இல்லை. நடந்தாலும் கலப்பு விவாகத்தாற் பிறந்த பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடையாது. ஆரியன் என்ற சொல்லில் மயங்கி டாக்டர் லிவறா, கீயுறோஸ் (ஞரநசைழண) காசிச்செட்டி முதலியோர் சிங்கையாரியனுக்குப் பிராமணத் தொடர்பு கற்பித்தனர்.
ஆரியர் சக்கரவர்த்திகள் செந்தமிழ் பேசுந் தமிழரே அன்றி தெலுங்கு பேசும் கலிங்க நாட்டவர் அல்லர். ஆரசகுமாரர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது பாண்டி மழவன் அவர்களைத் தேடி ஆயிரம்மைலுக்கப்பாலுள்ள கலிங்க நாட்டிற்குப் போகவேண்டிய அவசியமே இல்லை. இராசநாயக முதலியார் சிங்கையாரியனை கலிங்கதேசத்தவனாக்கினது சிறிதும் பொருந்தாது. ஆரியச் சக்கரவர்த்திகள் எல்லாரும் தமிழ்ப்மொழி பேசினரேயன்றித் தெலுங்கு முதலிய பிறமொழிகளைப் பேசினார் என்பதற்கு ஒரு வகையான ஆதாரமும் கிடையாது. அவர்கள் தமிழமொழி பேசினர் என்பது “கூயுறொஸ்’ என்பது கூற்றினால் அறியலாம். (1) யாழ்ப்பாணத் தமிழரசர்கள் இராமேஸ்வரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது, அவர்களது நாணயங்களின் சேது என்னுஞ் சொல் பொறிக்கப்பட்டிருப்பதாரும் அறியலாம்.
தமிழரசும் குடியேற்றக்காரரும்
தமிழரசு கி.பி. 795இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கியபோது குடியேற்றக்காரருக்கு நல்ல
காலம் பிறந்தது. #/}
இவ்வாறு அந்த நூலில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த நூலில் கூறும் லம்பகர்னர் என்று தொங்கும் காது உடைய பழக்கம் கள்ளர்களிடம் கடந்த நூற்றாண்டு வரை உள்ள பழக்கம். இதை ஆங்கிலேயர்கள் பதிவும் செய்துள்ளனர்.




‘’பெண்ணுக்கு அழகு காது; பொடனி வரை காது வளர்த்து தண்டட்டியைக் காற்றில் நீந்தவிட்டு நடக்கும் அழகிகள்தான் கள்ள நாட்டைக் கட்டி ஆள்கின்றனர். வளர்ந்த காதுகளின் வகை வைக்க முடியாத அழகை மெச்சி பாடி வைத்துள்ள பாட்டு ஊருக்கு ஊர் அம்பாரமாகக் குவிந்து கிடக்கிறது.



  • பாம்படம் = பாம்பு + படம் = பாம்பின் படம், தண்டட்டி , இது ஒரு கனமான காதணி. இதன் கனத்தால் அணிபவரது காதுமடலில் உள்ள துளை பெரிதாகி மடல் கீழ் நோக்கி நீண்டுவிடும். 

முன்பு கள்ளர் இனப் பெண் எப்படிப்பட்ட ஏச்சையும் பேச்சையும் தாங்கிக் கொண்டு எதிரடி தரக் கூடியவள்; ஆனால் அவளாலும் கூடத் தாங்க முடியாத அவலம் காதறுந்து போகும் நிலை. ’போடி காதறுந்த மூளி’ என்பதே அவளை உக்கிப் போகவைக்கும் சொல்.’’ அறுந்த காதோடு அலையும் அவலம் எவளுக்கும் வரக் கூடாது என்று ஒவ்வொருத்தியும் நினைப்பாள். ஒரு போதும் ஒட்ட வைக்க முடியாத காதோடு இருப்பவளின் மனதில் ஏற்படும் ஊனம் மரணம் வரை சரி செய்ய முடியாது.




இலம்பகர்ணர் ஆட்சி
*************************
கி. பி. 37 இல் ஈழ நாகனுடைய அரசாட்சியில் இலம்பகர்ணர் சிம்மாசனத்தைக் கைப்பற்ற முதல் முதல் முனைந்தனர். அரசன் மோரியணுயிருந்த பொழுதிலும் அரசாங்கத்திலும், பட்டாளத்திலும் உயர்ந்த உத்தியோகத்தை இலம்பகர்ணர் வகித்தார்கள் அரசன் முக்கியன ஒரு வேலைக்கு செல்கிற பொழுது இவனைப் பாதுகாப்பது இவர்கள் கடமையாக இருந்தது. ஒருநாள் ஈழநாகன் வழக்கமான தனது பரிவாரங்கள் புடைசூழ திசவீவாவைப் பார்க்கச் சென்றன். அவனோடு சென்றிருந்த இலம்பகர்ணர்கள் ஏதோ காரணத்தால் வழியில் திரும்பிவிட்டார்கள்.
இது தனக்குச் செய்த ஒர் அவமானம் எனக்கண்டு, அவர்களைத் தண்டிக்க கருதி கீழ்சாதியினரான சண்டாளரின் மேற்பார்வையில் தெருவேலைசெய்ய கட்டளையிட்டான். கீழ்சாதியினரின் கீழ் வேலை செய்யப் பணிந்தது இலம்பகர்ணருக்கு செய்த பெரிய அவமானமாகும். இதனால் இவர்கள் அரசனுக்கு எதிராக எழுந்து அவனைச் சிறைப்படுத்தினார்கள். ஆனால் ஈழநாகன் எதுவிதமோ தப்பிக்கொண்டான். இலம்பகர்ணர்களுக்குள் யார் அரசனுயிருக்க வேண்டுமென்பது பற்றி ஒற்றுமை ஏற்படாததால் ஈழநாகன் ஒரு படையுடன் மீண்டும் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.
இலம்பகர்ணரின் வல்லமை கி. பி. 60 வரை மோரியர்கள் இலங்கையை ஆண்டுவந்தார்கள் சுப்ப என்ற ஒரு வாயிற் காவலன் தந்திரமாக சிம்மாசனத்தைக் கைப்பற்றினான், அரசாங்கத்திலும் பட்டாளத்திலும் உயர்ந்த உத்தியோகம் வகித்த இலம்பகர்ணர் ஒரு வாயிற்காவலனிடம் வேலை செய்ய மறுத்துவிட்டனர். கி. பி. 67 இல் இவர்கள் தலைவர்களுள் ஒருவனான வசபன், சுபராஜனை தொலைத்துவிட்டு தானே அரசன் ஆனான்.
வசபன் விவசாயம் நீர்ப்பாசனம் ஆகியவற்றை விருத்திசெய்தான். அவன் பதினோரு குளங்களையும் பன்னிரண்டு வெட்டுவாய்க்கால்களையும் அமைப்பித்தான் எனக் கூறப்படுகிறது.
மகாவம்சம் எனும் நூலில் லம்பகர்னர் இனத்தைச் சேர்ந்தவன் வசபன் என்பவன் பற்றி கூறுவது:
வசபன் வடபகுதியில் வசித்து வந்த இவன் படைத்தலைவனுக இருந்த தனது மாமனிடம் வேலைபார்த்து வந்தான்.
"வசபன் என்ற பெயருடைய ஒருவன் அடுத்து அரசனுக வருவான்’ என்று ஜோதிடர்கள் கூறினர். எனவே தீவில் வசபன் என்னும் பெயர்கொண்ட எல்லோரையும் கண்டு பிடித்து கொன்று விடுமாறு அரசன் கட்டளையிட்டான்.
"நம்மிடமிருக்கும் வசபனை மன்னனிடம் ஒப் படைத்து விடவேண்டும்’ என்றெண்ணிய படைத் தலைவன் தன் மனைவியிடம் இது குறித் துப் பேசி விட்டு அதிகாலையில் அரசனிடம் சென்றான். அவனுடன் சென்ற வசபனைக் காப்பாற்ற எண்ணிய படைத்தலைவனுடைய மனைவி சுண்ணும்பு இல்லாமல் வெற்றிலையை மட்டும் அவனிடம் கொடுத்தனுப்பினாள். அரண்மனை வாயிலை அடைந்ததும் வெற்றிலை போட எண்ணிய படைத்தலைவன் சுண்ணும்பு இல்லாததைக் கண்டு, வீட்டுக்குப் போய் சுண்ணும்பு கொண்டு வருமாறு வசபஜன அனுப்பினன். சுண்ணாம்பு பெற்றுப்போக வீட்டுக்கு வந்த வசபனிடம் படைத்தலைவனுடைய மனைவி ரகசியமாக விஷயத்தைச் சொல்லி அவனிடம் ஆயிரம் பணம் கொடுத்து எங்காவது ஓடிப் போய் விடுமாறு கூறினுள். வசபன் மகா விஹாரத்துக்குச் சென்றான், தேரர்கள் அவனுக்கு உணவும் உடையும் அளித்தனர்.
நீ அரசனுகப் போகிருய்' என்று மீண்டும் ஒரு குஷ்டரோகி சொல்லக் கேட்ட வசபன் மனம் மகிழ்ந்து கிளர்ச்சிக்காரணுக மாறுவது என்று முடிவு செய்தான்.
இதற்கு வேண்டிய ஆட்களேத் திரட்டியதும் ஒவ்வொரு கிராமமாகத் தன் வசப்படுத்திக் கொண்டு ரோஹணுவை அடைந்தான். இப்படியே கொஞ்சங் கொஞ்சமாகத் தன் வசப்படுத்திக் கொண்டு இரண்டு வருடங் களுக்குப்பின் தேவையான படை வீரர்களுடன் தலைநகரை நோக்கிச் சென்றன். போரில் சுபராஜனை, வசபன் வெற்றி கொண்டதும் தலைநகரில் தன்னுடைய ஆட்சியை நிலை நாட்டினான்.
ஒரு சமயம் தன்னுடைய ஆயுள் காலம் குறித்து ஒரு ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். ‘பனிரெண்டு வருடகாலம் மட்டுமே வாழ்வாய்" என்று அவன் ரகசியமாகக் கூறினன். இதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்குமாறு கூறி அவனுக்கு ஆயிரம் பணம் கொடுத்தனுப்பிய பின்பு அரசன் பிக்கு கள் சபையைக் கூட்டி வணங்கி உபசரித்தான். *வணக்கத்துக் குரியவர்களே! வாழ்நாளை நீடிக்க வழியேதும் இருக்கிறதா?’ என்று அவர்களைக் கேட்டான். இருக்கிறது" என்று பிக்குகள் பதில் சொன்னர்கள். நீண்ட ஆயுளுக்குத் தடையாக உள்ளவற்றைப் போக்குவதற்காக வழியையும் கூறினார்.
வடிகட்டிகளேயும், வீடுகளேயும், வியாதி யஸ்கர்களுக்கு வேண்டிய சாதனங்கக் யும் வழங்க வேண்டும். "அதே போல் பாழடைந்த கட்டிடங்களேப் புதுப்பிக்க வேண்டும். ஐந்து புனித கத்து வங்களே மேற்கொண்டு அதனேக் கவனமாகப் பேண வேண்டும். "உபோசத தினத்தன்று பக்தியுடன் விரதம் இருக்க வேண்டும்' என்று பிக்குகள் கூறினர். "அப்படியே செய்வேன்' என்று கூறிய மன்னன் இவற்றையெல்லாம் நிறைவேற்றினான்.
மூன்று வருடங்களுக்கொரு முறை தீவிலுள்ள எல்லா பிக்குகளுக்கும் மூன்று ஆடைகளே வழங்கினான். தூர இடங்களில் வசித்த தேரர்களுக்கு உடைகள் அனுப்பி வைத்தான். முப்பத்திரண்டு இடங்களில், பால் சோறும், தேனும் வழங்க ஏற்பாடு செய்தான். அறுபத்து நான்கு இடங்களில் பலவிதமான விலேயுயர்ந்த பொருள்களேக் கொடையாக அளிக்க ஏற்பாடு செய்தான். நான்கு இடங்களில் ஆயிரம் தீபங்கள ஏற்றிவைத்தான். அதாவது சேதிய பர்வதம், துபராமாவிலுள்ள சேதியம், மகா ஸ்தூபம், போதி விருட்சம் இருந்த ஆலயம் ஆகிய நான்கு இடங்களில், சீதள கூட விஹாரத்தில் அவன் அழகிய ஸ்துரபங்கள் பத்து கட்டினான். தீவு பூராவிலுமுள்ள பழுதடைந்த கட்டிடங்களேச் சீர்படுத்தினுன்.
வள்ளியேர விஹாரத்திலிருந்த ஒரு தேரரிடம் பக்தி மேலிட்டு மகா வள்ளி கூடம் என்ற விஹாரத்தைக் கட்டினுன். மேலும் மகாகாமா அருகில் அநுராராமா விஹ ரத்தைக் கட்டி அதற்கு ஹேலிகாமத்தில் ஆயிரத்தெட்டு கரிசை நிலத்தை மானியமாக வழங்கினுள். தீச வர்த்த மானகத்தில் முஸ்ல விஹாரத்தைக் கட்டியதும் அதற்கு ஆலிசாரக் கால்வாய் நீரில் ஒரு பங்கை அளித்தான்.
கலம்ப திட்டத்திலிருந்த ஸ்தூபக்துக்குத் தீப கோபுரத்தை அமைத்தான். உபோசத மண்டபம் ஒன்றையும் கட்டினுன். ஆயிரம் கரிசை நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி அளிக்கும் ஏரி ஒன்றை வெட்டி, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தீபங்களே ஏற்ற எண்ணெய்க்கு வழி செய்தான். கும்பிகள் லக விஹாரத்தில் அவள் உபோசத மண்டபத்தை அமைத்தான். துTபராமாவில் ஒரு ஸ்தூப ஆலபத்தை அமைத் தான். மகாவிஹர ரத்தில் மேற்குத் திசையை நோக்கி வரிசையாக அறைகளேக் கட்டினுன். பாழடைந்துபோன சதுஸ்ஸா லா மண்டபத் தைப் புதுப்பித்தான். அழகான நான்கு புத்தருடைய உருவச் சிலேகளச் செய்து மகா போதி விருட்சத்தின் முன்பு சிலேகளே வைக்க ஒரு ஆலயத்தைக் கட்டினுன். அரசனுடைய மனேவி போதா என்பவள் அதே இடத்தில் ஒரு அற்புதமான ஸ்தா பந்தையும், அழகிய ஆலயத்தையும் அமைத்தாள்.
நல்ல காரியங்களேச் செய்வதில் நிரந்தரமாக மகிழ்ச்சியடைந்தவனுக அவன், நாற்பத்தி நான்கு வருட காலம் ஆட்சி செய்தான்.

வசபன் மற்றும் அவனுக்கு பின் ஆட்சி செய்தவர்களும் :
***************************************************************************
வசபன் பொ.பி. 66 - 110
வங்கனசிக திச்சன் பொ.பி. 110 -113
முதலாம் கசபாகு பொ.பி. 113 - 135
மகல்லக்க நாகன் பொ.பி. 135 - 141
பதிக திச்சன் பொ.பி. 141 - 165
கனித்த திச்சன் பொ.பி. 165 - 193
குச்சநாகன் பொ.பி. 193 - 195
குஞ்சநாகன் பொ.பி. 195 - 196
முதலாம் சிறிநாகன் பொ.பி. 196 - 215
ஒகாரிக திச்சன் பொ.பி. 215 - 237
அபயநாகன் பொ.பி. 237 - 245
இரண்டாம் சிறிநாகன் பொ.பி. 245 - 247
விசயகுமாரன் பொ.பி. 247 - 248
முதலாம் சங்க திச்சன் பொ.பி. 248 - 252
சிறிகங்கபோதி பொ.பி. 252 - 254
கோதாபயன் பொ.பி. 254 - 267
முதலாம் சேட்டதிச்சன் பொ.பி.267 - 277
மகாசேனன் பொ.பி. 277 - 304
சிறிமேகவண்ணன் பொ.பி. 304 - 332
இரண்டாம் சேட்டதிச்சன் பொ.பி. 332 - 341
புத்ததாசன் பொ.பி. 341 - 370
உபதிச்சன் பொ.பி. 370 - 410
மகாநாமன் பொ.பி. 410 -428
மித்தசேனன் பொ.பி. 428 - 429

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்