ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கள்ளர் என்பதன் பொருள் /அர்த்தம்




கள்ளர் அல்லது கள்வர் என்று இலக்கியத்தில் வரும் சொல் உயர்வாக யாரை குறிக்கின்றது

சங்க இலக்கியம் (கிமு 500 - கிபி300),
நீதி இலக்கியம் (கிபி 300 -கிபி 500),
பக்தி இலக்கியம் (கிபி700 - கிபி 900),
காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200),
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி1500),
புராண இலக்கியம் (கிபி1500 - கிபி 1800)



1) கி.மு 4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடல்

"கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்"
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"

பொருள்: கழலினைத் தரித்த திருந்திய அடியினையுடைய கள்வர் பெருமானாகியவனும், மழவரது நிலத்தை வணங்கச் செய்த மிக்க வண்மையையுடைய புல்லி என்பானது திருவிழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கடத்தை.

கள்வர் கோமான் : கள்ளர் தலைவன் புல்லி



"ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார் .....
கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ..”

பொருள்: பகைவர் ஆக்களைக் கவர்ந்துகொள்ளும், பழைய ஊரினராய கள்வர்கட்கு முதல்வனும், ஏவுதலைச் செய்யும் வீரர்கட்குத் தலைவனும், என்றும் கெடாத நல்ல சீர்த்தியினையுமுடையானும் ஆகிய பாண்டியனது.

கள்வர் பெருமகன் : கள்ளர் தலைவன் பாண்டியன்”





இச்சுரம் படர்தந் தோளே ஆயிடை
அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தெனப்
பின் படு பூசலின் வழிவழி ஓடி

பொருள்: அஇடை - அப்பொழுதே, அந்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென - அருஞ்சுரத்துக் கள்வர் ஆக்களைத் தொழுவினின்றுங் கொண்டகன்றனராக, பின் படு பூசலின் வழிவழி ஓடி - அவர்கள் பின் சென்று செய்யும் போரினைப்போல.

கள்வர் ஆ தொழு அறுத்தென : பசுக்களை கவர்ந்த சென்ற கள்ளர்



2) கி.மு 4 ஆம் நூற்றாண்டுபொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூலில்

"ஆறு அலை கள்வர் படை விட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவு இன் பாலை"



பொருள்:

கள்ளர் மறம் நீங்கி அன்பு கொள்ளத் தூண்டும் ஆற்றலுடையது யாழ். வழியில் செல்லும்போது பொருநன் யாழை மீட்டிப் பாலைப்பண் பாடுவது வழக்கம். வழியில் ஆறலை கள்வர் படைகொண்டு தாக்குவதிலிருந்து விடுபடுவதற்காகத் ,  யாழில் பாலைப்பண் பாடிக்கொண்டு பொருநர் கூட்டம் செல்லும் எனப் பாடல் தெரிவிக்கிறது. இதனால் ஆறலைக் கள்வர் அருள் காட்டுவர்.

ஆறு + அலை + கள்வர் - வழிப்பறி கள்ளர்


3) கி.மு 4 ஆம் நூற்றாண்டுதிருவள்ளுவர் இயற்றியதிருக்குறளில்

“ பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை”
(குறள் 1258:நிறையழிதல் அதிகாரம்)

பலவிதமாய் மாயங்களைச் செய்யவல்ல என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்த கள்வனாகிய என் தலைவன் தாழ்மையுடன் பேசுகின்ற மொழிகளல்லவோ என்னுடைய பெண்மையின் உறுதியை உடைத்து, என்னுடைய் நிறையை அழிக்கின்ற படைக்கலம், என்று காதற்தலைவி தன்னுடைய தோழியிடம் தன் தலைவனின் இனிய பசப்புச் சொற்கள் முன்பு தன்னுடைய உறுதி குலைவதௌக் கூறுகிறாள்.

நலங்க்கவர்ந்த கள்வன் - மனதை திருடிய திருடன்


4) கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முத்தொள்ளாயிரத்தில் சேர மன்னன் மீது

“இவன்என் நலங்க்கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறையழித்த கள்வனென்று”
  
“என் அழகைக் கவர்ந்த கள்வன் இவன்” ”என் மன உறுதியை அழித்த கள்வன் இவன்” என்று சேரனைப் சொல்கிறார்களாம் இளம் பெண்கள். சேரனைப் பார்த்ததும் உடைந்ததாம் அவள் மன உறுதி. அதனால்தான், “எனது நெஞ்சம் நிறையழித்த கள்வன்” அதாவது, என் மன உறுதியை அழித்த கள்வன் சேரன் என்று சொல்கிறாள்.”என் நலம் கவர்ந்த கள்வன்”என்று தலைவி சொல்வதாகக் கூறுகிறார்.

நலங்க்கவர்ந்த கள்வன் - மனதை திருடிய திருடன்


5) கி.பி. ஆறாம் நூற்றாண்டளவில் தோன்றிய கொங்கு வேளிர் எழுதிய பெருங்கதை ஆகும். சோழர் காலத்தைச் சேர்ந்தது.

“ மள்ளரொடு புணர்ந்த மாண்பிற் றாகிக்
கள்ளரொடு புணர்ந்த கட்டரண் குறுகிப் ”
மகத காண்டம் - மேல்வீழ் வலித்தது

பொழிப்புரை: இங்ஙனமாக எழுந்து சென்ற படை மறவர்களோடு கூடிய மாண்புடையதாய் ள்ளரோடு கூடிய காவலையுடைய அரண்களை எய்தி அவ்வரண்களிலுள்ள படைகளையுடைய மன்னர்கள்,

கள்ளரொடு புணர்ந்த : கள்ளருடைய காவல்


6) 8 ஆம் நூற்றாண்டு நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடலில் திருமங்கையாழ்வார்.
   
" வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே."
 (திவ். பெரியதி. 8, 10, 7).

  
பொருள்: பெருமானே! நான் யமதூதர்களுக்கு அஞ்சவேண்டிற்றுண்டோ? உனக்கு அடியனாகுமத்தனையே வேண்டுவது; யமபடர்கள் அவ்வளவிலே ஓடியொளிக்கப் பெறுவர்களன்றோ
   
கள்ளர்  - மறைந்து ஒளிந்து 

  
7) 8 ஆம் நூற்றாண்டு 

கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்


கள்வர் கள்வன் - கள்ளர்களின் தலைவன்


8) 9 ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் – திருக்கோத்தும்பி.

அ) “ வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட “

பதப்பொருள் : வன்னெஞ்சக் கள்வன் - வலிய நெஞ்சினையுடைய கரவுடையவன், மனவலியன் - திருந்தாத மனவலிமையுடையவன், என்னாது - என்று நீக்காமல்,கல்நெஞ்சு உருக்கி - கல்லைப் போன்ற என் மனத்தை உருகச் செய்து, கருணையினால் - தன் பெருங்கருணையினால், ஆண்டு கொண்ட - என்னை ஆட்கொண்டருளின.

விளக்கம் : ‘வன்னெஞ்சக் கள்வன்’ என்றது இறைவனிடத்தில் அன்பு கொண்டு உருகாத நிலையையும், ‘மனவலியன்’என்றது, அஞ்ச வேண்டுவதற்கு அஞ்சாது எத்தகைய தீய செயலையும் செய்யத் துணிதலையும் குறித்தனவாம்.

ஆ) “ கள்ளரோ புகுந்தீர் என்னக் கலந்துதான் நோக்கிநக்கு, வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையனாரே”

என்னும் அருண் மொழியில் (தி.4 ப.75பா.9) கள்ளர், வெள்ளர் என்பவற்றின் கருளர்,வெருளர் என்பவற்றின் மரூஉவேயாம்).


9) திருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணி என்னும் நூலில்

“கள்ளராற் புலியை வேறுகாணிய”


என்ற தொடருக்க அரசனைக் கொண்டு சீவகனை போர் காண வேண்டி என்று பொருள் கண்டார் உச்சிமேற் புலவர் நச்சினார்கினியர் இங்கே கள்ளர் என்பதற்கு அரசர் என பொருள் கண்டார். சீவகனைப் புலி என்று கூறியதற்கு ஏற்ப அரசரைக் கள்ளர் என்றார்.

கள்ளர் - அரசன் 
  

10) கம்பராமாயணம் எனும் நுால் கம்பரால் 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும்

 “ வருந்தல்இல் மானம், மா அனைய மாட்சியர்
பெருந் தவம்மடந்தையர் முன்பு,பேதையேன்,
“கருந் தனிமுகிலினைப் பிரிந்து,கள்வர் ஊர்
 இருந்தவள், இவள்” என, ஏச நிற்பெனோ ”


விளக்கம் : துன்பம் அடையாத மானமுடைமையின்கண் கவரிமானைப் போன்ற சிறப்பைப்பெற்ற பெருந்தவமுடைய மகளிருக்குமுன்னர் அறிவற்ற யான்; கரிய ஒப்பற்ற மேகம் போல்பவனை பிரிந்து இநத்ச் சீதை கள்வர்கள் வாழும் இலங்கையில் வாழ்ந்தவள் என்று பழித்துப்பேச அதுகேட்டு இருப்பேனோ ?

கள்வர் ஊர் - அரக்கர் (இராவணன்) ஊர்


11) கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மெய்கண்ட தேவர் என்பவர் இயற்றிய சிவஞான போதம்,

மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முக்கியமானதும், தலை சிறந்ததுமாகும். அதில்

  
"கள்வன் தான் உள்ளத்திற் காண்"



(சிபோ பா 55) இறைவனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு.

கள்ளர் புகுந்த இல்லம் - ஆன்மாவின் அறிவு. ( சைவ சித்தாந்த அகராதி).

கள்ளர், கள்வன் - இறைவன்


12) கி்பி. 15 ஆம் நூற்றாண்டளவில் வில்லிபாரதம் வில்லிபுத்தூரார்தமிழில் பாடிய மகாபாரதம் ஆகும்.

"கற் கொண்டு கல்மழை முன் காத்த கள்வன் கட்டுரைத்த”


பொருள்: கல் கொண்டு - (கோவர்த்தன) மலையைக்கொண்டு, கல்மழை முன் காத்த கள்வன் - காத்து நின்ற கண்ணன்.

கள்வன் - கண்ணன்


13) 20 ஆம் நூற்றாண்டில்கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார் திருக்குறட் குமரேச வெண்பா எழுதி உரை சொல்லிய

“கன்றினால்விளவெறிந்த கள்வனிவனின்று
 தேர்நனிகடாவினும் அன்றுபோரினிடை
 காணலாகுமெனதாடல்
 வெஞ்சிலையி னாண்மையே”


(இ-ள்.) கன்றினால் விள எறிந்த கள்வன் இவன் - கன்றைக்கொண்டு விளாமரத்தை வீசியடித்த மாயையையுடைய இக்கண்ணன், நின்று தேர் நனி கடாவினும் - (முன்னே) நின்று தேரை நன்றாகச் செலுத்தினாலும், எனது ஆடல் வெம் சிலையின் ஆண்மை -என்னுடைய வெற்றியைத் தரவல்ல வில்லின் திறமையை

“கிரித்தாழ்கவிகைக் கருங்கள்வன் கிளர் நூன் முனிவன் மைந்தனையும்,பிரித்தானவனுஞ் சூளுற்றா னென்றாரிருந்த பேரவையோர்”

(இ -ள்.) கோவர்த்தனமலையாகிய கவிந்த குடையையேந்திய கருநிறமுள்ள மாயவனாகிய கண்ணன், விளங்குகின்ற முப்புரி நூலையுடைய துரோணாசாரியனது புத்திரனான அசுவத்தாமனையும்,பேதப்படுத்தினான்;

கள்வன் - கண்ணன்
  
மேலே உள்ள பாடல்களில் கள்ளர் மற்றும் கள்வர் என்ற சொல் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் ஆகும்.


கள்ளர் அல்லது கள்வர்

 
  
திருமால்,

அரசன்,

இறைவன்,

மறைதல்,

வெட்சி மறவன்,

கருமை,

திருடர்

  
கள்ளர் இச்சொல்லின் வேர்ச்சொல் அல்லது சொல்லின் மூலம்:

கள்ளர் என்ற சொல் கருமை என்ற சொல்லில் இருந்தே உருவானது.

கள் - கரு - கருள் = கருமை , கிருஷ்ண (கருப்பன், கரியன்) என்னும் பெயரின் க்ருஷ் என்னும் முதனிலையும், கருள் என்னும் தென்சொல் திரிபே. கள்-கரு-கருள். கருளுதல்

கிருஷ்ண என்னும் சொல் கருப்பு என்னும் பொருளின் இருக்குவேதத்தில் வழங்கிற்று. கிருஷ்ண பக்ஷ (கரும்பக்கம்) கிருஷ்ண ஸர்ப்ப (கரும்பாம்பு) என்னும் பெயர்களை நோக்குக. கிருஷ்ண என்னும் சொற்கு வேத மொழியில் வேரில்லை; தமிழிலேயே உள்ளது.

சம்ஸ்கிருத்ததில் "காளா" என்பது கரிய நிறம் என்பதும் "காளி என்பவள் கரிய நிறமுடைய கிருஷ்ணனின் தங்கை என்பது . காளி தேவிக்கு 'கிருஷ்ன பிங்கலா' என்றொரு பெயர் உண்டு அதற்கு கரிய நிறத்துடையவள் என்று பொருள்.

கண்ணனும் கள்ளனும் கருப்பனும் கிருஷ்னனும் யாதும் ஒரே பொருளையுடைய பல பெயர்களே.

கருள் - க்ருஷ். கள் - கர் - கரு - கருள் = இருள்
களம் (கள் + அம்) என்றாலும் கருப்பு என்றே பொருள் தரும்.
கள் +அர்+ இ =களரி எனினும் கருமையே ஆகும்.
கருளர் - கர்ளர் – கள்ளர்
கல் - கள் - கள்வு - கள்வன்

{{

1.கரிய யானை (பிங்.);

2. கரியவன் (பிங்.).

3. கருநண்டு. “புள்ளிக் கள்வன்’’ (ஐங். 21).

}}


'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு
 முன்தோன்றி மூத்த குடியினர் " 

என்று வழக்கறிஞர் சுந்தரராசன் கல்லில் தோன்றியதால் கல்லர் என்று குறிப்பதே சிறப்பு என்பார் தமது தரணியாண்ட தமிழ்வள்ளல்கள் என்ற நூலில்.

"கல்லர் விளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்” (அகம். 83) போர்த் தொழிலையன்றி வேறெத்தொழிலும் பயிலாதவரென்றதற்குக் “கல்லா விளையர்” என்றார்.

ஆ = மாடு. பத்து = பற்று என்பதன் வழக்குத் திரிபு. பழங்காலத்தில், எதிரிகள் போர்தொடுக்கும்போது, நாட்டின் ஆக்களைக் கவர்ந்து செல்வர். ஆக்களை எதிரிகள் கவர்வது அல்லது பற்றிச்செல்வது "ஆபத்து" - அடுத்து முழுப்போர் வெடிக்கும். இப்படிக் கவர்ந்து செல்லும் மக்கள், " கள்ளர்" எனப்பட்டனர்.


அகராதியில் கள்ளர் விளக்கம் :

1) கள் + அர் : கருமை + மக்கள் (கருமையான மக்கள்)
அர் என்றால் : மக்கள் - உறவினர் (தமர் - தாம் + அர் = தம்முடைய மக்கள்)
2) கள் + அன் (படர்க்கை, ஆண்பால்): கருமையானவன்
3) கரியவன் ( - சூடாமணிநிகண்டு)
4) திருமால் (“கள்வனொலி கொண்டவளை)5) நண்டு
6) கற்கடகராசி
7) யானை
8) சோரன்
9) திருடன்
10) தீயோன்
11) பொல்லாதவன்
12) நடுச்செல்வோன்
13) முசு


தொல்குடி

தமிழ் சமூகத்தில் மூத்த தொல் பழங்குடி கள்ளர் குடி தான். மரபணு ஆய்வு அறிக்கையும் சரி, பழந்தமிழ் இலக்கியமும் சரி ,கள்ளர்களை தொல்குடி என்று பறைசாற்றுகிறது. சங்க இலக்கிங்களில் கள்வர் கோமான் புல்லி , கள்வர் பெருமகன் தென்னன் என வேந்தர்களாக கள்ளர் சமூகத்தினர் குறிக்கப்படுகின்றனர். அதன் பிறகு மறவர், அகமுடையார் என இனக்குழுக்கள் கள்ளர் சமூகத்தில் இருந்து தோன்றி தற்காலத்தில் முக்குலத்தோர் சமூக மக்களாக உள்ளனர்.
  
தமிழகத்தில் மிகப்பிரப்பலமான சொலவடை (பழமொழி)

கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனர்.

இந்த பழமொழி பற்றிய விளக்கத்தை 1912ல் Sir Athelstane Baines என்ற ஆய்வாளரும், 1914ல் சினிவாச ஐயங்காரும் தங்களின் புத்தகத்தில் விவரித்துள்ளனர்.

A Kallan bacame a Maravan.

( ஒரு கள்ளன் மறவனாக மாறுகிறான்)

The Maravan bacame a Agamudayan.

( மறவன் அகமுடையனாக மாறுகிறான்)

The Agamudayan baceme a Vellalan.

( அகமுடையான் வெள்ளாளன் ஆகிறான்)

இப்படி கள்ளர்களில் இருந்து முக்குலத்தோர் சமூகம் உருவாகி, அதில் இருந்து இன்றைய வெள்ளாளர் சமூகம் பிரிந்து செல்கிறது.

தமிழகத்தில் அரசியலிலும் சரி, அதிகாரத்திலும் சரி, தேவர், கவுண்டர் சமூகம் தான் ஆதிக்கம் செய்கின்றனர். மேலும் செட்டியார் சமூகத்தில் பிறந்தவராக கருதப்படும் மங்கல தேவி கண்ணகியை பற்றிய கும்மி பாடலில் கூட,


தெய்வத்தில் கள்ளச்சி
 ஞானத்தில் கரு மறத்தி
 மாணிக்கத்தில் செட்டிச்சி


என்று குடிமக்கள் படிநிலையில் கண்ணகியை வர்ணிப்பு செய்கின்றனர்.

கள்ளர் சமூகத்தின் திருமண உறவு முறை போல செட்டியார் சமூகத்திலும் செய்கின்றனர். கோவில் முறைய வைத்து திருமணம் செய்யும் பழக்கம் நாட்டுக்கோட்டை செட்டியாரிடம் உள்ளது. கூட்டங்கள் வைத்து திருமணம் செய்யும் முறை கொங்கு கவுண்டர்களிடம் உள்ளது. இப்படி தொல் பழங்குடி கள்ளர் சமூகத்தில் இருந்து ஒரு படிநிலையில் பல சமூக பிரிவுகள் ஏற்பட்டுள்ளது.. அப்படி பிரிந்து சென்றவர்களின் தொடர்புகளை இன்றைய பழக்க வழக்கங்களில் காணலாம்.

அதனால் தான் என்னவோ, M130y என்ற 70,000 ஆண்டுகள் பழமையான DNA மரபணு கள்ளர்களிடமே தற்போது மிஞ்சியுள்ளதையும் கவனிக்கிறோம். இந்த DNA வில் இருந்து தான் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரிந்தார்கள் என்பது ஆய்வறிக்கை. Reference : Tamil studies , Ethnography : castes and tribes






சுமேரியன் மொழி - முனைவர் கி. லோகநாதன்

சுமேரியன் மொழி குறியீடுகள் (Script) தமிழ் சுமேரியன் இரண்டிற்குமுள்ள உறவை வெளிப்படுத்துகிறது  அதில் சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சில வரிகள்

1) nin-mu me-gal-gal-la sag-kesda-bi za-e-me-en

Oh my lady, you are the guardian of all the great me's

நின்மோ மெய் கள்கள்ள சங்கி கட்டுபி ஜாயேமன்

விளக்கக் குறிப்பு:

mu> மோ: முன்னிலை மூவிடப்பெயர்: இஇங்கு ஒருமை, பண்மையிலும் வரும். சங்க இலக்கியத்தில் இது உண்டு - மொழிமோ சென்மோ என்றெல்லாம் அங்கே. me-gal-gal-la: மெய் கள்கள்ள என்பதில் வரும் அடை "பெருமை மிக்க" "கணம் பொருந்திய" " மிக மிகச் சிறந்த" என்ற கருத்துடையது. பாண்டியர்கள் 'கள்ளர்" எனப்படுவதோடு ஒப்பிடத் தக்கது. மூலப்பொருள் "பெருமை மிக்கோர்" "உயர்ந்தோர்" எனத் தெரிகிறது. sag-kesda: சென்னி கட்டு: தலைக்காவல் என்ற கருத்து போலும். தமிழில் விளங்கும் 'கஷ்டம்' என்ற சொல் இதனோடு சிந்திக்கத் தக்கது. கட்டிப்போடப்படுவதால் கஷ்டம் போலும். za-e-me-en : இஇங்கு "மேன்" என்பதை ‘மன்' என்னும் இஇடைச்சொல்லாகவும் ' மான்' என்னும் பெயர்சொல்லாகவும் கொள்ளலாம்.

நூல் : திராவிட இந்தியா , ஆசிரியர் : ந. சி. கந்தையா பிள்ளை

கள்வர் என்னும் பெயர் வலியை உணர்த்தும் ; கள் என்னும் அடியாகப் பிறந்தது - களிறு, (போர்க்)களம் முதலிய சொற்கள் கள் என்னும் அடியாகப் பிறந்தவை. மதுவைக் குறிக்கும் கள் என்பதற்கு வலியைத் தருவது என்பது பொருள்.

திரு.மு.இராகவையங்கார்

களவர் என்பது "கள்ளர்" என்பதற்குக் "கள்வர்” என்ற மாற்றுவடிவம் உண்டு; “களவர்" என்பது, பழைய ஓலைச்சுவரிகளில் “ள" என்பதன் கண் உள்ள புள்ளி இடப்பெறாமல் “களவர்” என ஆதலும் உண்டு.

முற்காலத்தில் இருந்து இலக்கியத்தில் பெரும்பாலும் களவர் என்றும் முந்தைய கல்வெட்டுகளிலும் களவர் என்றே குறிக்கப்பட்ட இப்பெரும் குடி. பிற்காலத்தில் கள்வர் என்றும் கள்ளர் என்று மாறுபட ஆரம்பிக்கிறது.

உதாரணமாக:

கல்வெட்டுகளில் பெரும்பாலும் புள்ளி வைக்காமலே வழங்கப்படும். படி எடுப்பவர்கள் அதனை வாக்கியத்தின் அர்த்தத்திற்கு ஏற்றார் போல் புள்ளி வைத்து படி எடுப்பார்கள்.








கண்டதேவி கல்வெட்டில் கூட வனனயரும களளரகளும் என்று தான் உள்ளது இதற்கு வன்னியரும் கள்ளர்களும் என்றே படி எடுக்கிறார்கள். அதேபோல் கல்வெட்டுகளில் வரும் களவர் என்ற சொல்லாடல் பின்பு கள்வர் என்றே படி எடுக்கப்படுகிறது என்று அய்யங்கார் குறிக்கிறார்.

அது போல கள்வர் உள் கள்வர் என்று செந்தலை கல்வெட்டு உள்ளதாக குறிக்ககிறார். ஆனால் அனைவரும் அதனை கள்வர் கள்வர் என்று மாற்றுகின்றனர்.அவரது ஆராய்ச்சி படி கல்வெட்டில் களவர் உள் களவர் என்று உள்ளதாகவும், அது கள்ளர் தலைவர்கள் கள்ளர்களில் இருந்து உருவாகிறார்கள் என்பதை உணர்த்தவே பெரும்பிடுகு முத்தரையர் கள்வர் உள் கள்வர் என்று குறிக்கப்படுகிறார் என கூறுகிறார்.

இந்த களவர் குடிகளே பிற்காலத்தில் கள்வர் என்றும் கள்ளர் என்றும் உருமாற்றம் அடைகிறது என்கிறார் கிருஷ்ணசாமி அய்யங்கார்.

1) சிலர் களவர் தமிழ்ச் சொல். களம் என்ற சொல்லிலிருந்து பெறப்படும், களம் என்றால் போர்க்களம். களவர் என்றால் போர்க்களம் சார்ந்த மக்கள் அல்லது களம் புகுவோர் என்று பொருள்படும் என்றும் கூறுவர்.


2) சிலர் முல்லை திணையின் கோவலர் ------> கோளவர் ------> களவர் ----> கள்ளர் ஆயினர் என்றும் கூறுவர்.


3) சிலர் களவர் - கள்வர - கள்வர்கள் - களேபர(ம்)ர்கள் – கலியரசர்கள் ஆயினர் என்றும் கூறுவர்.


4) சிலர் "களவர்" - "களபர்" - "களபா" - "களப்ஹர" - "களப்ஹ்ர"  ஆயினர் என்றும் கூறுவர்.


5) களவர் – கள்வர் ஆயினர் என்று ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதியில் கூறுகிறார்.







கி.பி. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்தாகவும் சோழ, பல்லவ நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது. தமிழ் எழுத்துகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன் வடிவத்திலும் மாற்றம் கொண்டது. (“ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”). அதே போல கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது. குசவன் - குயவன், சாதல் -சாவு, தன்செய்யூர் - தஞ்சாவூர் என்று மாறியுள்ளதை போல இன்று கள்வன், கள்வர், கள்ளன், கல்லன், என்ற சொல் கள்ளர் என்ற ஒற்றை சொல்லில் நிலைத்து விட்டது.

உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர், தமிழகத்தை முற்காலத்தில் பேராசர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், நாடுகாவலதிகாரிகளாகவும், படை தலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தொல்காப்பிய உரைத்தலைமகன் இளம்பூரணர் புறவொழகலாற்றில் விளக்கமளிக்கையில் கூறுவது போல, தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் / கள்வர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர்.

கல் - கள் - கருள் - கருளர் - கர்ளர் - கள்வர் - கள்ளர் என்று இறுதியாக கள்ளரே நிலைத்து விட்டது.


"கள்ளன் பெரியோனா,
காப்பான் பெரியோனா என்றால்
கள்ளனே பெரியோன் என்றனர்
கருத்துடைய பலர் "

மேலும் சில தரவுகள்

சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய பெயர்ப்பதிவுகள் என்னும் தலைப்பில் அமைந்த ஆய்வில் கள்வர் / கள்ளர் என்னும் சொல் களவு , ஒற்று வேலை செய்பவர்களை குறிப்பதாக உள்ளது.


சைவ சிந்தாந்த அகராதி


தமிழ் அகராதி



செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகராதி
  


தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியான  நிகண்டு
கள்வர் - கள்ளர் 




கல்வெட்டுக்களில்



மொழி ஆய்வில் 





நன்றி : 
சியாம் சுந்தர் சம்பட்டியார்
சோழபாண்டியன்
அஜித் தேவர் 

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்