வியாழன், 19 அக்டோபர், 2017

நாகர்கள் வழி வந்தவர்களே கள்ளர்கள்


நாகர்கள் வழி வந்தவர்களே கள்ளர்கள் மேலும் நாகர் வழி வந்தவர்ககளே யக்கர் - ஏரேர் - சேரர் - மறவர் - கள்ளர் - பாண்டியர் - சோழர் - பல்லவர் .

நாகநாதன் என்பது இந்திரனுக்கு ஒரு பெயர்.

நாகர்களில் இருந்து தோன்றி பிரிந்து போனவர்கள் நீக்ராய்டுகள். இவர்கள் ஆப்ரிக்காவில் இருந்து இங்கு வந்தவர்கள் அல்ல இந்தியாவும் அப்ரிக்காவும் ஒட்டி இருந்த பகுதி கடற்கோளாள் பிரிந்தது. அதனாலே இந்தியாவில் உள்ள சிங்கம் பாலைவனம் காடு எல்லாம் ஆப்ரிக்காவில் கானலாம். இந்தியாவில் பல இனக்கலப்பு நிகழ்ந்தாழும் பலருக்கும் இருப்பது ஆப்ரிக்க மண்டை ஒடுகள் தான். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து அரசுகளும் கலாச்சாரங்களும் நாகரிங்களும் நாகரிலிருந்து தான் தோன்றியவை. நாகரே இந்தியாவை விட்டு இந்தோனேசியா, கம்போடியா, ஜப்பான்தெனமெரிக்கா முதலிய இடத்தில் சென்றனர்.


நகரம்-நாகரிகம்-நாகம்-நாகர் போன்ற அனைத்துத் தமிழ்ச் சொற்களும், நகர் என்ற மூலத்தமிழ்ச் சொல்லினின்று பிறந்தவைகளே. நாகர்கள், தலைசிறந்த பண்பாட்டு மக்களென மணிமேகலை கூறுகிறது.

நாகரிகம் என்னுஞ் சொல்லைத் திருவள்ளுவர்,

"பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"

என்னும் குறளில், கண்ணோட்டம் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். இது பரிமேலழகர் உரையால் விளங்கும்.

ஆரிய வர்த்தத்திலிருந்து தொலைவில் இருந்த எந்தப் பகுதியையும் நாகநாடு என்கின்றன புராணங்கள்.

"நாகரிடமிருந்த தான் ஆரியர் எழுதும் வித்தையைக் கற்றுக் கொண்டனர் அது பற்றி இற்றைக்கும் வடமொழியெழுத்திற்குத் தேவநாகரி என்ற பெயர் வழங்குகிறது”

நாகர் குலத்து மகளில் பேரழகு வாய்ந்தோரென மணிமேகலையாலும், பிற நூல்களாலும் அறியப்படுகின்றது. அவர்கள் சிவபக்தியிலும் மேம்பட்டவரென்பது நாககன்னியர் சிவபெருமானைப் பூசித்து வரம் பெற்றனரென்று உறையூர்ப் புரர்ணம் , பழைய திருவானைக்காப்ப புராணம் , செவ்வந்திப் புராணம் முதலியன கூறுதல் கொண்டு அறியலாகும்.



தமிழ் இலக்கியங்களில் நாகநாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி மாநகரில் அரசாண்டான் என்று பண்டைக் கதை கூறும். அன்றியும், தமிழ் நாட்டில் நிறுவப் பெற்ற தலைச்சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப் புலவருடன் வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் என்று தெரிகின்றது. 

இன்னும், கடைச்சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர இருந்தனர். நன்னாகன், இளநாகன், வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந்தொகை நூல்களிற் சேர்க்கப்பட்டுள்ளன, தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம், நாகர்கோவில் முதலிய ஊர்களின் பெயர்களில் நாகர் நாமம் விளங்குகின்றது.

இந்தியாவின் பல பாகங்களிலும் பரவிய நாகர்கள் பெரும் ராஜ்ஜியங்களை ஆண்டவர்கள். டாலமியின் காலம் வரை (கி.பி.150) சோழ ராஜ்ஜியமும், காஞ்சியை ஒட்டிய பகுதிகளும் நாக குலத்தோரால் ஆளப்பட்டு வந்தன என்கிறார் சர்க்கார் என்பவர்.

மன்னர் இராஜராஜேசவர சேதுபதி அவர்களின் கூற்று : -

இராமநாதப்புரத்தரசர், மாட்சிமிக்க பா. இராஜராஜேசவர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் தலைவர்களாக எழுந்தருளிக் கூறிய விரிவுரையில் பின்வருமாறு காட்டியுள்ளார்கள்;

“சோழர்கட்கு முன் இப்போதுள்ள மறவர், கள்ளர் இச்சாதியாரின் முன்னோர்கள் நாகர் என்ற பெயரோடு இச்சோழ ராச்சியத்தை ஆட்சி புரிந்ததாகவும், அவர்களின் தலை நகராகத் தஞ்சை, திருக்குடந்தை, காவிரிப்பூம்பட்டடினம் இவ்விடங்களிருந்தனவாகவும் சரித்திர வாயிலாக வெளியாகிறது.

ஏறகுறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின்முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தார் என மணிமேகலை கூறுகின்றது.

1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மக்கள் நினைவெல்லைக்குள்ளாக நாகர் அரசுகளைவிட பழமை வாய்ந்த அரசுகள் இருந்ததில்லை இதனையே இளங்கோவடிகள் தமது காப்பியத்தில்

“நாகநீள் நகரோடு நாகநாடு அதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர்” என்றார்.
காவிரிப்பட்டிணமும் நாகர்களின் பழைய வாழ்விடமாக இருந்தது.

புகார் நகரம் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுள் மூழ்சியதாக இங்கிலாந்தைச்சேர்ந்த தலை சிறந்த ஆழ்கடல் ஆய்வாளர் கிரகம் ஆண்காக்கு தெரிவிக்கிறார் இதனை இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற தர்காம் பல்கலைக்கழகத்தில நிலவியல் துறைப்பேராசிரியர் சிளன் மில்லோ உறுதி செய்தார். இந்நாகரீக நகரம்தான் உலகின் முதல் நாகரீக நகரம் இதன் சிறப்பு மொகஞ்சாதரோ, ஹரப்பா நாகரீகங்களைவிட பழமையும், சிறப்பும் மிக்கது என்று கூறியுள்ளனர். அதன் எஞ்சிய பகுதியே கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை இருந்து மறைந்தாக கருதலாம்.



1790- இந்திரக்குல அரையர் தொண்டைமான்


1951 ம் வருடம் எழுதப்பெற்ற நிலப்பத்திரம். பிராணரால் எழுதப்பட்ட பத்திரம் தஞ்சை வளநாட்டின் ராஜாளியார் பட்டத்தாரின் நிலப்பத்திரம். இந்திரக்குலம், சிவமதம்.


1948 -ம் வருடம் எழுதப்பெற்ற தஞ்சைவளநாட்டின் கள்ளர் - முதலியார் பட்டத்தாரின் நிலப்பத்திரம்


1948-ம் வருடம் எழுதப்பெற்ற தஞ்சைவளநாட்டின் கள்ளர் - மண்ணையார் பட்டத்தாரின் நிலப்பத்திரம்


1949-ம் வருடம் எழுதப்பெற்ற தஞ்சைவளநாட்டின் கள்ளர் - வல்லாளத்தேவர் பட்டமுடையோரின் நிலப்பத்திரம்.




1954- ம் வருடம் எழுதப்பெற்ற தஞ்சைவளநாட்டின் கள்ளர் - வன்னியர் பட்டமுடையோரின் நிலப்பத்திரம்.




1923 ல் எழுதப்பட்ட நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் குடும்பம் பற்றிய புத்தகத்தில் இந்திரகுல அதிபர்களாக குறிக்கப்பட்டுள்ள கள்ளர்கள்

சோழரும் நாகரும் : -

சூரிய, சந்திர வமிசங்களைக் காட்டு தற்கும் மணிமேகலையினும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப் பழைய நாளிலே இந்திர குலத்தினரெனப்பட்ட நாகரது வழியிலே, நாகராய சோழர் வழியிலே அல்லது நாகராய பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர் குல தொண்டைமான் மன்னர்களுக்கு இந்திர குலத்தினரென்று வழங்கப்பட்டாராதல் வேண்டும்.



சூரிய மரபினர் பெயர்கள் மனு, இக்குவாகு, நல்லுத்தரன், புறஞ்சயன், மாந்தாதா, நாகன், மறையன், இராயன்,முசுகுந்தன், வாளமரன், விசலன், நன்னி, ஓரி,காரி, கண்டியன், அம்பன், கள்ளியன், சோழன், மறவசோழன், வில்லியன், நன்னி என்பன.

சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு.

தாலமி என்னும் யவனர் ஓர்தொவுர என்று குறிப்பிடுவது உறையூர்தான். ஓர் தொவுர சோர் நகரின் (சோழ நகரின்) தலைநகரம் என்று தாலமி கூறுவது சிந்திக்கத்தக்கது. சோழர், நாகர் இனத்தைச் சேர்ந்தவர் என்று அவர் கருதுகின்றார். உறையூரை உரகபுரம் என்று கூறுவர். இவ்வூர் இப்பெயரால் காளிதாசரின் இரகுவம்சத்தில் பாண்டியரது தலைநகரமாகக் குறிக்கப் பெற்றது என்றும், உரகம்-பாம்பு, எனவே உரகபுரம் நாகப்பட்டினம் ஆதல் கூடும் என்றும், Dr. உல்ஷ் கருதுவர். திரு. வெங்கையா அவர்கள் உறையூரையே உரகபுரம் என்பர். உறையூர்க்கு அண்மையிலுள்ள பெருவளநல்லூரில் நடந்த போரில் இவ்விக்கிரமாதித்தன் தோற்று ஓடியதாகத் தெரியவருவதால் உறையூரே உரகபுரம் எனப் பெற்றதாதல் வேண்டும்.

சோழன் நாகநாடு சென்றான் என கூறுகின்றது. இது இலங்கையாக இருக்கலாம் அல்லது கம்போடியாவாகவும் இருக்கலாம்.

நாகநாட்டை வளைவணன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் மனைவி வாசமயிலை. இருவருக்கும் பிறந்த மகள் பீலிவளை. பீலிவளையைச் சோழ இளவரசன் துய்த்தான். சோழனுக்கும் பீலிவளைக்கும் பிறந்த குழந்தையை, புத்தமுனிவன், புகாரிடமிருந்து நாக நாட்டுக்கு வந்து தன்னை வழிபட்ட கம்பளச்செட்டி என்னும் வணிகனிடம் கொடுத்து, இக்குழந்தை சோழன் குழந்தை என்னும் வரலாற்றையும் கூறி, சோழனிடம் கொடுக்கச் சொன்னான். வணிகன் கம்பளச்செட்டி குழந்தையுடன் தாயகம் மீளும்போது அவனது மரக்கலம் புயலில் சிக்கிக் கவிழ்ந்துபோக,குழந்தை மாண்டது. நீந்திப் பிழைத்து வந்த வாணிகன், சோழ அரசன் வடிவேற்கிள்ளி என்பவனிடம் நிகழ்ந்தது கூறினான். சோழன் குழந்தையைக் கடலிலும், கடற்கரையிலும்,காடுகளிலும் தேடித் திரியும் துக்கத்தில் இந்திரவிழா கொண்டாட மறந்துவிட்டான்.

இந்திர விழா புகார் நகரிலும், நாகநாட்டு மணிபல்லவத் தீவிலும் கொண்டாடப்படும். இது கொண்டாடப்படாததால் மணிபல்லவத் தீவிலிருந்த மணிமேகலைத் தெய்வம் சாபமிட்டது. சாபத்தால் புகார் நகரமும், நாகநாட்டு400 யோசனை நிலப்பரப்பும் கடற்கோளுக்கு இரையானது. புத்தமுனிவர் ஒருவர் இதனை நாகநாட்டு அரசனுக்கு எடுத்துரைத்தார். இது பூமி நடுங்கும் காலத்து அழியும். இன்றைக்கு ஏழாம் நாள் அழியும் என்றார். அவன் தன் நாட்டு மக்களுடனும், ஆடுமாடுகளுடனும் அவந்தி நாட்டுக் காயங்கரை என்னும் ஆற்றங்கரைக்குச் சென்று தங்கினான். புத்தமுனிவர் சொன்னவாறே புகார் நகரமும், அதனை அடுத்திருந்த தீவாகிய 400 யோசனை நாகநாடும் நிலநடுக்கத்தால் அழிந்துபோயிற்று. நாகநாடு என்பது தற்போதுள்ள அந்தமான் நிக்கோபார் நீவுகளை உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு பெருநிலப் பகுதியாக இருக்கலாம் . அதன் தீவுகளில் ஒன்று மணிபல்லவம். இவை சங்ககாலத்துக்குப் பின்னர், கோவனின் மகள் மணிமேகலை வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது கடலால் கொள்ளப்பட்டது.



இப்படி திரையனாகிய சோழனின் காணாமல் போன அந்த மகனே இளந்திரையன்(Junior Lineage) அல்லது இளையன் இளவரையன் கச்சி என்னும் காஞ்சிபுரத்தை நிறுவி மல்லை என்னும் பட்டினத்தை ஸ்தாபித்து அரசாண்டவன் இளந்திரையன் தொண்டைமான். இவன் வழி வந்தவர்களே புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள்.






பீலிவளை மட்டும் நாகர் அல்ல சோழனும், சூரிய குலத்தையும், புலி முத்திரையும் பயன்படுத்துவதும் நாகன் தான்.

நாகர் பரம்பரையில் தோன்றி புகார்ப்பட்டினம் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் முசுகுந்தன். முசுகுந்த அரச மரபில் தோன்றி செம்பியபுரம் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன் சிபி சக்ரவர்த்தி, செம்பியன் என்ற பட்டம் பெற்றான்.

மாந்தாதா மரபில் வந்த மன்னன் நாகமன், நாகபட்டினம் என்னும் சிவதல நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். நாகாளி என்றும் வழங்கப்பட்டான். சிவராத்திரி முதல் யாமத்தில் திருக்குடந்தையிலும்,இரண்டாம் யாமத்தில் திருநாகேச்சரத்திலும்,மூன்றாம் யாமத்தில் திருப்பாப்புரத்திலும்,நான்காம் யாமத்தில் திருநாகூரிலும் திருக்கோயிலமைத்து சிவலிங்கபூசை செய்த பெருமை படைத்தவன். நாகேச்சுரம், நாகன்பாடி,நாகன்குடி, நாகலூர், நாகலாபுரம், நாகமங்கலம்,நாகபட்டினம், நாகளூர், நாகன்பேட்டை என்ற நகரங்களையும் ஊர்களையும் உருவாக்கி ஆட்சி புரிந்தவன். இவன் வழி வந்த கள்ளர் மரபினர் நாக்காடி (நாயக்கவாடியார்) நாவிளங்கி, நாகாளி மேற்கூரிய பட்டங்களை பெற்றவர்கள் இன்றும் தஞ்சை, மன்னார்குடியில் உள்ளனர்.

காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அருவாளர் என்பவர்கள் அருவாநாடு, அருவா வடதலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாகரின் இடச்சார்பான பெயர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே அமையும்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோழர் வலிமையும், ஏனைத் தமிழரசர் வலிமையும் தாற்காலிகமாகச் சிலகாலம் தளர்வுற்றிருந்தது. அச்சமயம் அருவாளர் மரபினரின் கிளையினரான ஓவியர் எயிற்பட்டினத்தில் ஆண்டதுடன் மாவிலங்கையின் மன்னர்களாகவும் விளங்கினர். மேலங்கியின் அரசர் என்று டாலமியால் குறிப்பிடப்பட்ட பஸர்நாகர் பெரும்பாலும் இந்த ஓவியராகவே இருக்க வேண்டும்.

நாகர் வீரத்திலும் மேம்பட்டவரென்பது, சோழ நாகர் என்பார் உறையூரிலிருந்து அரசுபுரிந்த சோழர்களை அப்பதியினின்றும் போக்கிச் சோழ ராட்சியைக் கைப்பற்றிக்கொண்டனரென்று பழைய ஐரோப்பிய ஆசிரியரான தாலமி என்பவர் கூறுவதால் அறியலாகும்.

அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப்பட்டது இவருடன், ஆந்திரரும்,கருநாடரும் தமிழ் மூவேந்தர்க்குப் பகையாயிருந்தமையாலே’ வடுகரருவாளர் வான் கருநாடர் …..குறுகாரறிவுடையார்’ என்று இழித்திடப் பட்டனர்.

கரிகாலன் பன்றி நாட்டிற்குச் சென்றனன். பன்றி நாடு நாகப்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டிற்கு வடக்கில் இருப்பது. இதில் எயினர் (எயினர் பாலை நிலத்துக்குரிய ஆறலை கள்வர்களாவர்) என்ற மரபினர் இருந்தனர் . இவர்கள் நாகரில் ஒரு பிரிவினர். அவருள்ளும் ஒளியர் என்னும் உட்பிரிவினரே அரசாளுதற்குரியர் ஆதலின் அந்த ஒளி நாகரைக் கரிகாலன் வெற்றி கொண்டான், பிறகு தென்பாண்டி நாட்டை அடிப்படுத்தி மேற்கே சென்றான்.

வரலாற்று ஆய்வாளர் இராச கண்டியர் கிருபாகரன் ஒளியர் பற்றிய கருத்தாக, நியமி சக்ரவர்த்தி மரபில் வந்த மன்னன் ஒளிமன் என்றும். அவன் ஒளிகோட்டை ( உள்ளிக்கோட்டை) என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். அறிவிலும், புகழிலும், கொடையிலும் மிகச்சிறந்தவன். இவன் ஒளிராயன்,ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் என்றும் அழைக்கப்பட்டான்.

ஒளியூர், ஒளிமங்கலம், ஒளிக்குடி, ஒளிக்கடை (உள்ளிக்கடை) ஒளிமதி எனும் ஊர்களையும் நகரங்களையும் உருவாக்கி செங்கோல் செலுத்தியவன். இவன் மரபு வழி வந்தவர்கள் கள்ளர்கள் ஒளிராயன்,ஒளிகொண்டான், ஒளிப்பிரியன் (ஒண்டிப்பிளியன்) எனும் பட்டங்களை பெற்றனர். இன்றும் தஞ்சையில் இப்பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பின்பு சோழன் கரிகாலன் அருவாளரை வென்றான். அருவா நாடு தொண்டை நாட்டின் கண்ணதாகலின் அந்நாட்டினை முன்பு ஆண்டோர் எனப் பட்ட தொண்டையர் என்பாரும் அருவாளரும் ஓரினத்தவரென்று கருதலாகும். பழைய நாளில் இவர்கள் ‘ மன்பெறு மரபின்ஏனோர்’ எனவும், ‘குறுநில மன்னர்'எனவும் கூறப்பட்டு வந்தனர். கரிகால் சோழன் இந் நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறுசென்றான்து .(30கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. அருவாத்தலைவன், அருவாத்தலையன், அருவாநாடன், அருமைநாடன், அருமடான், அருவாநாட்டான், அருமநாட்டான் என்னும் பட்டங்களை கொண்டனர். இப் பட்டமுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர்.

ஆதித்திய சேனன் நாக இளவரசி ஆகியோர் மரபில் வந்த இரண்டாம் இராசேந்திர வர்மன் மகன் இரண்டாம் சூர்யவர்மன்(கி.பி.1112-1152) கட்டிய கோயில் கம்போடியாவில் அங்கோர்வாட் என்னுமிடத்தில் உள்ளது. கோயில் கட்டடக் கலைக் கூறும்,இங்குள்ள இராமாயண பாரதக் கதை கூறும் வரிச்சிற்பங்களும் சோழர் மரபைச் சார்ந்தவை.

வள்ளல் பாரி ஓரியக்குலத்தை சேர்ந்தவன். ஓரியர் = சக்கரவாள சக்கரவர்த்திகள் = நாகவம்சத்தினரின் தலைவர்கள். பாரிவேள் இந்த வம்சத்தில் வந்தவன். (உபரிசர வசு என்னும் சோழ மன்னனும் இவ்வம்சத்தவன்). நாகர்கள் என்று அழைக்கப்படும் மரபினரின் தலைவன். (விச்சாதரர்=வானவர்).
.
பல்லவர்களும் நாகரும் : -

வின்சன் ஏ. ஸ்மித் என்னும் சரித்திர அறிஞர்‘புராதன இந்திய சரித்திரம்'’ என்னும் தமது நூலில் பல்லவர் வரலாறு கூறுமிடத்தே கள்ளர் வகுப்பினரையும் இயைந்து கூறுகின்றனர். பல்லவர்களும் நாகர்களே.


பல்லவண்டார்
 பல்லவராயர்

நாகர் வழி வந்த பல்லவர்கள் . பல்லவ அரசர்களின் மூதாதை ஒருவன், நாக அரசன் மகளை மணஞ் செய்துகொண்டு, நாக அரசனிடமிருந்து அரசாட்சி உரிமையைப் பெற்றான் என்று கூறப்படுகிறான். அவன் மரபு நாகர் மரபு எனப்பட்டது. பல்லவர் பாம்பு (நாக) மரபைச் சேர்ந்தவராகையினாலே, பாம்புக் கொடியையும் பெற்றிருந்தனர். சூது என்றால் நாகம் என்பது பொருள். வேலூர்ப் பாளைய சாசனம், பல்லவ அரசர் பரம்பரையைக் கூறும் இடத்தில் சூதுபல்லவன் என்னும் அரசன் பெயரைக் கூறுகிறது. மேலும், வீர கூர்ச்சன் என்னும் பல்லவ அரசன் நாக அரசகுமாரியை மணஞ்செய்துகொண்டு நாக அரசனுடைய அரசாட்சி உரிமைகளைக் கவர்ந்து கொண்டான் என்றும் கூறுகிறது.

காஞ்சிபுரத்துப் பரமேச்சுவிண்ணகரத்தை (வைகுண்டபெருமாள் கோயிலை)க் கட்டிய பரமேசுவரவர்மன் என்னும் பல்லவ மன்னனைத் திருமங்கையாழ்வார் பாம்புக் கொடியையுடையவன் என்று கூறுகிறார்.

“தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத்
திசைப்பச் செருமேல் வியந்து அன்றுசென்ற
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகர மதுவே.”5
என்று அவர் கூறியது காண்க.

உத்திமேரூரில் உள்ள சுந்தரவரதப்பெருமாள் கோயில் பல்லவ அரசர் கட்டிய மாடக் கோயிலாகும். இக்கோயிலில் துவாரபாலகர் உருவங்கள் முடிதரித்த அரசர் உருவங்கள்போல் இருக்கின்றன. இத் துவாரபாலகருக்கு இரண்டு கைகள் உள்ளன. இந்தத் துவாரபாலகரின் கிரீடத்துக்கு மேலே பாம்புப் படம் எடுத்தது போன்ற உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத் துவாரபாலகருக்குச் சூதுராஜன் என்று பெயர் கூறுகிறார்கள். சூது என்பதற்குப் பாம்பு, நாகம் என்னும் பொருள் கூறப்படுகிறது. சூதுராஜன் என்று கூறப்படுகிற இந்தத் துவாரபாலகரின் உருவம், பல்லவ அரசரின் உருவம்போலும். பல்வ அரசன் கட்டிய கோயிலில், நாகப்பாம்புப் படத்துடன் பல்லவ அரசர் உருவம் துவாரபாலகராக அமைக்கப்பட்டிருப்பது பொருத்தமானதுதான்.

எனவே, கொடும்பாளூர் சிற்றரசன் நிருபகேசரி தனது இளமை வயதில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று மூவர் கோயில் சாசனம் கூறும் கருத்து என்னவென்ன வென்றால், அவன் நாக பரம்பரையினரான பல்லவ அரசர்களோடு வளர்ந்தான் என்பதே. இந்த நிருபகேசரி, சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ அரசன் காலத்திலும் அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் இருந்தவன் என்று தெரிகிறான்.

நிருபகேசரியின் மகன் பரதுர்க்க மர்த்தனன் என்பவன். பரதுர்க்க மர்த்தனனுடைய மகன் சமராபிராமன் என்பவன் யதுவம்சகேது என்றும், சோழன்மகளான அநுபமை என்பவனை மணந்தவன் என்றும் கூறப்படுகிறான். கொடும்பாளூர் அரசர்களாகிய பரதுர்க்க மர்த்தனனும், அவன் மகன் சமராபிராமனும் மாமல்லனான் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவர்கள். அன்றியும் அவனுக்கு நண்பராகவும் இருந்தவர்கள்.
.
இலங்கையும் நாகர்களும் ;-

கிமு ?? - கிமு 6 ம் நூற்றாண்டு வரை (நாக நாடு / நாகதீபம் - நாகர் இன மன்னர்கள் ஆண்டு வந்தார்கள், தலைநகர் - பூநகரி மற்றும் கந்தரோடை)

இலங்கையில் நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்ததையும் நாக அரசர்கள் அவர்களை ஆண்டு ஆட்சி செய்ததையும் தீப வம்சமும் மகாவம்சமும் கூறுகின்றன.


புத்தர் வடஇந்தியாவில் ஜேதவனம் என்னும் இடத்தில் இருந்தபோது இலங்கையில் இருந்த நாகர் குலத்து அரசர்களான மகோதான், குலோதான் என்பவர்கள் ஒரு மணியாசனத்துக்காகப் போர் செய்யப்போவதையறிந்து, அவர்கள் மேல் இரக்கங்கொண்டு புத்தர் இலங்கைக்கு வந்து அவர்களுடைய போரை நிறுத்தித் தருமோபதேசம் செய்தார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் பிறந்த சாக்கியர் குடியும், நாக மரபு சார்ந்ததென்று பிறப்பிடத்தின் அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன.

இலங்கையின் வடக்கில் கடல் பிரதேசத்தில் (இப்போதைய யாழ்ப்பாணத்தில்) நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர். நாகர்களின் போரை நிறுத்திய புத்தர். பிறகு வடஇந்தியாவுக்குப் (ஜேதவனத்துக்கு) போய்விட்டார். அவர் அமர்ந்து உபதேசம் செய்த மணியாசனத்தை நாகர் வழிபட்டு வணங்கினார்கள்.


மணியாசனத்துக்காக நாக அரசர் போர் செய்ததையும், அப்போது புத்தர் வந்து அந்தப் போரை நிறுத்தியதையும் மணிமேகலைக் காப்பியமும் கூறுகிறது.

நாக அரசர் போர் செய்யக் கூடியிருந்தபோது இலங்கையில் கலியாணி நாட்டையாண்ட மணியக்கன் என்னும் நாகராசனும் போர்க்களத்துக்கு வந்திருந்தான். அவன் யாழ்ப்பாணத்தை ஆண்ட நாக அரசனான மகோதரனுடைய தாய்மாமனாவான். (இப்போதைய கொழும்புப் பக்கத்தில் கெலனிஓயா என்னும் கெலனியாறு பாய்கிற பிரதேசந்தான் பழைய கலியாணிநாடு.) கலியாணி நாட்டில் நாகர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை ஆண்ட மணியக்கன் புத்தரைத் தன்னுடைய நாட்டுக்கு வருமாறு அழைக்க, புத்தர் தம்முடைய சீடர்களோடு அங்குச் சென்றார் என்று மகாவம்சம் கூறுகிறது.

பாளி இலக்கியங்கள் இங்கு ஆட்சியில் இருந்த நாக அரசு பற்றிக் கூறுகின்றன. கி.பி 1 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று இங்கு ஆட்சி புரிந்த நாக மன்னன் தீபராஜா என்ற விருதுப் பெயருடன் ஆட்சி புரிந்ததாக கூறுகின்றது. இலங்கை முழுவதும் நாகர்கள் வடக்கிலும் வடமேற்கிலும் இயக்கர் தெற்கிலும் சிறப்புற வாழ்ந்து ஆட்சி நடத்தி வந்தார்கள் என்பது தெளிவாகிறது.

மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என தரச்சர், லம்புக்காணர், பாலிபோஜகர் , மோரியர், புலிந்தர் இவர்களைக் குறிப்பிடுகிறது.

இலங்கை ஆண்ட நாக வம்சத்தவர்கள்

* கிமு 367 - கிமு 307 - மூத்தசிவன்
* கிமு 307 - கிமு 267 - தேவநம்பிய தீசன்
* கிமு 257 - கிமு 247 - மகாசிவன்
* கிமு 237 - கிமு 230 - சேனன்
* கிமு 230 - கிமு 215 - குத்திகன்
* கிமு 205 - கிமு 161 - எல்லாளன்
கல்லாட நாகன் என்பவன் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனாவான்.
* கிமு 100 - கிமு 98 - பாகியன்
* கிமு 98 - கிமு 91 - பாண்டிய மாறன்
* கிமு 91 - கிமு 90 - பழைய மாறன்
* கிமு 90 - கிமு 88 - தாட்டிகன் (இறுதி பஞ்ச பாண்டியன் , வலகம்பன் என்ற சிங்கள மன்னன் இவனை போரில் வீழ்த்தி அனுராதபுர ஆட்சியை கைப்பற்றினான்)

* சோரநாகன் என்பவன் கி.மு. 62 தொடக்கம் கி.மு. 50 வரை இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசன் ஆவான். இவன் இவனுடைய மைத்துனனான மகசுழி மகாதீசனைதோற்கடித்து ஆட்சிபீடம் ஏறினான். இவனுடைய மருமகன் குட திச்சன் இவனின் பின்பு ஆட்சிபிடம் ஏறினான். இவன் வலகம்பாமன்னனின் மகனாவான். மகசுழி மகாதீசன் காலத்தில் இவன் அரசனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் நாக எனு பெயர் கொண்ட இவனுக்கு சோர எனும் பெயர்ப்பதமும் சேர்க்கப்பட்டது

குருகுல நாகரும், இயக்கரும் ஆண்டிருக்கையில் கி. மு. 6 ம் நூற்றாண்டளவில் அயோத்தி இரகுவமிசத்தைச் சேர்ந்த காளிசேனன் (காலசேனன்) படையுடன் வந்து நாகர், இயக்கர்களை வென்று, மண்டுநாகனையும், போர்வீரர்களையும் அழித்து, நாகரது இரு முருகன் கோவில்களையும் இடித்து அரசாட்சியைக் கைப்பற்றினான். (ம. மா. பக். 48) இவன் தென்னிலங்கையில் அமைத்த இராசதானி காளிதேசம் ஆகும். இவன் காலம் முதலாகவே உகந்தைக்கருகாயிருந்த நாக தீவிலிருந்து நாகர்கள் முல்லைத்தீவு, மணற்றிடர், மன்னார் முதலான பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்து இப்பகுதிகளில் சிற்றரசுகளை ஏற்படுத்தியிருந்தார்கள்

பல்லவ மன்னன் நாக நாட்டு இளவரசியை மணந்தான் என பல்லவச் செப்பேடு கூறுகிறது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் அநுராதபுர அரசிற்கு எதிராக நாகதீபத்தில் இருந்து ஶ்ரீநாக என்ற தலைவன் படையெடுத்த செய்தி கூறப்படுகின்றது. கி.பி 835 இல் பாண்டிய மன்னன் ஶ்ரீமாறஶ்ரீவல்லபன் வட இலங்கையில் வந்திறங்கிய போது இங்கிருந்த தமிழர்கள் அவனுடன் இணைந்து அநுராதபுர அரசை வெற்றி கொண்டதாக சூளவம்சம் கூறுகின்றது. இச்சம்பவங்கள் எல்லாம் நாகதீபம் அநுராதபுர நாகரிக வட்டத்திற்குள் உட்படாது தனியொரு ஆதிக்கம் நிறைந்த பிராந்தியமாக திகழ்ந்ததைக் காட்டுகின்றது.

இவ்வாறான காலப் பகுதியில் தான் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் கி.பி 10 ஆம் நூற்றாண்டளவில் வட இலங்கை மீது படையெடுத்தான். இப்படையெடுப்பு நாகதீபத்தில் நடந்ததாக கூறும் சூளவம்சம் இப்படையெடுப்பால் அநுராதபுர அரசிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றது.

அதேவேளை இப்படையெடுப்பை பெரும் வெற்றியாக சோழச் சாசனங்கள் கூறுகின்றன. இதற்காக முதலாம் பராந்தக சோழன் ஈழமும் மதுரையும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்ற விருதுப் பெயரைப் பெற்றதாக அவன் காலக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. வரலாற்று அறிஞர்கள் சோழரது ஆதிக்கம் அநுராதபுரத்தில் ஏற்பட முன்னர் நாகதீபத்தில் ஏற்பட்டதையே கூறுகின்றன. இதற்கு சோழர் ஆட்சி தொடர்பான கோயில்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அதிகளவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இராவணனின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த  பிராமிக் கல்வெட்டு பம்பரகஸ்தலாவை என்னுமிடத்தில் உள்ள மலைக்குகையில் காணப்படுகிறது. பம்பரகஸ்தலாவ நாகமலை, நாகபர்வத மலை எனும் பெயர்களில் அழைக்கப் படுகிறது. குமண பறவைகள் சரணாலயத்தின் வடகிழக்கு பகுதியில் காட்டின் மத்தியில் நாகமலை அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் இங்கு நாகவழிபாடு நிலவியமையால் இப்பெயர் உண்டானது எனக் கூறப்படுகிறது. எனினும் இம்மலை ஓர் இராட்சத நாகம் படமெடுத்தபடி இருப்பது போன்ற அமைப்பை உடையதால் நாகமலை எனப் பெயர்பெற்றது எனவும் கூறப்படுகிறது. 

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட  38 பிராமிக் கல்வெட்டுக்களில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் ஒன்றாகும். இக்கல்வெட்டில் “பருமக ராவண ஜிதி ஷோகிலி லேன சகஸ” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இது பெருமகன் இராவணனின் மகள் ஷோகிலியின் குகை எனப்பொருள் படுகிறது.



.
புராணங்களில் நாகர்கள் பற்றிய தகவல்கள் :-


காண்டவப்ரஸ்தத்தில் அர்ஜுனனால் நாகர்கள் விரட்டப்பட்டு விந்திய மலைக்குத் தெற்கே குடியேறினார்கள் என்றும் பாரதம் சொல்கிறது. அர்ஜுனன் நாடு கடந்து வாழ்ந்த காலத்தில் மணிபுரத்தை ஆண்ட நாக அரசன் சித்திரவாகனன் புதல்வியாகிய சித்திராங்கதையையும் மணம் புரிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணனது சகோதரனான பலராமன், சேஷனது அவதாரம் என்று சொல்லப்படுபவன். அவன் நாகன் எனப்பட்டான். மஹாபாரதம் 13- 132 –இல் பலராமன் ஒரு நாகன் என்று சொல்லப்பட்டுள்ளது.

" புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்.."
(சிலப். 9: 9-13).

(வெள்ளை நாகர் = வெண்ணிறப் பலராமர். உச்சிக்கிழான் = கதிரவன். ஊர் = சிவனிருக்கையாகிய கைலாயம் என்னும் வெள்ளிமலை. வேல் = வேலன் என்னும் முருகன்).

ஆரிய - தஸ்யூக்கள் என்ற ஐந்து மகன்களின் தாத்தாவான நஹுஷனை, "ஆரிய அரசர்களது சந்திர வம்சத்தில் வந்த நாகன்” என்கிறது மஹாபாரதம் (3-178). இவ்வாறே குந்தியின் கொள்ளுப் பாட்டனாரை 'ஆர்யகன்’ என்ற நாகன் என்கிறது பாரதம் (1-128)
இந்தச் சாகத் தீவை, நாகத்தீவு என்று அழைத்திருக்கிறார்கள். பழைய மஹாபாரத நூல்களில் சிலவற்றில் நாகத்தீவு என்றும் சில நூல்களில் சாகத்தீவு என்றும் எழுதப்பட்டுள்ளது.

மஹாபாரதத்தில் சாகத்தீவைப் பற்றி சஞ்சயன் தரும் விவரங்கள்
குமரி ஆறு பாரத நாட்டில் இருந்ததாக மஹாபாரதம் (6- 9) கூறுகிறது. பாரத நாட்டின் ஏழு முக்கிய நதிகளுக்குள் குமரி ஆறும் ஒன்று என்று தமிழ் நிகண்டான சூடாமணி நிகண்டு தெரிவிக்கிறது. அதே பெயருடன் சாகத்தீவிலும் ஒரு ஆறு ஓடியது என்றும் காவேரகா (காவிரி) என்னும் பெயரில் சாகத்தீவிலும் ஒரு நதி ஓடியிருக்கிறது. மஹாபாரதம் சொல்கிறது (6-11).

இந்த சாகத்தீவுக்கு ‘தென்னாட்டுடைய சிவனே’கடவுள் ஆவார். ஸ்ரீமத் பாகவதம் அத்தியாயம் 4-5 –இல் மற்ற நாடுகளில் சிவனை வழிபட்டதாக அவை சொல்லவில்லை. ஆனால் சாகத்தீவுக்கு அதிஷ்டான தெய்வம் சங்கரன் என்னும் சிவ பெருமான் ஆகிறார் என்று இந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

நாகர்களுக்குச் சிவன் தெய்வமாவார். நாகாலாந்தில் சிவ வழிபாடு உண்டு. இந்தப் பகுதியில் ஆரம்பித்து, 90 டிகிரி மலை ஆஸ்திரேலியா வரை செல்கிறது. அதன் தொடர்ச்சி, தென் துருவப் பகுதி வரை செல்கிறது. இந்தப் பகுதிக்கு நாகர்கள் சம்பந்தம் உண்டு என்று சொல்லும் வண்ணம் வால்மீகி ராமாயணத்தில் சுக்ரீவன் தரும் வர்ணனை இருக்கிறது.

குஞ்சர மலையில் அகஸ்தியர் வசிக்குமிடம் இருக்கிறது.

அது ஒரு யோஜனை அகலமும், 10 யோஜனை உயரமும் கொண்டது என்கிறான் சுக்ரீவன். அதற்கு அப்பால் ரிஷப மலை இருக்கிறது, அது சிவன் குடி கொண்ட இடம் என்றும் , அங்குதான் தென்னன் பாண்டியன் தோன்றியிருக்கிறான்.

அகஸ்தியர் வாழ்ந்த இடத்துக்கும், ரிஷப மலைக்கும் இடையே ஓரிடத்தை சுக்ரீவன் சொல்கிறான். அந்த இடத்தின் பெயர்‘போகவதி”! போகவதி என்பது நாகலோகம் ஆகும். (வால்மீகி ராமாயணம் – 4-41) இந்த இடம் இந்தியக் கடலில் குமரிக் கண்டம் என்றும், தென்னன் தேசம் என்றும் ஆராய்ந்த இடத்தில் உள்ளது.

போகவதிக்குத் தெற்கே ரிஷப மலை சொல்லப்படவே, தென்னன் தலைநகரமான தென் மதுரை போகவதிக்கு அருகில் இருந்தது என்று தெரிகிறது. போகி என்றும், நாக நாதன் என்றும் இந்திரனுக்குப் பிற பெயர்கள் உண்டு. அதுமட்டுமல்ல, குமாரி, ஸுகுமாரி என்ற பெயரிலும் சாகத்தீவில் ஆறுகள் ஓடின. இவையெல்லாம், துர்கை, முருகன் ஆகியோர் வழிப்படப்படும் இடங்களில் இருப்பவை.

நாவலந்தீவின் காவல் தெய்வத்தின் பெயரால் சம்பாபதி என்ற பெயரைக் கொண்ட புகார் நகரத்திற்குக் காவேரி வரவே, தொன்று தொட்டு அங்கு குடி கொண்ட சம்புத் தெய்வம், தன் பெயரை விடுத்து, காவேரியின் பெயரால்,
அந்த நகரத்துக்குக் ‘காவிரிப் பூம்பட்டினம்” என்று பெயர் சூட்டினாள்
(மணிமேகலை பதிகம்),

சாகத்தீவில் பாலை நிலங்கள் இருந்தன என்று சொல்லத்தக்க வகையில் மரத்தின் பெயரை வைத்துத்தான் இடத்துக்கே பெயர் இட்டிருக்கின்றனர். சாகை மரங்கள் இருந்ததால் அந்த நிலப்பரப்புக்கு சாகத்தீவு என்ற பெயர் வந்தது என்கிறான் சஞ்சயன். தமிழில் நாம் சொல்லும் வாகை மரமே சமஸ்க்ருதத்தில் சாகை மரமாகும். வாகை மரம் என்பது பாலை நிலத்துக்கான கருப்பொருள் எனப்படும் இலக்கணமாகும். தொல்காப்பியத்தில், பாலை நிலத்துக்குரிய திணை வாகைத் திணை என்று சொல்லப்பட்டுள்ளது.

பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும், இதை உழிஞ்சில் என்றும் உன்ன மரம் என்றும், பாலை மரம் என்றும் கூறி வந்தனர். இதன் பூ பொன்னிறமாக இருக்கும். வெற்றி வாகை சூடினான் என்பார்களே, அந்த வாகை இதுதான். வாகைபூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. பாலை நிலத்தில் வளரக்கூடிய வாகை மரமே,தென்னன் தேசத்தில் இருந்த முன்பாலை, பின் பாலைக்கும் கருப்பொருளாக இருந்திருக்க வேண்டும்.


அந்த வழக்கத்தைப் பின்பற்றியே தொல்காப்பியரும், வட வேங்கடம் முதல் தென் குமரி வரை இருந்த இன்றைய நிலத்தில் பகுக்கப்பட்ட பாலை நிலத்துக்கும் உரியதாகச் சொல்லி இருக்கிறார். எந்தத் தென்னன் தேசங்களில் பாலையும், வாகையும் இருந்ததோ, அதே பகுதியில் பொருந்துகிற சாகத்தீவிலும் பாலை நிலங்கள் இருந்து, அங்கு சாகை மரங்கள் வளர்ந்திருந்தால்தான், சாகத்தீவு என்ற பெயரே ஏற்பட்டிருக்கும். பாலை நாடுகள் பதினான்கினைக் கொண்டிருந்தத் தென்னன் தேசம் இருந்த இந்தியப்பெருங்கடலில் தான் சாகத்தீவும் இருந்தது என்பதை நிரூப்பிக்கும் மற்றுமொரு சான்று இது.


நன்றி : நிலப்பத்திரம் உதவி - திரு. சுதாகர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்