வியாழன், 19 அக்டோபர், 2017

சோழ, சேர, பாண்டியப் பேரரசு வீழ்ச்சியால் நாட்டை இழந்த கள்ளர்கள்







சோழ பேரரசு பாண்டியர் கீழ் வந்தது, பாண்டிய பேரரசு தங்களுக்குள் ஏற்பட்ட அரியணை உட்பூசலால் 14ஆம் நூற்றாண்டில் மதுரையை இழந்து திருவாடனை,கயத்தார்,தென்காசிக்கு தப்பி சென்று சிறு,சிறு பகுதிகளில் ஆட்சி செய்து வந்தனர். பாரதம் முழுவதும் ஆண்ட மூவேந்தர்கள்  வீழ்ச்சியாலும் எல்லை காவலனாக இருந்த காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், புதுக்கோட்டை கள்ளர்களும் அவர்களின் அரையர்களும் தன்னிச்சையாக மதுரை சுல்தானை எதிர்த்து போராடி தோல்வியை தழுவுகிறார்கள்.


மேலும் இதே காலக்கட்டத்தில் கள்ளர் குல அரையர்கள் தங்களுக்குள்ளே போட்டி, பொறாமையின் காரணமாக பல உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

அதே காலக்கட்டத்தில் ஏற்பட்ட வலிமையான நாயக்கர் ஆட்சியும், மூவேந்தர்கள் வீழ்ச்சியும் கள்ளர்களின் வாழ்வாதாரத்தையும், நிலம், பாடிக்காவல் உரிமையும் இழக்கப்படுகிறது. பொ.ஆ: 1436,1450,1451 நரசிங்க நாயக்கர் காலத்தில் நாட்டை இழந்து ஊரைவிட்டு வெளியேரும் கள்ளர்கள்.



மூவேந்தர்கள் வீழ்ச்சி, சுல்தான்களிடம் ஏற்பட்ட போர் தோல்வி, நாயக்கரிடம் நிலம், ஊர் படைப்பற்று இழத்தல் என வாழ்வாதாரத்தை இழந்த கள்ளர்கள் பலர் சூரையாடல், வழிப்பறி, கலகங்கள் செய்தல் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.






அவ்வாறு கள்ளர் பெருமக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட முழுக்காரணமாக திகழ்வது பாண்டியர்களின் வீழ்ச்சியே என அலகாபாத் வரலாற்று ஆய்வாளர், வரலாற்று ஆதாரத் தொடர்ச்சியை வைத்து அவரின் புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் அந்த புத்தகம் 18பேர் கொண்ட அறிஞர் பெருமக்களால் தொகுக்கபட்டது.

கள்ளர்கள் பிறகு தங்களின் எதிரிகளான துலுக்கர், நாயக்கர், மராட்டியர் போன்றவர்களுகே அவர்களின் ஆபத்து காலங்களில் படை உதவி செய்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் வாழும் சோழ, பாண்டிய மண்டல கள்ளர் நாடுகள் யாருக்கும் வரிகட்டாமல் தன்னரசாக  கள்ளர்கள் வாழ்த்தார்கள். 

ஆய்வு : சோழ பாண்டியன் 

தகவல் : The Proceeding of the Indian History congress seventh session by Mr.Tara Chand (1944)

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்