மீ பொழில்நாடு - வணங்காமுடி பாளையம் - கந்தர்வகோட்டை - கள்ளர் நாடு
கந்தர்வக்கோட்டை மன்னர் - ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
நடுவில் அமர்ந்து இருப்பவர் ராஜ ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
பண்டாரத்தார் பட்டம் உடைய கள்ளர் அரையர்களால் ஆட்சி செய்யப்பட்ட நாடு கந்தர்வகோட்டை ஆகும்.
சோழநாட்டில் ஒன்பது வளநாடுகள், இராசராசன் காலம் முதல் வழக்கத்திற்கு வந்தது. அவ்வளநாடுகள் ஒன்பதும், முதல் இராராசனின் பட்டப் பெயரால் அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாண்டி குலாசனி வளநாடும் ஒன்று, அதில் இருந்து பிரிந்தது ஐயசிங்ககுலகாலவளநாடு தோன்றியது. இந்த நாட்டில் ஒருபகுதியான மீ செங்கிளி நாடு [குளத்தூர்], தென் மீ பொழில் நாடு என்பதில் கந்தர்வக்கோட்டை கோவில் நல்லூர் எனவும், கோவில் நல்லூர் மற்றும் சில கிராமங்களை உள்ளடக்கி அதை மீ பொழில்நாடு எனவும் அழைக்கப்பட்டது. (மீ பொழில் நாடு - மேன்மையான, அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் நிறைந்த நாடு).
1000 ஆம் ஆண்டுகள் பழமையான கந்தர்வகோட்டை பாளையம், சோழ மண்டலத்தில் உள்ள 18 பாளையங்களில் இதுவே மிக பெரிய பாளையமாக இருந்தது.
This house ( Front view ) was used by the raja as rest house while they were in their temple functions
This house ( Side view ) was used by the raja as rest house while they were in their temple functions

கந்தர்வன் என்னும் மன்னன் சிறப்புற ஆட்சிபுரிந்தமையால் கந்தர்வன் கோட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மறுவி கந்தர்வக்கோட்டை என மாற்றமானது என்றும், கண்டராதித்த சோழ கோட்டை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் மறுவி கண்டர் கோட்டை பிறகு கந்தர்வக்கோட்டை என மாற்றமானது என்றும் கூறப்படுகிறது. கண்டர், கண்டர்கிள்ளி, கண்டர்சில்லி கண்டராயர், கண்டவராயர் பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
கந்தர்வகோட்டை பாளையத்தின் தலைநகர் கோமாபுரம். இந்த பாளையத்தார் கீழ் 106 கிராமங்கள் இருந்தன. கந்தர்வகோட்டை பாளையத்தின் மற்றொரு பெயராக வணங்காமுடி பாளையம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பாளையத்தாரின் 400 ஆண்டுகள் பழைய அரண்மனை முற்றிலும் இடிபாடுகளுடன் உள்ளது, ஆனால் மீதமுள்ள கட்டமைப்புகள் பார்த்து ஆரம்ப ஆண்டுகளில் இது எத்தனை பெரிய அரண்மனையாக இருந்தது என்று கற்பனை செய்யமுடியும்.
கந்தர்வகோட்டையில் ஐந்து பிரதான 1000 ஆண்டு பழமையான கோயில்கள் இருந்தன. இதில் பாளையத்தாரின் குடும்பத்திற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டது.
பாளையத்தாரின் குடும்ப கோயில்
காமாட்சி அம்மன் கோயில்,
அங்காளம்மன் கோயில்,
மாரியம்மன் கோயில்,
சிவன் கோயில்,
பெருமாள் (இராமர்) கோவில்,
வெள்ளை முனிஸ்வரன் கோவில்.
(பூரணா, பூஷ்கலா சமேத அய்யனாரின் காவல் தெய்வமாகிய வெள்ளை முனியன்) கோவில் ஆகிய காலத்தால் முற்பட்ட கோவில்கள்.
கந்தர்வகோட்டை பாளையத்தார் குடும்பத்தில் புதுக்கோட்டை மகாராஜா குடும்பத்துடன் திருமண உறவு உள்ளது. கந்தர்வகோட்டை பாளையத்தார் கடந்த ஏழு தலைமுறையினர் பெயர்கள்
1) சூர்யா நாராயண பண்டாரத்தார்
2) அர்ஜுனனாதன் பண்டாரத்தார்
3) ராஜா கோபால பண்டாரத்தார்
4) ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
5) ராமச்சந்திர துரை ராஜா பண்டாரத்தார்
ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார் MLA வாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவர்
2) அர்ஜுனனாதன் பண்டாரத்தார்
3) ராஜா கோபால பண்டாரத்தார்
4) ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
5) ராமச்சந்திர துரை ராஜா பண்டாரத்தார்
ராஜா ராமச்சந்திர துரை பண்டாரத்தார் MLA வாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவர்
சிவனாரின் மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப் பகுதியில், ஸ்ரீகோதண்ட ராமருக்கு அழகிய கோயிலைக் கட்டினான். காலப்போக்கில் இந்தக் கோயில் இருந்த பகுதி முழுவதும் வனமாகிவிட, கந்தர்வகோட்டை ஜமீன்தார்களின் முயற்சியால் கோயில் கண்டெடுக்கப்பட்டு, சீர்செய்யப்பட்டு பழையபடி வழிபாடுகள் நடைபெறத் துவங்கிய தாகச் சொல்கிறார் கோயிலின் திருவேங்கட பட்டாச்சார்யர்.
சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த கந்தர்வக்கோட்டை பகுதி முற்காலத்திலும், சுதந்திரத்திற்கு பிறகும் சோழ நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த கந்தர்வக்கோட்டை 1974-ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் உருவானபோது அதனுடன் இணைக்கப்பட்டது.
19ம் நூற்றாண்டு இறுதி வரை கந்தர்வ கோட்டை கள்ளர்கள் வளரி பயன்படுதிதாக வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.
காடுகளை அழித்து விவசாயத்திற்காக ஏரி நீர் பயன்படுத்தப்பட்டது என்பதை, ‘மருதன் ஏரி’ என்ற, பெயர் உணர்த்துகிறது. பல்லவ, சோழர்களின் கூட்டுப் படைகள், பாண்டியர்களை வெற்றிகண்ட பின், பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான முத்தரையர்கள், சோழர்களின் நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டனர். அதற்கு சான்றாக, ஆதித்த சோழன் காலத்திய, ரணசிங்க முத்தரையன் கல்வெட்டு விளங்குகிறது. இதுவே, இப்பகுதியில் கிடைத்த, மிகப் பழமையான கல்வெட்டு. இவ்வாறு தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கூறினார்
கந்தர்வகோட்டை வரலாற்றை கூறும் கல்வெட்டு ஓவியர் கலியபெருமாள், ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அழிக்கப்பட்ட தகவலைக்கூறும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூரில் உள்ள குளம் தூர்வாரியபோது அங்குள்ள மடையில் சுமார் 3 அடி நீளம், முக்கால் அடி அகலமுள்ள கல்வெட்டு மீட்கப்பட்டது. கல்லில் எழுதப்பட்டிருந்தது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கந்தர்வக்கோட்டை கோவில் நல்லூர் எனவும், கோவில் நல்லூர் மற்றும் சில கிராமங்களை உள்ளடக்கி அதை மீபொழில்நாடு எனவும் மக்களால் அழைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இதை வாராப்பூரில் உள்ள பழமையான அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சமஸ்தான கல்வெட்டும் உறுதி செய்கிறது.
இந்தக் கல்லின் ஒரு பகுதியில் தாமரை பூக்கள் செதுக்கப்பட்டுள்ளதால், இது பழமையான கோயில்களில் வாசற்படிக்காக பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. பின்னர், ஏதோ ஒரு காரணத்தினால் கோயிலில் இருந்த கல்லை விவசாயிகள் குளத்தின் மடைக்கு பயன்படுத்தியுள்ளனர். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செங்குலத்தரையன் என்பவர் மூலம் கோவில்நல்லூர் என்று அழைக்கப்பட்ட கந்தர்வக்கோட்டை அழிக்கப்பட்டிருக்கிறது என இக்கல்வெட்டு மூலம் தெரிகிறது.
இத்தகைய அழிவில் இருந்து மீட்க மீபொழில் நாட்டின் பாதுகாவலராக விளங்கிய கடுங்கோளனை அந்தப் பகுதியினர் நாடியதும் அந்தக் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. ஆனால், எதற்காக அழிக்கப்பட்டது என்ற விளக்கம் அதில் இல்லை. இத்தகவல்களை கல்வெட்டு ஆய்வாளர் கே.ராஜேந்திரனும் உறுதி செய்துள்ளார்.
தொண்டைமான்கள் புதுக்கோட்டையை ஆண்டிருந்தாலும் இந்த கந்தர்வகோட்டை நாடு தன்னரசாக யாருக்கும் கட்டுப்படாமல் இங்குள்ள கள்ளர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
இவர்கள் அப்போதிலிருந்தே தஞ்சை வளநாட்டு கள்ளர்களுடன் உறவு முறையில் இருந்து வருகின்றனர்.
இங்குள்ள கள்ளர்கள் அனைவரும் MBC பட்டியலில் வருகிறார்கள்.
இங்கு வாழ்ந்து வருகின்ற கள்ளர் மரபினரின் பட்டங்கள்
காடவராயர்
தொண்டைமார்
தென்கொண்டார்
வாட்டாச்சியார்
சவுளியார்
சாணையர்
பிழியராயர்
மட்டையர்
சோழகர்
நாட்ரையர்
திராணியார்
வாண்டையார்
தொண்டைமான்
நரங்கியர்
தெத்து வாண்டையார்
ஊர்த்தியார்
அங்குரார்(ஊர்: அங்குராப்பட்டி)
பாலியார்
நெருமுண்டார்
சேப்பிளார்
காளிங்கராயர்
கோரையர் (ஊர்: கோரம்பட்டி)
சோழங்க தேவர்
வல்லத்தரசு
கட்டவெட்டியார்
மங்களார்
மழவராயர்
பாலண்டார்
திராணியார் (ஊர்: திராணியப்பட்டி)
போன்ற பட்டப்பெயர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
பகட்டுவான் பட்டி, கந்தர்வக்கோட்டை நாட்டில் கள்ளர்கள் மட்டுமே இருக்கும் ஒரே ஊர்
கோமாபுரம் , மெய்க்குடிப்பட்டி, மங்கனூர், கல்லுப்பட்டி போன்று நிறைய ஊர்கள் உள்ளன.
இந்த கந்தர்வகோட்டை நாடு அனைத்து குடிகளையும் கொண்டுள்ளது.
அங்குள்ள தமிழ்சாதிகளுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒற்றுமை, நான் இவர் வீடு எங்கிருக்கு என கேட்டபோது அது எங்க கள்ளவீடுதான் நான் காட்றேனு என்னை அழைத்து செல்கிறார் பறையர் இனத்தவர்.
வெள்ளாளர், கோனார், வண்ணார், பூசாரி, பறையர் என அனைத்து குடிகளும் உள்ளன.
விவசாயம் செழிப்பாக உள்ளது.
நெல், ஆலைக்கரும்பு, துவரை, எள், உளுந்து , சவுக்கு, RS பதி, முந்திரி என பலதரப்பட்ட பயிர்கள் இச்செம்மண் பூமியில் மோட்டார் ,கிணற்று பாசனம் உள்ளது.
குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை அருகில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையின் மூலம் நிலத்தின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது.
நாட்டு பசு, வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. 10 கள்ளர் வீடுகள் இருந்தாலும் அந்த ஊரில் கள்ளர்களுக்கான மரியாதை கொடுக்கப்படுகிறது. அதுபோல கள்ளர்கள் பெரும்பாலும் உள்ள ஊர்களிலும் அனைத்து குடிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது.
நாட்டு அம்பலங்கள்,ஊர் அம்பல முறை பெரும்பாலும் சிதைந்துவிட்டது. எல்லோருக்குமே மரியாதை தரப்படுகிறது.
பழமையான கலாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது.
திருக்காட்டுப்பள்ளி,கந்தர்வகோட்டை கள்ளர்களுக்குள் தொன்றுதொட்டே பெண் கொடுத்து,எடுக்கும் பழக்கம் உள்ளது.
பிரிட்டீஸ் இந்தியாவில் இந்த கந்தவர்கோட்டை பாளையக்காரர் முதன் முதலாக தமிழ்நாட்டில் பாளையக்காரர்களின் முகவர்களாக குறவர் இனமக்களை நியமித்தார். குறவர் மக்களை வேற எந்த பாளையக்காரர்களும் முகவர்களாக நியமித்ததில்லை.
ஒரு பழம்பெரும் தமிழ் குடியான குறவர் பழங்குடியினரை நாட்டுக்குள் ஒரு மரியாதைக்குரிய பாளையக்காரர் முகவர் பதிவில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தான் கந்தவர்கோட்டை கள்ளர் குல அரையர்கள்.
மிகவும் வீரமிக்க இந்த நாட்டை சேர்ந்த கள்ளர்கள் குற்றப்பழங்குடி சட்டத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் எந்த தமிழ் பழங்குடியை(குறவர்கள்) சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தார்களோ அவர்களும் குற்றப்பழங்குடி சட்டத்தில் கடுமையான இன்னல்களுக்கு ஆளானார்கள்.
இந்த குற்ற பழங்குடி சட்டத்தால் இன்று அந்த ஊரில் குறவர் மக்களின் குடியே இல்லாமல் உள்ளது மிகவும் வேதனையாகவும்,நெருடலாகவும் உள்ளது.

கல்லாக்கோட்டை/ கண்டர்க்கோட்டை( 1832) :-
கிபி 1832ல் கல்லாக்கோட்டை பாளையத்திற்கும், கண்டர்கோட்டை பாளையத்திற்கும் ஒரு விசயம் தொடர்பாக விவாதம்( வழக்கு) இந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதம் தொடர்பாக தஞ்சை மன்னரை நாடியிருக்கலாம்.
கள்ளப்பற்று கண்டர்கோட்டை பாளையம் ( கிபி 1798) :-
கிபி 1798 ல் கண்டர்கோட்டை பாளையக்காரர் அச்சுதப் பண்டாரத்தார் காலத்தில் தஞ்சை மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் இரண்டு மூன்று உள்ளது. அனைத்தும் ஒரே தகவலை கொண்டுள்ளது. முற்காலத்தில் கோனூர் நாடு கண்டர்கோட்டை பாளையப்பட்டில் சேர்ந்திருந்ததாகவும், பிற்காலத்தில் அது தஞ்சையுடன் இணைந்ததாகவும், கோனூர் நாடு, சந்தை மற்றும் ஆயம் உள்பட அனைத்தையும் முன்பிருந்தவாறே கண்டர்கோட்டை பாளையத்துடன் இணைத்திடவும் அதற்கு உரிய உடன்படிக்கைக்கு தயார் எனவும் கண்டர்க்கோட்டை பாளைய தலைவர் அச்சுதப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்றை சேர்ந்த கண்டர்கோட்டை பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்தர்வகோட்டை அருகில் மராத்தியர் காலத்திய சித்திர மண்டபம்
பாளையத்தாரின் கல்லறை
கந்தர்வகோட்டை சோத்துபாளை கிராமத்தின் கள்ளர் உரியர் வகையராக்கள் குலதெய்வம்
சோத்துபாளை கிராமத்தின் கள்ளர் உரியர் வகையராக்கள் குலதெய்வம்
கந்தர்வகோட்டை - தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு
வாடிவாசலை பாக்குமரம் கொண்டு அமைத்துள்ளனர், மாடு மூர்க்கமாக வெளியேவரும்போது முட்டினாலும் பெரிய அளவில் காயம் ஏற்படாது. மாடு குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருத்தல் வேண்டும். மாட்டின் வயது 6 பல்லாக இருக்க வேண்டும். கொம்பு, வாலை பிடித்தால் வீரர்களை வெளியேற்றுதல். மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை.
போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்கிறார்கள்.
ஜமீன் வழங்கிய வீரவாள்.
கந்தர்வகோட்டை ஜமீன் எல்லைக்கு உட்பட்ட கிராம மக்கள், 150 ஆண்டுகளுக்கு முன், திருடர்களின் அட்டூழியத்தால், பொன், பொருட்களையும், கால்நடைகளையும் இழந்ததோடு, பயத்தால், இரவில் துாக்கமின்றி தவித்து வந்தனர்.திருடர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, உரிய சன்மானம் வழங்குவதாக, கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகம் தெரிவித்தது. இது குறித்து, நல்லபெருமாள் என்ற விவசாயி அறிந்திருக்கவில்லை.அதே நேரம், ஒரு நாள், பயங்கர ஆயுதங்களுடன் வந்த திருட்டுக் கும்பலை, நல்லபெருமாள் தன்னிடம் இருந்த, சிலம்பக் கம்பை மட்டும் வைத்து, விரட்டி அடித்தார். கும்பல் தலைவனின் கை, கால்களை கட்டிப் போட்டு, பொதுமக்கள் உதவியுடன், ஜமீன்தாரிடம் ஒப்படைத்தார்.திருட்டுக் கும்பலை தனி ஆளாக பிடித்த, காட்டுநாவல் கிராம விவசாயி, நல்லபெருமாளை, ஜமீன்தார் பாராட்டி, நெல் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் கூர்வாள் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
கள்ளர் ஜமீனை ஜாமீனில் மீட்ட தாத்தா வேங்கடசாமி நாட்டார் குடும்பம்:-
அக்காலத்தில் சோமசுந்தர நாட்டாருக்கு மிகவும் ஸ்நேகிதமாயிருந்த கந்தர்வகோட்டை ஜமீன்தார் அச்சுதநாராயண பண்டாரத்தார்.
ஜமீனுக்கு மூன்று நாட்கள் விருந்துவைத்தனர் நாட்டார் குடும்பம். நாட்டாருடைய குதிரை சிறியதாக இருந்ததால் தன்னுடைய குதிரையை நாட்டார் வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார் பண்டாரத்தார்.ஜமீனுக்கு தன்னுடைய பல்லாக்கையும் நாட்டார் குடும்பம் அளித்துள்ளது.
அதிலிருந்து பிரியம் ஏற்பட்டு, நாட்டார் குடும்பம் 10,12வண்டிகளில் தேங்காய்,கரும்பு, காய்கறிகளை சீராகவும்,விமரிசையாகவும் பண்டாரத்தாருக்கு அனுப்பியுள்ளனர்.
கந்தர்வகோட்டை ஜமீன் ரிமாண்டில் கோவை ஜெயிலில் இருக்கும்பொழுது தன் சொந்தங்களை நம்பாமல் சோமசுந்தர நாட்டாருக்கு தன்னை மீட்கும்படி கடிதம் எழுதுகிறார். நாட்டார், கள்ளப்பெரம்பூர் தன் அத்தை மகனையும், மைத்துனராகிய செவந்திலிங்க நாட்டாரை தொடர்பு கொண்டு பண்டாரத்தை விடுதலை செய்து மீட்டு வந்துள்ளார்.

ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்
கள ஆய்வு : திரு. பரத் குமார் கூழாக்கியார்.
நன்றி: திரு . ரமேஷ் மனோகரன்