செவ்வாய், 31 ஜனவரி, 2023

பாப்பாநாடு பாளையம் | பாப்பாநாடு ஜமீன் விஜயதேவர்

பாப்பாநாட்டினை ஆட்சி செய்த
பாப்பாநாடு விஜயதேவர் மரபினர்


சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூரில் அமைந்துள்ள ‘பாப்பாநாட்டை' தலைமையிடமாகக் கொண்டு "விஜயாத்தேவர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் மரபினரின் அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் சம்பந்திகளாவார்கள். 

பாப்பா நாட்டுக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில், வெள்ளுவாடி என்ற ஊரில் இவர்களின் அரண்மனையும் இருந்தது. 1879 ஆம் ஆண்டு, பாப்பாநாடு  விஜயதேவர் வம்சாவளியினரிடம் இறுதியாக 36 கிராமங்கள் 23412 ஏக்கர் பரப்பளவோடு இருந்தது.


கி.பி. 1736இல் இருந்த ராஜஸ்ரீ ராமலிங்கம் விசயாத்தேவர் என்பவர்  காசியின் அன்னதானக்கட்டளைக்கு திருமாஞ்சோலை என்னும் ஒரு ஊரை கொடையாக அளித்து அதை செப்பேட்டில் பதித்துள்ளார். 

36  கிராமங்களோடு இருந்த பாப்பா நாடு, சுதந்திரத்துக்குப் பிறகு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்துவிட்டது.

‘பாப்பாநாடு’ என்பது மத்திய கால நிர்வாக முறையான ‘நாடு’, ‘பெரிய நாடு’ என்பன போன்ற அமைப்பாகும்.

பாப்பாநாடு பதினெட்டு கிராமம்"’ என்கிற சொல்வாடை இப்போதும் அங்கு உண்டு. 

கரம்பயம்
ஆம்பலாப்பட்டு
மடத்துவாசல்
ஆவிடநல்லவிஜயபுரம்
பெரிய குமுளை
வேதவிஜயபுரம்
பாப்பாநாடு
புது காலனி
சின்னகுமுளை
சோழகன்குடிகாடு 

பாப்பாநாடு பகுதியில் உள்ள கள்ளர் மரபினரின் பட்டங்கள்

சோழகர்
வாண்டையார்
பணிபூண்டார்
சாளுவர்
முதலியார்
கண்டியர் 
கொடும்புறார்

ஆகிய பட்டமுடைய கள்ளர்கள் பெரும்பான்மையாக வசிப்பவையும் ஆகும் . 

சிற்றூரில் "ஆவிடநல்லவிஜயபுரம்" என்பது' ராஜஸ்ரீ. ஆதி ஆவிடை நல்ல விசையாத்தேவர்' எனும் புகழ்பெற்ற பாப்பாநாடு அரையரின்  முன்னோர் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

இராசராச வளநாடு ராஜேந்திர சோழ வளநாடு, பொய்யூர்க்கூற்றத்துப் பாப்பாகுடிநாடு சிறுநெல்லிக் கோட்டை நென்மேலிவாடியிலிருக்கும் நல்லவன் விசையாத் தேவர் மகன் இராமலிங்க விசையாத் தேவர் தம் காணியாக இருக்கும் மன்னார்குடி செயங்கொண்ட நாதர்க்கு அளித்த கொடையைக் கூறுகின்றன. 


வில்லுக்கு விசையன் 

சொல்லுக்கு அரிச்சந்திரன்
அழகுக்கு மன்மதன்
குதிரைக்கு நகுலன்
யானைக்கு தேவேந்திரன்
அறிவுக்கு அகத்தியன்
கொடைக்குக் கர்ணன்

என்று புகழ்ப்படுகிறார்.


காசிமடத்துச் செப்பேடு ஒன்றின் மூலம் இராமலிங்க விசையாத் தேவரின் தாத்தா ஆதி ஆவிடை விசையாத் தேவர் என்று தெரிகிறது.


ராவ் பகதூர் P.S.. ராஜப்பா விஜயாதேவர் (24 மே 1889 - சி. 1954) பாப்பாநாடு குறுநிர மன்னர் மகா-ள-ள-ஸ்ரீ சுவாமிநாத விஜயதேவரின் மகன் ஆவார்.

இவர் 1924 முதல் 1936 வரை தஞ்சை (தஞ்சாவூர்) நகராட்சி மன்றத்தின் தலைவராகவும், பட்டுக்கோட்டை தாலுகா வாரியத்தின் தலைவராகவும் இருந்தார். 1922 முதல் 1924 வரை தஞ்சை மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினர். இவர் தஞ்சையில் பல எதிர்ப்புகளுக்கிடைய மின் விளக்கை கொண்டுவந்தார். தஞ்சாவூர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியான ராஜப்பா நகர் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.



பாப்பாநாட்டு கோயில்

அருள்மிகு பிடாரி அம்மன்
அருள்மிகு திருமேனி அம்மன் ,
ஸ்ரீ அய்யனார் ஆலயம் என பழமையான கோயில் உள்ளன.
















13 ஆம் நூற்றாண்டில், மதுரை கள்ளழகர் கோவில் கல்வெட்டில் விஜயதேவர் குறிக்கப்படுகிறார் 






செவ்வப்ப விஜயத்‌தேவர் மகன்‌ அச்சுதப்ப விஜயதேவர்‌



கிபி 11 ஆம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனின் புதல்வரான ராஜாதிராஜ சோழன் காலத்தில் கிளர்ச்சிகளை ஒடுக்க சாளுக்கிய தேசத்தில் மேல் படையெடுக்கப்பட்டது. இந்த போரில் பாப்பா நாட்டு கள்ளர்கள் பங்கேற்று வெற்றி அடைந்ததையும், வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக கட்டப்பட்ட கோயில் பற்றியும் தஞ்சை மராத்தியர் கால செப்பேடான செயங்கொண்ட நாதர் கோயில் செப்பேடு விளக்குகிறது.




கிபி 1729 ல் "பொய்யூர் கூற்றத்து பாப்பா நாட்டிலிருக்கும் காணியுடைய அரையர்" என சிங்கவன ஜமீன் விஜய ரகுநாத கிருஷ்ண கோபாலர் குறிப்பிடப்பட்டுள்ளார். (திருவாடுதுறை ஆதீன செப்பேடு-5)




கிபி 1735 ல் "பட்டுகோட்டை சீமையிற் பாளையக்காரர் விசய ரகுநாத மெய்க்கன் கோபாலர் தன்னுடைய முப்பத்திரண்டு கிராமங்கள்" எனும் செப்பேடு வரிகள் பட்டுக்கோட்டை சீமையின் 32 கிராமங்களை கோபாலர் ஆட்சி செய்ததாக கூறுகிறது. (சரஸ்வதி மகால் செப்பேடு -1)

கிபி 1736 ல் "பொய்யூர் கூற்றத்து பாப்பானாடு அரசராக ராமலிங்க விஜயதேவர்" இருந்ததாக தஞ்சை மராத்தியர் கால திருமாஞ்சோலை செப்பேடு குறிப்பிடுகிறது( திருப்பனந்தாள் காசி மடம் செப்பேடுகள்)



கிபி 1757ல் "பொய்யூர்கூற்றத்து பாப்பாக்குடி நாடு சிறுநெல்லிக்கோட்டையில் இருக்கும் நல்லவன விசயத்தேவர்" என பாப்பா நாடு மன்னர் குறிக்கப்படுகிறார். (செயங்கொண்டநாதர் கோயில் செப்பேடு-1)



கிபி 11 ஆம் நூற்றாண்டில் முதல் குலோத்துங்க சோழர் காலத்தில் மன்னார்குடியில் கள்ளர் படைப்பற்று இருந்ததையும், அவர்கள் மன்னை ராஜகோபாலசாமி கோயிலுக்கு கொடை அளித்ததையும் கல்வெட்டு எண் 103 of 1897 தெரிவிக்கிறது.


இவற்றின் மூலம் பாப்பா நாடு கள்ளர்களின் முக்கிய படைபற்றாக இருந்து வந்துள்ளதையும், தொடர்ந்து கள்ளர் மரபினரின் அரையர்களால் ஆளப்பட்டதையும் அறிகிறோம்.


இராஜதிராஜ சோழனும் சாளுக்கிய படையெடுப்பும் :


மாமன்னன் இராஜேந்திர சோழ தேவரின் மூத்த மகன் இராஜாதிராஜ தேவர் கிபி 1018ல் இளவரசு பட்டம் கட்டப்பெற்றான். சோழ தேசத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாளுக்கியர்கள் அவ்வப்போது கிளர்ச்சிகளை செய்து குழப்பம் விளைவித்து வந்தனர். இராசாதிராச தேவரால் மேலை சாளுக்கியர்களை ஒடுக்க கிபி 1044க்கு பின் மூன்று முறை படையெடுக்கப்பட்டது. மூன்று முறையும் வடுகர்களை புறமுதுகு காட்டி ஒட்ச்செய்துள்ளார் சோழ மன்னர்.


பாப்பா நாட்டார்கள் போர்களம் செல்லுதல்:-




சாளுக்கியரை ஒடுக்க சோழ மன்னருக்கு உதவியாக பாப்பா நாட்டு கள்ளர்கள் சென்றுள்ளனர். பாப்பா நாட்டார்கள் போருக்கு செல்லும் முன் பாப்பா நாட்டார்களின் காணியில் இருந்த செயங்கொண்டநாதரை வணங்கி விட்டு சென்றுள்ளனர். இதைப்பற்றிய தகவல்களை தஞ்சை மராத்தியர் கால செயங்கொண்டநாதர் கோயில் செப்பேடு -2) தருகிறது.

சாளுக்கியரை வீழ்த்தி புலிக்கொடியை ஏற்றுதல்:-


கிபி 1044ல் கிருஷ்ணா ஆற்றங்கரையில் பூண்டூர் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் மேலை சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் மற்றும் அவனுக்கு ஆதரவாக வந்த தெலுங்கு குறுநில மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர். எண்ணற்ற போர்வீரர்களும், பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகரத்தை சோழரின் படை அழித்து, கழுதைகளைக்கொண்டு உழுது, வரகு போன்ற புன்செய் தானியங்களை பயிரிட்டது. முடிவில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட வெற்றித்தூண் அங்கு நிறுவப்பட்டது.


தோற்கடிக்கப்பட்ட மற்றொரு சாளுக்கிய மன்னர் ஆகவமல்லன் சமாதான தூது அனுப்பினான். ஆனால் தூதுவர்களின் உடம்பில் ஆகவமல்லன் எவ்வாறு புறமுதுகு காட்டி ஒடினான் என எழுது சோழர்கள் துரத்திவிட்டனர். சாளுக்கியரின் வராக முத்திரை குறிக்கப்பட்ட குன்றுகளில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டது.நுளம்பர், சாமுண்டர், கொம்பையன், வில்வராயன், கூர்ச்சர் போன்ற மன்னர்கள் சரணடைந்தனர்.


ஆகவமல்லன் பெற்கடை எனும் தனது உயர் அதிகாரியோடு மற்ற இரு தூதுவர்களையும் அமைதி உடன்படிக்கைக்காக மீண்டும் தூது அனுப்பினான். சோழர்கள் அவர்களில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்தும், ஆகவமல்லன் என பெயரிட்டும் மற்றவனுக்கு பெண் ஆடையை உடுத்தி ஆகவமல்லி என அவனது உடம்பில் எழுதி துரத்தினர். சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தை கைப்பற்றி, அரண்மனைகளை தரைமட்டமாக்கி அங்கே வீரஅபிஷேகம் செய்துக்கொண்டு வீரராஜேந்திரன் எனும் பட்டத்தை சூட்டிக்கொள்ளப்பெற்றான்.


(சோழர்கள்: நீலகண்ட சாஸ்திரி பாகம் 1 பக்கம் 346-347)


போர்வெற்றியும் பாப்பா நாட்டார்களின் நன்றிக் கடனும்:




சாளுக்கியருக்கு எதிரான போரில் பங்கேற்ற பாப்பா நாட்டார்கள் பற்றிய தகவல்களை தஞ்சை மராத்தியர் கால செயங்கொண்டநாதர் கோயில் (செப்பேடு -2) தருகிறது. 

செப்பேட்டில் பாப்பா நாட்டின் சிறப்புகள் தரப்பட்டுள்ளது.

" மல்லாரி விருதுள்ள நாடு, அடைக்கலங்காத்த நாடு, கடலேழுவில்க் கடைக்காவல் கொண்ட நாடு, வில்லுக்கு விசையனைப்போலவும், சொல்லுக்கு அரிச்சந்திரனைப் போலவும், அழகுக்கு மன்மதனை போலவும், குதிரைக்கு நகுலனைப்போலவும், யானைக்கு தேவேந்திரனைப் போலவும் , அறிவுக்கு அகத்தியனைப் போலவும், தர்மத்துக்கு கர்ணனை போல புகழ்பெற்ற நாடு" என புகழப்பட்டுள்ளது.


" வளவன் பல்லவதரையன் முன்பாக கல்லூர் நெல்லூர் வெட்டி செயங்கொண்டநாடு பொய்யூர் கூற்றத்து பாப்பாநாடு" எனும் வரிகள் சோழர்(வளவன்) மற்றும் பல்லவதிரையனுக்கு ஆதரவாக ஆந்திராவின் நெல்லூர் மற்றும் கல்லூர் பகுதிகளை (சாளுக்கிய பகுதிகள்) போரிட்டு வெற்றிக்கொண்ட நாடு என போற்றப்பட்டுள்ளது.


" அம்பலம்பனி நிமித்தம் நாட்டார் பொற்கொது சுவாமிக்கு பிராத்தினை பண்ணிக்கொண்டு போயி கல்லூர் நெல்லூரும் வெட்டி அபித்துக்கனியும் மரத்தோட கொண்டுவந்த படியினாலே நிகரம் அமித்துக் கோயிலும் கட்டிவிச்சி செயங்கொண்டநாதர் என அதற்கு பூசைக்கு நடத்த வேண்டியதுக்கும் " எனும் வரிகள் விளக்குவது யாதெனில், சுவாமியிடம் வேண்டிக்கொண்டு சாளுக்கிய படையெடுப்பில் பங்கேற்ற பாப்பா நாட்டார்கள் போரில் வெற்றி அடைந்ததால் சுவாமிக்கு கோயில் அமைத்து அதற்கு செயங்கொண்டநாதர் என பெயரிட்டு பூசைகள் நடந்து வர ஏற்பாடுகள் செய்தததாக தகவல் தரப்பட்டுள்ளது.


இந்த கோயில் பாப்பா நாட்டார்களுக்கு முழு உரிமையாக இருந்ததற்கு ஆதாரமாக செயங்கொண்ட நாதர் செப்பேடு  உள்ளது. இந்த செப்பேட்டில் " பாப்பா நாட்டவர்களுக்கு காணியாக இருக்குற செயங்கொண்டனாத சுவாமியாருக்கு தர்ம சாதனப்பட்டயம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.





மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில்:-







ஶ்ரீ ஜெயங்கொண்டநாதசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் உள்ள    தெற்காசியாவை கட்டியாண்ட மும்முடிச்சோழனும், பாப்பாநாட்டு விஜயாத்தேவரும்



கள்ளர் குடியியை சேர்ந்த அறங்காவலர் குழுத்தலைவர்  திரு.ச.சோமசுந்தர சக்கரைநாட்டார் அவர்கள்


கள்ளர் குடியியை சேர்ந்த டாக்டர் வி. திவாகரன் சாளுவர் 




கள்ளர் குடியியை சேர்ந்த கிருஷ்ணா சுவாமி சேண்டப்பிரியர் 





இக்கோயில் ராஜாதிராஜ சோழர் கால கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழீஸ்வரம் என அழைக்கப்பட்டது. ஜெயங்கொண்ட சோழன் என பட்டம் கொண்ட ராஜாதிராஜ சோழனால் கட்டப்பட்டது.

(Temples of middle cholas, Balasubramanian /page 358)




இந்த கோயிலுக்கு பாப்பாநாடு மன்னர்களும், சிங்கவனம் மன்னர்களும் பல கொடைகளை அளித்துள்ளனர். பாப்பா நாட்டவர்கள் தொடர்ந்து இக்கோயிலுக்கு தங்களது ஆதரவை அளித்து வந்துள்ளனர். இந்த கோயில் 19 ஆம் நூற்றாண்டு வரை பாப்பாநாடு மன்னர்களின் பராமரிப்பில் இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் சிதிலமடைந்த பின் பாப்பாநாடு மன்னர்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


பாப்பாநாட்டு சமீன்தார் ஒருவரின் சிற்பம் வழிபாட்டில் உள்ளது.சிவலிங்கத் திருமேனிக்கு முன் இவரது சிற்பம் வழிபாட்டை பெறும் சிறப்பை பெற்றுள்ளது(தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் : புலவர் இராசு, பக்கம் 134)


பாப்பா நாட்டவர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக, நமது முன்னோர் சிந்திய குருதியின் நினைவாக இன்றும் பொலிவோடு அமைந்துள்ளது மன்னை செயங்கொண்டநாதர் கோயில். 



ஶ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி ஆலயம்

பாப்பாநாட்டின் ஜமீன்தாராகிய ஶ்ரீ சாமிநாத விஜயதேவரால் நிர்மானிக்கப்பட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஶ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி ஆலயத்திற்கு பாப்பாநாடு ஜமீன்தார்களின் வழித்தோன்றலாகிய ஶ்ரீ இராஜய்யா துரைராஜ் விஜய தேவர் மற்றும் அவர் மனைவிமார் பரம்பரை அறங்காவலர், மற்றும் அவருடைய மாப்பிள்ளையும், "பூண்டி இளவல்" து.கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் மனைவிமார் ஆகியோரால் 4.8.2009 ல் திருப்பணி செய்யப்பட்டு இக்கோவில் குடமுழக்கு நடைபெற்றுள்ளது.







ஜெயங்கொண்டநாதர் கோயிலுரிமை


மன்னார்குடி செயங்கொண்டநாதர் கோயிலுக்கு இந்த பாப்பாநாடு மன்னர்கள் பல்வேறு கொடைகள் அளித்துள்ளனர். இவர்களின் முன்னோர் ஒருவரின் சிலை அக்கோயிலில் நித்திய வழிபாட்டில் உள்ளதிலிருந்து இவர்களின் மேன்மையை நன்கு அறியலாம். திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாற்று நூலில் இந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. . மேலும் இவர்களைப்பற்றி அந்த நூலில் ...

"ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு, சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லவன் விசையாத்தேவரவர்கள் குமாரர் ராமலிங்க விசையாத்தேவரவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கும் செயங்கொண்டநாத சுவாமி" - என குறித்துள்ளமையால் செயங்கொண்டநாதர் கோயில் இவர்களின் உரிமைக்குரியதாக இருந்துள்ளதையும் உணரமுடிகிறது.

மன்னார்குடி பாமணி ஆற்றில் வடகரையில் அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. கங்கைகொண்ட சோழனின் மூத்த மகனான இராஜாதிராஜன் கி்.பி 1018 - 1054 ஆம் ஆண்டில் இங்கு ஆண்டு வந்தார். அவர் ஜெயங்கொண்டநாதருக்கு ஆற்றிய தொண்டுக்காக அவரை ஜெயங்கொண்டான் என அழைப்பர்.


இராசாதிராசசோழன் செயங்கொண்டான், சயங்கொண்டான், சேங்கொண்டான், போரிற் கொளுத்தி, போரைக்கொளுத்தி என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டான்.


சோழ மன்னர்கள் இத்தலத்தை வணங்கி பல வெற்றிகள் பெற்றனர். இங்கே இடப்புறம் நாரதரும் , லிங்கத்தின் பின்னால் மகாவிஷ்ணு இருப்பது இங்கே சிறப்பு. மேலும் இங்கே செயங்கொண்ட நாதர் கோயிலில் பாப்பாநாடு மன்னர் ஒருவரின் சிற்ப்பம் வழிப்பாட்டிலிருந்து வருவதும் சிறப்பம்சம்.


இராசராசவளனாடு ராசேந்திர சோழ வளநாடு , பொய்யூர்க் கூற்றத்துப் பாப்பாகுடினாடு , செறுநல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லன் விசையாதேவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கிற செயங்கொண்டனாத சுவாமி என்று குறிப்பிடப்படுகிறது.


இராமலிங்க விசையதேவர் அவர்கள் செயங்கொண்டநாதர் அர்த்தசாம பூசைக்காக 46 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார்.


சிங்கவனம் பாளையக்காரர் சவ்வாஜி விஜயரகுநாத வளோசி மகாராஜா மெய்க்கன் கோபாலர் அவர்கள் செயங்கொண்டநாதர் அர்த்தசாம பூசைக்காக 72 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார். மேலும் சவ்வாயி விஜயரகுநாத மகாராஜா மெய்க்கன் கோபாலர் அர்த்தசாம பூசைக்காக 40 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார்.
















திருவாரூர் மாவட்டம் மன்னர்குடியில் உள்ள ஜெயங்கொண்டநாதர் கோயில் சோழர் கால கோயில். சைவ, வைணவத்துக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வைகாசி மாத ரேவதி நட்சத்திரத்தில் இங்குள்ள வியாசர் லிங்கத்திற்கு திரட்டுப்பால் ஆராதனை செய்து அதனை மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யும் வழக்கத்தை சோழ மன்னர் தொடங்கி வைத்தார்.


திருமேனி அம்மன் கோயில் பல்லக்கு திருவிழா! 


இந்தக் கிராமங்களின் பொதுக் கோவிலாக பாப்பாநாட்டுக்கு மேற்கே சுமார் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்தப் பதினெட்டு கிராமத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் திருமேனி அம்மனுக்கு திருவிழா எடுப்பர். பத்து நாட்களுக்கு மேல் மண்டகப்படிகள், இரவில் புகழ் பெற்ற நாடக ‘செட்’ களின் நாடகங்கள், வாண வேடிக்கை எல்லாம் நடக்கும். இறுதி நாள் பல்லக்குத் திருவிழா அன்று திருமேனி அம்மன் பாப்பாநாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, கணக்கன் குளத்தருகில் உள்ள ஊர்ச் சாவடியில் வைக்கப்படுவார். நாள் முழுவதும் வழிபாடுகள் மேற்கொண்டு இரவில் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எடுத்துச் செல்லப்படுவார். இந்தத் திருவிழாவைத் திட்டமிட்டு நடத்தும் உரிமை, பாரம்பரியமாக அக்கிராமங்களின் கள்ளர் சாதியினருக்கே உண்டு.

இந்தக் கிராமங்கள் அனைத்தும் பழைய தஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்தவை. பாப்பாநாடு, மதுக்கூர் முதலியன அப்படியான ஜமீன்தாரி பகுதிகள். 


திருமாஞ்சோலைச் செப்பேடு

செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - திருமாஞ்சோலை

ஊர் - திருப்பனந்தாள்

வட்டம் - திருவிடைமருதூர்

மாவட்டம் - தஞ்சாவூர்

மொழியும் எழுத்தும் - தமிழ்-தெலுங்கு

அரசு / ஆட்சியாளர் - பாப்பாநாடு ஜமீன் / இராமலிங்கம் விசையாத் தேவர்

வரலாற்று ஆண்டு - கி.பி.1736

விளக்கம் - 

முக்கால் வட்ட வடிவில் அமைந்த கைப்பிடியின் அடிப்பகுதியில் பீடத்தின்மேல் முத்தலைச் சூலமும் அதன்கீழ் ஒரு சிவலிங்கமும் வரைகோட்டு ஒவியத்தில் வரையப் பட்டுள்ளது.





இராசேந்திர சோழவளநாட்டுப் பொய்யூர்க் கூற்றத்தில் உள்ளது பாப்பாகுடி நாடு. அங்கு குறுநில மன்னராக விளங்கி அதிகாரம் செலுத்துபவர்கள் விசையாத்தேவர் பரம்பரையினர். அம்மரபில் வந்த ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு ஜமீன்தாரைக்குறிப்பிடும்போது...


"ராசஸ்ரீ ஆதி ஆவிடை விசையா தேவரவர்கள் நல்லவன் விசையா தேவரவர்கள் குமாரர் ராசஸ்ரீ ராமலிங்கம் விசையா தேவர் அவர்கள்"- என குறிப்பிடுகிறது. 


மன்னர் சாமிநாத விசயத்தேவர் தஞ்சையில் தமிழ் சங்கம் தோற்றுவித்தார்.

மன்னர் சாமிநாத விசயத்தேவர் உதவியில் வந்த தமிழ் சங்கம் பத்திரிகை


மராட்டிய மோடி ஆவணத்தில் பாப்பாநாடு


.
காசிக்கு வழங்கி தானம் - 1736


பாப்பாநாடு அரையர் ராஜஸ்ரீ. ராமலிங்கம் விசையாத்தேவர் அவர்கள் காசியின் அன்னதானக்கட்டளைக்கு திருமாஞ்சோலை எனும் ஊரை கொடையாக அளித்துள்ளார்.

தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்திற்கு உதவி 


சோழராஜா பரம்பரை 


நன்றி  : திரு. கி.ச.முனிராஜ் வாணாதிராயன்
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள்,
திருவாரூர் மாவட்டத் தொல்லியல் நூல். 













சாளுக்கிய படையெடுப்புடன் தொடர்புடைய கள்ளர் பட்டங்கள்:-

கள்ளர்களின் பட்டப்பெயர்களில் சில சாளுக்கிய மற்றும் வடுக தேச படையெடுப்புகளோடு தொடர்புடையவையாக உள்ளன.அவற்றில் சில:-

1) வில்லவராயர்:வில்வராயன் எனும் வடுக மன்னரை வெற்றிக்கொண்ட சோழர் படையோடு தொடர்புடையது.

2) வேங்கிராயர்:வேங்கி நாட்டின் மீது பெற்ற வெற்றியோடு தொடர்புடையது.

3)வடுகராயர்:வடுகர்களை ஒடுக்கி ஆண்டதோடு தொடர்புடையது

4) கூர்சார்:வடுக கூர்சர நாட்டின் மீது நடந்த படையெடுப்போடு தொர்புடையது.

5)செயங்கொண்டார்:செயங்கொண்ட சோழனோடு தொடர்புடையது

6)சீட்புலியார்/சிலிப்பியார்: ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு அருகில் உள்ள ஒரு பகுதி சீட்புலி. இந்த பகுதியில் நடந்த படையெடுப்போடு தொடர்புடையதாக இந்த பட்டம் அமைந்துள்ளது.

7) தெலிங்கராயர்: தெலுங்கர்களை வெற்றி கொண்டதோடு தொடர்புடைய பட்டம்.

8) துறையாண்டார்: கர்நாடகாவில் உள்ள ஒர் பகுதியின் பெயர் இடைத்துறை. இந்த பகுதியை கைப்பற்றி ஆண்டதோடு தொடர்புடையதாக இப்பட்டத் அமைந்துள்ளது.

9) சக்கரநாட்டார்: வேங்கி நாட்டில் விசாகப்பட்டினத்திற்கு வடமேற்கில் இருந்த பகுதி சக்கரகோட்டம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியை கைப்பற்றி ஆண்டவர்கள் சக்கரநாட்டார் என பட்டம் தரிக்கலாயினர்.

10)வையராயர்: வேங்கி நாட்டில் இருந்த வைராகரம் எனும் பகுதியின் வெற்றிகர படையெடுப்போடு தொடர்புடையதாக அமைகிறது.

11) ரேணாடாண்டார்: தெலுங்கு சோழர்கள் வாழந்த பகுதியான ரேணாட்டை வெற்றி கொண்டதோடு தொடர்புடையது.

12) சிந்துரார்: சாளுக்கிய தேசத்தின் ஒரு பகுதியான சிந்துவாடியை போரிட்டு வென்றதோடு தொடர்புடைய புகழ்மொழி.

13)சாளுவராயர் : சாளுவ தேசத்தை வெற்றிகொண்டு ஆட்சி செய்ததை குறிப்பிடுகிறது.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்