தஞ்சை பகுதியில் இருந்த ஜமீன்கள் / பாளையங்கள் கள்ளர் மரபை சேர்ந்தவையே. இதில் அத்திவெட்டி ஜமீன் என்பது திருமக்கோட்டை, முத்துப்பேட்டை, வேதாரண்யம் மறவ அகம்படியர் சேர்ந்த ஒன்று, பட்டம் சேர்வைக்காரர். அத்திவெட்டி முழுவதும் கள்ளர் மரபினர்கள் என்றாலும் ஜமீன் குடும்பம் தங்களை மறவர் என்றே குறிப்பிடுகின்றனர். அதே போல் சேந்தன்குடி ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களை கள்ளர் மரபினராக குறிப்பிட்டாலும், ஜமீனை சேர்ந்த அவரது உறவினர்கள் கள்ளர், அகம்படியர், மறவர், முத்தரையர், அம்பலக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர். யாரும் தங்களை வலையர் என்று குறிப்பது இல்லை. ஆனால் அரசு சலுகைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களை கள்ளர் அல்லது அகமுடையர் என்று சொன்னால், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கள்ளர் அகமுடையார் போல BC சான்றிதழ் பெற வேண்டி வரும். அதனால் இவர்கள் அம்பலக்காரன் என்றும் அரசியல் அதிகாரம் பெற வலையர்களோடு சேர்ந்து தங்களை சிலர் அடையாளப்படுத்தியும் வருகின்றனர். இது அவர்களுடைய விருப்பமும், தனிப்பட்ட விசயமும் கூட. இவர்கள் இப்பொழுது எந்த சாதியக குறிப்பிட்டாலும் நமக்கு யாது ஒரு பலனும் இல்லை 👎.
எடுத்துக்காட்டாக சிவகிரி ஜமீன் தங்களை வன்னிய மறவர் என்றாலும், அவரது உறவினர்கள் அரசு சலுகை பெற வேண்டியோ அல்லது வேறு காரணங்களுக்கோ, தங்களை வன்னியர் என்று சாதி சான்றிதழ் பெறுகின்றனர். அதே போல் வாரிசு இல்லாத பல ஜமீன்களை பல சாதியினர் உரிமை கூறுவதும் அதிகரித்துள்ளது.
சேந்தன்குடி ஜமீன் பற்றி நமக்கு கிடைத்த தரவுகளை பற்றியும் மற்றும் பல இடங்களில் இவர்கள் கள்ளர் என்றும் உள்ளதால், இவர்களின் கட்டுரை இங்கு இடம் பெருகிறது.
சேந்தங்குடி ஜமீன் குறித்த பழமையான தகவல் கிடைப்பது தஞ்சை மராத்தியரின் மோடி ஆவணக் குறிப்புகளே.்இதில் தஞ்சையின் 13 பாளையப்பட்டுகளும் கள்ளர் மரபினரின் ஆளுகையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துலையனூர். புதுக்கோட்டை மாவட்டம். பேராசிரியர் ஐயா சுப.முத்தழகன் அவர்களின் கள ஆய்வில்
தானவ நாட்டில் இருப்பவர்களில் பெரும்பாலோரின் முன்னோர்களின் பத்திரங்களில் அகம்படியர்.மறவர். கள்ளர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் இன்றைய தலைமுறையினர் தங்களை அம்பலகாரர்( முத்தரையர்) என்றே கூறிக்கொள்கின்றனர் என்பதே எதார்த்த உண்மை.
ஆலங்காட்டில் உள்ள கள்ளர் மரபினரின் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று இன்று வழிபடும் குளமங்கலத்தைச் சார்ந்தவர்கள் இருக்கின்றனர் என்பதும் உண்மை.
என்று குறிப்பிடுகிறார்.
ஜமீன் வாரிசான ராஜேந்தி சேதுபதி என்பவர், தன்னுடைய தாத்தா காலத்தில் நாங்கள் கள்ளர் என்றும் பிற்காலத்தில் அகமுடையார் திருமண உறவில் அகமுடையாரகவும், ஆனால் தற்போது எங்கள் குடும்ப உறவினர்கள் கள்ளராகவும், முக்குலத்தோர் என்றும், முத்தரையர் என்றும் தனி தனி சாதி சங்கத்தில் பொறுப்பு வகித்தும் வருவதோடு இல்லாமல், பல குழப்பங்களோடு வாழ்ந்து வருகின்றனர்.
மு.தமிழியக்கன் சேர்வை, செயலாளர் தானாண்மை நாடு தேவர் பேரவை அவர்கள், எங்கள் குடும்பத்தில் அகம்படியர் என 1970காலம் வரை நிலப்பத்திரங்களில் பதிவு உள்ளது என்றும், அகம்படியர்தான் பெருமளவு நிலப்பத்திரங்களில் உள்ளது. குடியிருப்பு பெயர்களை பார்க்கையில் பட்டப்பெயர்களே கொண்டு இருக்கும், இருந்தும் குலமங்களம் தொண்டைமான் மாங்காடு சாளுவர், மழவராயர் மட்டுமே கள்ளர் என நிலப்பத்திரங்களில் பதிவுகளை கொண்டுள்ளனர் என்கிறார்.
திரு. மணி சேர்வைக்கார்ர் அவர்கள், தானவா நாட்டில் பயன்படுத்தும் பட்டங்கள் 70 க்கும் மேற்பட்டவை கள்ளர் பட்டமாகவே உள்ளது, பழக்க வழக்கங்கள் வேண்டும் என்றால் கூட முக்குலத்தோர் அனைவருக்கும் பொதுவாக சில வரலாம் ஆனால் பட்டங்கள் கள்ளர் பட்டமாகவே தாணவா நாட்டில் உள்ளது, ஆனால் நானும் மறுக்க வில்லை இங்கு மறவர் மற்றும் அகமுடையார் களும் கலந்து தான் உள்ளனர் ஆனால் பெரும்பான்மையாக கள்ளர் என்று தான் தெரிய வருகிறது அதனால் கள்ளர் என்று அடையாள படுத்துவதே சிறந்தது என்பதே எனது கருத்து என்கிறார்.
தானவ நாட்டை சேர்ந்த சேந்தங்குடி ஜமீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிபி 1920 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை மேனுவல் பாகம் 1 ல் தானவ நாடானது கள்ளர் நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. கள்ளர் நாடுகளில் ஒன்றாக வழுவாடி நாடும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அம்புக்கோயில் சிவன் கோயிலில் கிடைத்த கல்வெட்டு " தானவநாட்டு நெடுவாசல் சீமைக்கு கர்த்தாவாக மாவலி வாணாதிராயர்" என்பவர் இருந்ததாக குறிப்பிடுகிறது. இன்றும் கள்ளர் குல வாணாதிராயர்களும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
கிபி 1716 ஆம் ஆண்டை சேர்ந்த அறந்தாங்கி மன்னர் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமான் அவர்கள் திருப்பெருந்துறை கோயிலுக்கு தானவநாட்டை சேர்ந்த சில பகுதிகளை தானமாக அளித்ததை அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடு கூறுகிறது. அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் வம்சத்தினராக தற்காலத்தில் பாலையவனம் ஜமீன்தார்கள் அறந்தாங்கியில் வசித்து வருகின்றனர். இவர்கள் கள்ளர் மரபினர் என புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று நூல் கூறுகிறது.
தானவ நாட்டில் அமைந்துள்ள சேந்தங்குடி ஜமீன் கள்ளர் மரபினை சேர்ந்தவர்கள் என பல வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
கிபி 1830ல் எழுதப்பட்ட தஞ்சை மராத்தியர்களின் மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவான வரலாறு பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி ” தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார். பட்டுக்கோட்டை சீமையை தாண்டி தஞ்சை சமஸ்தான எல்லை பரந்து இருந்ததால், கள்ளர்களை அழைத்து அவர்களோடு சுமூகமாக செல்ல பாளையங்களை ஏற்படுத்தினார். பாளையங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் ( கிபி 1780-1790) காலக்கட்டம் ஆகும். அப்பகுதியில் இருந்த கள்ளர்கள் கத்தி வேலை( வாள் வீச்சு) அறிந்த வீரர்களாக இருந்துள்ளனர். இதன்மூலம் தஞ்சையில் இருந்த 13 பாளையங்களும் ஆதியில் கள்ளர் பாளையங்கள் என அறியலாம். (தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள் Vol 1 page 159)
கிபி 1883ல் எழுதப்பட்ட Manual of tanjore in madras presidency எனும் நூலில் தஞ்சையில் இருந்த 13 ஜமீன்களில் கோனூர் ஜமீன் தவிர மற்ற அனைத்தும் கள்ளர்களின் வசம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு கள்ளர் ஜமீன்களில் சேந்தங்குடி ஜமீனும் ஒன்றாகும்.(Manual of tanjore in madras presidency pg 682)
கிபி 1906 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Tanjore gazetter எனும் நூலில் பக்கம் 193 ல் தஞ்சையில் உள்ள ஜமீன்கள் அனைத்தும் கள்ளர் மற்றும் மறவர் பிரிவினை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட " கள்ளர் சரித்திரம்" எனும் நூலில் தஞ்சையில் உள்ள பதிமூன்று ஜமீன்களில் பதினொரு ஜமீன்கள் கள்ளர் மரபினர் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதினொரு கள்ளர் ஜமீன்களில் சேந்தங்குடியும் ஒன்றாகும். மீதமுள்ள இரண்டு ஜமீன்களில் அத்திவெட்டி ஜமீன் முக்குலத்தோர் மறவர் பிரிவை சார்ந்தவர்களிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
" தமிழக வரலாற்றில் சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு" எனும் நூலில் சேந்தங்குடி ஜமீன்கள் பற்றிய பல அரிய தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நூலினை எழுதியவரே சேந்தங்குடி ஜமீன்கள் வழிவந்த திரு சே.சி.கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் உள்ள தகவல்களை காண்போம்.
சேந்தங்குடி பாளையக்காரர்களின் முன்னோரான வீராத்தேவன் என்பவர் குளமங்கலம் எனும் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். வீராத்தேவன் கொள்ளை நோயால் இறந்து போனபின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து கர்ப்பவதியான வீராத்தேவனின் மனைவி பொன்னம்மாள் அங்கிருந்து அகன்று அரசர்குளம் எனும் பகுதியில் தஞ்சம் புகுந்தார்.
இந்த காலகட்டத்தில் அரசர்குளம் பகுதியை ஆட்சி செய்தவர் அழகிய மணவாளத் தொண்டைமான் ஆவார். இவரது அரண்மனையில் பொன்னம்மாள் தஞ்சம் பெற்று வாழத் தொடங்கினாள். பொன்னம்மாளுக்கு அழகான ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு விஜயத்தேவன் என பெயரிட்டனர். விஜய தேவன் போர்க்கலைகளை கற்று வீரராக திகழ்ந்தார்.
இந்த காலகட்டத்தில் அரசர்குளத்தின் அரசர் அழகிய மணவாளத் தொண்டைமான் பாலையவனம் பகுதிக்கு வேட்டைக்குச் சென்றபோது பட்டுக்கோட்டையில் ஆட்சி செய்து வந்த பட்டு மழவராயன் மற்றும் வீராச்சாமி மழவராயர் முதலிய கள்ளர் குல வீரர்கள் அரசர்குளத்தின் மீது படையெடுத்து தாக்கினார். இது குறித்து குறிப்பிடும் செய்யுள் வரிகள் பின்வருமாறு:-
"ஆங்கரசர் வேட்டைக்குப் போனபின்னர்
அம்புக்கோயில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர்குல மழவராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்வோன்"
அரசர் ஊரில் இல்லாத இந்த நிலையிலும் விஜயதேவன் மழவராயர்களை எதிர்த்து வீரத்துடன் சண்டையிட்டுள்ளார். இறுதியில் மழவராயர்களிடம் இருந்து அரசர்குளம் காக்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்த அழகிய மணவாளத் தொண்டைமான் மகிழ்வுற்று, விஜயத்தேவனின் வீரத்தை பாராட்டினார். தமது ஆட்சிப் பகுதியில் இருந்த சேந்தங்குடி, கீரமங்கலம், குளமங்கலம்,பனங்குளம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு முதலிய பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாக சேந்தங்குடி பாளையத்தை உருவாக்கி விஜயத்தேவனுக்கு பரிசளித்தார். இந்த நிகழ்வு நடந்தது கிபி 1486 ஆம் ஆண்டாகும்.
விஜயத்தேவன் தனது சகோதரர்களுக்கு ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர் முதலிய ஊர்களில் இருந்த கள்ளர்
குல தொண்டைமான் குடும்பங்களில் பெண் எடுத்துள்ளார். இவ்வூர்கள் ஆலங்குடி நாடு எனும் கள்ளர் நாட்டை சேர்ந்த கிராமங்களாக இன்றும் திகழ்கின்றன.
மாவீரர் விஜயத்தேவன் கள்ளர் குல மழவராயர் பிரிவில் உதித்த இராசம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இதை குறிப்பிடும் செய்யுள் வரிகளாக " இந்திரக்குலக் கள்ளர் மழவராயர் இளங்கன்னி இராசம்மாள் இவ்விரண்டு சுந்தரவதனத்தார்" அமைந்துள்ளது.
கிபி பதினேழாம் நூற்றாண்டில் சேந்தங்குடி பாளையக்காரர் வழுவாட்டித் தேவன் என்பவர் ராமநாதபுரம் மன்னர் சேதுபதியுடன் போரிட்டதாகவும் அச்சமயத்தில் ஆலங்காடு, கீழாத்தூர் மற்றும் சூரன்விடுதி தொண்டைமான்கள் வழுவாட்டியாருக்கு ஆதரவாக போரிட்டதாக சேந்தங்குடி ஜமீன் வரலாற்று செய்யுள் குறிப்பிடுகிறது.
" இடியேறாலங்காட்டு வீராத் தொண்டைமான் கீழாத்தூர் ராமனோடு வெற்றிவீரன் கிழத்து சூரன்விடுதி முத்து தொண்டைமான் "
சேந்தங்குடி பாளையக்காரர்களோடு திருமண உறவு கொண்ட சூரன்விடுதி, ஆலங்காடு மற்றும் கீழாத்தூர் தொண்டைமான்கள் இன்றும் குளமங்கலம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.(பக் 88)
சேந்தங்குடியின் பதிமூன்றாவது ஜமீன் முத்துக்குமார் வணங்காமுடி வழுவாட்டியார் பழனியை சேர்ந்த வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் குல பெண்களை திருமணம் செய்துள்ளனர்.(பக் 127)
பாலையவனம் ஜமீன், கல்லாக்கோட்டை ஜமீன் மற்றும் சேந்தங்குடி ஜமீன் முதலியவை திருமண உறவில் இணைந்து இருந்தன.
கிட்டத்தட்ட பதினைந்து பாளையக்காரர்கள் சேந்தங்குடி ஜமீனை ஆட்சி செய்துள்ளனர். சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு எனும் நூலில் பக்கம் 126 ல் சேந்தங்குடி ஜமீன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
" சேந்தன்குடி ஜமீன் வழி வழி வந்தவர்கள் கள்ளர்கள்". இவர்களுக்கு கள்ளர் இன பெண்களையே ஆதியில் ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர் தொண்டைமான் பெண்களையும், பனங்குளம் மழவராயர் குடும்பங்களில் எடுத்து வந்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் சேந்தங்குடி ஜமீனின் உறவினர்கள் தானவ நாட்டில் சீரும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.
கள்ளர் பட்டங்கள் ஈராயிரம் அதில் நம் தானவநாட்டில் பயன்படுத்தப்படும் பட்டங்கள் எண்ணற்ற அவையில் காலம் கடந்தாலும் வார்த்தைகள் சிறிதும் கூட மாறாமல் உள்ள கள்ளர் பட்டங்கள்:
1.தொண்டைமான்
2.முண்டர்
3.கோழியார்
4.பூச்சியர்
5.பரங்கியர்
6.சாளுவர்
7.சேர்வை
8.காங்கயர்
9.செம்பியர்
10.கூத்தர்
11.காலிங்கராயர்
12.ஒண்டிபுலி
13.கட்டையன்
14.பேயன்
15.வழுவாடியர்
16.மணவாளர்
17.பம்பாளியார்
18.பன்னிகொண்டான்
19.சங்கரர்
20.தேவர்
21.வணங்கமுடி
22.மழவராயர்
23.மாங்காட்டார்
24.சேர்வைகாரர்
25.அம்பலம்
26.ராசாளியார்
27.சொக்கராயர்
28.வழுவாட்டி தேவர்
39.மானங்காத்தான்
30.சிங்கப்புலியார்
அரண்மனை ! நகரம் ஜமீன்தாரின் படைவீடு. காட்டுக்குள் இருந்ததால் காட்டுவாடி அரண்மனை என அழைக்கப்படுகிறது. படைவீரர் தங்கியுள்ள இடம் பாடி , அது வாடி என மருவி வழங்கும். ஆயுதக் கிடங்கு இருந்துள்ளது. மதிற்சுவர் இருந்த தடயம் காணப்படுகிறது. அழிந்தும் அழியா வண்ணமுடன் திகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டம். கீரமங்கலம் அருகில்.
K.S துரைச்சாமி வணங்காமுடி வழுவாட்டி தேவர்
திரு. கி.ச.முனிராஜ் வாணாதிராயன் அவர்கள் தனது ஆயவில் இவர்களை மறவர் என்று குறிப்பிடுகிறார்.
•வழுவாட்டித் தேவர் மரபும் சாதியும் •
"சேந்தன்குடி வழுவாட்டி பாளையக்காரர் வரலாறு" எனும் தலைப்பில் 'சேந்தன்குடி ஜமீன். திரு. செந்தமிழ் புலவர், அ.சுப்புராம செல்வ முத்துத் துரைத் தேவர் அவர்களால்' எழுதப்பட்டு, அரங்க. பொன்னுசாமி MA., M, Lit.,Dip, மானிடவியல்,( அருங்காட்சியக காப்பாளர், தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) அவர்களால் வெளியிடப்பட்ட நூலில், இந்த ஜமீன்தார்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தென் மாவட்டத்தின் வடமலை, சிவகிரி, குற்றாலம்,பகுநிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் செய்திகளை கருவூர்சாமி என்பவர் எழுதி வைத்திருந்த பனையோலை மற்றும் அவரின் முன்னோரான சின்னண்ணத் தேவர் எழுதிய பனையோலை ஆகியவற்றின் மூலமாக அறிந்து கொண்டதையும் கூறி, தங்களின் முன்னோர்கள் முருகப்பத்தேவன், பழனிவேல்தேவன் முதலாக, கடைசி ஜமீன்தார் வரையிலும் தெள்ளத் தெளிவாக வம்சாவளி பட்டியலுடன் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சுவடியில் வன்னியன், வன்னிய குலம் என்று மட்டுமல்ல!...
"மறவர் குல திலகன் "- என்றும் வருகிறது. ( கண்ணி: 15)
இந்த சுவடி நூலின் படி,
1. முருகப்பதேவன், ( மைசூரின் கீழ் அரசெய்தியவன்)
2. பழனிவேல் தேவன் (அரசு துறந்து சென்றவன்)
3. கந்தசாமித் தேவன் (தாய்மாமன் மகளை மணந்தவன்)
4. அருணாசலத் தேவன் ( கேரள மன்னன் மகள் சிவகாமியை காதல் மணம் புரிந்தவன்)
5. வேலரசுத் தேவன்
6. தங்கவேல் தேவன்( கேரள இளவரசிக்குப் பிறந்தவன்)
7. குமாரவேல்தேவன் ( வேலரசுத் தேவன் மகன்)
8. சுப்பையாத் தேவன் (குமாரவேல் தேவன் மகன்)
9. முத்துத்துரைத் தேவன் ( சுப்பையாத் தேவன் மகன்)
10. குழந்தைத்தேவன் ( முத்துத் துரைத் தேவர் மகன், )
11. சாமித்தேவன் ( அருணாசலத் தொண்டைமான் மகளை மணந்தவன்)
12. வீராத்தேவன் ( முன்னோர் பூமி குற்றாலம் சென்றவன், சூரன்விடுதி கண்ணுச்சாமி தொண்டைமான் மகளை மணந்தவன்)
13. அப்புத்தேவன் ( சிதம்பரம் சென்று வாழ்ந்தவன், முத்துத் தொண்டைமான் மகளை மணந்தவன்)
14. விசயத்தேவன் ( சேந்தமங்கலம் எனும் ஊரைச் சேந்தன்குடி என்று மாற்றியவன், பூச்சைய நாயக்கர் மகள் பொட்டம்மையையும், இந்திர குலக் கள்ளர் மழவராயர் மகள் ராஜம்மாளையும் மணந்தவர், சேதுபதி மேலாண்மையின் கீழ் ஆண்டவன்)
15.வாசு தேவன் எனும் வேலரசுத் தேவன் ( விசயத்தேவனுக்கு பூச்சைய நாயக்கர் மகள் மூலம் பிறந்த மகன்)
16. ரெகுநாதத் தேவன் ( விசையத் தேவனுக்கு பட்டு மழவராயர் மகள் மூலம் பிறந்த மகன்)
17. முருகப்ப தேவன்
18. வீராத்தேவன்
19. மன்னன் வழுவாட்டித் தேவன் ( சேதுபதியுடன் முரண்பட்டவன், பின்னர் அவரிடம் வணங்காமுடி பட்டம் பெற்று, அவரின் சேர்வைக்காரர் ஆனவன், தஞ்சை மன்னரிடம் பரிசு பெற்றவன்)
20. ரகுநாதத் தேவன்
21. ராமசாமித்தேவன்
22. பெத்த பெருமாள் ( ரகுநாத தேவர் மகன்)
23. ரகுநாத தேவன் ( தஞ்சை மன்னன் துளசா ஜி யிடம் சேர்வை பட்டம் பெற்றார்)
24. சிவந்த பெருமாள் ( பெத்த பெருமாள் மகன்)
25. பெரிய நயினான்
26. வீரப் பெருமாள் தேவன்
27. சின்னச்சாமி தேவன்
28. ரெகுநாதத் தேவன்
29. அருணாசலத் தேவன்
30. கூத்தைய வழுவாட்டித் தேவன்
31. அருணாசலத் தேவன்
32. சின்னச்சாமி தேவன்
33. விஜயரெகுநாதத் தேவன்
34. துரைச்சாமித் தேவன்
35. அருணாசல வணங்காமுடி வழுவாட்டித் தேவன் ( சேர்வைக்காரர் மாப்பிள்ளைத் துரையின் சகோதரி அலர்மேலுவை மணந்தவன்)
36. கருப்பண்ணத் தேவன்
37. மேகவர்ணத்தேவன்
38. முத்துத்துரைத்தேவன்
39. சுப்பிரமணிய வணங்காமுடி வழுவாட்டித் தேவன்
40. சத்துரு சங்கார வேல்சாமித் தேவன்
41. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்
42. சுப்புராமச் சந்திரத் துரை தேவன்
43. தங்கம்மாள் ஆயியார்
44. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்
45. சிவகாமி ஆயியார்
46. குமாரசாமி சேர்வைக்காரர்
47. சிங்கமுத்து வழுவாட்டித் தேவர்
- என நீண்ட பட்டியல் உள்ளது.
இவர்களில் சிலர் சேர்வை எனும் பட்டம் பெற்ற காரணமாக அகம்படியர் என்று சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும், கள்ளர் எனவும் சிலர் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும் அவர்கள் நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். மேலும் வலையர் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தங்கள் ராஜ்யத்தை அமைத்து வாழ்ந்ததால் தங்களை பொதுப்பெயரான முத்தரையர் என்ற வகையில் அடக்க முயற்சிகள் நடந்ததையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
•சேந்தன்குடி சின்ன வன்னியனார்•
"சின்ன வன்னியனார் பணவிடு தூது" என்று ஒரு சிற்றிலக்கியம். இது தூது நூல்கள் வரிசையில், பணத்தைத் தூதாக விடும் பணவிடு தூது எனும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை தூது இலக்கியங்கள் பல கடவுள்கள், சிற்றரசுகள், செல்வந்தர்கள் மீது பாடப்பட்டவை. அந்த வகையில் மேற்கண்ட தூது நூலில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவரவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த பெத்த பெருமாள் எனும் கலங்காப் புலியின் வழியில் வந்த சிவந்த பெருமாள் மீது பாடப்பட்டதுதான் சின்ன வன்னியனார் பணவிடு தூது.
இந்த செய்தியை தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்த சுவடியில் உள்ள சின்ன வன்னியனார் பணவிடு தூது எனும் தலைப்பில் அமைந்த பனையோலைச் சுவடியின் முன் பக்கத்தில் உள்ள ஏட்டிலேயே இச் சுவடி, வழுவாட்டி ஜமீன், புதுக்கோட்டை, மிதிலைப்பட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கூட இந்த மூடர்கள் சரியாகப் பார்க்கவில்லை. இதன் மூலம் அறியும் செய்தி என்னவென்றால்... இந்த சுவடி, வழுவாட்டித்தேவரவர்களின் சேந்தன்குடி பாளையத்துக்குரியது, இது புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த மிதிலைப்பட்டி சூரிய நாராயண கவி என்பவரால் பாடப்பட்டது என்பதாகும். மூன்று பணவிடு தூது எனும் நூலில் மேற்கண்ட நூலைத் தவிர, மற்ற இரு நூல்களில் ஒன்று, முத்துவிஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவிராயரால் பாடப்பட்ட பணவிடு தூது, மற்றொரு நூல், புல்லைக் குமரேசர் பணவிடு தூது எனும் புல்வயல் ஊரில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடப்பட்டதாகும்.
• பெத்த பெருமாள் வழி•
இந்த சின்ன வன்னியனார் பணவிடு தூது நூலில், பாட்டுத் தலைவனின் முன்னோனாக " பெத்த பெருமாள்" என்பவன் கூறப்படுகிறான். இந்த பெத்த பெருமாள் யார் என்றால், சேந்தன்குடி வழுவாட்டித் தேவர்களின் முன்னோரில் ஒருவன். இவனைப் பற்றி சுவடியின் 44 வது கண்ணியில் வரும் ... " நீர்முடிமேல் வைத்த பெருமாள் வரத்தினால் அம் மரபில் பெத்த பெருமாள் பிறந்திடினும்" எனும் வரியால் அறியலாம்.
பிற்காலத்தில் எழுதிய குறிப்புகள் ஜமீன் வலையர் சாதி என்றும் உள்ளது.
Edgar Thurston எழுதிய புத்தகத்தில் 30 வருடத்துக்கு முன்னாடி வழுவாடி என்று யாருமே இல்லை என்று எழுதி உள்ளார் ஆனால் 1883 british india census report valavadi என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.
Edgar Thurston எழுதிய புத்தகத்தில் 30 வருடத்துக்கு முன்னாடி வழுவாடி என்று யாருமே இல்லை என்று எழுதி உள்ளார் ஆனால் 1883 british india census report valavadi என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.
இதே புதுக்கோட்டை மேனுவல் கள்ளர் நாடு என்கிறது