சிங்கவனம் நாட்டினை ஆட்சி செய்த "மெய்க்கன் கோபாலர்" கள்
சிங்கவனம் ஜமீன்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சிங்கவனம் பகுதியை "மெய்க்கன் கோபாலர்" பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்களால் ஆட்சி செய்யப்பட்டுவந்தது. இவர்களுக்கு "மெய்க்கன் கோபாலன்" என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும்.
ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி மெய்க்கன்கோபாலர் அளித்த கொடை.
இதில் சவ்வாயி என்பது இளவரசரைக் குறிக்கும் பெயர். மெய்க்கண் என்பது நீதி கூறும் தலைவராக அவர்கள் விளங்கியதைக் குறிக்கிறது என்பர். (மெய் + காண் = மெய்காண் - மெய்க்கண்)

இராசராச வளநாடு, இராசேந்திர சோழ வளநாட்டில் பொய்யூர்க் கூற்றத்தில் சிறுநெல்லிக் கோட்டையில் இருக்கும் காணியுடைய
அரசாளி
இந்திரகுலம்
அனூமகொடி
செயக்கொடி
அம்புளிக்கொடி
மருப்புலி
கற்பக மாலை
படைத்தோன் ராயமானியஸ்ரீ சவ்வாயி விசைய ரெகுநாத மெய்க்கண கோபாலரவர்கல் குமாரன் ரா ஸ்ரீ சவ்வாயி விசைய ரெகுநாத வாளோசி மெய்க்கண கோபாலரவர்கல் என்று குறிப்பிடப்படுகிறார்.
வரலாற்றில் “கோபாலன்” என்று பெயர்தாங்கிய பலர், மூன்றாம் குலோத்துங்கன் மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் தொண்டை, வேங்கடம், காளத்தி பகுதிகளில், திக்கன் கண்ட கோபாலன், விஜய கண்டகோபாலன், வீர கண்டகோபாலன் போன்றவர்கள் ஆட்சி செய்துள்ளார்கள்.
கோபாலர் பட்டம் தங்கிய கள்ளர்கள் அதிகமாக செண்டங்காடு, பெரியகோட்டை, வாடியகாடு மதுக்கூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை (ஆலங்குடி), சாலியமங்கலம், அகரமாங்குடி போன்ற ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
கோபாலர் என்பதற்கு அரசன், கண்ணன், இடையன் என்று அகராதி விளக்கம் அளிக்கிறது.
கள்ளர்கள் சிலர் வைணவ சமயத்தினராக இன்றும் உள்ளனர். திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் (ஸ்ரீசூர்ணம்) என்று வைணவர்கள் கூறுகிறார்கள். இன்றும் சில கள்ளர் குடும்பங்களில் திருநாமம் மட்டுமே இட்டுக்கொள்வது வழக்கமாக உள்ளது (அன்பில் கிராமத்து சோழங்க தேவ அம்பலகாரர்கள், ஏடு எடுத்து தந்த ஏந்தல் முத்தமிழ் வளர்த்த வள்ளல் கோபாலசாமி ரகுநாத ராஜாளியார் போன்றவர்கள்). கள்ளர்களின் சில குடும்ப பட்டங்களான மாதவராயன், மெய்க்கன்கோபாலன், திருமார், கும்"மாயன்", கிருட்டினன், இராமலிங்கராயதேவன் மற்றும் கிருஷ்ணன் கூட்டம் என்பன வைணவ குறியீடாகவே உள்ளன.
வைணவ சமய பெயரை தாங்கிய சிங்கவனம் "மெய்க்கன் கோபாலர்" சிற்றரரசர்கள் இராமர் வணங்கிய "புள்ளிருக்கு வேளூர்" என்ற வைத்தீஸ்வரன் கோவில் தையல் நாயகி அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
சித்திரை மாதம்....26 ஆம் நாள்... "மெய்க்கங் கோபாலருக்கு உபயம் ...
மராட்டியர்களால் கட்டப்பட்ட சிங்கவனத்திலுள்ள அருள்மிகு விஜயபட்டாபிராமஸ்வாமி கோயில் இவர்களுக்குரியதே ஆகும்.
தமிழறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தனது "கள்ளர் சரித்திரம்" எனும் நூலில் இவர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளார்.
"ஸ்ரீசவாய் விஜயரகுநாத வாளாசி கிருஷ்ணக்கோபாலர்" தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப்சிங்கின் காலத்தில்({1758 } மன்னவர்குடி என முன்பு வழங்கப்பட்ட இன்றைய மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக கொடைகள் அளித்த செய்திக்குறிப்புகள் உள்ளன. அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது.

சிங்கவனம் பாளையக்காரர் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நிலக்கொடை அளித்த செய்தியை அந்த ஆதீனத்தின் செப்பேடு மூலமாக அறியமுடிகிறது.
திருவாவடுதுறை ஆதீனச்செப்பேடு:
செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் - திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை
வட்டம் - குத்தாலம்
மாவட்டம் - நாகப்பட்டினம்
மொழியும் எழுத்தும் - தமிழ்-தமிழ்
அரசு / ஆட்சியாளர் - தஞ்சை மராட்டியர் / முதலாம் துளசா
வரலாற்று ஆண்டு - 13.4.1729
விளக்கம் :
"இராசராச வளநாடு, இராசேந்திர சோழ வளநாட்டில் பொய்யூர்க் கூற்றத்தில் சிறுநெல்லிக் கோட்டையில் இருக்கும் காணியுடைய அரையர்களில் சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர்" மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி கிருட்டிண கோபாலர்" அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.
கிபி 1729 ல் "பொய்யூர் கூற்றத்து பாப்பா நாட்டிலிருக்கும் காணியுடைய அரையர்" என சிங்கவன ஜமீன் விஜய ரகுநாத கிருஷ்ண கோபாலர் குறிப்பிடப்பட்டுள்ளார். (திருவாடுதுறை ஆதீன செப்பேடு-5)
தமிழ் சிற்றரசர்கள் நாயக்கர்களால் கைப்பற்றிய பின்பு பாளையக்காரர்களாக ஆக்கப்பட்டார்கள், பின்பு ஆங்கிலேயர்களால் கைப்பற்றிய பின்பு ஜமீன்கள் ஆக்கப்பட்டார்கள். இந்த சிங்கவனம் ஜமீனின் தற்போதைய ஜமீன்தாராக திரு. ஸ்ரீமன் ராஜஸ்ரீ. விஜய ரகுநாத ராமசாமி மெய்க்கன் கோபாலர் இருக்கிறார்.
இன்றும் பல்வேறு கோயில்களிலும் சிறப்புரிமை எய்துவோராகவும் முன்னிலை வகிப்போராகவும் இருக்கின்றனர்.
1) ஸ்ரீமன் ராஜஸ்ரீ. விஜய ரகுநாத ராமசாமி மெய்க்கன் கோபாலர்
2) கிருஷ்ணசாமி மெய்க்கண்கோபாலர்
3) விஜய் மெய்க்கண்கோபாலர்
சிங்கவனம் ஜமீன் தலைமையில் அறந்தாங்கி மாட்டு வண்டி பந்தயம் நடந்துவருகிறது. இவர்கள் மாட்டு வண்டிகளும் பல்வேறு இடங்களில் பரிசுகளை வென்று வருகிறது.
1992ல் இராம.துரைமாணிக்கம் அவர்களின் திருமணம் விழாவில் தலைமையேற்று நடத்திய ஐயா பூண்டி வாண்டையார் , ஐயா சொந்தராஐன் மூப்பனார்,ஐயா சிங்கவனம் ஐமீன்தார்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் - செ.இராசு, தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் , தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை.
சிங்கவன அரசர் மெய்கண் கோபாலர் அரசவையில் இருந்த பொருட்கள் மட்டும் ஆயுதங்கள் சிலவைகள் மட்டுமே உள்ளன.
சிங்கவன அரசர் மெய்கண் கோபாலர் அரசவையில் இருந்த பொருட்கள் மட்டும் ஆயுதங்கள் சிலவைகள் மட்டுமே உள்ளன.
நன்றி :
திரு . கி.ச.முனிராஜ் வாணாதிராயர்
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு . கி.ச.முனிராஜ் வாணாதிராயர்
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்