ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாயக்கர்பாளையம் (அய்யம்பேட்டை) சாவடி நாயக்கர்

நாயக்கர்பாளையம் சாவடி நாயக்கர் ஜமீன்

வரலாற்றில் ஐயம்பேட்டை நூலில் சாவடி நாயக்கர் வரலாற்று தகவல்கள் உள்ளன. நூலில் அட்டை படமாக சாவடி நாயக்கர் அடிப்படையாக வரையப்பட்ட  படத்தினை  போடப்பட்டுள்ளது 



தஞ்சை நாயக்கர் காலத்தில், அரசு அதிகாரியாக கள்ளர் குடியை சேர்ந்த அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் நியமிக்கபட்டவர்கள் (கள்ளர்-நாயக்கர் என்ற பட்டம்) . அய்யம்பேட்டை அவர்களுக்கு இனாம் கிராமம். முதல் மரியாதைக்கு உரியவர்கள். இவர்களின் பூர்விக பகுதி அரியலூர் ரெட்டிப்பாளையம் ஊராட்சி பகுதியில் நாயக்கர்பாளையம் ஆகும். இவர்கள் குலதெய்வம் நாயக்கர்பாளையம் திரௌபதி  அம்மன் ஆகும்.

1) கிருஷ்ணசாமி நாயக்கர்
2) அப்பு நாயக்கர்
3) கிருஷ்ணசாமி நாயக்கர்
4) கோவிந்தராஜ் நாயக்கர்

கோவிந்தராஜ் நாயக்கர் வாரிசுதாரர்கள் 
1) மதுராந்தகம் ராமசந்திரன். நாயக்கர்
2) கிருஷ்ணசாமி நாயக்கர்

தஞ்சாவூர் சிங்கவளநாடு தளவாபாளையம், கத்திரிந்த்தம் பகுதியில் உள்ள கோயில் கல்வெட்டில் சாவடி நாயக்கர் பற்றிய கல்வெட்டும் மற்றும் இடங்கை வலங்கை சுவடியிலும், தஞ்சாவூர் மராட்டியர் மோடி ஆவணங்களிலும் குறிப்பிடப்படுகின்றனர்.

A copper plate grant with Ayyampet Honourable Chavadi Nayakkar -Local Chieftain when Thanjavur was ruled by Nayaks and Marattas

சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன் மகன், மராட்டியத்தின் அடுத்த அரசன் ராஜாராம் என்கிற ராமராஜவுடன் தப்பித்து செஞ்சி வந்து, பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு வருகிறார்கள். தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி துக்காவுபாய் மகன். தன் சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி, அவர்களை தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) சாவடி நாயக்கர் பொறுப்பில் முழு பாதுகாப்புடன், அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார். அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு, சேவகர்களுக்கான குடியிருப்பு ஏற்படுத்தி, சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி, அருகில் உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி கொண்டிருந்தார்கள்.

ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள். சாவடி நாயக்கர் பொறுப்பில் பாதுகாப்பாக இருந்த, ராஜாராம் மராட்டியத்தின் மன்னனாகிறார்.





கள்ளர் சரித்திரம்








சௌராஷ்டிர சமூக மக்கள் மானம் காத்த சாவடி நாயக்கர் :

‌சௌராஷ்டிர சமூக மக்கள் திருச்சி ஜில்லா அரியலூர் தாலுகாவில் வாழ்ந்து வந்தனர் இன்றளவும் பட்டுநூல்காரர் தெரு என்று இரண்டு தெருக்கள் உள்ளது செட்டிகுளம் என்ற ஊரிலும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லை என்ற எண்ணத்திலும் உடையார்பாளையம் ஜமீன்தார் சௌராஷ்டிர மக்களிடம் அவர்கள் வீட்டில் புதிதாக பூப்பெய்திய பெண்ணை ஜமீன்க்கு தரவேண்டும் என்று காம இச்சையுடன் கட்டளை இட்டான்.


இது நாள் வரை பல நாடுகள் கடந்து வந்த சௌராஷ்டிர மக்களுக்கு ஏற்படாத சோதனை உடையார்பாளையம் ஜமீன் மூலம் ஏற்பட்டது. சௌராஷ்டிர சபையார் கூடி என்ன செய்வது என்று விவாதித்தனர். நாளைய தினம் ஒரு புது பெண்ணை அனுப்பவேண்டுமே என்று கலங்கி நின்றனர். அப்போது நம்மில் மந்த்ர தந்த்ரம் தெரிந்த சௌராஷ்டிர பிராமிணர்கள் ஒரு உபயம் செய்தனர். மாவினால் ஒரு பெண் உருவத்தை பிண்டமாக செய்து அதை உடையார்பாளையம் ஜமீன் அனுப்பி வைத்த பல்லக்கில் ஏற்றி அனுப்பிவிட்டு , சௌராஷ்டிரர்கள் தத்தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு ஊரை காலி செய்து விட்டு தஞ்சையை நோக்கி கால்நடையாக கிளம்பிவிட்டனர்.


‌போகும் வழியில் திருமானுர் ஏலாகுறிச்சி அருகே ‘கொள்ளா நீரும் கொள்ளும் இடம்’ என்பார்கள் கொள்ளிடத்தை. கரை புரண்டு ஓடி காவியங்களில் இடம்பெற்ற அந்தக் கொள்ளிடத்தின் வடகரையில் நாயக்கர்பாளையம் என்ற பகுதியில் சாவடி நாயக்கர் பெயரை உடைய ஜமீன் நீதி வழுவாது ஜமீனை பரிபாலனம் செய்து வந்தார். அவரிடம் சௌராஷ்டிர சமூக மக்கள் சரணடைந்த போது , சௌராஷ்டிர சமூக குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் அனைவரும் சோர்வுற்ற நிலையில் இருத்ததை கண்ணுற்று அனைவர்க்கும் உணவு படைத்து அஞ்சாதீர் எனக்கு சொந்தமான சாவடி ஒன்று அய்யம்பேட்டை அருகில் உள்ளது அந்த இடத்தில் நீங்கள் குடியேறி நிம்மதியாக வாழலாம் என்று ‌ மனோஜியப்பா சாவடியில் சௌராஷ்டிர மக்களை குடியமர்த்தியோதோடு அல்லாது இவரும் சாவடியில் தாங்கினார்.


‌உடையார்பாளையம் ஜமீன் பல்லக்கில் சென்ற பெண் உருவத்தை ஜமீன் ஆசையோடு நெருங்கியபோது அந்த பெண்ணுருவம் கீழே விழுந்து விட்டது. முதலில் பயந்த ஜமீன் பிறகு சுதாரித்து சௌராஷ்டிரர்கள் நம்மை ஏமாற்றிவிட்டானர் என்று கொதித்து எழுந்தான். அவர்கள் எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்று சூளுரைத்து தன் வீரர்கள் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினான்.


சௌராஷ்டிரர்கள் தஞ்சை‌க்கு அருகே அய்யம்பேட்டை மனோஜியப்பா சாவடியில் பிரதாப சாவடி ஐயாவின் ஜமீனில் அடைக்கலம் பெறுள்ளனர் என்ற செய்தியை அறிந்து உடையார்பாளையத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு சாவடி ஐயா வீட்டிற்கு வந்தான். சாவடி ஐயாவும் உடையார்பாளையம் ஜமீனை வரவேற்று உணவு உண்ண அழைத்தார். ஊர் மக்களும் என்ன நடக்கபோகிறது என்று பதைத்து நின்றனர். சாவடி ஐயா தன் பணியாள் மூலம் பேயன் வாழை இலையை பறித்து வரசெய்து அதில் உணவு பரிமாறினார். பேயன் வாழை இலை மிகவும் பெரியதாக இருக்கும். உடையார்பாளைய ஜமீன் அமர்ந்து உணவு அருந்த கைக்கு எட்டாத தொலைவில் இருந்தது.


‌என்ன ஐயா எட்டவில்லை என்று உடையார்பாளையம் ஜமீன் கேட்டபோது ஆமாங்க ஐயா உங்களுக்கும் எங்களுக்கும் எட்டதுங்க என்று கூறிவிட்டார். கோபத்துடன் உடையார்பாளையம் ஜமீன் வெளியேறினான். அவனுடன் நமது சாவடி ஐயாவின் ஒற்றனையும் கலந்து அனுப்பிவிட்டார். உடையார்பாளையம் ஜமீன் போகும் வழியில் தன் வீரர்களிடம் இன்னும் இருவாரத்தில் சாவடி ஐயாவின் தலையை கொய்துவிட்டால் இந்த சௌராஷ்டிர மக்கள் அதன்பின் என்னிடம் என்ன பாடுபடபோகிறார்கள் என்று ஆணவ சிரிப்பு உதித்தான்.


‌விவரங்கள் யாவும் தன் ஒற்றன் மூலம் அறிந்த நமது சாவடி ஐயா தன்னுடைய ஆளை அனுப்பி உடையார்பாளையம் சென்று உடையார்பாளையம் ஜமீன் தலையை கொய்து எடுத்து வந்து சாவடியில் வைத்து சௌராஷ்டிர மக்களின் பயம் கலையப்பட்டது.



அய்யம்பேட்டை ஶ்ரீ கிருஷ்ணன் கோயில்








சௌராஷ்டிர சமூக மக்கள் தமக்குள் உள்ள சர்ச்சையை சாவடி ஐயாவிடம் முறையிட்டு தீர்த்து கொள்வர். கிருஷ்ணன் கோவில் கட்ட இடம் தந்து சௌராஷ்டிர சமூக மக்களை பல இன்னல்களில் காத்ததால் பிரதாப சாவடி ஐயாவிற்கு கோவில் முதல் மரியாதை பரிவட்டம் முதலான சம்பிரதயங்கள் இன்றும் தரப்படுகிறது. அவரது முழு பெயர் தெரிந்தாலும் ஐயா என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

செப்பேடு உதவி : ஆய்வாளர் ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார்


தகவல் உதவி : திரு. கோபி ஸ்ரீனிவாசன் (சௌராஷ்டிரர் - வரலாறு )


ஆய்வாளர் ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார் இவர்கள் வரலாற்றை ஆய்வு செய்து வருகிறார். அதன் மூலம் பல உண்ணமையான வரலாறு விரைவில் வெளிவரும். இவர்கள் வரலாறை அறிய காரணமாக இருந்த ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.


வாரிசுதாரர் சாவடி கி௫ஷ்ண்ணாசாமி நாயக்கர்

நாயக்கர் பட்டம் பூண்ட கள்ளர்கள், தஞ்சை மாவட்டம், வரகூர் கிராமத்தில் மேலும் பாபநாசம் தாலுக்கா வளத்தாமங்கலத்திலும் அதிகமாக வசிக்கின்றனர்.




செப்பேடு உதவி  :  ஆய்வாளர் ஐயா உயர்திரு. செல்வராஜ் நாயக்கவாடியார்

தகவல் உதவி  : திரு. கோபி  ஸ்ரீனிவாசன் (சௌராஷ்டிரர்)


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்