"கள்ளர்" உலகந்தோன்றிய காலத்தே சூரிய/இந்திர மரபில் தோன்றி ஈராயிரம் பட்டங்களை சுமந்து, பேராசர்களாகவும், சிற்றரசர்களாகவும், படைதலைவர்களாகவும் இருந்து ஆண்ட மரபினர், தாய் மண் பகையழிக்க மாற்றார் அறியாதவாறு, ஒற்றாய்ந்த பின் காலமறிந்து, இடமறிந்து, வலியறிந்து, களம்புகுந்து களிறெரிந்து பெயர்ந்தவர் என்பதால் கள்ளர் என்ற பெயரிலேயே நிலைக்கப் பெற்றனர். கள்ளர் மக்கள் நிலைப்படை கள்ளர் படைப்பற்று என்றும், குடியிருக்கும் தொகுதி "கள்ளர்நாடு" என்று பெயர்பெறும். கள்ளர் ஆயுதம் கள்ளர்தடி என்ற "வளரி". கள்ளர்: பண்டையர்
சனி, 12 டிசம்பர், 2020
ஐஎன்ஏ வில் கள்ளர்கள்
வெள்ளி, 11 டிசம்பர், 2020
சந்திரசேகரன் மழவராயர்
இன்று தஞ்சை மாவட்டம், பூதலூரில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தன்னுடைய 2 ஏக்கர், 17 சென்ட் நிலத்தை தானமாக அளித்தவர் "கொடைவள்ளல் திரு.க.சந்திரசேகரன் மழவராயர்" அவர்கள் புதுப்பிக்கப்பட்ட இச்சிலையை திறந்து வைத்தவர் திரு.C.R. கலியமூர்த்தி மழவராயர் அவர்கள்..
இச்சிலையை நிறுவியர்
திரு.அய்யாராஜ் கண்டியர் அவர்கள்!!!
மிகவும் பின்தங்கிய பகுதியான பூதலூரில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி அறிவை புகட்ட தன்னுடைய நிலத்தை தானமாக அளித்த கொடைவள்ளல் சந்திரசேகரன் மழவராயர் அவர்கள் இன்றும் நம்மோடு வாழ்கிறார் அவரால் கல்வி பெரும் மாணவர்கள் மூலமாக. ஆயிரம் அன்னதானங்கள்,கோவில்களை எழுப்புவதை காட்டிலும் புண்ணியமாம் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.
காடவராய சகோதரிகள்
துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்: உதவ முன் வந்த ஒபாமா.. வியந்த அப்துல்கலாம்! -சோகத்தை ஏற்படுத்திய இழப்பு
காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால் கடைசி வரை கதர் ஆடை மட்டுமே உடுத்தி வந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்தவர் உயிழந்த துளசி அய்யா வாண்டையார்.
தஞ்சாவூரின் பாரம்பர்யமிக்க குடும்பத்தை சேர்ந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கல்லூரி மூலம் கல்வி பயில வைத்து ஏழை மாணவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றியவருமான துளசி அய்யா வாண்டையார், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார். அவருக்கு வயது 93. பெரும் நிலக்கிழார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாரம்பர்யமிக்க குடும்பமாக இவரது குடும்பம் திகழ்ந்து வருகிறது. இவரது மனைவி பத்மாவதி அம்மாள். இவர்களது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். மகள் புவனேஸ்வரியை மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜமீன் குடும்பத்தை சேர்ந்த மலையாண்டி அசோக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி புஷ்பம் தன்னாட்சி பெற்ற கல்லூரியின் செயலாளராக இருந்து கடைசி வரை ஒரு பைசா கூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால் தஞ்சை பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `கல்வி காவலர்’ என்றே அழைக்கின்றனர்.
காந்திய கொள்கையை உறுதியாக பற்றி கொண்டு கடைசி வரை கடைபிடித்தவர். உணவு கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சு பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசி வரை மருத்துவமனைக்கு பக்கமே எட்டி பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்த துளசி அய்யா வாண்டையார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னையிலிருந்து சொந்த ஊரான தஞ்சை பூண்டிக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவரை நன்கு அறிந்த வட்டாரத்தில் பேசினோம், ``துளசி அய்யா வாண்டையார் தன்னுடைய இளமை கல்வியை ஏற்காடு மான்ஸ்போர்ட் பள்ளியிலும், கல்லூரி படிப்பை சென்னை லயோலாவிலும் படித்தார். பின்னர் தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட தன்னாட்சி கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரியின் செயலாளராகவும், தாளாளர் பொறுப்பிலும் இருந்து கல்லூரியினை செயல்படுத்தி வந்தார். இப்போது வரை மாணவர்களிடையே ஒத்த பைசா கூட நன்கொடை வாங்காமல் பல்லாயிரகணக்கான ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்.
ஏழை மாணவர்கள் 200 பேர் பயன்பெறும் வகையில் தனது சொந்த செலவில் கல்லூரில் இலவச ஹாஸ்டல் ஒன்றை நடத்தி வந்தார். அதனால் கல்லூரியே அவரது அடையாளமானது. கல்வி காவலர் என்ற பெயரும் அவருக்கு வந்தது. காந்தியின் கொள்கையினை கடைசி வரை கடைப்பிடிததவர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்து பணியாற்றியதுடன் 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். காமராசர், வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். காமராசரின் கொள்கைகளை பின்பற்றியவர். நடிகர் சிவாஜிகணேசனுக்கு ஆலோசனைகளை வழங்கியவர்.
எம்.பியாக இருந்த போது ஒரு நாள்கள் கூட விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் அதிகம் நேரம் இருந்த எம்பிக்களின் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது குறிப்பிடதக்கது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு தேவையான குறிப்புகள் கொண்ட இன்ப வாழ்வு என்ற புத்தகத்தை எழுதி ஒரு லட்சம் பிரதிக்கு மேல் அச்சிட்டு மக்களிடத்தில் இலவசமாக கொடுத்து வந்தார்.
தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதை விட கூடுதலான பரிசை கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார். இவரது தலைமையின் கீழ் ஆயிரகணக்கான திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். ஒரு திருமணத்திற்கு கூட நேரம் தவறி சென்றதே இல்லை. கட்டாயம் ஏதோ ஒரு வெள்ளி பொருளை பரிசாக வழங்குவார். சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். ஓவியர் மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியக் கதையில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் மாடலாக துளசி அய்யா வாண்டையார் இருந்தார் என்பது பலருக்கு தெரியாத தகவல்.
பால்மர் ரைட்டிங் முறையில் எழுதுவதில் வல்லமை பெற்றவர். காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால் கடைசி வரை கதர் ஆடை மட்டுமே உடுத்தி வந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்து வந்தார். அந்த அளவிற்கு காந்தியின் மீது ஈர்ப்பு கொண்டவர்.
இரண்டாவது முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர், அதன் பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய நூல்களை படித்து விட்டு மெயில் மூலம் தனது கருத்தை அனுப்பி வைத்தார். அதனை படித்து விட்டு ஒபாமா துளசி அய்யா வாண்டையாருக்கு ரிப்ளை அனுப்பினார். அப்போது முதல் மெயில் மூலம் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். அவரை பற்றியறிந்த ஒபாமா, `உங்களுக்கோ அல்லது உங்கள் கல்லூரிக்கோ என்ன உதவி வேண்டும் கேளுங்கள் செய்து தருகிறேன்’ என கேட்க, `எனக்கு தேவையானவை கடவுள் புண்ணியத்தால் கிடைத்து விட்டது. அந்த உதவியை ஏழை மாணவர்களுக்கு செய்யுங்கன்னு’ மெலியில் அனுப்பி ஒபாமாவை மெய் சிலிரிக்க வைத்தார். தனது கல்லூரி விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்து வந்த போது கல்லூரியின் நிர்வாகத்தை பார்த்து அப்துல்கலாம் வியந்து பாராட்டினார்.
பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். அமெரிக்கன் பயோ கிராபிக் என்ற இன்ஸ்டியூட் உலகில் தலைசிறந்த 500 மனிதர்களை தேர்ந்தெடுத்தது. அதில் துளசி அய்யா வாண்டையாரும் இடம் பெற்றார் என்பது சிறப்புகுரியது. பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்ததை பயணக் கட்டுரையாக எழுதுவதை வாடிக்கையாக கொண்டவர். அவருடைய இழப்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். மாணவர்களுக்கும், மக்களுக்கும் தனது கல்லூரியின் மூலம் மட்டுமல்ல உதாரணமாக வாழ்ந்ததன் மூலம் பாடமாகவும் மாறி மறைந்துள்ளார்” என சோகத்துடன் தெரிவித்தனர்.
மாவீரர் இராமலிங்க ஓந்திரியர்
SS_Group_Hitler_intelligence_service
தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் வங்கார்.
த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன் வங்கார். இவர் தஞ்சாவூரில் மார்ச் 23, 1970ல் பிறந்தார்.
பசுபதி ஆர்சுத்தியார்
தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதி
மே 18, 1969 அன்று தன் பிறந்தார்.
இவர் கூத்துப்பட்டறை முத்துசாமியின் மாணவர்
கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படத்தின் வில்லன் கொத்தாள தேவனாக நடித்ததன் மூலம் பசுபதி தீவிரமாக கவனிக்கப்படத் தொடங்கினார். அந்தப் படத்தில் ஒரு அசல் மதுரை மாவட்ட நபராகவே வாழ்ந்திருப்பார். அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த ‘வெய்யில்’ கடந்த ஆண்டு வெளியான ‘அசுரன்’ போன்ற படங்களில் தெக்கத்தி மனிதர்களைக் கண்முன் நிறுத்தியிருப்பார். இவர் சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். ஆனால் இவரது பூர்விகம் தஞ்சாவூர் மதுக்கூர் அருகே - திருமங்கலக்கோட்டை -வடசேரி அருகில் உள்ள " அருமளை" என்கிற ஊரே அவரது சொந்த ஊர். இவரது தந்தை ராமசாமி ஆர்சுத்தியார்.
1980-களில் சென்னையில் தீவிரமாக இயங்கி வந்த நாடக் குழுவான கூத்துப்பட்டறையில் இணைந்தார்.
எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் சிறப்பு. கிராமத்து எளியவர், சிறு நகரத்து மனிதர், பெருநகர பிரபலம், ரவுடி, தாதா, ஆசிரியர், மருத்துவர் என எப்படிப்பட்ட கதாபாத்திரத்தின் பின்னணி, சூழல், மண் சார்ந்த பழக்கவழக்கங்கள், உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக பிரதிபலிப்பவர் பசுபதி. அந்த வகையில் கூத்துப்பட்டறை நிறுவனரான எழுத்தாளரும் மாபெரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமியின் பெருமைக்குரிய சீடர்.
கூத்துப்பட்டறையில் அங்கம் வகித்த நடிகர் நாசர் மூலமாக பசுபதிக்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. கமலின் பிரம்மாண்டக் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் பசுபதி. ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. நாசர் இயக்கி நடித்த ‘மாயன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் பசுபதி. ‘ஹவுஸ்புல்’, ‘தூள்’, ’இயற்கை’, ‘அருள்’ என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 2004-ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த ‘விருமாண்டி’ படம்தான் பசுபதியின் திரை வாழ்வில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.
நட்சத்திரமல்ல நடிகன்
அதன் பிறகு தொடர்ந்து 'சுள்ளான்', 'மதுர', 'திருப்பாச்சி' ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தவர் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார். ‘மஜா’ படத்தில் நாயகன் விக்ரமுக்கு இணையான வேடத்தில் வடிவேலுக்குப் போட்டியாக நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பினார். விருதுநகர் மக்களின் அனல் நிறைந்த வாழ்க்கையின் அசல் பதிவாக அமைந்த இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். எஸ்.பி.ஜனநாதனின் ‘ஈ’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
AMP
பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெயில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாகப் பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி.
பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெய்யில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாக பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி. ரஜினி படத்தில் நாயகன் 2008-ல் வெளியான ‘குசேலன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். ’கத பறயும்போள்’ என்ற ,மலையாளப் படத்தின் மறு ஆக்கமான இந்தப் படத்தில் பசுபதிதான் மையக் கதாபாத்திரம். சற்று விரிவான கெளரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தலைப்புக்கேற்ப ஏழையாக இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழும் சிகைதிருத்தக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்திருந்தார் பசுபதி. 2011-ல் வெளியான ’அரவான்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் வசந்த பாலனுடன் இணைந்தார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் 18ஆம் நூற்றாண்டு மதுரை வட்டாரத்தில் வாழ்ந்த பழங்குடித் தலைவனாக நடித்திருந்தார். இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, மையக் கதாபாத்திரம் என மாறி மாறி நடித்து ரசிகர்கள், விமர்சகர்கள் மனங்களில் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறார்.
அதேபோல் சினிமா என்பது நாடகத்திலிருந்து முகிழ்ந்த கலை வடிவம் என்றாலும் மேடையிலிருந்து திரைக்கு வரும் பலர் மேடையை மறந்துவிடுவார்கள். ஆனால் பசுபதி மேடை நாடகங்களிலும் நடித்துவருகிறார். நாடக மேடை மீதான நன்றியுணர்வை மறக்காமல் இருக்கிறார். பசுபதியை நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்பது நடிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அவரோ தன் மனதுக்கு பிடித்த நல்ல வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதை 2016இல் வழங்கிய ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.
சிறந்த நடிகரான பசுபதிக்கு அவர் விரும்பும் கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் திரைப்படத் துறையில் அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்வோம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கள்ளரின் உருவமைப்பு
திருவண்ணாமலையில் சாத்தனூர் வேதியப்பன் கோயிலில் பல்வேறு நடுகற்கள் பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. இங்குள்ள நடுகற்களில் ஒன்று பத்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
இக்கல்வெட்டு வாசகங்கள் பின்வருமாறு:
"கோப்பரகேசரி பர்மருக்கு யாண்டு நான்காபது வேட்டுவதி அரையர் வாணகோவரையர் ஆள் ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் மேல் கோவலூர் நாட்டு அளவிப்பாடி தொறு மீட்டுப் பட்டான் மன்றாடி கல்" என குறிப்பிடுகிறது.
கிபி 911 ஆம் ஆண்டு முதலாம் பராந்தகன் ஆட்சி காலத்தில் மேற் கோவலூர் நாட்டில் அளவிப்பாடி எனும் பகுதியில் நடந்த ஆகொள் பூசல் எனும் ஆநிரை கவரும் போரில் ஆனைமங்கலம் எனும் பகுதியை சேர்ந்த கள்ளன் தாழன் என்பவர் ஆநிரைகளை காத்து தன்னுயிரை நீத்து வீர மரணம் அடைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆனைமங்கலம் எனும் ஊர் இன்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூரின் அரையராக கள்ளன் தாழன் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
முதலாம் பராந்தக சோழன் காலத்தில் நடைபெற்ற ஆகோள் பூசலில் போரிட்டு உயிர் நீத்த கள்ளன் தாழனின் உருவமும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் கள்ளரின் உருவமைப்பு
ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நடுகல் கல்வெட்டு அக்காலத்தில் இருந்த ஒரு கள்ளரின வீரனின் உருவ அமைப்பை நமக்கு எடுத்துரைக்கிறது.
வலது கையில் பிச்சு வாளும், இடையில் குறு வாளும், இடது கையில் வில்லும் என ஒரே நேரத்தில் மூன்று ஆயுதங்களை கொண்டிருந்ததை இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது.
வலப்பக்க கொண்டை, நீண்ட காது மடல்கள், சிறுத்த இடை என போர் வீரனுக்குரிய அனைத்து லட்சணங்களையும் இவ்வீரன் கொண்டு இருந்ததை அறிகிறோம்
இவ்வீரனின் தியாகத்தை போற்றி இன்றும் வழிபாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: கல்வெட்டு எண் ARE 230/ 1971-1972
சிற்பத்தின் விளக்கம் அறிய உதவிய திரு. திருச்சி பார்த்தி அவர்களுக்கும் நன்றி.
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார
மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுலியக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஐயா மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்
*அகில மலேயாத் தமிழர்கள் முதலாம் மாநாட்டை நடத்தியவர்,
*ஈப்போ மாரியமன் கையில் கட்டியவர்,
*மலேசியாவில் ஈப்போவில் உள்ள ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார்.
வரலாற்று பக்கங்கள் - I
கள்ளர் மரபினர் Kallar History வரலாற்றை அறிய கீழே உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇 ✍ ️ வளரி ...
இந்த வலைப்பதிவில் தேடு
லேபிள்கள்
- கள்ளர் நாடுகள் (32)
- தொண்டைமான் மன்னர்கள் (20)
- தொண்டைமான் (14)
- பல்லவராயர் (10)
- மழவராயர் (8)
- சோழர் (3)
- கள்ளர் (1)
- பல்லவர்கள் (1)
என்னைப் பற்றி
- கள்ளர் குல வரலாறு
- Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)
வலைப்பதிவு காப்பகம்
-
►
2024
(27)
- ► செப்டம்பர் (1)
-
▼
2020
(155)
-
▼
டிசம்பர்
(12)
- ஐஎன்ஏ வில் கள்ளர்கள்
- சந்திரசேகரன் மழவராயர்
- காடவராய சகோதரிகள்
- துளசி அய்யா வாண்டையார்
- மாவீரர் இராமலிங்க ஓந்திரியர்
- தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் வங்கார்.
- பசுபதி ஆர்சுத்தியார்
- ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கள்ளரின் உருவமைப்பு
- மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்
- தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் உறந்தைராயர்
- வறண்ட பகுதியைப் பசுமையாக்கிய டி.எஸ்.பி அய்யர்சாமி
- ஆறுமுகசாமி கொடும்பூரார்
- ► செப்டம்பர் (2)
-
▼
டிசம்பர்
(12)
-
►
2019
(175)
- ► செப்டம்பர் (29)
-
►
2018
(149)
- ► செப்டம்பர் (7)