வெள்ளி, 11 டிசம்பர், 2020

காடவராய சகோதரிகள்


சாதிக்க வயது ஒரு தடையில்லை. சிறுவயதிலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து உலக சாதனை புரிந்த சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.


சிவகங்கை  மயில்ராயன் கோட்டை நாடு  அலவாக்கோட்டை கிராமம் ஆறு.சுப்பையா காடவராய அம்பலம்( எ) சுப்பிரமணியன்-மணிமேகலை கிருஷ்ணம்பட்டி ச.கதிரேசன்ததேவர்-சாரதா அவர்களின் பேத்தி சுப.சரவண செல்வம் காடவராய அம்பலம், நித்யா தம்பதி மகள்கள் எஸ்.கயல்விழி, எஸ்.கீர்த்தனா பெரியநாயகி. இதில், கயல்விழி 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி படிப்பின் போதே பொது அறிவில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வந்தார். முதன் முயற்சியாக கணிதத்தில் உள்ள 118 குறியீடுகளை பின்னால் இருந்து வேகமாக எழுதும் பழக்கத்தை துவக்கினார். தொடர் முயற்சியால், 1 நிமிடம் 32 வினாடியில் இச்சாதனையை முறியடித்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து, தங்கபதக்கம் பெற்றார். மருத்துவத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அதற்கான படிப்புகளில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பயனாக திரையில் மருத்துவம் சார்ந்த படங்களை வேகமாக வெளியிடும் போது அதை பார்த்த நொடியில் அத்துறை சார்ந்த படிப்புகளை தெரிவித்து விடுகிறார். அந்த வகையில் 30வினாடியில் 38 மருத்துவ படிப்புகளின் துறைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

தைவானில் உள்ள ஆசியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் 48 நாடுகளுக்கிடையே நடத்திய சாதனையாளர் போட்டியில் பங்கேற்ற இம்மாணவி பிளாட்டினம் பதக்கம் பெற்றார். தினமலர் நாளிதழ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென நடத்திய 'நாசா' செல்வதற்கான வினாடிவினா போட்டியில் 'தினமலர்' பதக்கத்தை வென்றார். இது போன்று பல்வேறு சாதனைகள் மூலம் கின்னஸ் சாதனை பெற முயற்சித்து வருகிறார்.

இவரது சகோதரியான எஸ்.கீர்த்தனா பெரியநாயகி 6ம் வகுப்பு படிக்கிறார். இவரும் முதற்கட்ட சாதனையாக நாட்டின் கொடிகள் பற்றிய படங்களை வேகமாக காண்பித்த நொடியில், அது எந்த நாட்டு கொடி என சொல்லிவிடுவார். அந்தளவிற்கு நாடுகளின் கொடிகள் குறித்து அதிகளவில் விபரங்களை சேகரித்துள்ளார்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் நடத்திய போட்டியில் 30 வினாடியில் 58 நாட்டின் கொடிகளின் பெயர்களை தெரிவித்து சாதனை புரிந்தார்.

இவருக்கு அந்நிறுவனம் தங்கபதக்கம், பரிசு வழங்கி சிறப்பித்தது. சகோதரிகள் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சிக்கு பெற்றோர் பெரிதும் உதவி வருகின்றனர்.




























இவர்களை பாராட்ட 96883 42121.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்