சனி, 12 டிசம்பர், 2020

ஐஎன்ஏ வில் கள்ளர்கள்

ஐஎன்ஏவின்_கதாநாயகர்கள்




ராஜ் பிஹாரி போஸ் என்பவரால் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மக்கள் படையானது, கிபி1943ல் வெள்ளையர்களை அவர்கள் போக்கிலே எதிர்த்து நின்று வெல்ல வேண்டும் என்ற தீவிர சிந்தாந்தத்தில் இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இந்த மக்கள் படை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த படையில் பெரும்பான்மையாக சேவை புரிந்தவர்கள் சீக்கியர்கள்,தமிழர்கள்,கூர்க்கர்கள்,இஸ்லாமியர்கள்

இந்த தமிழர்களில் பெரும்பாலானோர் தஞ்சை,மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிபி1920களில் சிங்கப்பூர்,மலேசியா,பர்மா,இலங்கை புலம் பெயர்ந்த சென்ற தமிழர்கள். நாட்டின் விடுதலைக்காக, நேதாஜியின் சிந்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு INAவில் சேவையில் இறங்கினர்.

இந்த INAவில் சிறப்பு படைப்பிரிவும், நேதாஜி அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் SS Group எனப்படும் "intelligent bureu"வில் நிறைய தமிழர்களே பணியாற்றினர்.

10க்கும் மேற்பட்ட தேசிய மொழிகள்,5க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும், களரி,வர்மம் உள்ளிட்ட போர் கலைகள், வலியை தாங்கி ரகசியங்களை பாதுகாத்தல், நவீன ஆயுதங்களை கையாளுதல், உளவியல், நடத்தை உளவியல், குழு உளவியல், என கை தேர்ந்தவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும்.

INAவில் இருந்து பல ஆயிரம் வீரர்களின் தியாகத்தின் மத்தியில் "INAவாளும்,உலக இராணுவம்,இந்திய அரசாங்கத்தால்"

Battles and operations of the Indian National Army என்கிற வெள்ளையர்களுக்கு எதிரான ஆயுத போரட்டத்தில் "22வீரர்களின் உயிர் தியாகம் மற்றும் சேவைகளை போற்றி" அவர்களை இந்திய இராணுவத்தின் கதாநாயகர்கள் என்று பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் தஞ்சை மாவட்டம் திருமங்கலகோட்டையை சேர்ந்த இராமசாமி ஓந்திரியர் அவர்கள் " 
ஆரம்ப காலத்தில் மலேசியாவில் பிரிட்டிஸ் ஆர்மியில் பணிபுரிந்து பின்பு, INAவில் சேர்ந்து நேதாஜியின் உளவுத்துறையான S.S group intelligent wingல் உளவாளியாக சேவைபுரிந்து வந்தார். பின்பு ஒரு முக்கியமான special intelligent assignmentக்காக மையப்புள்ளியாக செயல்பட , இந்தியாவிற்கு வருகை புரிந்து assignment செயல்படுத்திய போது, பிரிட்டிஸ் ஆர்மியால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

அதேபோல இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமு தேவர் அவர்கள் பினாங்கில் ஜுனியர் கேம்பிரிட்ஸ் பள்ளியில் படித்து பிரிட்டிஸ் ஆர்மியில் பணியாற்றி, பின்பு INAவில் சேர்ந்து நேதாஜியின் S.S group intelligent wingல் உளவாளியாக பணியாற்றி வந்தார். இதனை அறிந்த பிரிட்டிஸார் "பிரிட்டிஸ் மன்னருக்கு எதிராக போரை தூண்ட முயற்சித்த குற்றத்திற்காக தூக்கிலிப்பட்டார்.

நாட்டை நேசிக்கும் இன்றைய இந்திய இளைஞர்களின் நெஞ்சில் குடியிருக்கும் INAவும்,நேதாஜியும் அவர்தம் சிந்தாந்தத்தில் கதாநாயகர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 22வீரர்களில் இரு தமிழர்கள் இருப்பது இவ்வினத்தின் அழியா பெருமையே.

Every Indian should  stand and royal salute to those intelligent shadow gosts, who were served  for INA SS group intelligent wing 🙏

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு





வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்