வெள்ளி, 11 டிசம்பர், 2020

தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் வங்கார்.


த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன் வங்கார். இவர் தஞ்சாவூரில் மார்ச் 23, 1970ல் பிறந்தார்.

சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். முதுகலை தமிழ் மற்றும் முதுகலை வரலாறு, நூலக அறிவியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவடியியல் சார்ந்த துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், கீழ்க்கண்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். காகித ஆவணங்களில் காணப்படும் செய்திகளை இன்றைய தமிழ் வடிவிற்கு மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார். சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி, குறவஞ்சி, சதகம் என்ற வகையில் முறையே அழகரந்தாதி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அறப்பளீசுர சதகம் என்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

தமிழ் எண்ணும் எழுத்தும் -நூலட்டை

தமிழறி மடந்தை கதை-நூலட்டை

• தமிழாய்வுக்கட்டுரைகள், 2012

• அழகர் அந்தாதி (பதிப்பாசிரியர்), 2012

• சரபேந்திர பூபாலக்குறவஞ்சி (பதிப்பாசிரியர்), 2013[1]

• அறப்பளீசுர சதகம் (பதிப்பாசிரியர்), 2014

• அதிவீரராம பாண்டியர் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி(பதிப்பாசிரியர்), 2016

• தமிழ் மருத்துவ முறைகள் (தலைமைப்பதிப்பாசிரியர்), 2017

• திருவேங்கட மாலை (பதிப்பாசிரியர்கள் : மணி.மாறன் மற்றும் கோ.ஜெயலெட்சுமி), 2017 

தமிழ் எண்ணும் எழுத்தும் மணி. மாறன் எழுதிய நூலாகும். ஓலை, சுவடி, ஆவணம், காகிதம் என்ற நிலைகளில் பல்வேறு காலகட்டத்தில் எழுத்தின் வரலாறும், எண்களின் பயன்பாடும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூலில் எழுத்தின் தோற்றம் தொடங்கி 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழறி மடந்தை கதை மணி. மாறன் எழுதிய நூலாகும். ஓர் அரசகுமாரியும், ஓர் அரசகுமாரனும் விரும்பி மணக்க முற்படும்போது விருப்பம் நிறைவேறாமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். பின்னர் மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வருவது இந்நூலில் தரப்பட்டுள்ளது. காப்புடன் தொடங்கும் இந்நூலில் கதையானது, வெண்பா மற்றும் பொருள் என்ற வடிவில் இடம் பெற்றுள்ளது.

• மூன்றே எழுத்தில் தமிழ் (வைஷ்மதி பதிப்பகம், தஞ்சாவூர்), 2004

• முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2015

• பண்டிதை அசலாம்பிகை அம்மையார், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2016

• தஞ்சையில் சமணம், (முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து) (ஏடகம், தஞ்சாவூர், 2018)

சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக நடைபெறும் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கண்டுபிடிப்புகள்

• சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு

• ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கு இப்போதும் சதய விழா தஞ்சை அருகே சிற்றூரில் அதிசயம் தினமலர், 29.4.2014

• சிதிலமடைந்த சோழர் கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? தினத்தந்தி, 11.3.2014

• ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் சிலைகள், தினமணி, 1.2.2014

• தஞ்சாவூர் அருகே சோழர் கால சிலைகள், தினமணி, 10.1.2014

• சோழர் கால சிற்பம் கண்டெடுப்பு தினமலர், 18.4.2013

• 9th century sculptures found near Thanjavur, The New Indian Express, 16.4.2013

• தஞ்சையில் சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுப்பு, தினமலர், 31.1.2013

• ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு தினமலர், 24.1.2013

• சிதைந்த கோவிலில் சோழர் கால நந்தி சிலை : சங்க கால புலவர் ஊரில் கண்டுபிடிப்பு, தினமலர், 3.9.2012

பெற்ற விருதுகள்

• இராசராசன் விருது, 2018 (ராஜராஜன் கல்வி அறிக்கட்டளை, தென்னமநாடு, தஞ்சாவூர் மாவட்டம்)

• 'தமிழ் எண்ணும் எழுத்தும்' நூல், (முதற்பதிப்பு, 2012; வெளியீடு: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)

• 'தமிழறி மடந்தை கதை', நூல், (முதற்பதிப்பு, 2013; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)


கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்