SS_Group_Hitler_intelligence_service
நேதாஜி அவர்கள் கிபி1942ல் பிரிட்டிஸின் ஒட்டுமொத்த சர்வாதிகாரத்தை எதிர்த்து வந்த, ஜெர்மனியின் நாசிக் தலைவரான அடால்ப் ஹிட்லரை சந்தித்தார்.
அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே நம்பர்:1 உளவுத்துறையாக கருதப்பட்டது, ஹிட்லரின் S.S Group intelligent service என்கிற அமைப்பாகும். நேதாஜி அவர்கள் ஹிட்லரிடம் இருந்து S.S Group செயல் திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து கொண்டு.
தன்னுடைய இந்திய தேசிய இராணுவத்தில் அதேபோல ஒரு Special bureau serviceஐ உருவாக்கினார். அதற்கு ஹிட்லரின் உளவுப்பிரிவு பெயரான S.S Group என்றே பெயருமிட்டார்.
இந்த S.S Group உளவுப்பிரிவில் தமிழ் நாட்டை சேர்ந்த அமரர் இராமலிங்க #ஓந்திரியர் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இராமலிங்க ஓந்திரியர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் திருமங்கலகோட்டை கிராமத்தை சேர்ந்தவர். ஓந்திரியர் முதலில் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஸ் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்பு நேதாஜியின் INAவில் நேதாஜி முன்னிலையில் மலேசியாவில் இணைந்தார்.
மிகவும் அறிவுக்கூர்மையுள்ள ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் தன்னுடைய உளவுப்பிரிவான S.S Groupல் இனைத்துள்ளார். இந்த உளவுப்பிரிவானது பிரிட்டிஸ் இராணுவத்தின் படையின் போக்கு,ஆயுத கிடங்குகளின் பகுதிகள், போர் கப்பல்களின் நடவடிக்கை உள்ளிட்டவைகளை கண்காணித்து, அவைகளை அழிக்கும் செயல்களை #Mission மூலமாக திட்டம் தீட்டி செயல்படும்.
மலேசியாவில் இருந்து ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் ஒரு முக்கியமான உளவு சேவைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பிரிட்டிஸ் உளவுப்பிரிவால் ஓந்தியரை அடையாளம் கண்டு அவரை மடக்கிபிடித்தது.
இறுதியாக ஓந்திரியருக்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தால், மரண தண்டனை அளிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.
வீரமும்,விவேகமிக்க ஓந்திரியரின் உயிரானது தாய்நாட்டின் சுதந்திரத்தை கண்களால் பார்க்காமலே, விண்ணுலகத்திற்கு பிரிந்து சென்றது.