சனி, 16 மே, 2020

செம்பிய முத்தரையர்கள்

புதுக்குடியான ரா[ஜெ]ந்திர சொழமங்கலத்துக்‌ காணி உடைய கள்ளரில்‌ பெருமன்‌ அழகனான மணவாள முத்தரயன்‌ 





ஶ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையர்களின் வழித்தோன்றல்களே  கள்ளர்குல செம்பிய முத்தரையர்கள்.

கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு ஏரிமங்கலநாட்டு சொரக்குடிப்பட்டியில் செம்பிய முத்தரசு பட்டந்தாங்கிய கள்ளர்பெருங்குடிகள் வாழ்ந்து வருவதையும், அவர்களுக்கு செம்பியன்களரி கோவிலில் முதல் மரியாதை இருப்பதையும், சொரக்குடிப்பட்டி பள்ளர்கள் அவர்களை கோவில் மரியாதைக்காக அவர்களை குடியேற்றியதையும், கள்ளர்களிடமே பெண் கேட்ட அவர்களை செம்பிய முத்தரசுகள் தண்டித்ததையும் ஆதாரத்தோடு பார்த்தோம்.



இன்று மீண்டும் சொரக்குடிப்பட்டிச்சென்று பத்திரிகை ஆதாரங்களை திரட்டினேன். நடுவிலே குலதெய்வக்கோவிலை பற்றி வரிசையாக கேள்விகளை அடுக்கியபொழுது அவர்கள் புடிமண்ணை பத்தாளப்பேட்டையிலிருந்து எடுத்து வந்து இங்கு சொரக்குடிப்பட்டியில் கோவில் எழுப்பியுள்ளதை  அறிந்துகொண்டோம்.
திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம் பத்தாளப்பேட்டை அருள்மிகு குடிகாத்த மலையாள சாத்த ஐய்யனார் குலதெய்வமானது மலையாளதேசத்திலிருந்து (சேரநாடு, குடிகாடு) உருவாகியுள்ளது.

சுவையான செவிவழி வரலாறு :-

பார்ப்பனன் ஒருவர் ஐய்யனார் கோவிலில் பூஜைகள் செய்துவந்து பணிவிடைகள் செய்ததாகவும் இரவு தன்னுடைய மகனை ஆலயத்தில் வைத்து பூட்டிவைத்துவிட்டு சென்று நள்ளிரவில் ஞாபகம் வந்து தன்னுடைய குழந்தையை கேட்க இறைவன் மகன் காலையில் வருவான் நீ செல் என்றாராம் அசரீரியாக!  பார்ப்பனன் தன் மகனை அழைத்துச்செல்லாமல் வீட்டிற்கு செல்லப்போவதில்லை என கடவுளிடம் தர்க்கம் செய்ய சினங்கொண்ட மகனை அழைத்துச்செல் என்று குழந்தையின் உடல் பாகங்களை தனித்தனியாக நரபலி கொடுப்பதுபோல பிய்த்துக்கொடுத்துள்ளார்.

சினமுற்ற பார்ப்பனன் அக்கோவிலையும் பின்பு உடைத்து பலபெட்டிகளில் வைத்து ஆற்றில் வீசியுள்ளான். நதியில் மிதந்து வரும் இப்பெட்டி பார்ப்பனர்கள் அருகில் வந்தால் விலகிவிடுமாம் பள்ளர்கள், பறையர்கள் போன்றோர் பெட்டியை எடுத்தால் அதனை எளிதில் திறந்துவிடலாம்.மேலும் பெட்டியும் விலகுவதில்லை. மேலும் இன்றும் இக்கோவிலுக்கு பத்தாளப்பேட்டை பள்ளர்களே கோவில் பூசாரிகளாக உள்ளனர்.

செம்பிய முத்தரசுகள் கோவில்கள் மட்டுமின்றி அருகில் உள்ள ஒரத்தூர் (மூவரையர்), சேதுராயர் குலக்கோவில்களிலும்,விண்ணமங்கலம் (காடவராயர்) குலக்கோவில்களிலும் இன்றுவரை பள்ளர்களே பூசாரிகளாக உள்ளனர்.மேலும் இங்கு உருவான கோவில்கள் அனைத்திலும் பெட்டிகள் இருந்துள்ளது. கள ஆய்வில் தெரிந்தது.மலையாள சாத்த ஐயனார் ஆலயத்திலும் பெட்டி உள்ளது.





























கதையாக இருந்தாலும் பார்ப்பனர்கள் ஈகை குணமின்றி இறைவனிடமே தர்க்கம் செய்து தங்கள் தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐயனார் மன்னராகவும், கள்ளரின கடவுளாகவும் தமிழ்ச்சான்றோர்கள் பலர் அறிவுறுத்தியுள்ளனர். செம்பியன்களரி நேத்ரபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோவில் மரியாதைக்காக வெள்ளாளர் குடிகளே செம்பியத்தரசுகளை அழைத்துச்சென்றுள்ளனர்.

பள்ளர் குடியினர் கோவில் பூசாரிகளாக உள்ளதை கிண்டல் செய்யும் வகையில் ஒரத்தூர், விண்ணமங்கலம், இளங்காடு பகுதி  கள்ளர்கள் நடந்துகொண்டதாகவும் சினங்கொண்ட ஐய்யனார் அவ்வூர்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உயர்சேதத்தை விளைவித்துள்ளார். இதனை உணர்ந்து மேலே சொல்லப்பட்டுள்ள ஊர்க்காரர்கள் பரிகாரம் செய்துள்ளனர்.

இன்றும் இக்கோவிலுக்கு பல்லவராயர், மூவரையர், நாட்டார் பட்டந்தாங்கிய (ஒரத்தூர், விண்ணமங்கலம், இளங்காடு) கள்ளர்கள் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளதை கோவிலுக்கு சென்றால் அரியலாம்.

கோவில் அமைந்துள்ள பத்தாளப்பேட்டை (பத்தாளர் பட்டம்பூண்ட கள்ளர் மரபினர்கள் உள்ளனர்) கோவிலில் பழங்கால முத்தரையர்கால சின்னங்கள் உள்ளன. அருகிலுள்ள கிளியூர் (கிளியாண்டார்) முத்தரையர்கால சிவலிங்கத்தில் காணப்படும் நாமவடிவிலான சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.அதேபோல கிபி-8,9 ம் நூற்றாண்டு சிற்பங்கள் உள்ளன கிளியூரில்.

வெவ்வேறு பட்டந்தாங்கிய கள்ளர்கள் கோவிலுக்கு அளித்துள்ள நன்கொடைகளை புகைப்படத்தில் இணைத்துள்ளேன்.
பத்தாளப்பேட்டை அருகில் துளசிமகாநாடு, மிளகுப்பாறையில் நாட்டில் மான முத்தரையர் பட்டந்தாங்கிய கள்ளர் பெருங்குடிகள் உள்ளனர்.

பிற்கால பாண்டிய பேரரசுகள் வீழ்ச்சிக்குப்பின் கள்ளர்குல முத்தரைய மன்னர்கள் தங்களை மேலும் குறுநில மன்னர்களாகவும், நிலக்கிழார்களாகவும் சுறுக்கி கொண்டு கள்ளர்பெருங்குடியில் கலந்துவிட்டனர் என்பதே உண்மை. மேலும் பாண்டிய, சோழ மன்னர்கள் தங்களை ஒரே வம்சாவளியாக (சாதியாக) சுருக்கி கொள்ளாதபொழுது இந்த முத்தரையர் என்கிற சாதி எப்பொழுது உருவானது???

முத்தரையர் பட்டம் எப்படி சாதியாகும்??

முத்தரையர்கள் பல்லவ, பாண்டிய பேரரசுகளுக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னர்கள் /அரையர்கள்

(இன்றைய திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் சில எல்கை பகுதிகளை மட்டும் ஆட்சி செய்தவர்கள்) இவர்கள் பேரரசர்கள் அல்ல.

முத்தரையர்கள் பயன்படுத்திய சிலபட்டங்களும்,கள்ளர்களும்:-

1.வல்லக்கோன்

(வல்லத்தரசு, வல்லம், வடமலைநாடு, தெம்மாவூரில் வாழ்கின்றனர்)

ல்லக்கோன் என்றால் வல்லத்து அரசன் என்று பொருள்படும் அதுவே இன்று வல்லத்தரசு - வல்லத்திற்கு அரசன்.

2. தஞ்சைக்கோன்

தஞ்சிராயர் (தஞ்சை-அரையர்) உதாரணத்திற்கு பல்லவத்தரையர் என்பது இன்று பல்லவராயர், பல்லவரார் என்று மருவி உள்ளதை காண்கிறோம். இப்பட்டம் பூண்ட கள்ளர்கள் ஏராளம்.பெருங்களூர் போரம் பல்லவராயர் மரபினரான மன்னர்கள் இன்றும் கள்ளர்களாக உள்ளனர்.

3. இதுபோல முத்தரையர்-மூவரையர் குறிக்கலாம்.

முத்தரையர்கள் போற்றிய திருநியமம், செந்தலை, வல்லம் கோவில்களில் இன்றளவும் முதல் மரியாதை பெருபவர்கள் கள்ளர்கள் (நிறைய ஆதாரப்பதிவுகளை முன்பே இட்டுள்ளேன்). செந்தலை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் ஆலயத்தில்தான் கள்வர் கள்வன் கருப்பு சலவைக்கல் தூண் கல்வெட்டு உள்ளது இது நியமம் பிடாரி கோவிலில் இருந்து மாலிக்கபூர் படையெடுப்பின்போது இங்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

மன்னர் மன்னன், ராசாதி ராசன், மன்னாதி மன்னன், கள்வர் பெருமகன் தென்னன், கள்வர்கோமான் புல்லி! என்பதுபோல கள்வர் கள்வன் (கள்ளர்களில் சிறந்தவன் அல்லது கள்ளர்குல தலைவன் பொருள்கொள்ளலாம்).

கிள்ளுக்கோட்டையிலும் பெரும்பிடுகு முத்தரையர் தன்னை கள்வர் கள்வனாக குறித்துள்ளார்.

மேலும் ஒரே ஒரு குறுநில மன்னரை மட்டும் கொண்டாடும் கூட்டமல்ல நாங்கள் சோழநாட்டில் ஈராயிரத்திற்கும் அதிகமான சோழர்களுடைய பட்டங்களை பூண்டு,  13 ஜமீன்கள் அல்லது பாளையப்பட்டுக்காரர்கள், பல்லவராயர் மன்னர்கள், புதுக்கோட்டை மன்னர்களான இன்றும் வாழ்ந்து தொண்டைமான்கள், பெரும் நிலக்கிழார்களான ராசாளியார், நாட்டார், பூண்டி.வாண்டையார், உக்கடை தேவர், பாகனேரி கள்ளர்நாட்டு தலைவர் வாளுக்குவேலி அம்பலக்காரர், மேலநாட்டு கள்ளர்களுக்கு பாத்தியப்பட்ட கள்ளர் அழகர் கோவிலில் முதல் மரியாதை பாண்டியர் தளபதி வாழ்ந்துவரும் கப்பலூர்நாட்டு அம்பலக்காரர்.

வைணவ ஆழ்வார்களில் ஒருவரான கள்ளத்திருமங்கை ஆழ்வார் அடுக்கலாம்.....!

மேலும் தொல்லியல் துறையே முத்தரைய மன்னர்கள் கள்ளர்களே என்று முன்பே அறிவித்துள்ளது. நாட்டாரும் கள்ளர் சரித்திரத்தில் எழுதியுள்ளார். இராகவயங்காரும் கள்ளர்களே முத்தரைய மன்னர்கள் என்கிறார். இவ்வாறு தமிழ் அறிஞர்பெருமக்களும், ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர்களும் இதனையே வலியுறுத்தியுள்ளனர். எனவே தமிழ்ச்சமூகம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அறிவுக்கண்ணை திறந்து பொதுப்பார்வையில் முத்தரைய மன்னர்கள் கள்ளர்களே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அறிவுடைமிக்கோர் மறுப்பதற்கில்லை.

தமிழ் வாழ்க! 
களம் கண்ட கள்ளர் புகழ் ஓங்குக!

பரத் கூழாக்கியார்
விசங்கிநாடு.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்