வெள்ளி, 22 மே, 2020

வாழாந்தூர் உழவன் மகன் சுப்பையா நல்லித் தேவர்



அடிப்படையில் இவர் ஒரு விவசாயி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள வாழாந்தூர் இவரின் சொந்த ஊர். இவரின் தாத்தா முத்துச்சாமி தேவர், தந்தை நல்லிவீரத் தேவர், தாயார் சின்னம்மா அனைவரும் விவசாயிகள். தன் தாத்தா, தந்தை வழியில் தீவிரமான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சுப்பையா தன்னை ‘வாழாந்தூர் உழவன் மகன்’ என்று பெருமையாக கூறிக் கொள்கிறார். அங்கு இவர் நெல், கரும்பு, வாழை, பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.

‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ‘ராஜகுமாரி’ என்ற கிராமத்திலும் நிலம் இருக்கிறது. அங்கு ஏலம், மிளகு, காபி, ஜாதிக்காய், வாழை ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.

இவை தவிர, பொதுப் பணித் துறையின் கான்ட்ராக்டராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். சாலை, நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் இவர் பல வருடங்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் எடுத்து தன் பங்களிப்பை நன்கு ஆற்றியிருக்கிறார்.

மதுரையில் இவருக்கு சொந்தத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.

விவசாயம், தொழில் துறை, கலையுலகம் ஆகியவற்றில் ஆழமாக கால் பதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு துபாயில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ (European Continental University) சமீபத்தில் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது. அதற்காக துபாயில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுப்பையா டாக்டர் பட்டத்துடன் திரும்பி வந்திருக்கிறார்.

‘வாழாந்தூர் உழவன் மகன் சுப்பையா நல்லித் தேவர்’ என்ற பெயரில்தான் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.


படவுலகில் படத் தயாரிப்பாளராக, நடிகராக இப்போது காலடி எடுத்து வைத்திருப்பவர் என். சுப்பையா. இவர் ‘பூவனம்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. ‘மதுரை மீனாட்சி என்.சி.எஸ். பிரசென்ட்ஸ்’ என்பது இவரின் பட நிறுவனத்தின் பெயர்.

படத்துறையில் தயாரிப்பாளராக பவனி வந்து கொண்டிருக்கும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது என்பது அனைவரும் சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தானே.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்