கரைபடியாத கரம்..
புதுக்கோட்டையின் புகழ்..
எளிமையின் சிகரம்..
காட்டுப்பட்டி ராமையா சேப்ளார்
காட்டுப்பட்டி ராமையா சேப்ளார்
மிகவும் செல்வச் செழிப்பான பெரிய குடும்பத்தில் பிறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் தமிழக முதலமைச்சர் காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் 10 ஆண்டு காலம் முக்கியமான பல்துறை அமைச்சராக இருந்தவர்.
அரசின் திட்டக்குழு தலைவர் மத்திய அரசின் பல குழுக்களுக்கு தலைமை வகித்து இந்திரா காந்தியின் அன்புக்கு பாத்திரமானவராக இருந்து தனது சொந்த வாழ்க்கைக்காக தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
நலம் குன்றிய நிலையில் மிகவும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு மறைந்த பின்னர் நண்பர்கள் உதவியுடன் அவரது ஈமச்சடங்கு நடைபெற்றது.
சுதந்திர போராட்ட தியாகி
- அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்
- 1957 & 1962 திருமயம் சட்டமன்ற உறுப்பினர்
- 1957 தமிழக மின்துறை அமைச்சர்
- 1962 தமிழக பொதுப்பணி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.
- 1972 தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்
- 1975 மாநில திட்ட கமிஷன் தலைவர்.
தேவர் ஐயா இறந்த போது அமைச்சர் இராமையா அஞ்சலி செலுத்த பசும்பொன் சென்றார். சென்றவருக்கு பயங்கர அதிர்ச்சி. தேவர் வீட்டில் மின்சார கனெக்சன் இல்லை. மிகவும் வருந்தி, உடனே மின் இணைப்பு கொடுக்கச் செய்தார். தானாடா விட்டாலும் தன் தசையாடும் அல்லவா. இன்று கூட நீங்கள் பசும்பொன் வீட்டு மின்சார இணைப்பு எண்ணை செக் செய்து பாருங்கள். தேவர் இறந்த மறுநாள் தான் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது தெரியும். அமைச்சர் இராமையா செய்த நல்ல காரியம் இது.
இவரைப் போன்ற காங்கிரஸ் கட்சியின் தியாக சீலர்களின் நூற்றாண்டு விழாவை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.
நமது அரசும் விழா எடுத்து போற்ற வேண்டும் .
எளிமையான அமைச்சர் காட்டுப்பட்டி திரு.வி. ராமையா சேப்பிளார் அவா்கள் நூற்றாண்டு விழா ஜீன் 1, 2020.
வாழ்க அமரர் காட்டுப்பட்டி வெ.ராமையா அவர்களின் புகழ்.
என்றும் என்றென்றும் போற்றுவோம். நினைவு கூறுவோம்.
ஐயா வெ.ராமையா சேப்பிளார் அவர்களின் மகன் ரா. நாராயணசாமி சேப்பிளார் அவர்கள்.
சேப்ளார் குடும்பத்தினர் 108 ஆண்டுகளுக்கு மேலாக புரட்டாசி விரதம் இருந்து ஸ்ரீராமாயணம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 1908 ஆம் ஆண்டு இவர்களின் முப்பாட்டனார் திரு வெள்ளைசாமி சேப்ளார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
Old Pic 1948 SRI CHINNAYA SEPULAR JP hosted Delegates meeting with PRIME MINISTER OF INDIA -JAWAHARLAL NEHRU with BRITISH Delegates
சேப்ளார் குடும்பத்தினர் 108 ஆண்டுகளுக்கு மேலாக புரட்டாசி விரதம் இருந்து ஸ்ரீராமாயணம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். 1908 ஆம் ஆண்டு இவர்களின் முப்பாட்டனார் திரு வெள்ளைசாமி சேப்ளார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
Old Pic 1948 SRI CHINNAYA SEPULAR JP hosted Delegates meeting with PRIME MINISTER OF INDIA -JAWAHARLAL NEHRU with BRITISH Delegates
நா. சுந்தர்ராஜ் சேப்பிளார்
நா. சுந்தர்ராஜ் சேப்பிளார் அவர்கள் மூன்றுமுறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த மூன்று தேர்தல்களிலும் அதிக வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்துள்ளார், மேலும் ராஜீவ்காந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 2 வது (இரண்டாவது) அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார்
இவர்
எட்டாவது மக்களவை (1984-89),
ஒன்பதாவது மக்களவை (1989 - 91),
பத்தாவது மக்களவை (1991 - 94)
உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் திருமையம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார்.
எட்டாவது மக்களவை (1984-89),
ஒன்பதாவது மக்களவை (1989 - 91),
பத்தாவது மக்களவை (1991 - 94)
உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் திருமையம் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறையும் இருந்துள்ளார்.
இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 இல் திருமெய்யம் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 இல் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
He hold record of winning in high margin in all three Lok shabha election in Tamil Nadu and he won 2nd (second) highest vote difference in India next to Rajiv Ratna Gandhi.