சனி, 18 ஏப்ரல், 2020

பிராமணர் கைகளை சுட்டுப் பொசுக்கிய புதுக்கோட்டை கள்ளர் அரையர்கள் :-




(INSCRIPTION NO 372 OF 1906) குடுமியான்மலை குடவரை கோயில் கல்வெட்டு தரும் செய்தி :-

கிபி 14 ஆம் நூற்றாண்டில், திரிபுவனச்சக்கரவர்த்தி வீரபாண்டியத்தேவர் ஆட்சி காலத்தில்! புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள குடுமி நாதர் கோயிலில் உள்ள காங்கேயர் திருமண்டபத்தில் ஊர் நாட்டார்களும் மக்களும் கூடினர். 

குடுமியான்மலை கோயிலில் இருந்த செல்வங்களில் 60 பொன் அளவிற்கு களவு செய்ததாக சிவபிராமணன் குன்றன் செருந்திவன பெருமான் எதிரிலிசோழப்பட்டன் என்பவன் மீது குற்றம் சாட்டப்பெற்றது. 60 பொன் போக மீதமுள்ள நகைககளை மற்ற பிராமணர்களிடம் கொடுத்து வைத்துள்ளதாக சிவபிராமணர் ஒத்துக்கொண்டார். ஆனால் மற்ற பிராமணர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர்.

இதனையடுத்து வழக்கு மத்தக்குறிச்சியில் இருந்த சாமந்தர் எனும் அதிகாரியிடம் சென்றது. ( சாமந்தர் எனும் கள்ளர் மரபினர் இன்றும் இப்பகுதியில் கைக்குறிச்சி எனும் ஊரில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களின் பெயரில் சாமந்தர்வயல் எனும் சிற்றூரே இப்பகுதியில் உள்ளது( Manual of pudukkottai state vol 1 page 110). மத்தக்குறிச்சியில் அகத்தீஸ்வரமுடையார் கோயிலில் கூட்டம் கூட்டப்பட்டது.





குற்றம் சாட்டப்பட்ட மற்ற பிராமணர்கள் குன்றன் பங்கன், குன்றன் மாறன் , பெரியாரன், குன்றன் பிரம்பை சங்கூதி ஆகியோர் கள்ளர் குல சாமந்தர் முன்பு நின்றனர். சாமந்தரின் ஆணைப்படி பிராமணர்கள் அனைவரும் தீயில் வாரக்கப்பட்ட இரும்பு கம்பியை ஏந்த வேண்டும். அவர்களின் கைகளை நெருப்பு சுடவில்லை எனில் பிராமணர்கள் கூறியது உண்மையென ஏற்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள், மாறாக கையை நெருப்பு சுட்டுவிட்டால் அவர்கள் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுவார்கள் .

சாமந்தர் இல்ல திருமண அழைப்பிதழ்



சூடான இரும்புக்கம்பியை கையில் ஏந்தியபோது பிராமணர்களின் கை வேக ஆரம்பித்தது, இதனையடுத்து குன்றன் பிரம்பை சங்கூதி எனும் பிராமணன் தானும் நகையை எடுத்ததாக ஒத்துக்கொண்டு, குன்றன் பங்கன் என்ற பிராமணனும் எடுத்ததை தான் அறிவேன் என்றும் உண்மையை ஒத்துக்கொண்டான். இதனை" இவர்கள் கைவேகையிலே குன்றன் சங்கூதி நானும் எடுத்தென் பங்கனும் இவை அறிவேன் என்றபடியாலே" எனும் கல்வெட்டு வரிகள் உணர்த்துகின்றது. 

கோயில் நகைகளை திருடி குற்றவாளிகளான சிவப்பிராமணர்கள் சிவத்துரோகிகள் என அறிவிக்கப்பட்டனர். பிராமணர்களுக்கு இலுப்பைக்குடியில் அளிக்கப்பட்டிருந்த நிலங்களை மீண்டும் பறித்தனர். அவை கோயில் சொத்தில் சேர்க்கப்பட்டது. இவர்களால் பிறருக்கு விற்கப்பட்ட நிலங்கள், அடகுவைக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது.

இப்படிக்கு ஆணையை உறுதி செய்த பிற முக்கிய நாட்டார்கள்:-

பனங்குடி குன்றத்தேவனான தென்னவதிரையர் எழுத்து ( கள்ளர் குல தென்னவதிரையர்கள் இன்றும் புதுக்கோட்டை தென்னவதிரையன் பட்டியில் வாழ்கின்றனர்)


வளவன் பல்லவதிரையன் ( கள்ளர் குல பல்லவராயர்கள் இலுப்பூர், குளத்தூர், ஆவரங்குடிப்பட்டி, பெருங்களூர், பல்லவராயன்பத்தை, பிலாவிடுதி Etc ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்)

குலோத்துங்க பல்லவரையன்(கள்ளர் குல பல்லவராயர்கள் இலுப்பூர், குளத்தூர், ஆவரங்குடிப்பட்டி, பெருங்களூர், பல்லவராயன்பத்தை, பிலாவிடுதி Etc ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்)



கச்சிராயன் ( கள்ளர் குல கச்சிராயர்கள் இன்றும் புதுக்கோட்டை கீழ செங்கிளி நாட்டிலும் மற்றும் பிற ஊர்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்)


ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்