சனி, 30 நவம்பர், 2019

முசிறி நாட்டாள்வான்



நாடு பாதி நாட்டார் பாதி என்பதற்கு ஏற்ப கள்ளர்களின் 

நாட்டாள்வார்
கரைய நாட்டாள்வார்
சக்கரப்பநாட்டாள்வார்
நாட்டார்
அருமைநாட்டார்
அருவாநாட்டார்
பாலைநாட்டர்
ஏனாதிநாட்டர்
கங்கநாட்டார்
சோழகங்கநாட்டார்
நாட்டரையர்

என்ற பட்டமுடைய கள்ளர்கள் சோழநாட்டில் சிறப்புடனும் , பெருமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

திருச்சி முசிறி பகுதியிலும் நாட்டார், நாட்டாள்வார் பட்டமுடையவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கள்ளர்களின் குல தெய்வம் அழகுநாச்சியம்மன் கோயில் முசிறியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ளது எவ்வளவு வெள்ளம் வந்தாலும் கோவிலை தாண்டி வரமுடியாது. காவிரி ஆறு உடைப்பெடுத்து வெள்ளம் போகாமல் அழகுநாச்சியம்மன் காத்துவருகிறார்.



மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள அழகுநாச்சியம்மன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். நான்கடி உயரத்தில் அழகிய திருவுருவமாக நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். வலதுபுறம் தனி சன்னதியில் பெரியாண்டவர் எழுந்தருளியுள்ளார். அழகு நாச்சியம்மனின் இருபுறமும் வரிசையாக நவகன்னியர்கள் காணப்படுகின்றனர். கருவறையின் வாசலில் பெரிய ஆண் பூதம் ஒன்றும், பெண் பூதம் ஓன்றும் நிற்கின்றனர்.

வேப்ப மரத்தடியில் மூன்றடி உயரமுள்ள பிடாரி அம்மன் தரிசனம் தருகிறார். காலடியில் ஒரு குழந்தை உள்ளது. ஊரின் காவல் தெய்வமாக உள்ளார்.

விநாயகர், மதுரை வீரன், கருப்பன், காத்தவராயன், காமாட்சி, ஆர்யமாலா என்று தனி தனி சன்னதிகள் உள்ளன.

அழகுநாச்சியம்மன் கோயிலில் நான்கு கரைகாரர்கள் தான் சொந்தம். நாட்டார் முதல் கரையை சேர்ந்தவர்கள். முதல் மறியாதை முத்தலாப்பட்டி காரர்களுக்கும் அடுத்து கள்ளர்களின் நாட்டார்களுக்கும் மேலும் வெள்ளாளர், பறையர்களுக்கும் அடுத்த அடுத்த மறியாதை தரப்படுகிறது.

35 வருடம் கழித்து 26.2.2018 அன்று மிகவும் சிரமப்பட்டு கும்பாபிஷேகம் செய்யபட்டது.

இங்கு உள்ள கள்ளர்களின் குலதெய்வமாக புளியஞ்சோலை மாசி பெரிய சாமியும், கொல்லிமலையில் தலைமை இடமாக இருக்கும் மாசி பெரியண்ணன் சாமியும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

முசிறியில் கள்ளர் சமூகம் சார்ந்த வாழ்வியல் மிகவும் வலிமையானது , அவர்களில் அதிகம் பெண் எடுப்பது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தான் . நாட்டார், சர்க்கரைநாட்டார்,  கங்கநாட்டார் என்ற பட்டங்களில்  கங்கநாட்டார் வம்சத்தினர் தற்போதைய கொடைக்கானல் பகுதில் வாழ்ந்து திரும்ப தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் குடியேறி விட்டனர்


உமையாள்புரம் நாட்டாள்வார் தண்ணீர்ப்பந்தல்:





இறந்தவர் நினைவாக இது போல் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது காலங் காலமாய்த் தமிழ்நாட்டில் இருந்துவரும் மரபாகும். சிவலோகத்துக்கு எழுந்தருளின முதலாம் இராஜேந்திரசோழருக்கும் அவர் தேவி வீரமாதேவிக்கும் செய்யாறு வட்டம், பிரம்மதேசத்தில் வீரமாதேவியின் உடன்பிறந்தாரான மதுராந்தகன் தண்ணீர்ப்பந்தல் அமைந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டு நினைக்கத்தக்கது (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 30: 184).

முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறையில் பொறுப்பேற்ற பிறகு, துறை மாணவர்களுடன் சிராப்பள்ளி முசிறிச் சாலையில் உள்ள வரலாறு தொடர்புடைய அனைத்துக் கட்டுமானங்களையும் ஆய்வு வெளிச்சத்திற்குக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டபோது பல அரிய வரலாற்றுத் தகவல்கள் வெளிப்பட்டன.

அவற்றுள், ஏவூர்ப் பிரிவுச் சாலைக்கு முன்பு ஒன்றும் உமையாள்புரத்தில் மற்றொன்றுமாய் உள்ள தண்ணீர்ப்பந்தல்கள் குறிப்பிடத்தக்கன. பின்னது 95 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்று பாழடைந்த நிலையில் தண்ணீர்ப்பந்தல் சத்திரமாக அமைந்துள்ளது.

காவிரியைப் பார்த்தவாறு உள்ள இத்தண்ணீர்ப் பந்தல், தங்குவதற்கான சத்திரமும் கொண்டுள்ளது. ஒருதளச் செங்கல் கட்டுமானமாய்க் காரைப்பூச்சுடன், முப்புறத்தும் காற்றோட்டத்திற்கும் வெளிச்சத்திற்கும் வாய்ப்பாகப் பெரிய அளவிலான சாளரங்கள் பெற்றுள்ள இதன் முன்புறத்தும், மேற்கிலும் ஓட்டுக் கூரையுடன் உள்ள தாழ்வாரம் கருங்கல் அடித்தளத்தின் மேல் செம்மையாகப் பரவியுள்ளது. கோயில் கட்டமைப்பில் காணப்படும் துணைத்தளம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் ஓரிடத்தும் சிதையாமல் பழைய பொலிவுடன் இன்னமும் வலிமை குன்றாமல் உள்ளது. அடித்தளத்தில் ஊன்றப்பட்டு ஓட்டுக்கூரையைத் தாங்கும் மரத்தூண்கள் பல இடங்களில் முழுமையாக உள்ளமையுடன் கோயில் தூண்களைப் போலவே தலையுறுப்புகள் கொண்டுள்ளன.

முதல் தளத்தின் கூரை வெளிநீட்டலுடன் கோயில் கட்டுமானக் கபோதம் போல வளைக்கப்பட்டுள்ளது. தளத்தின் மேல் நாற்புறத்தும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு மேற்பகுதி மொட்டை மாடியெனக் காட்சிதருகிறது. கட்டடத்தின் கிழக்குப் பகுதியில் இதை அடைவதற்கான படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டு அமைப்பின் மேற்பகுதியில் வெளிச்சத்திற்கும் காற்றோட்டத்திற்கும் வசதியாகச் சாளரம். சுற்றுச் சுவரின் தென்முகத்தில் மூன்று வளைவு மாடங்கள் காட்டி, அதன் இருபுறத்தும் பூச்சுருள் அலங்கரிப்புச் செய்துள்ளனர். மாடங்களின் இருபுறத்தும் சுதையாலான நந்திகளும் மயில்களும் காட்டப்பட்டுள்ளன. சுற்றுச் சுவர் அரைத்தூண்களின் முகப்புகள் அழகிய பூப்பதக்கங்கள் கொண்டுள்ளன.





வளைவு மாடங்களில் மேற்கில் யானைத்திருமகளும் கிழக்கில் விநாயகரும் சுதைவடிவங்களாய்ப் பொலிகின்றனர். யானைத்திருமகளின் இருபுறத்துமுள்ள யானைகள் தங்கள் துளைக்கைகளில் கொண்டிருக்கும் குடங்களிலுள்ள நீரை, அம்மை பின்கைகளில் ஏந்தியிருக்கும் தாமரைகளின் மேல் ஊற்றுமாறு காட்சி அமைந்துள்ளது. மூஞ்சுறு வாகனத்தில், இரண்டு கால்களையும் குத்துக்கால்களாக வைத்து அமர்ந்திருக்கும் விநாயகரின் பின்கைகளில் பாசம், அங்குசம். இந்த இரண்டு இறைவடிவங்களுமே பெருமளவிற்குச் சிதைவின்றிக் காட்சிதந்தபோதும் நடுவிலுள்ள மாடவளைவின் சுதைச் சிற்பம் மட்டும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழிந்துள்ளது.

கட்டடத்தின் உட்புறம் நுழைய இயலாதவாறு சிதைந்து தொங்கும் ஓட்டுக் கூரையிலிருந்து நழுவி நிற்கும் ஓடுகள் அச்சுறுத்துகின்றன. கட்டடத்தின் முப்புறத்தும் முட்செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் மண்டியுள்ளன. தாழ்வாரத்தின் மேற்பகுதியில் உடைந்த நிலையில் மரப்பெட்டி ஒன்றைக் காணமுடிகிறது. சத்திரத்தின் வாயிலை ஒட்டி வலப்புறத்தே சுவரில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு சத்திரத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகிறது.

குரோதன ஆண்டு, கார்த்திகை மாதம் 12ஆம் நாள் சுக்கிரவாரத்தன்று (27. 11. 1925 வெள்ளிக்கிழமை) இக்கட்டமைப்பில் புதுமனை புகுவிழா நிகழ்த்தப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இந்தத் தண்ணீர்ப்பந்தல் சத்திரம் முசிறி வட்டம், ஒமயபுரம் (உமையாள்புரம்) இராமசாமி நாடாள்வார் நினைவாக அவரது மகன் பழனியாண்டி நாடாள்வாரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. சோழர் காலக் கல்வெட்டுகளில் தோற்றம் தரும் நாடாள்வார்களின் தொடர்ச்சியாக இந்நாடாள்வார்கள் தண்ணீர்ப்பந்தல் சத்திரம் உள்ளது.




ஆய்வு : முசிறி விஜி நாட்டார்

நன்றி: 

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் 
இணை இயக்குநர் பேராசிரியர் மு.நளினிக்கும்.

Varralaru. com

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்