வெள்ளி, 1 நவம்பர், 2019

கள்ளர் குல வரலாற்று ஆராய்ச்சியாளர் ஐயா ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்



இன்றும் தனது பெரும் முயற்சியிலும் மற்றும் பெரும் ஆராய்ச்சியிலும் நமது கள்ளர் வரலாற்று ஆவணங்களையும் மீட்டெடுத்து, இன்றும் தொடர்ச்சியாக கள்ளர் வரலாற்றை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் ஐயாஜெ யராம் இராசகண்டியர் கிருபாகரன்.

B.Sc(Mech.Eng) M.Sc(Mech.Eng) MBA, M.I.Mech.E., M.I.Chem.E., Grad.Inst.B.E., A.Inst.Pet., C.Eng.,

Founder and General Secretary
INTERNATIONAL KALLAR PERAVAI
Kevin Garden. Little Smith Street. London. United Kingdom .

இவர் 10 .02.1958 ஆம் ஆண்டு பிறந்தார், இவரது தந்தை துரைராஜா இராசகண்டியன், தாயார் சம்பூரணத்தம்மாள் ஆவார்கள். இவருடைய சொந்த ஊர் தஞ்சையில் உள்ள மதுக்கூர் சிரமேல்குடி ஆகு‌ம்.

இவர் எழுதியுள்ள வரலாற்று நூல் " கள்ளர் வரலாற்று வரைவியல் " ஆகும். இதில் தேர்தெடுக்கப்பட்ட தலைப்புகளும் நூலுக்கு பெருமை படைக்கிறன. இதுவரை வெளிவந்துள்ள கள்ளர்கள் பற்றிய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானதாகவும் தெளிவான கருத்துக்களையும், வரலாற்று படிமங்களையும், கேட்டறியாத தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்படைப்பு குறிப்பாக நம் இளைய தலைமுரையினர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

 சர்வதேச கள்ளர் பேரவை தலைவருக்கு மாலை அணிவிக்கும் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள்


தஞ்சை பெரியகோவில் முன் வல்லுண்டார் மற்றும் மழவராயருடன் கண்டியர்


புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயிலில் பரிவட்டம் கட்டி மரியதையை ஏற்றுக்கொள்ளும் கண்டியருடன் திரு அருணாச்சலம் வில்லவராயர்.





வர் தம் கள்ளர் இன மக்களுக்கு சொல்லும் செய்தி :

முதிர்காலம், முதுகாலம், சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் பலவாகும் உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்.

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்!

காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகார் என்பர்!

நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்!

மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்!

அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்!

தொண்டைமானின் தொன்மையும் வளமையும் கொண்ட ஊர் காஞ்சி என்பர்!

வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்!

பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்!

ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்!

வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்!

சோழ மண்ணை மீட்டெடுத்த விஜயலாயன் வாழ்ந்தவூர் பழையாறு என்பர்!

மாமன்னன் ராசராசன் பெருங்கோயில் படைத்த ஊர் தஞ்சை என்பர்!

அவன் மைந்தன் கொண்டவூர் கங்கைகொண்ட சோழபுரம் என்பர்!

இவ்வூர்களில் எல்லாம் மறப்பண்பு மிகுந்து அறப்பண்பு கொண்டு வளமுடன் வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்!

தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று ஒரு சொலவடை சொல்லு வார்கள்.

தலையாட்டும் வர்க்கமாக இருக்காதீர்கள். தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள்.

நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடன் இருக்கும் போது எந்த நிகழ்வாலும் நம்மை சீர்குழைக்க முடியாது. நம் பாதையில் இடர் நீக்கி பயணிப்போம். நாம்பயணிக்க வேண்டியது நெடுந்தூரம். தற்பொழுது ஒரு முட்டுச் சந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் வெகு விரைவில் நெடுஞ்சாலைக்கு வந்தாகவேண்டும் என்ற நோக்கில் நம் பயணம் அமைய வேண்டும். மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது.

தளர்ச்சியும், வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதனை உனர்ந்துகொள்வோம்

கள்ளர் குல கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை என்பன தொப்புள் கொடி உறவின் உணர்ச்சி மிக்க ஓர் உன்னதமான வரலாறு. புதுக்கோணத்தில் புதையலாய் குலமணம் மாறாமல் தொலைந்து போன மனிதாபிமானத்தைத் தோண்டியெடுக்கும் ஓர் கலாச்சாரப் பதிவாக அமைய வேண்டும். 

இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாசப்போராட்டம். மூன்றாம்  தலைமுறைக்கு முதல்தலைமுறை பற்றிய பாசத்தை சொல்லும் ஒரு பதிவாக வேண்டும்.

கள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும்.

குலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள்.

வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது யாசித்து பெற வேண்டிய உரிமைகளை துறந்திடுவோம்.

நம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைத்திட உதவுங்கள் என்று சர்வதேச கள்ளர் பேரவை தங்களை உரிமையுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறது.



குறிப்பு:
ஐயா அவர்களின் வரலாற்று  ஆவனங்களை பெரும் பகுதியைப் கள்ளர் வரலாறு பக்கத்தில்  பதிவு செய்துள்ளேன்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்