போர்களத்தில் திருமலை நாயக்கரால் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட மாவீரர் கருத்தனஞ்சித்தேவன்.
கருத்தனஞ்சித்தேவன், சங்கராயி, அவர்களுக்காக நடுக்கல் ஆரியபட்டியில் உள்ளது. அதில் குறிப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளது. இதனை பற்றிய தகவல்களை திரு. மூவேந்திரன் பாண்டியன் குறிப்பிடும் போது, ஆரியபட்டி என் தாய் வழி முன்னோர்கள் தான் கருத்தனஞ்சித்தேவன், சங்கராயி என்றார்.
ஆரியபட்டி கள்ளர் நாடுகளில் ஒன்று, இங்கு நடந்த ஒரு நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கிழக்குசீமை.
"ஆரியபட்டி" கோயில் கும்பிடும் பெண்ணை "நல்லத்தம் பட்டி" கோயில் கும்பிடும் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர். இவர்களுக்கு சுமார் பத்து வருடம் குழந்தை இல்லை.
இதனால் அந்த பெண் தனது தந்தை வீட்டு தெய்வமான "ஆரியபட்டி கோயிலை" வணங்கி பிள்ளை வரம் கேட்கிறார்.அதற்கு நன்றி கடனாக தனது பரம்பரைக்கு "ஆரியபட்டி" கோயில் குலசாமியின் பெயரை வைப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
கள்ளர் நாட்டை பொறுத்த வரை அடுத்த நாட்டு குலசாமியின் பெயரை வைப்பது மிகப் பெரிய கௌரவ பிரச்சனை ஆகும்.
வேண்டுதலுக்கு பின் குழந்தை பிறந்து விடுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு "ஆரியபட்டி"குலசாமி பெயர் வைக்க மாப்பிள்ளையின் பங்காளி "போத்தம் பட்டி நாடு" கடும் எதிர்ப்பு தெரிவித்து சண்டை நடந்து அவர்களை தனியே பிரித்து விடுகிறார்கள்.
அதற்கு பின் "நல்லத்தம் பட்டி" வாரிசுகள் இன்று வரை "ஆரியபட்டி" தாய்மாமன் குலப் பெயரான கல்யாணி, நல்ல பெருமாள், வீரம்மாள், அங்கம்மாள், என்று பெயர் சூட்டுகின்றனர்.
மேலும் "ஆரியபட்டி கோவில்" கும்பிடும் பிரிவினர் மான் கறி சாப்பிட மாட்டார்கள்.
அதற்கு காரணம் ஆரியபட்டி குல தெய்வம் "கல்யாணி சாமி" சிறு வயதில் "மான்பால்" குடித்து வளர்ந்தாக உசிலை கள்ளர் புராணம் கூறுகிறது. இதனால் மானை தாயாக பாவித்து மான் கறி சாப்பிட மாட்டார்கள்.
ஆரியபட்டி A.இராமநாதபுரம் அருள்மிகு கலியானகருப்பு சாமி கோவில்