வியாழன், 6 ஜூன், 2019

பழுவேட்டரையர் வரலாறு

கள்ளர் குடியில் தோன்றிய பழுவேட்டரையர்

தேவர் சமூகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் ஒரே வழியினர் என்பதற்கு அகமுடையார் ஆன சேர மரபினர் பழுவேட்டரையர் தங்களை கல்வெட்டுகளில் மறவன் என்று குறிப்பிட்டு கள்ளர் மரபில் வாழ்ந்து வருகின்றனர்.



இன்றும் வாழும் பழுவேட்டரையர் வாரிசு:

அரங்கராச விக்ரம கர்ண பழுவேட்டரையர்... சும்மா கேட்டுக் கடந்துபோகும் பெயரல்ல இது. அதுவும் லண்டனில் படித்து வந்த கட்டிடப் பொறியாளருக்கு இந்தப் பெயரென்றால்..? ‘என்ன சார் ராஜா காலத்துப் பேர் மாதிரி இருக்கு’ எனக் கேட்பவர்களிடமெல்லாம் ஜஸ்ட் புன்னகைத்து வைக்கிறார் விக்ரம கர்ணன்.

சரித்திரத்தை சரித்திரமாகவோ கதையாகவோ வாசித்தவர்களுக்குத் தெரியும்... சோழப் பேரரசின் அணுக்க நெருக்கமான பாதுகாவலர்கள்தான் பழுவேட்டரையர் என்று. சமீபத்தில் சோழர்களின் கதைக்களத்தில் ‘சாளுக்கியம்’ என்ற வரலாற்று நாவலையும் வடித்திருக்கிறார் இந்த பழுவேட்டரையர்.

விக்ரம கர்ண பழுவேட்டரையர் பதில்.


‘இதுவரை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பழுவேட்டரையர் என்ற பெயரைப் பயன்படுத்தியதில்லை. பெயருக்குப் பின்னால் ‘.ப’ என்றுதான் போட்டுக்கொள்வோம். யாரிடமும் அதற்கு விளக்கம் சொன்னதில்லை. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக இப்படித்தான்...

எங்களை நாங்களாக வெளிப்படுத்தக் கூடாது என்பது எங்களின் குடும்பக் கட்டளை. இப்போது நான் இவ்வளவு பேசுவது கூட எங்கள் குடும்பம் அனுமதித்திருப்பதால்தான். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ... சோழர்களின் சரித்திரம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் எழுச்சி பெறும். 

கரிகால்பெருவளத்தானுக்குப் பிறகு விஜயாலயன், விஜயாலயனுக்குப் பிறகு ராஜராஜசோழன்... அந்த வரிசைப்படி இது சரியான சமயம். அதனால் கிடைத்திருக்கும் அனுமதி இது!’’ என்கிற விக்ரம், மெல்ல தங்கள் குடும்பப் பின்னணிக்கு வருகிறார்.

ராணிருக்மணிநாச்சியார்



‘‘எங்கள் சரித்திரமும் கடமைகளும் எங்களுக்கு வழிவழியாக வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கின்றன. இன்றில் இருந்து 1640ம் வருடம் வரை எங்கள் பாட்டனார்களின் பெயர்கள் எனக்கு வரிசையாகத் தெரியும். பெரிய பழுவேட்டரையர் திருமணமே செய்துகொள்ளவில்லை. சின்னப் பழுவேட்டரையரின் மகன்வழித் தோன்றல்கள்தான் நாங்கள் என்பதும் தெரியும். அவரின் மகள் வழித்தோன்றல்கள் யாரும் இந்தியாவில் இல்லை. என்ன மாயமோ... கடந்த ஆறு தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசுதான் நிலைக்கிறது.



அந்த வகையில் நானும் ஒரே மகன், எனக்கும் ஒரே மகன்!’’ - ஏதோ மர்மக்கதை போலவே இருந்தாலும் விக்ரம கர்ணனின் பேச்சில் கவனம் ஈர்ப்பது அந்தத் தமிழ். லண்டனில் படித்து வேலை நிமித்தமாக துபாய், மலேஷியா என அயல் தேசங்களில் பல வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் தேய்ந்து போகாத சுத்தத் தமிழ்.












‘‘எங்கள் பிள்ளைகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரே மாதிரிதான் வளர்க்கப்படுவார்கள். எந்தத் தலைமுறையிலும் நாங்கள் சோழர் பரம்பரைக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் உயிரைக் காக்க எங்கள் உயிரையும் தரத் துணிபவர்கள். இன்றும் எங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

கராத்தேயின் தாயான ‘அடிவரிசை’ கலையில் துவங்கி, களரி வரை சொல்லித் தரப்படுகின்றன. முறையான ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. சோழர் வம்சத்தின் மீது வர வேண்டிய விசுவாசம் சிறு வயதிலேயே விதைக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் அவன் 13ம் பிறந்த நாளில் விழா எடுப்போம். அப்போது அவன் வலது கரத்தில் பழுவேட்டரையர்களின் சின்னமான பனைக்கொடி பொறிக்கப்படும். 17ம் வயதில் இன்னொரு விழா... அப்போது இடக்கரத்தில் புலிக்கொடி பொறிக்கப்படும். அதன் பிறகு அவன் சோழர்களின் நம்பிக்கைக்குரிய வீரன்!’’ - 

‘‘வெறும் கற்பனையான பிரமாண்டத்துக்கே நாம் கைதட்டுகிறோம். நமது சரித்திரம் சினிமாவை விட பிரமாண்டமானது. 9 லட்சம் படை வீரர்களை கற்பனை செய்து பாருங்கள். பெரும் அரசர்களான சாளுக்கியர்களை வெல்ல ஒரு மனிதக் கடலையே அழைத்துச் சென்றார் ராஜராஜன். கடல் கடந்து நாடுகளை வெற்றிகொண்ட முதல் இந்திய சாம்ராஜ்ஜியம் சோழர்களுடையதுதான். இதையெல்லாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றுதான் நாவல் எழுதும் வேலையில் இறங்கினேன். எனக்குச் சொல்லப்பட்டதை வைத்து மட்டும் எழுதிவிடவில்லை. போர் நடந்த பல இடங்களுக்கு முறையாகச் சென்று ஆய்வு செய்திருக்கிறேன்.

அன்று, சோழர்களின் உயிரைக் காத்த குழுவுக்கு ‘செம்படை’ என்று பெயர். செம்படையில் கடைசி வீரன் உயிருடன் இருக்கும் வரை சோழ மன்னனை யாராலும் தொடக்கூட முடியாது. அந்தச் செம்படையை தலைமையேற்று நடத்தியவர்கள் பழுவேட்டரையர்கள்.

வட தமிழகத்தில் கடலூரில் தொடங்கி கீழையூர், மேலப்பழூர், கீழப்பழூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், அரியலூர், பெரம்பலூர் எல்லாம் ஒன்றிணைந்த பழுவூர் சமஸ்தானத்தை ஆண்டவர்கள் பழுவேட்டரையர்கள். பராந்தக சோழனுக்கும் ராஜராஜ சோழனுக்கும் அரிஞ்சய சோழனுக்கும் பெண் கொடுத்தவர்கள் என்பதால் சோழர் - பழுவேட்டரையர் நெருக்கம் விவரிக்க முடியாதது. அப்படிப்பட்ட பழுவேட்டரையர்களைப் பற்றி சில தவறான சித்தரிப்புகள் இங்கே நிகழ்ந்துவிட்டன. ஆதாரங்களோடு அவற்றை மாற்றி வைக்கும் சிறு முயற்சியும் இதில் உண்டு.

உதாரணத்துக்கு ஒரு காட்சி... சாளுக்கியரைப் போரில் வென்று, அந்நாட்டு அரசனுக்கு தண்டனை கொடுக்கும் நேரம்... சாளுக்கியப் பெண் ஒருத்தி பெரிய பழுவேட்டரையரின் முத்திரை மோதிரத்தோடு வருகிறாள். ‘சோழ நாட்டுக்கு வந்தால் உதவி கேள்’ என என்றோ இரக்கப்பட்டு பழுவேட்டரையர் கொடுத்திருந்த முத்திரை மோதிரம் அது. இன்று அதை ராஜராஜனிடம் நீட்டி, ‘எங்கள் அரசனையும் நாட்டையும் மீண்டும் எங்களுக்கே தாருங்கள்’ எனக் கேட்கிறாள்.

‘கொடுத்தோம்’ எனத் திரும்பி வந்துவிடுகிறார் ராஜராஜன். ‘இப்படிக் கொடுத்துவிட்டீர்களே’ எனப் பின்பு பழுவேட்டரையரே இதைப் பற்றிக் கேட்கும்போது, ‘அவள் சிறியதாகக் கேட்டுவிட்டாள்... உங்கள் முத்திரை மோதிரத்துக்கு சோழ நாட்டையே கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்’ என்கிறார் ராஜராஜன். இது உண்மைக் காட்சி. என் நாவலில் இடம்பெற்றிருக்கும் காட்சி. இதுநாள் வரை மக்கள் மனதில் வேரூன்றியிருக்கும் சில காட்சிகளை இது சற்று மாற்றினால் மகிழ்ச்சி!’’ - சலனமின்றி பேசி முடிக்கிறார் விக்ரம கர்ண பழுவேட்டரையர்.


விக்ரம கர்ண பழுவேட்டரையர் / அன்பில் மகேஷ் நாட்டார் / ஐயா பூண்டி வாண்டையார் 



திருச்சி சிவா சேதுராயருடன் பழுவேட்டரையர்


ஐயா அப்துல் கலாமுடன் பழுவேட்டரையர்










பழுவூரை ஆண்ட மன்னர்கள் 

தேவர் என்ற மறவர், கள்ளர், அகமுடையார் ஒரே பிரிவினர் என்பதற்கு கீழே உள்ள கல்வெட்டு போதுமானதே.

1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன் 
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன் 
6. கண்டன் சுந்தரசோழன் 
7. கண்டன் மறவன்


மறவர், கைக்கோளர், வடுகர் என்று பழுவேட்டரையர் குறிக்கப்படுகின்றனர். கள்ளர்களும் சில இடங்களில் கைக்கோளராக குறிக்கப்படுகின்றனர்.




கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை 


எண் 1 

கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு 
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில் 
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு - 10 
பழுவேட்டரையர்  - குமரன் கண்டன் 
செய்தி - நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது 
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 523

எண் 2 

கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு -  12 
பழுவேட்டரையர் -  குமரன் கண்டன் 
செய்தி -   'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 3, No. 235

எண் 3 

கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு 
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு -  19 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி  -  இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 537

எண் 4 

கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் ஆதித்தர் 
ஆட்சியாண்டு -  22 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி -  இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 8, No. 298, ARE 355 of 1924

எண் 5 

கல்வெட்டு இருக்குமிடம் - லால்குடி 
கோயில் பெயர் -  சப்தரிஷீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  5 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி -  'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 146

எண் 6 

கல்வெட்டு இருக்குமிடம் -  திருப்பழனம் 
கோயில் பெயர் -  மகாதேவர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  6 
பழுவேட்டரையர் -  குமரன் மறவன் 
செய்தி -  குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 172

எண் 7 

கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  12 
பழுவேட்டரையர் -  கண்டன் அமுதன் 
செய்தி -  வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி 
ஆண்டறிக்கை எண் -  ARE 231 of 1ட்926

எண் 8 

கல்வெட்டு இருக்குமிடம் -  திருவையாறு 
கோயில் பெயர் -  பஞ்சநதீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் பராந்தகர் 
ஆட்சியாண்டு -  14 
பழுவேட்டரையர் -  கண்டன் அமுதன் 
செய்தி -  இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 551

எண் 9 

கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  சுந்தரசோழர் 
ஆட்சியாண்டு -  5 
பழுவேட்டரையர் --மறவன் கண்டன் 
செய்தி -  இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII volume 5, No. 679

எண் 10 

கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  9 
பழுவேட்டரையர் -  மறவன் கண்டன் 
செய்தி -  இவரது மறைவைத் தெரிவிக்கிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 237, 238

எண் 11 

கல்வெட்டு இருக்குமிடம் -  உடையார்குடி 
கோயில் பெயர் -  அனந்தீசுவரர் கோயில் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  12 
பழுவேட்டரையர் -  கண்டன் சத்ருபயங்கரன் 
செய்தி -  இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 19, No. 305

எண் 12 

கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  13 
பழுவேட்டரையர் -  கண்டன் சுந்தரசோழன் 
செய்தி -  இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக    ஒருமண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர் 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 681

எண் 13 

கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  உத்தமச்சோழர் 
ஆட்சியாண்டு -  15 
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன் 
செய்தி -  நிவந்தம் அளித்தது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 8, No. 201

எண் 14 

கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் இராஜராஜர் 
ஆட்சியாண்டு -  3 
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன் 
செய்தி -  கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 671

எண் 15 

கல்வெட்டு இருக்குமிடம் -  மேலப்பழுவூர் 
கோயில் பெயர் -  அவனிகந்தர்ப்ப ஈசுவரம் 
சோழமன்னர் -  முதலாம் இராஜராஜர் 
ஆட்சியாண்டு -  15 
பழுவேட்டரையர் -  கண்டன் மறவன் 
செய்தி -  இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே 
ஆண்டறிக்கை எண் -  ARE 363 of 1924

எண் 16 

கல்வெட்டு இருக்குமிடம் -  கீழப்பழுவூர் 
கோயில் பெயர் -  திருவாலந்துறையார் கோயில் 
சோழமன்னர் -  முதலாம் இராஜேந்திரர் 
ஆட்சியாண்டு -  8 
பழுவேட்டரையர் -  யாருமில்லை 
செய்தி -  பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது 
ஆண்டறிக்கை எண் -  SII Volume 5, No. 665

சரித்திரத்தில் பழுவேட்டரையர்கள் 

முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.

இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.

ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.

ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.

பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.

இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.

அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்


பெரிய பழுவேட்டரையர்  (சோழ தனாதிகாரி  சுந்தர சோழர் காலம்)




பெரிய பழுவேட்டரையர் 

பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்.



பழுவூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தவர்களை பழுவேட்டரையர்கள் என்று அழைக்கின்றார்கள். சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள்.காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் வழங்கப்படுகிறார்கள்.



பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும் விளங்கியவர். சோழப்பேரரசை சுந்திர சோழனுக்குப் பிறகு மதுராந்தகன் ஆள்வதற்காக சம்புவரையர் அரண்மனையில் ரகசிய கூட்டம் நடத்தினார். மதுராந்தகனை நாடெங்கும் நடந்த கூட்டங்களுக்கு ரகசியமாக அழைத்துச் சென்றார். சோழப்பேரரசின் சிற்றரசர்களுடன் நடந்த கூட்டங்களில் மதுராந்த தேவனுக்கு ஆதரவு திரட்டினார்.



(சோழ தனாதிகாரி  சுந்தர சோழர் காலம்)




சின்னப் பழுவேட்டரையர் 

(தஞ்சாவூர் கோட்டைக் காவல் தளபதி)


சின்னப் பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதியாக விளங்கியவர். 



காலாந்தகக் கண்டர் என்பது இவருடைய இயற்பெயராகும். இவருடைய அண்ணனை கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் என்று மக்களால் அழைக்கப் பெருகிறார். காலாந்தகக் கண்டரின் கீழ் தஞ்சை அரண்மனை பொக்கிசமும், தானிய அறையும் இருந்தது. மேலும் பாதாளச் சிறையொன்றினையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் நிர்வகித்து வந்தார்.



இளம் வீரர்களை கண்டால், அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தன்னுடைய படையில் இணைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழர்உடல்நலமின்றி இருக்கும் போது, பலத்த காவல் புரிந்து கோட்டையைப் பாதுகாத்து வந்தார். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவர்,.




பழுவேட்டரையர்களின் புகழுக்கு, சோழர்களின் கட்டடக்கலைக்கு நிகராக விளங்கும் வகையில் பழுவேட்டரையர்கள் எழுப்பிய கோயில்களே சாட்சி.

அரியலூர் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ.  தூரத்தில்  அமைந்துள்ளது கீழப்பழுவூர். அதன் அருகருகே அமைந்திருக்கும் கீழையூரும், மேலப்பழுவூருமே பழுவேட்டரையர்களின் ஆட்சிப்பரப்பான பழுவூர் பகுதியாகும்.

பழுவூர் மண்டலத்தின் பகுதிகள் கல்வெட்டுகளில் 

1) மன்னுபெரும் பழுவூர் (தற்போது மேலப்பழுவூர்) 

2) அவனிகந்தர்ப்பபுரம்(கீழையூர்), 

3) சிறுபழுவூர் (கீழப்பழுவூர்) 

என குறிப்பிடப்படுகின்றன.

பழுவூர் கோயிலில் இருக்கும் ஆதித்த சோழரின் கல்வெட்டுக்களின்படி, பழுவூர் அரச மரபின் முதல் மன்னராக குமரன் கண்டன் பழுவேட்டரையர் என்பவர் அறியப்படுகிறார். இவருக்குப் பிறகு, இவரது தமையன் குமரன் மறவன், பழுவேட்டரையரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றார். 








சோழர்களின் முக்கிய போர்களில் ஒன்றாக பராந்தகசோழருக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த வெள்ளூர் போரில் பழுவேட்டரையர் மரபில் வந்த கண்டன் அமுதன் சோழப்படைகளோடு இணைந்து  பாண்டியர்களோடு போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாது உதயேந்திரம் செப்பேடுகள் மூலம் பழுவேட்டரையர்களின் மகள் அருள்மொழி நங்கையை பராந்தக சோழர் மணந்து கொண்ட தகவலும் அதில் உள்ளது. 


சோழப்பேரரசின் நெருங்கிய உறவாகவும் உயர்நிலை அரசு அதிகாரிகளாகவும் இருந்த பழுவேட்டரையர்களின் நிலை. ராஜ ராஜ சோழரின் காந்தளூர்ச்சாலை  போருக்குப் பின்பும், ராஜேந்திர சோழரின் கேரள படையெடுப்புக்குப் பின்பும் முக்கியத்துவம் இழந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு சோழப்பேரரசோடும் அதன் கலை - பண்பாட்டோடும் இணைந்திருந்த பழவேட்டரையர்கள் உருவாக்கிய கோயில்கள் இன்றும் அவர்களது சிறப்பையும் கலையார்வத்தையும் நமக்கு காட்சிப்படுத்திகொண்டே இருக்கின்றன.

கீழப்பழுவூர் - தஞ்சை சாலையில் வலப்புறத்தில் அமைந்திருக்கும் ஆலந்துறையார் கோயிலே பழுவூரில் அமைந்திருக்கும் கோயில்களில் தொன்மையானது. 

செங்கற் கட்டுமானமாய் 6-ம் நூற்றாண்டில்  கட்டப்பட்டிருக்க கூடியதாக உள்ள கோயில். திருஞானசம்பந்தரால், 

‘' முத்தன்மிகு மூவிலை நல்வேலன் விரிநூலன் 
  அத்தன் எமையாளுடைய அண்ணலிட மென்பர் 
  மைத்தழை பெரும் பொழிலின் வாசமது வீச 
  பத்தரோடு சித்தர் பயில்கின்ற பழுவூரே '’

என்று பாடி பணிந்து கொண்டாடப்பட்ட இப்பெருங்கோயில் பழுவேட்டரையர் மறவன் கண்டனால் 9-ம் நூற்றாண்டில் கற்கோயிலாக உருமாற்றம் பெற்றது. கருவறையைச் சுற்றிலும் உள்ள தேவகோட்ட சிற்பங்கள், முற்கால சோழர் கலைவடிவை கொண்டு பழுவேட்டரையர்களின் கைவண்ணத்தில் மிளிர்பவை.

ஆலமர் அண்ணலும், கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பமும் எழில் வாய்ந்தவை. பழுவேட்டரையர்களாலும், சோழமன்னர்களாலும் பல கொடை அளிக்கப்பட்டு செழுமையாகப் போற்றி கொண்டாடி மென்மேலும் விரிவுபடுத்தப்பட்ட கோயில். அதன்பின் வந்த நாயக்க, மராட்டிய மன்னர்களாலும் தொடர்ச்சியாக நன்றாக பராமரிக்கப்பட்டது. 


பராமரிப்பற்ற மறவனீச்சரம் கோயில்

ஆலந்துறையார் கோயிலின் அடுத்து சற்று உள்ளடங்கி இருக்கும் இந்தக் கோயில். தற்போது மிகவும் சிதைவுறும் நிலையில் உள்ளது. முற்கால சோழர்கால கல்வெட்டுக்களை கொண்டிருக்கும் இக்கோயிலும் பழுவேட்டரையர்களின் படைப்பே .


கீழையூர்  கோயில் தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலை இங்கு அமைந்துள்ள கல்வெட்டுக்கள் ‘'அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிருகம்’’ என்று குறிப்பிடுகின்றன. மேற்குப்புற வாயிலைக் கொண்ட இவ்வளாகத்தினுள் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. வடபுறமாக அமைந்துள்ள கோயில் 'வடவாயில் ஸ்ரீ கோயில்' எனவும், தென்புறமாக அமைந்துள்ள கோயில் 'தென்வாயில் ஸ்ரீ கோயில்' பழுவேட்டரையர்கள் கோயில் எனவும் குறிப்பிடப்படுகிறது.   

ஆதித்த சோழர், பராந்தக சோழர் கல்வெட்டுகளும் இன்னும் சில கொடை கல்வெட்டுகளும் கொண்ட இக்கோயில் ஆதித்த சோழரின் சமகாலத்தவரான பழுவேட்டரையர் குமரன் மறவனால் முற்கால சோழர் கலையமைப்பில் பழுவேட்டரையர்களின் சில புதிய சிந்தனைக்கும் வடிவம் கொடுத்து, அவர்களுடைய கலைத்திறனையும், இறையுணர்வையும் வெளிக்காட்டும் விதமாக பல்வேறு சிவவடிவங்களுடனும், எழிலார்ந்த சிற்பங்களோடும், மண்டபத் தூண்களை சிம்மங்களும், யாளிகளும் தாங்கும் விதமாக வடிக்கப்பட்டு கலைப் பெட்டகமாய்த் திகழ்கின்றன. 

மேலப்பழுவூர் 

மேலப்பழுவூரில் அமைந்திருக்கும் கோயில் இன்று சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகள் இக்கோயிலை 'பகைவிடை ஈஸ்வரம்' என்றே குறிக்கின்றன. பழுவேட்டரையர்களின் கலைக்கோயில்கள் வரிசையில் இது மாறுபட்ட அமைப்பை கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவரின் கைலாசநாதர் கோயிலில் உள்ளது போல், கருவறையை ஒட்டியவாறு திருச்சுற்று காணப்படுகிறது. 

இவ்வகையான கட்டுமானத்தைக் கொண்டு அமைக்கப்படும் விமானத்திற்கு சாந்தார விமானம் என்று பெயர்.

கோயிலின் நுழைவாயிலாக இருக்கும் பகுதிக்கு மேலே எழுப்பப்படுவது கோபுரம். கருவறைக்கு மேற்புறம் எழுப்பப்படும் கூரைப்பகுதிக்கு விமானம் என்று பெயர். 

கோயில் நந்தி சிலை
அவ்வகையில், தஞ்சையில் ராஜ ராஜ சோழரால் கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரம் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில்.  இங்குள்ள கட்டட அம்சங்களும் சிற்பங்களும் பழுவேட்டரையர்கள் கால கலையழகினை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் நந்தி தேவர் சிலையும், எதிர்ப்புறம் சுற்று மாளிகையில் அமர்ந்திருக்கும் ஜமதக்னி முனிவர் சிலையும், பழுவேட்டரையர்களின் பிரமிக்க வைக்கும் கலைப்படைப்புக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

                         பழுவூர் வீரன் 




பழுவூர் தவ்வைத் தாய் 








சப்தமாதர்
பழுவூர் அன்னையர் 









1.கீழப்பழுவூர் திருவாலந்துறையார் திருக்கோயில் மற்றும்
இக்கோயில் தென்கிழக்கே சற்று ஒதுங்கி அமைந்துள்ள தற்போது பெருஞ்சிதைவுற்ற மறவனீசுவரம் எனும் கோயில்

2.கீழையூர் இரட்டைக்கோயில் எனும் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்

3.மேலப்பழுவூர் பகைவிடை ஈசுவரம் எனும் சுந்தரேசுவரர் திருக்கோவில்.

பழுவேட்டரையர்களின் நந்திகள்  

அவனி கந்தர்ப்ப ஈசுவரகிருகம், கீழையூர் 



திமிறும் திமிலும், திரண்ட சதைப்பற்றும், விடைத்த மூக்கும், மடிப்பெய்திய கழுத்தும்... 

பகைவிடை ஈசுவரம் எனும் சுந்தரேசுவரர் திருக்கோவில், மேலப்பழுவூர் 




கீழப்பழுவூர் திருவாலந்துறையார் திருக்கோயில் வெளியே குளத்துச்சுவரில் நூற்றாண்டுகளாய் கோயிலை நோக்கி அமர்ந்திருக்கிறார் 



அழகிய கழுத்தணிகலன் 




அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம், கீழையூர்














கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்