புதன், 5 ஜூன், 2019

கலைமாமணி பெரிய கருப்பு தேவர்



பெரிய கருப்புத் தேவர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூரில் பிறந்தவர். சங்கரதாசு சுவாமிகளின் நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த பிரபல நடிகர் ஆவார். நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதில் வல்லவர். மண்வாசனை, கரகாட்டக்காரன், விருமாண்டி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் இவர் பாடிய பாடல் பிரபலமானது. கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

75 வயதான பெரிய கருப்புத் தேவருக்கு அன்ன மயில் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். அன்ன மயில் ஏற்கனவே இறந்து விட்டார். குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார் பெரிய கருப்புத் தேவர்.

பெரிய கருப்புத் தேவரின் ஒரு மகனான விருமாண்டி திரைப்பட இணை இயக்குநராகவும், இன்னொரு மகன் கார்த்திக் கலை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்கள்.

பெரியகருப்பத் தேவரின் தாய்,தந்தை புகைப்படம்



நடித்த படங்கள் சில

மண்வாசனை

ராணுவ வீரன்

கரகாட்டக்காரன் (1989)

விருமாண்டி (2004)

திருப்பாச்சி (2005)

கிரீடம் (2007)

ஆடுகளம் (2011)

அரவான்


இவர் பாடியுள்ள பாடல்கள் 

கருமத்தூர் காட்டுக்குள்ளே... (விருமாண்டி)

கொடி ஏத்தி வைப்போம்... (பிதாமகன்)

சிவகாசி ரதியே.... (பூ)

விருதுகள்

கலைமாமணி விருது


இவரது மகன் பால் பாண்டிக்குக் குழந்தை பிறந்திருந்தது. பேரன் பிறந்ததால் மகிழ்ச்சி அடைந்த பெரிய கருப்புத் தேவர் பேரனைப் பார்க்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் சிரித்தபடி கூறியுள்ளார். அப்போது அவருக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

இவர்தம் 78 ஆம் வயதில், செப்டம்பர் 18, 2012 அன்று சென்னைசாலி கிராமத்திலுள்ள தனது வீட்டில் மாரடைப்பால் உயிர்துறந்தார். 

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்