அரங்கராச விக்ரம கர்ண பழுவேட்டரையர்... சும்மா கேட்டுக் கடந்துபோகும் பெயரல்ல இது. அதுவும் லண்டனில் படித்து வந்த கட்டிடப் பொறியாளருக்கு இந்தப் பெயரென்றால்..? ‘என்ன சார் ராஜா காலத்துப் பேர் மாதிரி இருக்கு’ எனக் கேட்பவர்களிடமெல்லாம் ஜஸ்ட் புன்னகைத்து வைக்கிறார் விக்ரம கர்ணன்.
சரித்திரத்தை சரித்திரமாகவோ கதையாகவோ வாசித்தவர்களுக்குத் தெரியும்... சோழப் பேரரசின் அணுக்க நெருக்கமான பாதுகாவலர்கள்தான் பழுவேட்டரையர் என்று. சமீபத்தில் சோழர்களின் கதைக்களத்தில் ‘சாளுக்கியம்’ என்ற வரலாற்று நாவலையும் வடித்திருக்கிறார் இந்த பழுவேட்டரையர்.
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை
எண் 1
கல்வெட்டு இருக்குமிடம் - திருவையாறு
கோயில் பெயர் - பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 10
பழுவேட்டரையர் - குமரன் கண்டன்
செய்தி - நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 523
எண் 2
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 12
பழுவேட்டரையர் - குமரன் கண்டன்
செய்தி - 'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்
ஆண்டறிக்கை எண் - SII Volume 3, No. 235
எண் 3
கல்வெட்டு இருக்குமிடம் - திருவையாறு
கோயில் பெயர் - பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 19
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 537
எண் 4
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் ஆதித்தர்
ஆட்சியாண்டு - 22
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்
ஆண்டறிக்கை எண் - SII Volume 8, No. 298, ARE 355 of 1924
எண் 5
கல்வெட்டு இருக்குமிடம் - லால்குடி
கோயில் பெயர் - சப்தரிஷீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 5
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - 'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 146
எண் 6
கல்வெட்டு இருக்குமிடம் - திருப்பழனம்
கோயில் பெயர் - மகாதேவர் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 6
பழுவேட்டரையர் - குமரன் மறவன்
செய்தி - குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 172
எண் 7
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 12
பழுவேட்டரையர் - கண்டன் அமுதன்
செய்தி - வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி
ஆண்டறிக்கை எண் - ARE 231 of 1ட்926
எண் 8
கல்வெட்டு இருக்குமிடம் - திருவையாறு
கோயில் பெயர் - பஞ்சநதீசுவரர் கோயில்
சோழமன்னர் - முதலாம் பராந்தகர்
ஆட்சியாண்டு - 14
பழுவேட்டரையர் - கண்டன் அமுதன்
செய்தி - இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 551
எண் 9
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - சுந்தரசோழர்
ஆட்சியாண்டு - 5
பழுவேட்டரையர் --மறவன் கண்டன்
செய்தி - இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது
ஆண்டறிக்கை எண் - SII volume 5, No. 679
எண் 10
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 9
பழுவேட்டரையர் - மறவன் கண்டன்
செய்தி - இவரது மறைவைத் தெரிவிக்கிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 237, 238
எண் 11
கல்வெட்டு இருக்குமிடம் - உடையார்குடி
கோயில் பெயர் - அனந்தீசுவரர் கோயில்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 12
பழுவேட்டரையர் - கண்டன் சத்ருபயங்கரன்
செய்தி - இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்
ஆண்டறிக்கை எண் - SII Volume 19, No. 305
எண் 12
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 13
பழுவேட்டரையர் - கண்டன் சுந்தரசோழன்
செய்தி - இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒருமண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 681
எண் 13
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - உத்தமச்சோழர்
ஆட்சியாண்டு - 15
பழுவேட்டரையர் - கண்டன் மறவன்
செய்தி - நிவந்தம் அளித்தது
ஆண்டறிக்கை எண் - SII Volume 8, No. 201
எண் 14
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு - 3
பழுவேட்டரையர் - கண்டன் மறவன்
செய்தி - கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 671
எண் 15
கல்வெட்டு இருக்குமிடம் - மேலப்பழுவூர்
கோயில் பெயர் - அவனிகந்தர்ப்ப ஈசுவரம்
சோழமன்னர் - முதலாம் இராஜராஜர்
ஆட்சியாண்டு - 15
பழுவேட்டரையர் - கண்டன் மறவன்
செய்தி - இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே
ஆண்டறிக்கை எண் - ARE 363 of 1924
எண் 16
கல்வெட்டு இருக்குமிடம் - கீழப்பழுவூர்
கோயில் பெயர் - திருவாலந்துறையார் கோயில்
சோழமன்னர் - முதலாம் இராஜேந்திரர்
ஆட்சியாண்டு - 8
பழுவேட்டரையர் - யாருமில்லை
செய்தி - பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது
ஆண்டறிக்கை எண் - SII Volume 5, No. 665
சரித்திரத்தில் பழுவேட்டரையர்கள்
முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.
ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.
பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.
இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.
அரிஞ்சய சோழருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்
பெரிய பழுவேட்டரையர் (சோழ தனாதிகாரி சுந்தர சோழர் காலம்)
பெரிய பழுவேட்டரையர்
பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார்.
பழுவூரை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தவர்களை பழுவேட்டரையர்கள் என்று அழைக்கின்றார்கள். சுந்திர சோழரின் ஆட்சி காலத்தில் பழுவூர்ச் சகோதரர்கள் இருவர் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள்.காலாந்தகக் கண்டர் சின்ன பழுவேட்டரையர் எனவும், கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் எனவும் வழங்கப்படுகிறார்கள்.
பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும் விளங்கியவர். சோழப்பேரரசை சுந்திர சோழனுக்குப் பிறகு மதுராந்தகன் ஆள்வதற்காக சம்புவரையர் அரண்மனையில் ரகசிய கூட்டம் நடத்தினார். மதுராந்தகனை நாடெங்கும் நடந்த கூட்டங்களுக்கு ரகசியமாக அழைத்துச் சென்றார். சோழப்பேரரசின் சிற்றரசர்களுடன் நடந்த கூட்டங்களில் மதுராந்த தேவனுக்கு ஆதரவு திரட்டினார்.
(சோழ தனாதிகாரி சுந்தர சோழர் காலம்)
சின்னப் பழுவேட்டரையர்
(தஞ்சாவூர் கோட்டைக் காவல் தளபதி)
சின்னப் பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதியாக விளங்கியவர்.
காலாந்தகக் கண்டர் என்பது இவருடைய இயற்பெயராகும். இவருடைய அண்ணனை கண்டன் அமுதனார் பெரிய பழுவேட்டரையர் என்று மக்களால் அழைக்கப் பெருகிறார். காலாந்தகக் கண்டரின் கீழ் தஞ்சை அரண்மனை பொக்கிசமும், தானிய அறையும் இருந்தது. மேலும் பாதாளச் சிறையொன்றினையும் தஞ்சை கோட்டையிருந்து வெளியே செல்லும் பாதாளச் சுரங்கத்தினையும் நிர்வகித்து வந்தார்.
இளம் வீரர்களை கண்டால், அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தன்னுடைய படையில் இணைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தஞ்சை அரண்மனையில் சுந்தர சோழர்உடல்நலமின்றி இருக்கும் போது, பலத்த காவல் புரிந்து கோட்டையைப் பாதுகாத்து வந்தார். பெரிய பழுவேட்டரையரைக் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடாதவர்,.
பழுவேட்டரையர்களின் புகழுக்கு, சோழர்களின் கட்டடக்கலைக்கு நிகராக விளங்கும் வகையில் பழுவேட்டரையர்கள் எழுப்பிய கோயில்களே சாட்சி.
அரியலூர் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கீழப்பழுவூர். அதன் அருகருகே அமைந்திருக்கும் கீழையூரும், மேலப்பழுவூருமே பழுவேட்டரையர்களின் ஆட்சிப்பரப்பான பழுவூர் பகுதியாகும்.
பழுவூர் மண்டலத்தின் பகுதிகள் கல்வெட்டுகளில்
1) மன்னுபெரும் பழுவூர் (தற்போது மேலப்பழுவூர்)
2) அவனிகந்தர்ப்பபுரம்(கீழையூர்),
3) சிறுபழுவூர் (கீழப்பழுவூர்)
என குறிப்பிடப்படுகின்றன.
பழுவூர் கோயிலில் இருக்கும் ஆதித்த சோழரின் கல்வெட்டுக்களின்படி, பழுவூர் அரச மரபின் முதல் மன்னராக குமரன் கண்டன் பழுவேட்டரையர் என்பவர் அறியப்படுகிறார். இவருக்குப் பிறகு, இவரது தமையன் குமரன் மறவன், பழுவேட்டரையரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றார்.
சோழர்களின் முக்கிய போர்களில் ஒன்றாக பராந்தகசோழருக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த வெள்ளூர் போரில் பழுவேட்டரையர் மரபில் வந்த கண்டன் அமுதன் சோழப்படைகளோடு இணைந்து பாண்டியர்களோடு போரிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இது மட்டுமல்லாது உதயேந்திரம் செப்பேடுகள் மூலம் பழுவேட்டரையர்களின் மகள் அருள்மொழி நங்கையை பராந்தக சோழர் மணந்து கொண்ட தகவலும் அதில் உள்ளது.
சோழப்பேரரசின் நெருங்கிய உறவாகவும் உயர்நிலை அரசு அதிகாரிகளாகவும் இருந்த பழுவேட்டரையர்களின் நிலை. ராஜ ராஜ சோழரின் காந்தளூர்ச்சாலை போருக்குப் பின்பும், ராஜேந்திர சோழரின் கேரள படையெடுப்புக்குப் பின்பும் முக்கியத்துவம் இழந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு சோழப்பேரரசோடும் அதன் கலை - பண்பாட்டோடும் இணைந்திருந்த பழவேட்டரையர்கள் உருவாக்கிய கோயில்கள் இன்றும் அவர்களது சிறப்பையும் கலையார்வத்தையும் நமக்கு காட்சிப்படுத்திகொண்டே இருக்கின்றன.
கீழப்பழுவூர் - தஞ்சை சாலையில் வலப்புறத்தில் அமைந்திருக்கும் ஆலந்துறையார் கோயிலே பழுவூரில் அமைந்திருக்கும் கோயில்களில் தொன்மையானது.
செங்கற் கட்டுமானமாய் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க கூடியதாக உள்ள கோயில். திருஞானசம்பந்தரால்,
‘' முத்தன்மிகு மூவிலை நல்வேலன் விரிநூலன்
அத்தன் எமையாளுடைய அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும் பொழிலின் வாசமது வீச
பத்தரோடு சித்தர் பயில்கின்ற பழுவூரே '’
என்று பாடி பணிந்து கொண்டாடப்பட்ட இப்பெருங்கோயில் பழுவேட்டரையர் மறவன் கண்டனால் 9-ம் நூற்றாண்டில் கற்கோயிலாக உருமாற்றம் பெற்றது. கருவறையைச் சுற்றிலும் உள்ள தேவகோட்ட சிற்பங்கள், முற்கால சோழர் கலைவடிவை கொண்டு பழுவேட்டரையர்களின் கைவண்ணத்தில் மிளிர்பவை.
ஆலமர் அண்ணலும், கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பமும் எழில் வாய்ந்தவை. பழுவேட்டரையர்களாலும், சோழமன்னர்களாலும் பல கொடை அளிக்கப்பட்டு செழுமையாகப் போற்றி கொண்டாடி மென்மேலும் விரிவுபடுத்தப்பட்ட கோயில். அதன்பின் வந்த நாயக்க, மராட்டிய மன்னர்களாலும் தொடர்ச்சியாக நன்றாக பராமரிக்கப்பட்டது.
பராமரிப்பற்ற மறவனீச்சரம் கோயில்
ஆலந்துறையார் கோயிலின் அடுத்து சற்று உள்ளடங்கி இருக்கும் இந்தக் கோயில். தற்போது மிகவும் சிதைவுறும் நிலையில் உள்ளது. முற்கால சோழர்கால கல்வெட்டுக்களை கொண்டிருக்கும் இக்கோயிலும் பழுவேட்டரையர்களின் படைப்பே .
கீழையூர் கோயில் தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலை இங்கு அமைந்துள்ள கல்வெட்டுக்கள் ‘'அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிருகம்’’ என்று குறிப்பிடுகின்றன. மேற்குப்புற வாயிலைக் கொண்ட இவ்வளாகத்தினுள் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. வடபுறமாக அமைந்துள்ள கோயில் 'வடவாயில் ஸ்ரீ கோயில்' எனவும், தென்புறமாக அமைந்துள்ள கோயில் 'தென்வாயில் ஸ்ரீ கோயில்' பழுவேட்டரையர்கள் கோயில் எனவும் குறிப்பிடப்படுகிறது.
ஆதித்த சோழர், பராந்தக சோழர் கல்வெட்டுகளும் இன்னும் சில கொடை கல்வெட்டுகளும் கொண்ட இக்கோயில் ஆதித்த சோழரின் சமகாலத்தவரான பழுவேட்டரையர் குமரன் மறவனால் முற்கால சோழர் கலையமைப்பில் பழுவேட்டரையர்களின் சில புதிய சிந்தனைக்கும் வடிவம் கொடுத்து, அவர்களுடைய கலைத்திறனையும், இறையுணர்வையும் வெளிக்காட்டும் விதமாக பல்வேறு சிவவடிவங்களுடனும், எழிலார்ந்த சிற்பங்களோடும், மண்டபத் தூண்களை சிம்மங்களும், யாளிகளும் தாங்கும் விதமாக வடிக்கப்பட்டு கலைப் பெட்டகமாய்த் திகழ்கின்றன.
மேலப்பழுவூர்
மேலப்பழுவூரில் அமைந்திருக்கும் கோயில் இன்று சுந்தரேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்பட்டாலும் கல்வெட்டுகள் இக்கோயிலை 'பகைவிடை ஈஸ்வரம்' என்றே குறிக்கின்றன. பழுவேட்டரையர்களின் கலைக்கோயில்கள் வரிசையில் இது மாறுபட்ட அமைப்பை கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவரின் கைலாசநாதர் கோயிலில் உள்ளது போல், கருவறையை ஒட்டியவாறு திருச்சுற்று காணப்படுகிறது.
இவ்வகையான கட்டுமானத்தைக் கொண்டு அமைக்கப்படும் விமானத்திற்கு சாந்தார விமானம் என்று பெயர்.
கோயிலின் நுழைவாயிலாக இருக்கும் பகுதிக்கு மேலே எழுப்பப்படுவது கோபுரம். கருவறைக்கு மேற்புறம் எழுப்பப்படும் கூரைப்பகுதிக்கு விமானம் என்று பெயர்.
கோயில் நந்தி சிலை
அவ்வகையில், தஞ்சையில் ராஜ ராஜ சோழரால் கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரம் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட காலத்தில் கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்குள்ள கட்டட அம்சங்களும் சிற்பங்களும் பழுவேட்டரையர்கள் கால கலையழகினை வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் நந்தி தேவர் சிலையும், எதிர்ப்புறம் சுற்று மாளிகையில் அமர்ந்திருக்கும் ஜமதக்னி முனிவர் சிலையும், பழுவேட்டரையர்களின் பிரமிக்க வைக்கும் கலைப்படைப்புக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.
பழுவூர் வீரன்
பழுவூர் தவ்வைத் தாய்
சப்தமாதர்
பழுவூர் அன்னையர்
1.கீழப்பழுவூர் திருவாலந்துறையார் திருக்கோயில் மற்றும்
இக்கோயில் தென்கிழக்கே சற்று ஒதுங்கி அமைந்துள்ள தற்போது பெருஞ்சிதைவுற்ற மறவனீசுவரம் எனும் கோயில்
2.கீழையூர் இரட்டைக்கோயில் எனும் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்
3.மேலப்பழுவூர் பகைவிடை ஈசுவரம் எனும் சுந்தரேசுவரர் திருக்கோவில்.
பழுவேட்டரையர்களின் நந்திகள்
அவனி கந்தர்ப்ப ஈசுவரகிருகம், கீழையூர்
திமிறும் திமிலும், திரண்ட சதைப்பற்றும், விடைத்த மூக்கும், மடிப்பெய்திய கழுத்தும்...
பகைவிடை ஈசுவரம் எனும் சுந்தரேசுவரர் திருக்கோவில், மேலப்பழுவூர்
கீழப்பழுவூர் திருவாலந்துறையார் திருக்கோயில் வெளியே குளத்துச்சுவரில் நூற்றாண்டுகளாய் கோயிலை நோக்கி அமர்ந்திருக்கிறார்
அழகிய கழுத்தணிகலன்
அவனிகந்தர்ப்ப ஈசுவர கிருகம், கீழையூர்