மலேசிய தோட்டங்களில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த கங்காணிகள் மிகுந்த ஆளுமை செலுத்தினர். ஆண்டுதோறும் நடந்த விழாக்களின் போது 'துரைமார்கள் என்று அழைக்கப்பட்ட ஐரோப்பிய தோட்ட மேலாளர்கள் கங்காணிகள் முன்னாடி செல்வதற்கு பின்னாடி சென்றார்கள்.
அதே போல் பர்மாவில் போய் வட்டிக் கடை வைப்பது, இரண்டு எஸ்டேட் தொடர்பான வேலைகள் செய்வதில், முதலாவதில் செட்டியார்களும், இரண்டாவதில் கள்ளர் இன மக்களும் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கலந்தே இந்தத் தொழில்களைச் செய்தனர் என்றே சொல்லலாம். எப்படி என்றால், முதலில் போய் வட்டிக்குக்கொடுப்பது, பின் தொழிலைக் கற்றுக் கொண்டு தனியே கடை வைத்து, கணக்குத் தெரியாத பர்மிய மக்களை ஏமாற்றி பொருள் சேர்த்து பின் அவர்களின் இடங்களை பெரும் அளவில் வாங்கிக் குவிப்பது/ ஆக்கிரமிப்பது. பின் அவர்களையே அடிமைகள் ஆக்கி வேலை செய்ய வைப்பது அல்லது இங்கே இருந்து அடிமைகளாக மக்களைக் (பெரும்பாலும் தலித்துகள்) கொண்டு சென்று வேலை வாங்குவது. இந்த இடத்தில்தான் அடிமைகளை "மேய்க்கக்" கூடிய, சற்றும் இரக்கம் அற்ற, உடல் உரம் மிக்க கங்காணிகளின் தேவை ஏற்படுகிறது. அதற்காக செட்டிநாட்டில் இருந்து பெரும் அளவில் ஆதிக்க சாதியினர் அனுப்பப்பட்டனர்.
எஸ்டேட் வைத்து இருந்தவர்கள் "முதலாளி வீடு" என்றும், இந்தக் கங்காணிகள் "சோக்ரா" என்றும் சொல்லப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் இன்றும் "சொக்கரா வீடு/ வகையறா" என்றுதான் அழைக்கப்படுகின்றனர். இதை தவிர கணக்கு வழக்குப் பார்ப்பதற்காக என்று சிலர் அனுப்பப்பட்டனர். அவர்கள் கணக்கு பிள்ளை வீடு என்று அழைக்கப்பட்டனர்.