சனி, 18 மே, 2019

கருப்பூர் கோனேரிராஜபுரம்


தஞ்சையில் இருந்து கண்டியூர் வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் ரோட்டில் கருப்பூர் கிராமம் உள்ளது. இந்த ஊர் கோனேரிராஜபுரம் எனவும் அழைக்கப்பட்டது. சோழர் கால கல்வெட்டில், ஆர்க்காட்டு கூற்றத்து மீபிரம்பிலான கருப்பூர் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கிராமத்திலுள்ள சிவன் கோவில் சிதைவுற்ற நிலையில் தற்போது உள்ளது.

பல்லவர் காலத்தில் தஞ்சையிலுள்ள கருப்பூர் கிராமம் செழிப்புடன் திகழ்ந்தது. சோழ மண்டலத்தை கி.பி., 985ல் இருந்து கி.பி., 1014ம் ஆண்டு வரை முதலாம் ராஜராஜன் ஆண்டார். நிர்வாக வசதிக்காக, வளநாடு, நாடு, கூற்றம், ஊர் என, பிரித்தார். இதில், ஒரு வளநாடு தான் பாண்டிய குலாசனி.

இதற்குட்பட்ட ஆர்க்காட்டு கூற்றத்தில் அமைந்த ஊரே, மீபிரம்பில். இதுதான் தற்போது கருப்பூர் கிராமம். இக்கிராமத்தில், நெடுஞ்சாலையையொட்டி சிதைவுற்று அழியும் நிலையில், ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீ சுந்தரேசர் கோவில் உள்ளது.


தஞ்சாவூர், கோனேரிராஜபுரம், கருப்பூரில் கள்ளர் குடியினரின்
  • சோழதிரியர்
  • வாண்டையார்
  • நாட்டார்
  • மழவராயர்
  • தென்கொண்டார்
  • கண்டியர்
  • சேதிராயர்

பட்டமுடையவர்கள் உள்ளனர்.


சோழர் ஆட்சிக்கு பிறகு சோழமண்டலம், பாண்டியர் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது பாண்டிய குலாசனி வளநாடு என, பெயர் மாற்றம் பெற்று, பாண்டிய குலபதி வளநாடு என ஆனது. கி.பி.,1,311ல் தமிழகம் நோக்கி படையுடன் டில்லி சுல்தான் தளபதி மாலிக்காபூர் வந்தார். இவரது படையினர், கோவில்களை தாக்கினர்.































தாக்குதலில் சிதைந்த கருப்பூர் அருகேயுள்ள செந்தலை சிவன் கோவில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதற்காக, அருகிலுள்ள கருப்பூர் சிவன் கோவில், நியமம் காளாபிடாரி கோவில், அமண்குடி சமணக்கோவில்களின் இடிபாட்டு பகுதிகள் எடுத்து வரப்பட்டுள்ளது.
கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், திருமதில், மண்டபம் எடுத்து கட்டப்பட்டது. புதுப்பித்த பகுதியில், மேலே குறிப்பிட்ட கோவில்களின் கல்வெட்டு சாசனங்களை காணமுடிகிறது.

இவற்றில் ஒரு சாசனம், செந்தலை சுந்தரேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை ஒட்டிய திருமதிலில் உள்ளது. இதில், ஆர்க்காட்டுக்கூற்றத்து கருப்பூரான மீபிரம்பில் என்னும் சொல் காணப்படுகிறது. மீ பிரம்பில் என்னும் ஊர் பெயர், பின்னர் கோனேரிராஜபுரமாக மாறியது.


இதற்கு, இப்பகுதி, கி.பி., 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசு ஆதிக்கத்தின் கீழ் வந்ததுதான் காரணம். சோழமண்டலம், தொண்டைமண்டலம் என, இரு பகுதியை ஆண்டவர் கோனேரி தேவமகாராயன் (ஆட்சிக்காலம் கி.பி., 1,485-1495). இம்மன்னன் பெயரால், கருப்பூர் மீபிரம்பில் கோனேரிராஜபுரம் என, ஆனது.

இங்குள்ள கற்றளி கோவிலான சிவன் கோவில், சோழர் காலத்தில் 8 பரிவாரங்களுடன் திகழ்ந்தது. ஆனால், சிவன் கோவில் தற்போது முழுவதும் சிதைந்துள்ளது. கோவில் கட்டுமானத்தின் அடிப்பகுதியில் விஜயநகர மன்னர் காலத்து வாளும், கேடயமும் கொண்டு போரிடும் வீரன் சிற்பம், 12 செ.மீ., வட்டத்துக்குள் செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையில் சோழர் கால சிவலிங்கம், அருகே மற்றொரு சன்னதியில் அதே காலத்திய அம்மன் சிற்பம், உள்சுவரில் பிற்கால ஓவியம் உள்ளது. 

கோன்றி, 
கோனேரி 
கோனெரிகொண்டார் கோனெரிமேல்கொண்டார், கோனெரிமேல்கொண்டான், கோனெரிமேற்கொண்டார்

கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். 

ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்”

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. 

திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,

‘கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’

என்று பாடுவதால் அறியலாகும்.

இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா  என்றால் க
ள்ளரை  தவிர வேறு யாருக்கும் இல்லை.

கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்டமுடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும்.




கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.
 
கருப்பூர் மக்களின் சமயபுரம் பாதயாத்திரை 



கருப்பூரில் ராஜராஜேஸ்வரி கோவிலில் பால்குடம் திருவிழா




கருப்பூர் வெற்றிலை











வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்