அன்பில் தர்மலிங்கத்தின் அரசியல் வாழ்வு லால்குடியை சுற்றி இருந்தாலும் இவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் திருச்சி நகரத்தில் தான் இருந்தது. அந்த காலத்தில் இவருடைய அரசியல் அணுகுமுறையை எல்லோரும் பாராட்டினர்.
திருச்சியின் அடையாளங்களாக வாழ்ந்து மறைந்த, திருச்சி மாவட்டச் செயலாளர் திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட அன்பில் தர்மலிங்கம் நாட்டார். திருச்சி கள்ளர்நாடுகளில் ஒன்றான விசாங்கநாட்டில் உள்ள அன்பில் கிராமத்தைச்சார்ந்தவர் ஆவார்.
தி.மு.கவை பொறுத்தவரை திருச்சி தான் திருப்பு முனை. தீரர்கள் கோட்டையாம் திருச்சி மலைக்கோட்டை மாவட்டத்தில் எதை துவங்கினாலும் ஜெயம் என விதைத்தவர்களில் இவரும் ஒருவர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர், முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவா்தான் அன்பில் தா்மலிங்கம்.
திருச்சியை அடுத்த லால்குடி அன்பில் அருகே உள்ள ஜங்கமநாதபுரம் கிராமத்தில் வாழ்ந்த பெரியசாமி. ஆச்சிக்கண்ணி அம்மையார் ஆகியோருக்கு மகனாக கடந்த 1919-ம் ஆண்டு பிறந்தார். லால்குடி அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தவர். படிக்கும் காலங்களில் இருந்தே மக்கள் பிரச்சினைகளை முன்னெடுக்க துவங்கினார். இவரது குடும்பம் பெரிய அளவில் விவசாயம் செய்த குடும்பம் என்பதால் இப்பகுதி விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னணியில் நின்றார். அதனடிப்படையில் விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இவரது மனைவி தங்கப்பொன்னு.
பிறகு லால்குடி அன்பில் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க காலூன்றக் காரணமாக விளங்கியவர்.
ஜூலை 17, 1947 இல் திருச்சி மாநாட்டில் “திராவிட நாடு’’ தினம் அனுசரிக்கப்பட்டது, தனி திராவிட நாடு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கையை மகாத்மா காந்தி எதிர்த்தார், இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தை துக்க நாளாக அறிவித்தார் பெரியார். தமிழர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே திராவிட நாடு கோரிக்கைக்கு மற்ற மொழி பேசுபவர்களிடம் ஆதரவு கூடவில்லை. இந்தக் கோரிக்கைக்கு தமிழ் நாட்டைத் தாண்டி ஆதரவு கிடைக்காததாலும், மொழி வாரி மாநிலங்கள் 1956 இல் பிரிக்கப்பட்டதாலும் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு குறைந்து போனது. 1963 ஆம் ஆண்டு “ திராவிட நாடு” கோரிக்கையைச் சட்ட விரோதமாக நேரு அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் கைவிட்டது.
பல நெருக்கடிகளில் திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க வைத்தார். அதேபோல் கருணாநிதியின் நம்பிக்கைக்கு நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக விளங்கினார். 1953ம் ஆண்டு திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமாக நடத்தியது. இதன் ஒருபகுதியாக திருச்சி கல்லக்குடியில் ரயில் போராட்டத்தில் ஈடுபட்டபோது அன்பில் தர்மலிங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இந்தப் போராட்டத்தில்தான் கருணாநிதி, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துபடுத்தார். அடுத்து 1953ம் ஆண்டு திமுகவின் மாவட்ட மாநாட்டை லால்குடியில் மிகப் பிரமாண்டமாக நடத்தி கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர்.
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றுவதற்காக 1953-இல் நடந்த போராட்டத்துக்கு பலன் 16 ஆண்டுகளுக்குப்பிறகு கிடைத்தது. 1969-இல் டால்மியாபுர ரெயில் நிலையத்தின் பெயரை “கல்லக்குடி-பழங்காநத்தம்” என்று மாற்றுவதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.
"கல்வி தந்த ஏழை தலைவன்" அமரர் பிகே மூக்கையாத்தேவர் & ஐயா. அன்பில் தர்மலிங்கம் நாட்டார், கலைஞர் அவர்கள் மேடையில். கமுதி கோட்டைமேட்டில் தேவர் திருமகனார் அவர்களின் பெயரில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நமது தேவர் தந்த தேவர் விழா மேடையில் பேசும் போது எடுத்த புகைப்படம். இடம். கமுதி கோட்டைமேடு
"கல்வி தந்த ஏழை தலைவன்" அமரர் பிகே மூக்கையாத்தேவர் & ஐயா. அன்பில் தர்மலிங்கம் நாட்டார், கலைஞர் அவர்கள் மேடையில். கமுதி கோட்டைமேட்டில் தேவர் திருமகனார் அவர்களின் பெயரில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நமது தேவர் தந்த தேவர் விழா மேடையில் பேசும் போது எடுத்த புகைப்படம். இடம். கமுதி கோட்டைமேடு
கல்லக்குடிப் போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி தமிழ்நாடெங்கும் விழாக்கள் நடைபெற்றன. கல்லக்குடியில் பெரிய விழா ஒன்றுக்கு அன்பில் தர்மலிங்கம் ஏற்பாடு செய்தார். இதில் கலந்து கொண்ட அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி, 1953-இல் போராட்டம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்டு, பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தார். “கல்லக்குடி-பழங்காநத்தம்” என்ற பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார் என்றும் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
தொடர்ந்து திமுக நடத்தியது பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்ற அன்பில் தர்மலிங்கம், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார். வேளாண்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் விவசாயிகளுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செய்தார். 2வது மாவட்ட மாநாட்டினையும் 1956ம் ஆண்டு திருச்சியில் நடத்தினார். திருச்சி மாவட்ட செயலாளராக 1951ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை தொடர்ந்து 21 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் வேளாண்துறை அமைச்சராக இருந்ததால், அன்பில் தர்மலிங்கம் நினைவாக திருச்சியில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருச்சி திமுகவின் முக்கிய தூணாக அன்பில் தர்மலிங்கம் விளங்கினாலும் இவர் விவசாய அமைச்சராக இருந்தபோது சில காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது தமிழக அரசியலில் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்பில் தர்மலிங்கத்தின் அரசியல் வாழ்வு லால்குடியை சுற்றி இருந்தாலும் இவரது அரசியல் வாழ்க்கை முழுவதும் திருச்சி நகரத்தில் தான் இருந்தது. அந்த காலத்தில் இவருடைய அரசியல் அணுகுமுறையை எல்லோரும் பாராட்டினர். பொதுவாக அரசியல்வாதிகள் தங்களுடைய கட்சியினரிடம் மட்டும் தான் அதிகம் பழகுவார்கள். மற்ற கட்சியினர் மற்றும் பொது மக்களிடம் அதிகம் பழகமாட்டார்கள்.ஆனால் அன்பில் தா்மலிங்கம் இந்தப் பழக்கத்தை மாற்றி திமுகவினா் மட்டுமல்லாது அனைத்துக் கட்சியினருடனும் கட்சி பேதமின்றி பழகினார்.
அவர்களின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று கலந்து கொண்டார். அப்போது அவர் ஊரில் இல்லையென்றாலும் திருச்சிக்கு வரும்போது நேரில் சென்று நலம் விசாரித்து வருவதை பழக்கமாகக் கொண்டிருந்தார். இதுபோன்ற பழக்கத்தால் அன்பில் தர்மலிங்கத்தை அனைத்துக் கட்சி தலைவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டதும் உண்டு அதே போல தைரியமாகப் பிரச்சனைகளை எதிர்நோக்குபவா் என்று அவரைக் கூறுவதுண்டு என்கின்றனர். அன்பில் தா்மலிங்கத்தின் இந்த அணுகுமுறையைத்தான் இன்று பல அரசியல்வாதிகள் இன்று கடைப்பிடித்து வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் என்றார் கலெக்டர்
அன்பில் தர்மலிங்கம் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தபோது, அண்ணா திடீர் விஜயமாக திருச்சி வந்தார். வழக்கமாகக் கட்சி தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் ஒரு மாவட்டத்துக்குள் வந்தால் மாவட்ட செயலாளர்களுக்கு தகவல் கொடுப்பது வழக்கம். இன்றுவரை அதுதான் தொடர்கிறது. ஆனால் அண்ணாவின் வருகை திருச்சி மாவட்ட செயலாளரான அன்பில் தர்மலிங்கத்துக்கு தகவல் தரவில்லை. கோபமடைந்த அன்பில் நேராக அண்ணாவைச் சந்தித்து, ஒரு மாவட்டத்துக்கு கலெக்டர் எப்படி முக்கியமானவரோ அதேபோல்தான், மாவட்ட செயலாளர். ஒவ்வொரு கட்சியின் மாவட்ட செயலாளரும் கலெக்டருக்கு சமமானவர் என சண்டைப் போட்டார். அதிலிருந்துதான் அனைத்துக்கட்சிகளிலும் மாவட்ட செயலாளர் கலெக்டருக்கு இணையாக மரியாதை கொடுக்கவேண்டும் என்கிற கட்டுப்பாடு தமிழக அரசியல் கட்சிகளுக்கு வந்தது.
அதேபோல். “அன்பில் அழைக்கிறார்” என்று தலைப்பிட்டு 1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமு கழக மாநில மாநாட்டுக்கு அறிஞர் அண்ணா “திராவிட நாடு” இதழில் அழைப்பு விடுத்தார். அதே திருச்சியில் மீண்டும் 1990ம் ஆண்டு பிப்ரவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் தி.மு. கழக மாநில மாநாடு நடைபெற்றது. இப்படி அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள் திருச்சியில் நடக்க அன்பில் தர்மலிங்கமும் காரணம். அதனால்தான் கருணாநிதி, நட்புக்கு அடையாள சின்னமாக விளங்கிய அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை திறக்க நானே திருச்சிக்குச் செல்வேன் என்று கடந்த 8-9-2010 அன்று திருச்சிக்கு வந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறந்து வைத்தார்.
மூன்றாம் தலைமுறை அரசியல்…
திராவிட இயக்க வளர்ச்சியில் அன்பில் தர்மலிங்கம் வளர்ச்சி முக்கியமானது.அந்தவகையில்தான் அன்பில் தர்மலிங்கமும், கருணாநிதியும் இணைந்த கரங்களாக வலம்வந்தார்கள். அடுத்து அன்பில் தர்மலிங்கம் மகன் ஸ்டாலின் –அன்பில் பொய்யாமொழி என அந்த நட்பு தொடர்ந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையாக உதயநிதி ஸ்டாலின் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி என அடுத்த தலைமுறைகளை கடந்து நிற்கிறது.
அன்பில் மகேஷ் தற்போது தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நிழலாக வலம்வருகின்றார். இப்படியெனில் தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம், வீரபாண்டி ஆறுமுகம் என வெகு சிலரே அடுத்தடுத்து தங்கள் குடும்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அந்த வகையில் அன்பில் தர்மலிங்கம், அவரது மகன் அன்பில் பொய்யாமொழி, அவரது தம்பி அன்பில் பெரியசாமி, அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் மகேஷ் பொய்யாமொழி என அடுத்தடுத்த திருச்சியில் எம்.எல்.ஏக்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
அரசியலில் மூன்றாம் தலைமுறை என்பது அபூர்வம். அதில் அன்பில் தர்மலிங்கம் குடும்பமும் ஒன்றுதான். மூன்று தலைமுறை அரசியலுக்கு வித்திட்ட அன்பிலார்
நன்றி: nammatrichyonline.com