மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த தமிழ் செல்வன், பாஜக சார்பில் போட்டியிட்டு 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மண்ணின் மைந்தர் என சொல்லிக்கொள்ளும் சிவசேனா கட்சியை சேர்ந்த வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ஓட்டுக்களை விட தமிழ்செல்வன் கூடுதலாக, 2,733 ஓட்டுக்களை பெற்றுள்ளார்.
தமிழ்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தாலுகா, பிலாவிடுதி கிராமம், குடும்ப பட்டம் ராங்கியர். உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர் என்ற பதவியிலுள்ள தமிழ்செல்வன், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி வருகிறார்.
தமிழர்கள் இடையே மட்டுமல்ல. மும்பையில் மிகவும் பிரபலமானவர், 57 வயதாகும் தமிழ்செல்வன். இவர் பிரபலமாவதற்கு முக்கிய காரணம், 2008 ல், மும்பையில் நடந்த பாக்., பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல். செல்வன்,ரயில்வேயில் பார்சல் கான்ட்ராக்டராக உள்ளார். கடந்த, 2008 ல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சி.எஸ்.டி., எனப்படும் சத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்தார் செல்வம். பாக்., பயங்கரவாதி, அஜ்மல் கசாப் மற்றும் அவர் கூட்டாளி,சராமரியாக சுட்டனர். யாரோ பட்டாசு வெடிக்கின்றனர் என,தனது ஊழியரை போய் பார்த்து வர சொன்னார்.
துப்பாக்கியால், சுடப்படும் தகவல் கிடைத்ததும், தன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை பார்சல் அலுவலகத்துக்குள் பாதுகாத்தார். துப்பாக்கி சத்தம் ஓய்ந்ததும், பார்சல்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தும் மரவண்டி மூலம், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அவருடைய ஊழியர்களும் இதில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, இந்த நடவடிக்கையால், குண்டடிப்பட்ட 40 பேர், உயிர் பிழைத்தனர். அதன் பிறகு தமிழ்செல்வன், தமிழர்கள் இடையேயும், மும்பைவாசிகளிடமும் ஹீரோவாகி விட்டார்.
மும்பையின் தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது காயமடைந்து உயிருக்கு போராடிய 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்த இவரது சேவைக்காக, மாநில ஆளுநர் பாராட்டையும், விருதையும்பெற்றுள்ளார்.
இவரது சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 3 லட்சத்து 43 ஆயிரத்து 162 என்று அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின் பட்டியல் சொல்கிறது.
மும்பையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் காமராஜ் நகர், பிரதிஷா நகர், சங்கம் நகர், டோபிகாட் போன்ற பகுதிகளில், குடிசை வீடுகளும் அதிகமாக உள்ளன. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார கேடு ஏற்படுவது வழக்கம். எனவே அந்த தமிழ் மக்களுக்காக கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுக்க முயற்சி எடுக்கப்போவதாக வெற்ற பெற்ற பிறகு அளித்த பேட்டியில், தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
1980-90க்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரசின் வி.சுப்பிரமணியன் என்பவர் மகாராஷ்டிர சட்டசபையின் தமிழ் எம்.எல்.ஏவாக இருந்தார். அதன்பிறகு, கால் நூற்றாண்டுக்கு பிறகு அந்த மாநிலத்தில் இருந்து ஒரு தமிழ் எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2018 ல் ஆசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்.
மும்பை மலாடு மேற்கில் உள்ள நியூ ஒர்லம் சர்ச் மைதானத்தில் நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சி சார்பில் தமிழர் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு பா.ஜனதாவை சேர்ந்த சயான்கோலிவாடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில்,,
கடற்படையை உருவாக்கிய தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனின் உருவப்படத்தை மும்பை துறைமுகத்தில் திறந்து வைத்து இருக்கிறோம். மும்பையில் கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. தமிழ் மக்களுக்காக சேவை ஆற்றி வருகிறார். மராட்டியம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்த போது, மராத்வாடா, விதர்பா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் கொடுத்து மராட்டிய மக்களுக்கும் உதவினார். அவரது இந்த சேவையை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது.
என்னை சந்திக்கும்போதெல்லாம் அவர் மராட்டிய தமிழ் மக்களின் நலன் மற்றும் தேவை குறித்தே பேசுவார்.