வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

பொ. ஆ 1650 - சங்கிலி கருப்பன் VS. மதுரை வீரன்


மலையமான் திருமுடிக்காரி ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு வந்துள்ளான், பாண்டியன் பராந்தகன் என்ற மாறன் சடையதேவன் வேணாட்டு மன்னனைப் போரில் வென்றதுமன்றி அவனைக் கொன்று அவனுடைய யானைகளையும் குதிரைகளையும் கவர்ந்து கொண்டுவந்தான், அதைப்போல மதுரையில் காரிபின்னத்தேவன் வழிவந்த கள்ளர்கள் தமிழரின் நிலப்பரப்பை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட நாயக்கனின் பெரும்படையும் மீறி, அவனது செல்வங்களையும், ஆநிரைகளையும், வரி பெற வந்த வடுகர்கள் தலையை கொய்தும் திருமலை நாயக்கனுக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருந்தனர். 

திருமலை நாயக்கன் மக்களையும், படையும் பயமுறுத்திக் கொண்டிருந்த, யாராலும் வெல்லமுடியாத மாவீரன் சங்கிலி கருப்பனையும் அவனது மக்களையும் வெற்றிபெற திருமலை நாயக்கன், விஜயரங்க சொக்கலிங்க நாயக்கனிடம் உதவி கேட்டு கடிதம் எழுதினான். சொக்கலிங்க நாயக்கன் திருச்சி வீரையன் சேர்வை என்ற மதுரை வீரனை, மதுரைக்கு அனுப்பி, கள்ளர்களிடம் போரிட பணித்தான். இதைப்பற்றிய செய்திகள் "மதுரை வீரன் அம்மானை" எனும் ஒலைச்சுவடிகளில் காணக்கிடைக்கிறது.

ஆநிரைக் கவரச்செல்லும் கள்ளனை "வீரன்" என்று அழைப்பது கள்ளர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது


ஆலக்குடி,களிமேடு வாழ் வங்கார் பட்டந்தாங்கிய கள்ளர்களுடைய குலதெய்வகோவிலும் ஆலங்குடி மஹாஜனத்தில் உள்ள மதுரைவீரன் கோவில்தான். கூடநாணல் (விசங்கிநாடு) கிராமத்தில் உள்ள நாட்டார் பட்டந்தாங்கிய கள்ளர்களும் மதுரைவீரனைதான் குலதெய்வமாக வணங்குகிறார்கள்.இக்கோவிலும் புடிமண் எடுத்துதான் கோவிலை எழுப்பியுள்ளார்கள்.

"மதுரை வீரன் அம்மானை" தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1190-1200)

“தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் நாட்டிலுள்ள கள்ளரெல்லாம் நன்றாய் கூட்டமிட்டு அழகரோட கோயிலுக்கு ஆரொருவர் வந்தாலும் தாலிபறி சீலை பறி தான்பிடுங்கி போறதுவும், ஆம்பிளையை கண்டால் ஆனதலைக் கொயிறதும் மதுரையுடவீதி வடக்கு நல்ல வாசல் மட்டும் தனியொருவர் வந்தால் தலைக்கொய்து போறதுவும்"

தன்னரசு கள்ளர் நாடுகள், மதுரையில் நுழைந்து கலகங்கள் செய்ததையும், அழகர் கோயில் பகுதியில் கொள்ளைகளில் ஈடுபட்டும், ஆண்களின் தலைகளை கொய்தும் கலகம் செய்தனர் எனும் செய்தியை தருகிறது.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1200-1210)


"தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரையும் வெட்டிக் கெலிக்க வேந்தராலாகாது, ஒரத்தரால் முடியாது, உள்ளபடி சொல்லுகிறேன், ஆயிரம்பொன் சேர்வை ஆணிமுத்து வீரையனை சேனைகள் கூட்டி தெற்கே அனுப்பிவைத்தால் கள்ளர் பற்று நாட்டை கறுவறுப்பான் தென்மதுரை சீக்கிரமாய்த் தான் வருவான்"

திருமலை நாயக்கன் எழுதிய கடிதத்தை அடுத்து, சொக்கலிங்க நாயக்கன், தன் தளபதிகளுடன் ஆலோசனை செய்கிறான். " தன்னரசு தனிகாட்டு கள்ளர்களை வேந்தரால் அடக்க முடியாது. ஓடுக்கவும் முடியாது. ஆகையால் வீரையன் சேர்வையை அனுப்பினால் மதுரை கள்ளர் நாட்டை கறுவறுப்பான் என நாயக்கனுக்கு ஆலோசனை அளித்தனர். கள்ள நாட்டை வேந்தரால் அடக்க முடியாது எனும் வரிகள் தன்னரசு கள்ளர் நாடுகள் மிகுந்த பலத்துடன் விளங்கியதை விளக்குகிறது.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1240-1250)


"நகுலனைப்போல் பாய்ந்தாராம் தென்மதுரை ஐயாயிரம் சேனை அடவாகக் கூட்டமிட்டு, மதுரை திசை நோக்கி சென்றான், மறுநாள் காலமே மன்ன னெழுந்து மதுரை நோக்கி வரிசையுடன் நடக்கலுற்றார் ஆனைபடை சேனைகளும் அதிர்த்தியாய் வாரார்கள்"

பதினெட்டு மேளம் முழங்க, அடைக்காயும் வெற்றிலையும் கொடுத்து வெகுமதிகள் அளித்து மதுரை வீரனை நாயக்கன் அனுப்பி வைத்தான். 5000 படையினர் மதுரை வீரன் தலைமையில் புறப்பட்டனர். யானைப்படை சேனையும் மதுரை நோக்கி விரைந்தது.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1345-1355)


"தலையாரி ஒடிவந்து திருமலை நாயக்கன் முன்னே ஒடிவந்து சொல்லலுற்றார் வடக்கே இருந்து வருகுதய்யா சேனைதளம், குதிரைப்படையும், ராணுவமும் ஆனைப்படை சேனைதளம் அன்பாக தானும் வந்து வைகைக்கரையோரம் வந்தடித்தார் கூடாரம்"

மதுரை வீரன், யானைபடை, குதிரைப்படை, ராணுவத்தோடு வந்து வைகை கரையோரம் முகாமிட்டுள்ளதாக திருமலை நாயக்கருக்கு தெரிவிக்கப்படுகிறது.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1380-1390)


" திருமலைநாயக்கன் தீர்க்கமுடன் தான்போய் ஆரென்று சொல்லி அறிந்துவர சொன்னார்காண் என்று சொல்லி தானும் இருவரும் தானுரைத்தார், வேதியரை தான்பார்த்து வீரையனும் அப்போது விசயரங்க சொக்கலிங்க வேந்தரும் தானழைத்து மதுரைக்கு போய் வன்மையுடன், கள்ளரைத்தான் மட்டடக்கி வாருமென்று வரிசையுடன் அனுப்பிவைத்தார்"

திருமலை நாயக்கன் அதிகாரி, மதுரை வீரனை சந்தித்தார். சொக்கலிங்க நாயக்கன் மதுரை கள்ளர்களை அடக்க தன்னை நாயக்கன் அனுப்பியதாக கூறுகிறார். திருமலை நாயக்கன் சிறந்த வரவேற்பை அளிக்கிறான்.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1440-1450)


"திருமலை நாயக்கரை திறமாக கைதொழுதார் கூடவே கைதொழுதார் குணமுள்ள கர்த்தாவும் வாருமென்று சொல்லி வரிசை யிடங்கொடுத்தார் அப்போது வீரையறும் அன்பான வார்த்தை சொன்னார் பதினைஞ்சு நாளையிலே பாங்கான கள்ளரைத்தான் விருதுபெற்று வாரனய்யா என்று சொல்லி வீரையனும் ஏற்ற முடனே தானுரைத்தார்"

வீரையன் சேர்வை திருமலை நாயக்கனை சந்தித்து வணங்கி, 15 நாளில் பாங்கான கள்ளரை கருவறுப்பதாக கூறினான்.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1475-1485)


"தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் நலமுடனே கூட்டமிட்டு, வளைதடியும் சக்கரமும் வகையுடனே தானெடுத்து ஈட்டிக்கோல் தானெடுத்து ஏவலருங் கூட்டமிட்டு மதுரை கடைவீதி வந்துமெள்ளத் தாம் புகுந்து காசு பணம் ரொக்கமாக கனமாக கொள்ளையிட்டு"

மதுரை வீரன் பெரும்படையுடன் வந்திருத்ததை அறிந்த கள்ளர்கள், ஒடி ஒழியாமல் மதுரை வீரன் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பே, கள்ளர்கள் மதுரை வீதிகளில் சூரையாட தொடங்கினர். தன்னரசு நாட்டு கள்ளர்கள் வளைதடி, சக்கரம், ஈட்டி கோல் ஆகியவை கொண்டு கடும் தாக்குதல் நடத்தி சூரையாட தொடங்கினர்.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1495-1505)

"பட்டாவுருவி பரிஞ்சிமேல் கைப்போட்டார், கள்ளர்படையில் கருத்துடனே போய் புகுந்து, பீரங்கி கத்தி பெரியகத்தி தான் எடுத்து வீசினார் கள்ளரையும் வீராதி வீரையனும்"

மதுரை வீரன் யானைப்படை, குதிரைப்படை, 5000 சேனை, பீரங்கி கொண்டு கள்ளர்களின் மேல் பாய்ந்து போரிட்டார். (அக்பர் காலத்திலே (1542 ) பீரங்கி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது ) 

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1500-1510)


" தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் கொக்கரித்து சேனைதளம் கோடிபடை தானடைந்து வளைதடி சக்கரத்தால் வகையுடனே தானெறிந்தார்கள் ஈட்டிக்கோலால் எறிந்தார்கள் வீரையனை கள்ளர் படை பொருது காரணனும் தென்மதுரை கண்கள் சிவந்து கடுங்கோபம் தானாகி" 

தன்னரசு கள்ளர்கள் ஒன்றினைந்து எதிர்தாக்குதல் செய்தனர். வளைதடி மற்றும் சக்கரத்தை எறிந்தனர். ஈட்டிக்கோலால் தாக்கினர். கள்ளர்படை செய்த போரினால் தென்மதுரை கண்கள் சிவந்தன.

அம்மானை - சுவடி வரிகள்- (பக் 1510-1540)


"பொல்லாத வீரயனும் பொங்கியே வீசலுற்றார் கள்ளர் படைகளெல்லாம் கலங்கியே மெய்மறந்து"

"கடுங்கோபம் தானாகி கண்ரெண்டும் செவ்வரளி பூத்ததுபோல் கள்ளர்படை அத்தனையும் கருவறுத்து தான் குவித்தான்"

கள்ளர்படையினர் தீரத்துடன் போரிட்டாலும், நாயக்கரின் படையானது யானைப்படை, குதிரைப்படை, 5000 சிப்பாய்கள் பீரங்கி என நவீனமாகவும் வலிமையாகவும் விளங்கியதால் கள்ளர் படை பெரும் சேதத்தை சந்தித்தது.

பீரங்கி கொண்டு தாக்கிய பெரும்படையை வெறும் வளரி, சக்கரம், ஈட்டி ஆகியவற்றை கொண்டு தங்கள் இறுதி மூச்சி உள்ளவரை அந்நிய ஆதிக்கதுக்கு எதிராக போராடினர் ஆனாலும் இந்த வெற்றி நாயக்கர்களுக்கு தற்காலிக வெற்றியாகவே அமைந்தது.

பிற்காலத்தில் திருமலை நாயக்கன் கள்ளர் தலைவருக்கு பட்டம் கட்டி கள்ள நாடுகளை நட்பு நாடாக மாற்றி, சுல்தான்களின் படையெடுப்பின் போது கள்ளநாடுகளின் உதவியை நாடினான் என்பதை நாம் அறிவோம்.

மதுரை வீரன் காசி மன்னர் மகன் என்றும், சக்கிலியர் வளர்த்தார் என்றும் கூறப்படுகிறது. 








சக்கிலியச்சி எடுத்து வளர்ந்ததும் , அதன் பிறகு அவன் தன்னை சக்கிலியனாக கூறிக்கொள்கிறான். கர்ணன் மகாபாரத்தில் எப்படி தேரோட்டி மகனாக குறிக்கொள்வதுபோல




மதுரை வீரனை சேர்வை என்று கூறும் வரி




ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்