சனி, 25 ஆகஸ்ட், 2018

இளமக்கள்


சங்க இலக்கியங்களில் இளையர் என்ற சொல்லாடல், அதிகம் பயணிப்பதை, ஆய்வாளர்களால் புறக்கணிக்க முடியாத ஒரு விடையமாகும். அப்படிப்பட்ட இளையர், இளமகன், இளமக்கள் என அறியப்பெரும் இம்மக்களைப் பற்றிய வரலாற்று ஆவணங்களுடன் செல்வோம்.

இளையர்.:-

சங்க காலத்தின் ஆரம்ப பகுதிகளில் கள்ளர் என்ற களவர் குடியின் கிளைக்குடிகளாக மழவர், இளையர் காணப்பெற்றனர். இளையர் என்பதற்கு உடற்கூறுயில் அடிப்படையில் இளமை, இளம் பருவத்தை குறிக்கும் சொல்லாக அமையப் பெருகிறது. மேலும் சங்ககால பாடல்களில் அகத்திணை, புறத்திணையில் தலைவனையும், வாள் வீரர்களையும், பசுக்களை கவர்ந்து செல்லும் கள்ளராகவும் குறிக்கப் பெறுகிறார்கள்.

பெரும்பாலும் போர், படைவீரர்களை குறிக்கப் பெற்று, பின்னாளில் தனிக்குடியாக பரிணாமம் அடையப் பெறுகிறது.

இளையர் என்னும் சொல் புறவாழ்வில் வயதில் இளையவரையும், உடல் இளமைத் தன்மை உடைய படைவீரர்களையும், அகவாழ்வில் தலைவனுக்குத் துணையாக உடன் செல்பவர்களையும் குறிக்கும்.

பெருமாள்மலை தமிழி:
மதுரை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது கள்ளர் மரபினர் வாழும் முத்துப்பட்டி. இங்குள்ள மலை பெருமாள்மலை, கரடிப்ட்டிமலை என அழைக்கப்படுகிறது!  1910 ம் ஆண்டு இங்கு மூன்று கல்வெட்டுகள் அறியப்பட்டன,எனினும் இரண்டே படிக்கும் நிலையில் உள்ளது. குகையின் முகப்பில் இரு தீர்த்தங்கரர் சிலை புடைப்புச்சிற்பமாய் உள்ளது. படுக்கையில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.

முதல் கல்வெட்டு:

நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

விளக்கம்:

முசிறியிலிருந்து இளமகனான கோடன் என்பவரின் கொடை என பொருள்கொள்ளலாம். கேரளத்தின் பட்டணம் எனும் ஊர் முசிறி என கருதப்படுகிறது. சேர நாட்டு தலைநகர் கரூர் ஆகும். திருச்சி பகுதி காவிரிக்கரை கள்ளர் மரபினரின் நாட்டாள்வார் பட்டமுடையவர் அதிகாரம் செலுத்தும் முசிறிக்குச் சேரநாட்டுத் துறைமுகம் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வரும் எளமகன் எனும் சொல் இளமகன் அல்லது இளையர் என பொருள் கொள்ளலாம். இளையர் என்பதற்கு போர்வீரன், எனப்பொருள் இச்சொல் பல்லவர் நடுகற்களில் பயின்று வருகிறது. நாகபேரூர் அருகேயுள்ள நாகமலைபுதுக்கோட்டையை குறிப்பதாய் இருக்கலாம். இப்பெயர் வேள்விக்குடி செப்பேடிலும் வருகிறது குறிப்பிடத்தக்கது.


புதுக்கோட்டை சித்தன்னவாசல் கல்வெட்டு

எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த கவுடிஇ
தென்கு சிறுபொசில் இள
யர் செய்த அதிட்அனம்


பொருள்: எருமை நாசு குமுழூரில் பிறந்த கவுதி(க்கு) (காவிதி). தென்கு சிறுபொசில் இளையர் செய்த இருக்கை (அதிட்டானம்).




இளையர் குடி:-

இளையர் என்பவர் சங்க காலக் குடிகளில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர் குடியில் தோன்றியவர்கள். சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர். இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.

இளையர் என்போர் தனிக்குடியாக, சங்க இலக்கியங்களிலே வருவதை,

1) கல்லா இளையர் பெருமகன் புல்லி - அகம் 83ல்.

இளையர் குடியின் தலைவனாக கள்வர் கோமான் புல்லி குறிக்கப் பெறுகிறார். இதன் மூலமாக கள்ளர் இனத்தின் கிளைக்குடியாக அறியப் பெறலாம்.

2) இளையர் பெருமகன் தொகுப்போர்ச்சோழன்- அகம்338ல்

ஶ்ரீகள்ளச் சோழன் என்றும், கள்வர் கூட்டத்தின் தலைவன் சோழன் என இளையோரை குறிக்கின்றனர்.

3) வல்வில் இளையர் பெருமகன் நள்ளி - அகம் 152

வில் வித்தையில் மிகச்சிறந்த இளையர்களின் தலைவனாக சங்க கால கடையெழு வள்ளல்களில் ஒருவரான நள்ளி குறிக்கப் பெறுகிறார்.

இப்பாடலுக்கு ஏற்றால் போல் வில்வித்தையில் ஆகச் சிறந்த வீரர்களாகவும், சுந்தரபாண்டித் தேவரின் படைத் தளபதிகளாகவும் கள்ள வில்லவர் விரன், நலன் ஆகிய இரு தளபதிகள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகிறார்கள். தமிழக கல்வெட்டுகளில் நேரிடையாக வில்லவர்களாக கள்ளர்கள் மட்டும் குறிக்கப் பெற்றதை நாம் இங்கு அறியலாம்.



சிவகங்கை மாவட்டம் கோமாளிப்படியில் வில்லவர் சின்னத்துடன் வில்லி, இளைமர் என்ற சொல்லாடலுடன் கூடிய கல்வெட்டு கிடைத்திருப்பது இங்கு கூடுதல் சிறப்பாக அறியப்படுகிறது.

4) இளையர் பெருமகன் அழிசி - குறு258ல்

காவிரிக்கரையில் உள்ள ஆர்க்காடு நாட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள். இவன் சோழரோடு அனுக்கத்தொடர்பு உடையவன். இவனை இளையப் பெருமகன் என பரணர் குறிப்பதன் மூலம் வாளேந்திய வீரர் படைக்கு இவன் தலைவன் என அறியலாம்.


ஆதன், அழிசி மற்றும் சேந்தன், இவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில் தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர். தஞ்சை மாவட்டத்தின் ஆர்க்காட்டுக் கூற்றமே.





இன்றும் ஆற்காட்டில் கள்ளர் மரபினரின் கூழாக்கியார்கள் பெரும்பான்மையாகவும், அம்பலக்காரர்களாகவும், ஊரின் நாட்டாண்மைக்காரர்களாகவும் உள்ளனர். இதைத்தவிர கள்ளர் மரபினரின் அங்குரார், மழவராயர், காங்கேயர் பட்டந்தாங்கிய கள்ளர் பெருங்குடிகளும் உள்ளனர்.

ஆற்காடு கூழாக்கியார் அம்பலக்காரர்களுக்கு பாத்தியப்பட்ட பிலியடி கருப்பனுக்கு ஆடி 28 யை முன்னிட்டு கிடாவெட்டு திருவிழா.


சோழர்கொடி பறந்த, சங்க இலக்கியங்களிலே புகழப்பட்டுள்ள தஞ்சை சீமையில் உள்ள ஆற்காடு.



இந்த இளையர் குடியில் ஒருவனான அழிசி தேரில் ஏறி வந்தது கண்கொள்ளாக் காட்சி ஆகும். இவர்கள் யானை வேட்டையிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர். யானை வெட்டையாடி அதனின் கோட்டை (தந்தம்) தனதாக்கிக் கொள்வர். அதை போல் கள்வர் கோமான் புல்லி, புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் யானையை அடக்கி பழக்கமுடையோர்.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி இருந்தான். கள்வர் கோமான் புல்லி பாண்டியருக்கு யானையை பரிசாக தருவதும், புதுக்கோட்டை கள்ளர் மரபினரின் பல்லவராயர், தொண்டைமான்கள் பாண்டியருக்கும் துணை நின்றதையும் குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு கூற்றம் ஆழிசிகுடி, கச்சமங்கலம் என்ற ஊர்களும் கள்ளர்கள் முதன்மையாக வாழ்கின்றனர்.

கச்சமங்கலம் கள்ளர் மரபினரின் வன்னியமுன்டார் பட்டமுடையவர்களே அதிகமாக உள்ளனர். ஆழிசிகுடி ஊரில் கள்ளர் மரபினரின் சோழகர் முதன்மையானவர்கள் மேலும் நாட்டார், காங்கேயர் உள்ளனர்.

மேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர் வீரர் எனவே காட்டுகின்றன.

↑ 1.0 1.1 குறுந்தொகை - 258:6

திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,-(நற்றிணை 190)

↑ காவிரிப், பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை, நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு (குறுந்தொகை 258)

இந்த இளையர் குடியில் வந்த அழிசி மன்னர் மரபில் உருவான சேந்தன் மரபினர், பிற்கால சோழர்களின் படைத் தளபதிகளாக கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றனர்.


இளையர் சேந்தன்:-

கல்வெட்டு எண் : 50
இடம் : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 915
அரசர். : பராந்தக சோழர்
செய்தி. : கானவன் சேந்தன் கள்ளன் கொடை அளித்தது.






கல்வெட்டு எண். : 118
இடம். : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 1078
அரசர். : குலோத்துங்க சோழர்
செய்தி. : கள்ளன் அரையரான சேந்தன் இராஜேந்திர சோழ நாடாள்வான் கொடை அளித்த செய்தி.





கல்வெட்டு எண் : 119
இடம். : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 1078
அரசர். : குலோத்துங்க சோழர்
செய்தி. : கள்ளன் அரையரான சேந்தன் இராஜேந்திர சோழ நாடாள்வான கொடை அளித்த செய்தி



கல்வெட்டு எண் : 232
இடம். : வல்ல நாடு புதுக்கோட்டை
காலம். : 1110
அரசர். : குலோத்துங்க சோழர்
செய்தி. : கள்ளன் பாப்பன் சேந்தன்சேந்தன் குலோத்துங்க சோழ நாடாள்வான் கொடை அளித்த செய்தி



இப்படியாக அழிசி மரபினரான சோழரின் கிளைக்குடியினர் சேந்தன் அவர்கள் நேரடியாக கள்ளராகவும், இராஜேந்திர சோழ நாடாள்வானகவும், குலோத்துங்க சோழ நாடாள்வானகவும் குறிக்கப் பெறுகிறார்.

இதேபோல புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில்

இளமக்கள் படைப்பற்று இருந்துள்ளதை கல்வெட்டு எண்: 234லும், புதுக்கோட்டை பொன்னமராவதியில் கல்வெட்டு 514ல் இளமக்களில் பரிமேழகனின் கொடை பற்றிய செய்தியையும் காணப் பெறலாம்.

தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட ஆவணம் 2001 கல்வெட்டில்:-

13ஆம் நூற்றாண்டு சுந்தர பாண்டித் தேவர் ஆட்சி ஆண்டில் இளமக்கள் என்போர் இராஜேந்திர சோழ நாடாள்வனாகவும், குலோத்துங்க சோழ நாடாள்வனாகவும் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர்.

இராஜேந்திர, குலோத்துங்க சோழ நாடாள்வார்கள் கல்வெட்டு எண்: 50,118,119,232 நேரடியாக கள்ளர் என்பதை உறுதி செய்கிறது.

இளையர் குடியின் பட்டங்களை இன்றும் தங்களுடைய வாழ்வியலில் இன்றும் இளையோர்களாக காணப் பெறும் பட்டங்கள் பின்வருமாறு:-

இளமுண்டார்
சேந்தர்
சேந்தமுடையார்
வில்லவர்
வில்லவராயர்




கல்வெட்டுகளில் அதிகமாக வரும் இளையர் சேந்தன் கள்ளன்

சோழர்களை பற்றிய கல்வெட்டுகளில் அதிகமாக இடம்பெற்ற பெயர்களில் முதலாவதாக நக்கன் என்ற பெயரை தொடர்ந்து அடுத்தடுத்து வருவது சேந்தன் என்ற பெயர்.

கள்ளன் சேந்தன்
கானவன் கள்ளன் சேந்தன்
அரையன் கள்ளன் சேந்தன்
பாப்பன் கள்ளன் சேந்தன்

என சோழர் கால கல்வெட்டுகளில் சேந்தன் கள்ளர் இனத்தை சார்ந்தவராகவே வருகிறார், அதுவும் சோழர் காலத்து கள்ளப்பால் (கள்ளர் நாடு) கவிர் நாட்டு கள்ளர் அரையராகவே (சிற்றரசராகவே) வருகிறார்.

மதுரை சேந்தமங்கலம் கள்ளர்கள் வாழும் ஊர் மேலும் புல்லி கூட்டமும் உள்ளனர். மதுரை வெள்ளலூர் நாட்டு கள்ளர்களின் நக்கன் கூட்டம், கூத்தன் அம்பலம், தஞ்சையின் கள்ளர் ஜமீன்களில் ஒன்றான சேந்தன்குடி ஜமீன்.

சேந்தன் என்று வழங்கும் கள்ளர் பட்டங்கள்

சேந்தமுடையார்
சேந்தமுடையர்
சேந்தமடையார்
சேந்தராயர்
சேந்தர்
சேந்தூரியர்
சேத்தூரியர்
சேய்ஞலரையர்
சேய்ஞலாண்டார்

கள்ளர் பெயரே கொற்றவர், அவர்களின் தெய்வமான கொற்றவை, விழுப்புரம் மாவட்டம் எசாலம் கிராமத்தில், கல்வெட்டு பாடத்துடன் கூடிய அரிய கொற்றவை புடைச்சிற்பம், கேசங்கள் தூக்கி அள்ளி முடிந்த நிலையில் காது, கழுத்தில் ஆபரணங்கள், மார்பில் கச்சை, இடையில் அரையாடை, புஜங்களில் வாகுவளையங்கள், மணிக்கட்டில் வளையல்கள், கால்களில் சிலம்புகளுடனும் சிற்பம் அமைந்துள்ளது. இது பல்லவர்கால சிற்பக்கலைத் திறனை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன. இச் சிற்பத்தொகுதியில் இடப்பக்கம் சிறிய அளவில் மான் உருவமும், வலது பக்கம் வீரன் உருவமும் உள்ளது.


கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக
கல்வெட்டு செய்தி: அக்காலத்தில் சமூகத்தில் பெருமக்கள், இளமக்கள் என்கிற இரு பிரிவினர்கள் வாழ்ந்துள்ளனர். கி.பி. 6-ம் நூற்றாண்டில் இளமக்கள் பிரிவை சார்ந்தவர்கள் எசாலத்தில், மக்கள் ஆன்மிகத்தில் சிறக்கவே கொற்றவை சிற்பத்தை நிறுத்தியதையே இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

நன்றி
Epigraph indica
ஆவணம் தமிழக தொல்லியல் துறை
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
தினதந்தி நாளிதழ்
அகநானூறு
மற்றும் உயர்திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்