வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

வீர திருமகள்கள் ராக்கம்மாள் மற்றும் மாயக்காள்



மாயனின் திருநாமம் கொண்ட மாயக்காளும் மற்றும் அழகர் மலை ராக்காயி அம்மன் திருநாமம் கொண்ட ராக்கம்மாளும் தனது கணவனை, 14-ம் நூற்றாண்டில் ராணி பத்மினி டெல்லி மீது படையெடுத்து அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து ராஜபுத்திர அரசனான தனது கணவன் ரத்தன்சிங்கை மீட்டு வந்தது போலவும், 18-ம் நூற்றாண்டில் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழி தீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட வீர மங்கை வேலு நாச்சியாரை போலவும், 17 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயகனிடம் இருந்து சிறையை தகர்த்து மீட்டு வந்தனர்.


திருமலை நாயக்கன் படை தலைவன் மதுரை வீரனின் அகால மரணத்துக்குப் பின் அவனது வீரச்செயல்களைப் போற்றி நவராத்திரி விழாவில் பாடுவதற்கு ஒரு கட்டியங்காரனை ஏற்பாடு செய்து அவனுக்கு வெகுமதி அளிக்கவும் திருமலை நாயக்கனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கள்ளர் குடி மக்களும் தங்கள் தரப்பு பெருமையை சொல்ல ஒரு கட்டியங்காரனுடன் அதே மேடைக்குக் அருகே அமர்ந்திருந்தார்கள்.

கருமாத்தூர் படைத்தளபதி சமிக்ஞை காட்டியதும் கட்டியங்காரன் துள்ளிப்போய் மேடையில் ஏறிப்பாட ஆரம்பித்தான்.

“நான் கருமாத்தூர் கட்டியக்காரண்டா”
“நாட்டு மக்களுக்குத் தொண்டன்டா”
“நாயக்கர் ஆட்சிக்கு முண்டன் டா....!”


இப்படி ஆரம்பித்துப் பாடிக் கொண்டே கையிலிருந்த துப்பட்டியைக் கோட்டைத் தளபதிக்கு சார்த்தி விட்டு மதுரை வீரனின் படையை கள்ளர்கள் எதிர்த்து முறியடித்த விதத்தை விரிவாகப் பாடினான்.

உடனே திருமலை நாயக்கன் அதிகாரிகள் அவனையும், கருமாத்தூர் தளபதியையும் கைது செய்து சிறையிலடைத்து விட்டார்கள்.

விஷயம் கருமாத்தூரை எட்டியது. தளபதிக்கு மாயக்காள், ராக்கம்மாள் என இரண்டு மனைவியர்.

இரு மனைவியரும் போர்ப் பயிற்சியுடன், குதிரைச் சவாரியிலும் திறன் பெற்றவர்கள். தங்களது கணவரை கைது செய்ததை கேட்டு தங்களுடன் இரண்டு வீரர்களும், பத்துதேவர் வகையாறவில் எட்டாவது மதியதேவர் வகையார வில் பிறந்த மாவீரர் கொன்றிமாயத் தேவரின் வழிகாட்டுதலுடனும் வேங்கையன புறப்பட்டார்கள்.

நள்ளிரவில் கோட்டைக்கு வெளியே இருந்த பெரும் காவலையும் தாண்டி உள்ளே சென்று சிறையிலிருந்த தங்களது கணவன் கருமாத்தூர் தேவரையும், பிறகு கள்ளர்களின் புகழை எதிரியின் இடத்திலேயே புகழ்ந்து பாடிய கட்டியங்காரனையும் விடுவித்ததுடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தீப்பந்தங்களுடன் பாய்ந்து தீ வைத்துவிட்டு கருமாத்தூருக்குப் பறந்து விட்டார்கள்.

அப்போது மைசூர் படையெடுப்புக் காலமாயிருந்ததால், கள்ளர்களுடன் பிரச்னை வேண்டாம் என்று திருமலை நாயக்கன் எண்ணியதுடன் நாட்டு மக்களின் அபிமானம் கள்ளர்களுக்கு இருந்ததால் தான் இரண்டு பெண்கள் இத்தகைய தீரச்செயல் செய்ய முடிந்தது என்று புரிந்து கொண்டார்.

மறைக்கப்பட்ட இந்த வீர மங்கைகள் வரலாற்றை முழுமையாக மீட்டெடுத்து, நாம் நினைவுகூருவோம்.

நன்றி
ஐயா. முத்துத்தேவர்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்