புதன், 8 ஆகஸ்ட், 2018

"அக்கள் ராஜா" தலைகொண்ட கள்ளர் வீர "கச்சிராயன்"


நார்த்தாமலை / அக்கள் ராஜா / விசங்கி நாட்டு கள்ளர்கள் / கச்சிராயன்



கச்சி

கச்சி என்பது காஞ்சியின் மாற்றுப் பெயராகும். காஞ்சியை ஆண்டோர் தம்மை கச்சிராயன் என அழைத்துக் கொண்டனர் எனவும் தெரிகிறது. சோழர் கல்வெட்டுகளில் கச்சிராயன் என்ற பட்டமுடைய பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள திருநறுங்கொண்டை என்ற ஊரில் அமைந்துள்ள பார்சுவப் பெருமான் கோயிலுக்கு ஆளப்பிறந்தான் மோகன், வீரசேகர காடவராயர் கூடல் ஆளப்பிறந்தான் மோகன் கச்சிராயன் என்ற காடவராய மன்னர்கள் தான தருமங்களை செய்துள்ளனர்.

கச்சிராயன் என்னும் பட்டம் சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் உரிய பட்டம் என்பது தெரிகின்றது.

தஞ்சை கச்சிராயன் மங்கலம் என்ற கச்சமங்கலம் மற்றும் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கச்சிராயன்பட்டி கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதி ஆகும்.

கச்சமங்கலம் பகுதியில் கச்சிராயர் பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர். கச்சமங்கலம் பழமையான அணையிணை சோழ மன்னன் அழிசியின் மகனான சேந்தன் என்பவர் தான் உருவாக்கியுள்ளார்.

அழிசிசோழன், தஞ்சை ஆர்க்காடு தலைநகராக கொண்டவன். கள்ளர்களின் ஆக்காட்டுராயன், ஆக்காட்டியன் என்னும் பட்டம் இவனுடன் தொடர்பு உடையதே. ஆர்க்காடு பகுதியை கள்ளர் கூழாக்கி அம்பலகார் ஆட்சி செய்துள்ளார்.

காடவராயர்களை போல கள்ளர் மரபினரான பல்லவராயர்கள்:-




தொண்டைமான்,காடவராயன், பல்லவராயன், காடுவெட்டி ஆகிய பட்டங்கள் கள்ளர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது(Colas Vol.2. Prof.Sastri). பிற்கால சோழர் அரசியலில் காடவச் சிற்றரசர்களின் பங்கு மிகப்பெரியதாக இருந்துள்ளது. எழிசை மோகன் ஆட்கொல்லியான குலோத்துங்கச் சோழக் காடவராயன் (கி.பி 1129), கடலூர் ஆளப்பிறந்தான் மோகனாகிய இராசராச காடவராயன்(1136), செஞ்சியர்கோன் காடவன்(1152) என்போர் அதிகாரிகளாகவும், சிற்றரசர்களாகவும் சோழர் ஆட்சியில் பணிபுரிந்துள்ளனர். காடவராயர் என்ற பட்டம் எவ்வித திரிபும் இன்றி இன்றும் வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் காடவராயன்பட்டி, நமல்பட்டி, தஞ்சை மாவட்டம் பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை, ஈச்சங்கோட்டை, ஆழிவாய்க்கால், சாமிப்பட்டி, மருங்குளம், புதுவூர் முதலிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர்.

நார்த்தாமலை:




பல்லவராயர்களின் பெருங்களூர் கோவிலின் தல வரலாற்றின்படி இந்த ஊர் மாமுனி நாரதர் பெயரால் 'நாரதர் மலை' என்று அழைக்கப்பட்டதாகவும், அப்பெயர் திரிந்து நார்த்தாமலை என்று மாறியதாகவும் நம்பப்படுகிறது. பல்லவ இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த நார்த்தாமலை, தஞ்சாவூர் முத்தரையர் மன்னர்கள் நேரடி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. விஜயாலய சோழன் முத்தரையர்களை வீழ்த்திய பிறகு நார்த்தாமலை சோழர்கள் வசம் வந்திருக்கிறது. முதலாம் இராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் பொழுது (கி.பி 985-1014), ‘தெலுங்குக் குல காலபுரம்’ என்று அம்மன்னனின் பட்டபெயர்களில் ஒன்றால் நார்த்தாமலை அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பாண்டியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. பாண்டியர்களுக்கு பிறகு நார்த்தாமலை மதுரையை ஆண்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மதுரை சுல்தான்கள் ஆட்சியின் கீழ் ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் இருந்திருக்கிறது. கி.பி 14 ம் நூற்றாண்டில் இரண்டாம் தேவராயன் தலைமையிலான விஜயநகரப் பேரரசின் தென்னக ஆக்கிரமிப்புக்குப் பிறகு நேரடியாக மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.


அக்கள் ராஜா "வம்சத்தினர் : (ராஜூ)


16 ஆம் நூற்றாண்டில் ‘அக்கல் ராஜா’ என்ற விஜய நகர பிரதிநிதி (இவர் சத்திரிய ராஜாஎனப்படும் ராஜூ வகுப்பை சேர்த்தவர்) இராமேஸ்வரம் செல்லும்பொழுது தெலுங்குக் குல காலபுரம் என்ற நார்த்தாமலை பகுதியில் ‘விசெங்கி நாட்டுக் கள்ளர்’களை கட்டுப்படுத்துமாறு நாயக்கனால் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களை வெற்றிகொண்டு நார்த்தாமலை கோட்டையில் தாங்கினார். பிறகு நார்த்தாமலை தெலுங்குபுரம் ஆனது.


பல்லவராய சீமை என்ற அந்த பகுதியின் பல்லவராயர் இளவரசியான 'அக்கச்சி' என்பவர், கச்சிராய பட்டம் உடைய கள்ளர் வீரனிடம் 'அக்கல் ராஜாவின்' தலையைக் கொய்து வருமாறு பணித்துள்ளார்.


நார்த்தாமலையில் தங்கியிருந்த 'அக்கல் ராஜாவின்' தலையை வெட்டி மீண்டும் நார்த்தாமலை "தெலுங்குக் குல காலபுரம்" என்பதை நிருபித்தார்.

அக்கல் ராஜா கொல்லப்பட்ட பிறகு, அவரது ஏழு மனைவியரும் நார்த்தாமலைப் பகுதியின் ஓரிடமான 'நொச்சிக் கண்மாயில்' தீக்குளித்து இறந்து போனார்கள். இவர்களுடைய சந்ததியினர் இன்றுவரை ‘உப்பிலிக்குடி’ என்ற ஊரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ‘உப்பிலிக்குடி ராஜா’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.


தொண்டைமான் படையில் சமகாலத்தில் "அக்கல் ராஜா" போர்ப்படை தளபதியாகவும், வீரராகவும் குறிக்கப்பட்டிருக்கிறார்.


விசங்கி நாட்டு கள்ளர்கள் : -



விசங்கி நாடு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, குன்னான்டார்கோவில், மற்றும் அன்னவாசல் ஆகிய ஒன்றியங்களில் பரவியுள்ளது. 

உட்நாடுகள்
1.வெசங்கிநாடு
2.துளசிம்மநாடு
3.செங்கலிநாடு
4.வடமலைநாடு
5.தென்மலைநாடு



வீரபிரதாபன் மகாராயர் (விஜயநகர), கிபி 1537, குளத்தூர் தாலுகா (கீரனூர்), நார்த்தாமலை சீமை, வடசிறுவயல் நாடு படைபற்று கீரனூர் உடையவர்க்கு என விஜயநகர மன்னன், சிறுவயல் நாட்டு படைபற்றிலுள்ள ஆலயத்திற்கு அளித்த கொடைகளை பற்றி கூறுகிறது. இந்த வடசிறுவயல் நாடு புதுக்கோட்டை கள்ளர் நாடுகளில் ஒன்று. சிறுவயல் நாட்டு கள்ளர்கள், கீரனூர் மற்றும் நாரத்தாமலை, சிவன் கோயில்களில் கூடுவது வழக்கம். இந்த சிறுவயல் நாட்டு, விசெங்கி நாட்டு கள்ளர்கள் வாழும் பகுதியின் ஒரு பிரிவாகும். விசங்கி நாட்டுக் கள்ளர்கள் புதுக்கோட்டை யின் வடக்கு பகுதியில் மிகுந்து வாழ்கின்றனர். இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தன்னாட்சி முறையில் வாழ்ந்து வந்தனர்



வரி கேட்டு வரும் நாயக்கர்களின் தலையை வெட்டி அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்தனர்



விசங்கிநாட்டுக்கள்ளர்களை ஆங்கிலேயர்கள் தங்கள் ஏடுகளில் "A Perfect Pest" என குறித்துள்ளனர், (பிரிட்டிஷ் ஆளுமைக்கு கட்டுப்படாமல் மூன்று மாவட்டங்களில் கோலோச்சியுள்ளனர் விசங்கிநாட்டுக்கள்ளர்கள்)



நாயக்கர்கள் குளத்தூர் நமண தொண்டைமானிடம் மூர்க்கத்தனமான விசங்கி நாட்டுக்கள்ளர்களை கட்டுப்படுத்த உதவி கேட்டகின்றனர். நமணதொண்டைமான் நேரிடையாக அவர்களை களத்தில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்திருந்தார். புலியூரில் திருவிழாவிற்காக அவர்கள் அனைவரும் கூடியபொழுது அவர்களை வென்று கள்ளர்நாட்டு தலைவர்களையும் சிறைபிடிக்கிறார்.

அப்போது அவர்களின் தலையை வெட்டி சாக்கில் போடுகின்றார். ஒரு சாக்கில் "ஒன்பது" தலைகள் இடப்பட்டு அதனை விசங்கிநாட்டு கள்ளன் மூலமாகவே நாயக்கனிடம் ஓர் செய்தியோடு எடுத்துச்செல்ல வைக்கிறார்.

அந்த செய்தி என்னவெனில் பத்து தலைகள் உள்ளன இதனை "சுமந்துவருபவரையும் சேர்த்து". இதற்கெல்லாம் அஞ்சாத விசங்கிநாட்டுக்கள்ளர்கள் மீண்டும் நாயக்கர்களுக்கு கட்டுப்படாமல் உள்ளனர்.

இவர்களை தண்டிக்குமாறு நாவப்கள் மற்றும் தஞ்சை மராத்திய மன்னர்கள் விஜய ரகுநாத தொண்டைமானிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

கி.பி.1797ல் தொண்டைமான் 700 பேர் கொண்ட படையை ராய பல்லவராயன் தலைமையில் அனுப்புகிறார். 700 பேர் எண்ணிக்கை உடைய போர்படைகளை தொண்டைமான் அனுப்புகிறார் என்றால் விசங்கிநாட்டு கள்ளர்களின் வீரத்தை இதன்மூலம் நாம் அறியலாம்.

இன்றும் குன்னான்டார் கோவில் பகுதிகளில் நாட்டுப்புறபாடல் ஒன்று இசைக்கப்படுகிறது அது "வெங்கன்ன சேர்வைக்கார் வளந்தான்".

இதன்பின்பும் விசங்கிநாட்டுக்கள்ளர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தாங்களாகவே அமைதியாக வாழ முடிவெடுக்கிறார்கள்.



உப்பிலியக்குடி சத்ரிய ராஜாக்கள் :


இன்று புதுக்கோட்டை மாவட்டம் உப்பிலியக்குடியில் வாழ்ந்து வரும் 6 வகையறாக்கள்:

1) மூப்பர் ராஜாக்கள்
2) மதிலைட்டி
3) ஜெகதாம்பி
4) அள்ளூர்
5) பிடதகோட்டி
6) ஆவலமந்தை




இவ்வூரில் உள்ள அடைக்கலப்பிச்சை அய்யனார் கோவில் கால்மண்டபம் சுற்றுச்சுவர், திண்ணை குப்புசாமி ராஜீ (சாளுவ வம்சம்) கட்டியது. இங்கு60 தலைக்கட்டு வாழ்நதுள்ளனர், இப்போது நிறைய பேர் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர்.

"சத்ரிய ராஜாக்கள் " என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த 60 வது குடும்பத்தில் அனைவரும் ஏதோ ஒரு காவல்பணியில் (இராணுவம், காவல்துறை) பணிபுரிகிறார்கள்.





நார்த்தாமலை கோவிலிலும் மரியாதை வழங்கப்படுகிறது.

இவ்வூர் கோவிலில் கொத்தமலைப்பட்டி கள்ளர்களான கரடி, நாட்ரையர் பட்டந்தாங்கியோருக்கும் மரியாதை வழங்கப்படுகிறது.

இங்குள்ள விசாலாட்சி உடனுறை கைலாசநாதர் கோவில் 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த உப்பிலிக்குடி ஊரில் பெத்தாச்சி பட்டம் தாங்கிய கள்ளர்கள் வசிக்கிறார்கள். பல்லவ நரசிம்ம வர்மன் வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையர் என்ற பட்டம் பூண்டவன். பெத்தாச்சியர் இதன் மருவிய பெயராக இருக்கலாம். போதரையர் பட்டம் உள்ள கள்ளர்களும் தனியாக தஞ்சையில் உள்ளனர். உப்பிலியக்குடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சோழகர் பட்டம் உடைய கள்ளர்கள் குல தெய்வம் ஆகும்.


குறிப்பு :

கச்சிராயன் பட்டம் கள்ளர் மற்றும் சில சாதியினர்க்கு பட்டமாக உள்ளது. 

கள்ளர் மரபை சேர்ந்ந்த ஐயா. சிதம்பரம் கச்சிராயர் மகன் ஐயா. முருகேசன் கச்சிராயர்



ஒன்பத்துவேலி-கள்ளர் மரபை சேர்ந்த துரைராஜ் கச்சராயர்




நூல் ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
கள ஆய்வு : திரு. பரத் குமார் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்