புதன், 15 ஆகஸ்ட், 2018

கள்ளர்களின் சீனத்தரையன் பட்டமும் தஞ்சையில் சாமந்தனாராயண் தொண்டைமானார் வைத்த அகரமும். (பொ.ஆ 1308 - 1344)





சீனத்தரையன்

குறுநில வேந்தர்கள், சிறந்த அரசு அதிகாரிகள், சிறந்த உள்ளூர்த் தலைவர்கள் அரையன் பட்டம் கொடுத்துச் சிறப்பிக்கப்பெற்றுள்ளனர். அரையன் பட்டம் பெற்றோர் கல்வெட்டுகளில் பெரும்பாலும் ஆவணக் கையெத்ழுதிட்டோராக இருப்பதை அறியமுடிகிறது.



அரையன் என்பதற்கு அரசமரபில் தோன்றியவனாகவோ அல்லது அரசியல் பெருதலைவனாகவோ அகரமுதலி (1987: 5) விளக்கம் தருகிறது.



சீனத்தரையரென்ற பட்டம் வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கோ, அல்லது அந்த பகுதி வெற்றியோடோ தொடர்புடையதாக இருக்கலாம். இன்றும் கள்ளர்களில் மட்டும் இந்த பட்டம் தங்கியவர்கள் உள்ளனர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் வாழுகின்றனர்.



சீனத்தரையன் என்ற சொல் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. 




மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்


சோழ பாண்டியன் என்ற பட்டப்பெயர் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் செய்து கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மதுரை பேரையூர் மேலத்திருமாணிக்கம் சிவன் கோயில் அரசு அலுவலர்கள் பட்டங்களாக குறிக்கப்பட்டுள்ள பல பட்டப்பெயர்கள்



விழுப்பாதராயர், 

தமிழுதரையர், 

புள்ளவராயர் (புலவராயர்), 

வயிராயர் (வயிராத ராயன்), 

பாண்டிராயர், 

சங்கரதேவர், 

வாணரையர் (வாணவதரையர்)



போன்ற பட்ட பெயர்களும்,

சீனத்தரையன் பட்டமும்

கள்ளர்களில் இன்றும் காணப்படுகிறது. மதுரை, மேலத்திருமாணிக்கம் பகுதியில் இன்றும் கள்ளர்கள் வாழ்கின்றனர். இங்கு அரசு கள்ளர் பள்ளியும் உள்ளது.


மூன்றாம் இராசராசன் சோழன் காலத்தில்

மூன்றாம் குலோத்துங்கன் இறந்ததும், அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழ நாட்டு அரியணை ஏறி ஆட்சி செய்துவந்தான். பழிவாங்கும் நோக்குடன் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்று சோழ நாட்டைக் கைப்பற்றி, சோழ நாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கு இரையாக்கினான்.

கழுதையைப் பூட்டி ஏர் உழுது, கவடி விதைத்துள்ளான், அங்குள்ள மணி மண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்துத் தரை மட்டமாக்கினான். சோழர்களின் இரண்டாம் தலைநகராகிய பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் வீராபிடேகம் செய்து கொண்டான். சோழனைப் பழையாறைக்கே அழைத்துவரச் செய்து அவனுக்குச் சோழ நாட்டைத் திரும்ப அளித்து அவனைத் தனக்குத் திறை செலுத்தி ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.


சோழ நாட்டின் மீது படையெடுத்த கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான், இதனை 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. அதில் "கோப்பெருஞ்சிங்கன் இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன் இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு" சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


பாண்டிய மன்னன் வல்லபன் காலத்தில்

மூன்றாம் இராசராசன் அவன் மகன் மூன்றாம் இராஜேந்திர சோழன் தோல்வியால் பல வருடங்களாக பாழ்பட்டுக் கிடந்த தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன் (1308-1344) என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த "சாமந்தன்" என்பவன்.




தஞ்சை பெரிய கோயிலில் தென் புற நுழைவு வாயிலுக்கு கீழ்புறம் ஜகதி படையில், ஸ்ரீ வல்லபதேவ பாண்டிய மன்னனின் 35 ஆம் ஆண்டு கல்வெட்டு உள்ளது.


பாண்டியன் கல்வெட்டு...... அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் பற்றிய சாசனம்....

அதிலுள்ள செய்தி பற்றி

கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் அவர்கள் ஆய்வில் கூறுவது:

சாமந்தனாராயண் தொண்டைமானார் தம் பெயரால், தஞ்சாவூரில் கிராமம் (அகரம் - இறையிலி ஊர் ) ஒன்றை அமைத்து, அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்று பெயரிடுகிறார்.

அங்கே சாமந்தனாராயன விண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலையும் எழுப்புகிறார். 106 பாட்டர்களை குடியமர்த்துகிறார். 95 வேலி (ஒரு வேலி 20 ஏக்கர் ஆகலாம்) நிலத்தை இரு நிலக்கிழார்களிடம் இருந்து வாங்கி நிவந்தமாக அளிக்கிறார்.

நிலம் விற்ற ஒருவர் தென்னகங்கதேவன், இன்னொருவர் பெயர் சீனத்தரையர். இன்னும் நிலம் பங்கீடு, பயிர்கள், போன்ற தகவல்கள் இதில் நிறைய இருக்கின்றன.

தஞ்சவ்வூரில் இருந்து பூதலுருக்கு ஒரு சாலை கள்ளபெரம்பூர் வழியாக போகிறது. தஞ்சையில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில், களி மேடு தாண்டி உள்ள ஊர். சக்கர சாமந்தம். இதுதான் தஞ்சையில் தொண்டைமானார் வைத்த அகரம். எப்படி? அகரம் சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம், கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி அகர சாமந்தம் ஆகி, இன்னும் கொஞ்சம் மாறி, சகர சாமந்தம் ஆகி, இப்பொழுது சக்கர சாமந்தம் ஆயிற்று.

இன்னும் கூட கொச்சை வழக்காக சக்கர சாமம் என்கிறனர். இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, தஞ்சை என்றால் தஞ்சை கோட்டை பகுதி மட்டும் அல்ல. அதற்குரிய நிலங்களையும் சேர்ந்தது தான் தஞ்சை. எனவே அந்நாளில் இந்த அகரம் உள்ள பகுதியும் தஞ்சைதான்.

சக்கர சாமந்தம் ஊருக்கு மேற்கில் தென்னகங்கதேவன் வாழ்ந்திருக்கிறார். அந்த ஊரும் அவர் பெயராலேயே தென்ன கங்க தேவன் குடி எனப்பட்டது. இந்த ஊர் இன்று தென்னங்குடி எனப்படுகிறது. மேலும் இந்த ஊரில் கள்ளர்களின் சோழங்க தேவர் (சோழ கங்க தேவர்) என்ற பட்ட பெயருடையவர்கள் பூர்வீக குடிகளாக இருக்கிறார்கள்.

அடுத்து,நிலம் வழங்கிய சீனத்தரையன் ஊர். தென்னன்குடியை அடுத்து சீராளூர் இருக்கிறது. இதுவும் நிலம் வழங்கியவர் பெயராலேயே சீனத்தரையனூர் என அழைக்கப்பட்டு, சீனானூர் ஆகி, இன்று சீராளூர் ஆயிற்று. இந்த ஊரிலும் கள்ளர்களின் சீனத்தரையர் என்ற பட்டப்பெயர் உள்ளவர்களும் இவ்வூரின் பூர்வீகக்குடிகளாக உள்ளார்கள்.

அகரம் சாமந்த நாராயண விண்ணகர் பெருமாள் கோயில் இன்று தஞ்சை கொண்டிராஜா பாளையத்தில் (மேல நரசிங்க பெருமாள்) உள்ளது. தஞ்சை மன்னர் சரபோஜி காலத்தில் இங்கு கொண்டு வந்து புது ஆலயத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. (சாமந்தான் குளம் பற்றி இன்னொரு பதிவு வரும்) சரபோஜி கல்வெட்டு உள்ளது.

சக்கர சாமந்தத்தில் செவ்வப்ப நாயக்கர் நலன் வேண்டி அவரது மகன் அச்சுதப்ப நயாக்கர் நிலதானம் வழங்கிய சூலக்கல், கல்வெட்டுடன் இருந்தது. அது இப்பொழுது தஞ்சையில் உள்ளது.



கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் அவர்கள் ஆய்வில் கூறுவது:

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டை வென்று தஞ்சையையும், உறையூரையும் முற்றிலுமாகத் தீயிட்டு அழித்தான். அழிந்த தஞ்சைப் பகுதியில் மீண்டும் பாண்டியனின் தளபதி தொண்டைமான் என்பவரால் புதிய குடியிருப்புகளும், நரசிம்மர் கோயிலொன்றும் அமைக்கப்பெற்றன. சாமந்த நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்ற ஊரையும் ( இன்றைய கொண்டிராஜ பாளையம்), சாமந்த நாராயண விண்ணகரம் என்ற யோக நரசிம்மப் பெருமாள் கோயிலையும், சாமந்த நாராயணன் குளம் (சாமந்தாங்குளம்) என்ற குளத்தையும் வெட்டி தஞ்சாவூரை மறுபடியும் ஏற்படுத்தினான்.

அப்பகுதிக்கு சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும் பெயரிட்டான். அது தொடர்ந்து புதிய தஞ்சை நகரம் மீண்டும் பொலிவு பெறலாயிற்று. சாமந்த நாராயண சதுர்வேதி மங்கலத்தின் தோற்றம் பற்றி விவரிக்கும் தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள பாண்டியனின் கல்வெட்டில் அதற்கென அளிக்கப்பெற்ற நிலங்கள் பற்றி கூறும்போது கோடிவனமுடையாள் எனும் தேவியின் கோயில் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. வரலாற்றுச் சிறப்புடைய கோடியம்மன் கோயிலும், அதில் இடம்பெற்றுள்ள இரண்டு யோகினிகளின் திருமேனிகளும் தஞ்சை நகரத்தின் புறநகராக விளங்கும் கருந்திட்டைக்குடிக்கும், வெண்ணாற்றுக்கும் இடையில் கோடியம்மன் கோயில் எனற பெயரில் இக்காளி கோயில் உள்ளது.

.


கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது


ஆய்வாளர்கள் உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் உயர்திரு ஐயா. குடவாயில் பாலசுப்ரமணியன் சோழகர் இருவரின் ஆய்வில் தஞ்சையில் உள்ள இடங்கள் மாறுபட்டாலும் சீனத்தரையர் , சோழ கங்க தேவர் என்ற பட்டம் உடைய கள்ளர்குடியினர் இன்றும் தஞ்சை மண்ணில் செல்வசெழிப்போடும் , அதிகாரத்தோடும் வாழ்கின்றனர் சாட்சியாக.

நன்றி:

உயர்திரு ஐயா. செல்வராஜ் நாயக்கவாடியார்

உயர்திரு ஐயா. பாலசுப்ரமணியன் சோழகர்

உயர்திரு. பார்த்தி கத்திக்காரர்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்