ஞாயிறு, 4 மார்ச், 2007

தியாகி. நா.சு.வீரைய்யா வாண்டையார்

சுதந்திர போராட்ட வீரர், தியாகி.
நா.சு.வீரைய்யா வாண்டையார்
குடும்பத்தினர்.

ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் பழம்பெரும் குடந்தை எனும் கும்பகோணம் மாநகரில் கடந்த 36 வருடங்களுக்கு முன்பு (1985ல்)அனைத்து உலகதர வசதிகளையும் கொண்ட பல்நோக்கு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை எங்களது பெரிய தகப்பனாரும் குடவாசல் வட்டம் நார்சிங்கம்பேட்டை மறைந்த தியாகி, பெருநிலகிழார்.NS.வீரைய்யா வாண்டையாரின் மூத்த புதல்வர் N.S.V.சாந்த மூர்த்தி அவர்கள் தன் கடும் உழைப்பினாலும்,பல உலக நாடுகளில் 15 வருடங்கள் பணிசெய்து தான் ஈட்டிய பொருளின் முக்கால் பகுதியினை தன் பகுதி மக்களின் நலத்திற்காகவும் ஏழை எளிய மக்களான அவர்கள் குறைந்த செலவில் உலகதரம் வாய்ந்த உயர் சிகிச்சையினை பெற்று,நலமுடன் வாழ்ந்திடவும்,அதனை தன் பகுதி மக்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமை என எண்ணியும் தனது அன்பு மனைவியின் பெயரில் (விமலா) விமல் மெடிக்கேர் சென்டர்(VMC) என தொடங்கினார்.அந்த மருத்துவமனை அன்றைய அகில இந்திய காங்கிரசின் தலைவர் அய்யா G.k.மூப்பனார் அவர்களால் திறக்கபட வேண்டியது.தவிர்க்கமுடியாத காரணத்தால் அவர் வர இயலவில்லை மாறாக அவரின் அன்பு தம்பி G.R.மூப்பனார் மற்றும் மத்திய MP.பக்கிர் முகமது அவர்களாலும் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசை கச்சேரியுடனும் சீறும் சிறப்புடனும் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த 2005 வரையில் மிகசிறந்த முறையில்  Dr.V.சாந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் மக்களுக்கு சேவையாற்றியதை கும்பகோணம் மக்கள் நன்கு அறிவர்.அந்த காலம் முதல் இன்றுதொட்டு அந்த பகுதியின் Landmark கும்,பேருந்து நிறுத்தமும் எங்களது மருத்துவமனைதான்.








இன்று அகர்வால் கண் மருத்துவமனை குழுமம் அதில் கண் மருத்துவமனை நடத்திக்கொண்டுள்ளனர்.அதேபோல் கடந்த 35 ஆண்டுகளாக ஞாயிற்று கிழமைகளில் ஏழை எளியோருக்கு இலவச மருத்துவத்தையும் புரிந்து இன்றளவும் தனது 76 வயதிலும் மருத்துவ சேவை இடையறாது செய்து வருகிறார் எங்கள் தந்தை.
அவரை தந்தையாக நாங்கள் அடைந்ததற்கு பெருமைபடுகிறோம்.அவரது மகன்களான முதல்வரான Dr.செந்தில் குமார் மேற்கிந்திய தீவின் Trindad லும்,இரண்டாமவர் Dr.செந்தில் மாறன் சவுதி அரேபியாவில் மருத்துவ சேவையும்,மூன்றாமவர் Er.செந்தில் மாலன் சென்னை Hyundai கம்பேனியில் AGM ஆகவும் தங்களது பணியையும் செய்து வருகின்றனர்.

அன்புடன் இரா. அருண் பாரி






1984 தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் குத்தாலம் தொகுதி நமது கழக வேட்பாளராக எனது தந்தை NS. வீர. ராஜேந்திரன். Bsc... கழக பொதுச்செயலாளர் உயர்திரு SD. சோமசுந்தரம் அவர்களுடன்...




கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்