திங்கள், 5 மார்ச், 2007

வாண்டையார் வரலாறு


கள்ளர் மரபில் நீண்ட வரலாறு உடையவர்கள் வாண்டையார் பட்டம் உடையவர்கள். சிலர் வாண்டையார் சாதி என்று தனி சாதியாக நினைக்கின்றனர். இது கள்ளர்களுக்கு மட்டுமே உரிய பட்டமாம்.

வாண்டையார்,  தெத்து வாண்டையார்,  பருதி வாண்டையார், 
நெடுவாண்டையார் 
வண்டன், வண்டயன், வாண்டயன், 
வண்டதேவன், வண்டப்பிரியன்

என்று பட்டங்களை உடைய கள்ளர் மரபினர், இன்றும் சோழமண்டலத்தில் சிறப்போடு வாழ்கின்றனர்.

பூண்டி  எஸ்டேட் - மன்னர் மரபு வழியில் வந்த பூண்டி வாண்டையார்கள் வாழும் ஊர்.

வாண்டையார் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.

வாண்டையார் இருப்பு :- தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டத்தில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வாண்டையார் குடிகாடு :- திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பேரையூர் ஊராட்சியில் உள்ள வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

வாண்டையார் குடியிருப்பு :-  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், கரும்பிரான்கோட்டை ஊராட்சியில்  வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 

வாண்டையான்பட்டி :- கந்தர்வக்கோட்டை பகுதியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 

வாண்டையான்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம்,  வடுகப்பட்டி ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

வாண்டாம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை  வட்டத்தில் கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வாண்டாம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம்,  ஆற்றங்கரை ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 

வாண்டான்விடுதி :- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். 

வாண்டான்விடுதி :- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாணக்கன்காடு ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

வாண்டாக்கோட்டை :-  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பாலையூர் பழங்கரையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை புராதன புரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தொடர்ந்து விஜயநகர மன்னர், பாண்டிய மன்னர் மற்றும் தொண்டைமான் மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கோவில் ஆகும். அதில் 1453 ஆம் ஆண்டு வாண்டான், வாண்டையார் பற்றிய கல்வெட்டு. வாண்டார் மற்றும்  வாண்டையார் பட்டம் அம்பு நாட்டு, வீரகுடி நாட்டு கள்ளர்கள் ஆவார்கள்.




புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பழங்கரை புராதனபுரீசுவரர் கோயில் அறந்தாங்கி தொண்டைமான் கல்வெட்டில் வாண்டையார் 
புதுக்கோட்டை1453 ஆம் ஆண்டு வாண்டான், வாண்டையார் பற்றிய கல்வெட்டு

மேலும் வாண்டன், வாண்டையார் பட்டமுடைய கள்ளர் மரபினர் மேலே குறிப்பிட்ட பகுதிகளை தவிர கீரனூர், மேலக்கரும்பிரான்கோட்டை, ஆற்றங்கரைப்பட்டி (புதுக்கோட்டை) கண்ணுகுடி, மேல உழுவூர், புதுப்பட்டி, பட்டுக்கோட்டை, மேடைக்கொல்லை, கறம்பயம், மன்னார்குடி, பஞ்சவாடி, குன்னூர், இடையூர், அரிச்சயபுரம், மறவாக்காடு, செம்பியன்மாதேவி, சாந்தமாணிக்கம், சோலைக்குளம், பைங்காநாடு, காரக்கோட்டை, பேரையூர், பெருகவாழ்ந்தான், திருக்களர், திருமங்கலக்கோட்டை, பாபநாசம், கோனூர், திருபுவனம், வலங்கைமான், சின்னகரம், சாத்தனூர் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர்.



தமிழ் லெக்சிகன்படி வாண்டையார் பட்டமானது கள்ளர்களுக்கு மட்டுமே உருத்தானது!!!





கள்ளர் வாண்டையார் மரபினரில் ஒருவருடைய நிலபத்திரம் - 1929 ஆண்டு



புதுக்கோட்டை தொண்டமான் மன்னரின் படையில் இருந்த பூண்டி வாண்டையார்கள்,   வாளு உடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள். ராஜ்ஜியத்தில் உடை வாளுடன் இருக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்கள். வாண் மறவர் - போரிற் சிறந்த வாள் வீரரும் (வாண் - வாள்).



கல்லாத பேரை எல்லாம், கல்வி பயிலச் செய்து புதியதோர் உலகம் படைத்தவர்கள் பூண்டி வாண்டையார்கள்


பூண்டி கல்லூரி வழங்கிய வள்ளல் ராவ் பகதூர் வீரையா வாண்டையார். திருப்பூவண நாதர் மீது தோத்திரங்கள் பாடியிருக்கின்றார் . பள்ளி தந்த அருளாளர் அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் . தஞ்சை தெற்கு அலங்கம் முனிசிபல் பள்ளிக்கு வித்திட்ட வித்தகர் சேர்மன் அய்யாசாமி  வாண்டையார்.

படைத் தலைவர் - வாண்டையார் நடுகல் 

( 10 ஆம் நூற்றாண்டு - கி.பி. 954 )

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் காட்டேரி என்ற ஊரில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் இக்கால் வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. (நடு. பக். 245)

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவீர பாண்டியனை / முடித்தலை கொண்ட / கோப்பரகேசரி பருமற்கு / யாண்டு நாலாவது பானைச் சுணையைப் பூத்து வாண்டை வந்தழித்த விடத்து ஒந் / டப்படுத்து எதிரே பத்தரம் மு / ருவிப் பட்டினத்துப் பட்டா / ன் தோவி டென்.

ஒண்ட - பதுங்கி, மறைந்து,ஒளிந்து; பத்திரம் - குற்றுவாள், அம்பு; பட்டினம் - கடற்கரை ஊர், காவிரிப் பூம்பட்டினம்.

சோழன் ஆதித்த கரிகாலன் உடைய நான்காம் ஆட்சி ஆண்டில் (கி.பி.954) சோழனுக்குப் படைத் தலைவனாய் இருந்த பூத்துவாண்டை என்பவன் பானைச் சுணை எனும் ஊர் மேல் படை கொண்டு வந்து அழித்த இடத்தில் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிப்படுத்து கொண்டிருந்த தோவிடன் என்ற படைஆள் வாண்டைப் படை தனக்கு அருகே வந்ததும் திடீரென்று எழுந்து திகைப்புற எதிரே தோன்றி குற்றுவாளை உருவிப் போரிட்டு கடற்கரை ஊரான காவிரிப்பூம்பட்டினத்தில் வீர சாவடைந்தான். வாண்டையார் என்ற பெயருடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுடைய முன்னோர் சோழப் பேரரசில் படைத்தலைவராய் பொறுப்பில் இருந்து உள்ளனர்.


காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது கடற்கரை ஊரான காவிரிப் பூம்பட்டினம். அத்து என்ற சாரியை பூம்புகாரில் என்று பொருள் தருவதால் கடல் கொண்ட பின் சிற்றூராகிப் போன புகாரின் ஒரு அண்டைப் பகுதியில் பானைச் சுணை என்ற ஊர் இருந்து உள்ளது எனலாம். எனவே போர் சோழ நாட்டில் நடைபெற்று உள்ளது. ஆனால் மாண்ட தோவிடன் வாணியம்பாடி வட்டம் காட்டேரி ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவன் நினைவில் இந் நடுகல் அவன் உறவினரால் அங்கு நடப்பட்டது. எனினும் தோவிடன் யார் சார்பில் போரிட்டான் என்ற செய்தி கல்வெட்டில் குறிக்கப்படவில்லை.


தெத்துவாண்டையார் என்ற பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் கந்தர்வகோட்டையில் உள்ளனர்.


குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் 
17 ஆம் நூற்றாண்டு



சேலம் மாவட்டம், ஆறகழூர் அருகே வெள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள விளை நிலத்திலிருந்து புதிதாகக் கல்வெட்டு மற்றும் நவகண்ட சிற்பம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் எனத் தொடங்கும் இக் கல்வெட்டானது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.



‘மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர்’ என்று குறிப்பிடுகிறது. இந்தப் பகுதியில் வாண்டையார்கள் பெயரில் கிடைத்திருக்கும் முதல் கல்வெட்டு இதுதான். இந்த வாண்டையார்கள், நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்.
ஆத்தூர் கூற்றத்தை சேர்ந்த பகுதி ஆறகழூர் ஆகும்,  ஆத்தூர், கள்ளக்குறிச்சி பகுதியில் 15 ஆம் நூற்றாண்டில் கள்ள அரையர்கள் கவுண்டர்கள் பட்டமுடைய கள்ளர்களினால், கள்ளர் நாடு மூலம் ஒரு ஊரை தானமாக வழங்கியதை நாம் அறிந்ததே சேலம் கள்ள(ர்)குறிச்சி - கள்ளர் நாடு )




அதே போல் ஆறகழூர், காமநாத ஈஸ்வரர் கோவிலுக்கு, ஏழுகிளை கள்ளர் நாடான கப்பலூர் நாடு தலைவன் கணபதி நாடாள்வான் என்பவன் தானம் வழங்கியுள்ளான்.



குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார், ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்குக் குமாரபாளையம் என்ற ஊரைத் தானமாகக் கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்லகுடியைச் சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாகக் குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.


வீடுகளில் துளையிட்டுத் திருடும் கன்னமிட்டவன், பயணத்தின்போது வழிமறித்துத் திருடும் வழிப்பறிச்சவன், மற்றவர்கள் பொருள்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களைச் செய்தவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது’ என ஆணையிட்டுள்ளனர். ‘அங்குக் குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இந்தத் தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள்’ என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.




இந்தக் கல்வெட்டுக்கு அருகே நவகண்ட சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. போரின்போது தனது உடலில் ஒன்பது இடங்களில் அரிந்து, படையல் இட்டுத் தன்னைத் தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்ட நவகண்ட சிற்பம் இது. மேலும், வயல்வெளிகளில் கறுப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் காணப்படுகின்றன.



குப்பமுத்து வாண்டையார்
(1842 )


கருந்திட்டைக்குடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். முற்காலத்தில் கருந்திட்டைக்குடி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. தற்போது, கரந்தட்டாங்குடி என்றும் சுருக்கமாக கரந்தை என்றும் அழைக்கப்படுகிறது.


கரந்தை தமிழ்ச் சங்கம்", நினைவில் வாழும் திருவாளர்கள் குமாரசாமி பிள்ளை, அய்யாசாமி வாண்டையார் முதலானவர்களோடு திரு. உமாமகேசுவரனார் அவர்களும் இணைந்து 1918 ம் ஆண்டு உருவாக்கிய "கரந்தட்டாங்குடி திராவிட கூட்டுறவு வங்கி"போன்ற சரித்திர புகழ் பெற்ற அமைப்புகள் உள்ள பகுதியில்
  1842 இல் மாரிமுத்து வாண்டையார் மகன் குப்பமுத்து வாண்டையார் யாசகம் (பிச்சை) பெற்று, அந்த மக்கள் உபயத்தில்  வசிஷ்டேஸ்வர் கோவில் பெரிய பிரகாரத்தின் தளவரிசை வகையறா போட்டதை காட்டும் கல்வெட்டு. பிச்சை, யாசகம் எடுத்து கோவில் கட்டுவது சோழர் காலத்திலும் உள்ளது.






K.வீரைய்யா வாண்டையார்

(1879)

ராஜா மிராசுதார் மருத்துவமனை Founder:- (1879 வருடம்)


K. வீரைய்யா வாண்டையாரால் எழுதப்பட்ட வாண்டையார் பிரபந்தத் திரட்டு (1889) என்ற நூல்




ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்


1921 இல் மெட்ராஸ் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்



தஞ்சை சங்கீத வித்யா மக ஜன சங்கம் - ஆண்டு
1916


T.M.C. கும்புசாமி வாண்டையார்

மார்த்தாண்டா பல்வகை கண்காட்சி :-1913

1913 ல் புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிக்காலத்தில், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் கும்புசாமி வாண்டையார் என்பவர் அக்கண்காட்சியில் மருந்து பொருட்களை விற்பனை செய்து சிறப்பித்ததற்கு புதுக்கோட்டை சமஸ்தானத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.




இராவ்பகதூர்  
திரு. A. வீரையா வாண்டையார். 
(1899 - 1970)




திரு.கா.கூத்தபெருமாள் வாண்டையார்

கட்டிய மலேசியா இராஜமாரியம்மன் கோவில் (கி.பி. 1911)


இங்கே சொடுக்கவும் (click hereவாண்டையார் கோவில்


வி. அப்பசாமி வாண்டையார்

கரந்தை தமிழ்ச் சங்கம் - நன்கொடையாளர் - ஆண்டு 1911



 

1939 ஆண்டு  - தியாகராஜ வாண்டையார்



திரு.சீனிவாச வாண்டையார்

தேவரய்யா அவர்கள் பர்மா சென்று இருந்த போது அவர்களுக்கு வெள்ளி வாள் வழங்கியவர் திரு.சீனிவாச வாண்டையார். இவர்கள் ஒரு தெருவையே வீடாக கொண்டவர்கள். அதாவது தங்களுக்கு சொந்தமான 112 வீட்டை பர்மா கலவரத்தில் அப்படியே விட்டுவிட்டு இந்தியா வந்தவர். 



130 ஆண்டுகள் பழமையான தர்ம சத்திரம் கரம்பயத்தில் உள்ளது



பூண்டி சீமான் கிருஷ்ணசாமி வாண்டையார்


எழுதிய வாழ்த்து மடல் ( 1949)



அப்பாசாமி வாண்டையார் - 1957  ஆண்டு 



அய்யா சாமி வாண்டையார்

தஞ்சாவூர் நகர தந்தை S . அய்யாசாமி வாண்டையார் பெயரில் வளைவு  (ஆர்ச்) மற்றும் சிலை உள்ளது.  ஆண்டு - 1956


இங்கே சொடுக்கவும் (click hereஅய்யாசாமி வாண்டையார்


சாலியமங்கலம் சேவையா வாண்டையார்

அம்மாபேட்டை பகுதியின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் போராடிய தியாகிகள் சாலியமங்கலம் சேவையா வாண்டையார் முக்கியமானவர்.


திரு. நாராயணசாமி வாண்டையார்

கரிகாற்சோழன் போர்புரிந்த கோவில்வெண்ணியில் உள்ள தெய்வத்திருமகன் நாராயணசாமி வாண்டையார்.


டி. என். அனந்தநாயகி வாண்டையார். (கி.பி. 1946)

சிறந்த அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)


இங்கே சொடுக்கவும் (click here) டி. என். அனந்தநாயகி வாண்டையார்

கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீமான் மாரியப்ப வாண்டையார்



இங்கே சொடுக்கவும் (click hereஶ்ரீமான் மாரியப்ப வாண்டையார்

அ. கிருஷ்ணசாமி வாண்டையார்


வி. அப்பசாமி வாண்டையார்




கல்வி காவலர் மகா-ள-ள-ஸ்ரீ  துளசி அய்யா வாண்டையார்





முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் து. கிருஷ்ணசாமி வாண்டையார்




தமிழரின் 169 நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் வாண்டையார்





இங்கே சொடுக்கவும் (click hereநெல் ஜெயராமன் வாண்டையார்




மூவேந்தர் முன்னேற்றக் கழகம் நிறுவனர்

பிரேம்குமார் வாண்டையார் மற்றும் ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார்




ராமநாத துளசியா 
வாண்டையார்




முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகி செங்குட்டுவன் வாண்டையார்







நாகப்பட்டினம் 

R. சந்திரமோகன் வாண்டையார்



A. Veeriya Vandayar Memorial Sri Pushpam College





வாண்டையார் பொறியியல் கல்லூரி


வாண்டையார் ஹோட்டல் - சிதம்பரம்




ஐயா மாரியப்ப வாண்டையார் தியேட்டர் - சிதம்பரம்



பாடகச்சேரி பொன்னுசாமி வாண்டையார்



ராஜமாணிக்கம் வாண்டார்




நாராயண வாண்டையார்



தமிழ் நாட்டின் - யார் விடுதலைப் போராளிகள் - WHOS WHO OF FREEDOM FIGHTERS - TAMIL NADU 
என்னும் தமிழக அரசு வெளியிட்ட நூலில் இருந்து  

1906

1913
1918
1921
1921
1924



















நன்றி:
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு. பரத் குமார் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்