சனி, 3 மார்ச், 2007

கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டையார்.



சோழர் காலத்தில் கடம்பூர் என்ற, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடலூர் என்று அழைக்கப்பட்ட பகுதியில், தில்லைக்கு அருகில் அமைந்துள்ள தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீசந்திரசேகர்.

கங்கைகொண்டசோழபுரத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடக்கும் போது, இங்கேயும் அன்னாபிஷேகம் அமர்க்களப்படுமாம்! சிதம்பரம் கோயிலில் திருவாதிரைத் திருவிழா நடைபெறும் நாளில், இந்தக் கோயிலிலும் திருவாதிரை விழா விமரிசையாக நடந்தேறுமாம். இதனால் அந்த ஊருக்குச் சந்திரசேகரபுரம் என்றே பெயர் . கௌரவர்கள் இங்கு வந்து சில காலம் தங்கியிருந்தனர். இதனால், சந்திரசேகரபுரம் எனும் ஊர், கௌரவப்பட்டு என்றானது. அது பின்னாளில் மருவி, கவரப்பட்டு என்றானதாகச் சொல்கின்றனர்.

இந்த புகழ்மிக்க கவரப்பட்டு கிராமத்தில் பிறந்தவர் தான் புகழ்பெற்ற வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டையார்.

தன் சமுதாயத்திற்கு வாரிவழங்கிய வள்ளல் பெருமான் மாரியப்ப வாண்டையார்.


சிதம்பரத்தில் மிக செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். தான் சம்பாதித்த குடும்ப சொத்துக்களை சமுதாயத்துக்கு வழங்கிய வள்ளல்.


வங்கக்கடலை களம் அமைத்து கட்டி ஆண்டவர். பிச்சாவரம் மண்ணில் தனி அச்சாரம் போட்டவர் . காமராஜர் தொடங்கி இவர் இல்லத்தில் உணவருந்தி செல்லாத முதலமைச்சர்களே இல்லை என்னும் அளவுக்கு தனி செல்வாக்கு படைத்தவர். 


தென்னாற்காடு மாவட்டத்தில் தனி ஆவர்த்தனம் செய்தவர். பதவிகள் தன்னை தேடிவந்த போதும் விரும்பி ஏற்க்காதவர்.


கவரப்பட்டு இல்லத்தை முக்குலத்தின் தலைமையிடமாக மாற்றியவர். தன் அஞ்சாத செயல்பாட்டால் ஆண்ட அரசுகளை திரும்பி பார்க்க வைத்தவர்.

சிதம்பரத்தில் வாண்டையார் கவர்மென்ட் என்ற தனி அரசாங்கம் நடத்தியவர்.


பள்ளி, பறையர் அதிகமாக வாழும் மண்ணில் ஆண்ட பரம்பரையின் அடையாளமாக நின்றவர்.


தன் இனம் வாழ தன் மகன்களை தாரைவார்த்தவர். சமுதாய இயக்க சங்கம் அமைத்தவர். முக்குல்த்தோர் சங்க மாநாடு முதன்முதலில் நடக்க காரணமாக இருந்தவர்.

தெற்கே தேவர் என்றால் வடக்கே வாண்டையார் என்னும் வரலாறு படைத்தவர்.

இனத்தின் காவலர் சமுதாய சிற்பி கம்பீரத்தின் அடையாளம். சிதம்பரத்து சீமான் கவரப்பட்டு கோமகன். அவரை வணங்கிறோம்.


கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டையாரின் வாரிசு வள்ளல் மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கவரப்பட்டு சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க தெற்கு பிச்சாவரம் உப்பனாற்றில் நிரந்தர தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, கவரப்பட்டு அடுத்த தெற்கு பிச்சாவரம், கீழப்பெரம்பை, பெரிய காரைமேடு, சின்ன காரமேடு, சின்டம்பாளையம், இளந்திரிமேடு உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வந்தனர். உரியகாலத்தில் தண்ணீர் கிடைக்காமல், நீர் உவர்ப்புத் தன்மையாக மாறியதாலும் சில ஆண்டுகளாக விவசாயம் செய்யமுடியவில்லை. காலம் கடந்து நடவு செய்ததால்  தண்ணீர் இல்லாமல் நடவுப்பயிர் காய்ந்து வந்த்து. அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் 1000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவு பயிரை பாதுகாக்கும் நோக்கில் 63 கே.வி., திறன் கொண்ட ஜெனரேட்டர் மூலம் உப்பனாற்றில் தேக்கி வைக்கப்பட்ட நன்னீரை இறைத்து விவசாயத்திற்கு பாய்ச்சும் நிகழ்ச்சியை தன் சொந்த செலவில் துவக்கி வைத்தார்.













குறிப்பு : கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டையார் குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு மாளிகைகள் உள்ளன. 


நன்றி: MK மணிகண்டன் வன்னியர்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்