சனி, 3 மார்ச், 2007

டி. என். அனந்தநாயகி வாண்டையார்




நடராஜ வாண்டையாரின் திருமகளாய் தஞ்சை குமரலிங்கத்தில் 18/06/1929ல் பிறந்து சென்னையில் வாழ்ந்தார். படிக்கும்போதே துடிப்புடன் சொற்பொழிவுகள் ஆற்றியவர். பொதுநல தொண்டுகள் புரிவதில் வல்லவர். வழக்கறிஞர் பட்டமும் பெற்று வாதத்திறமையுடன் நீத்மன்றங்ககளில் வாதிட்டு பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குகாக பாடுபட்டவர். திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் திரு இராசமோகன் களத்தில் வென்றாரை கரம்பிடித்தார்.

பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும் இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும் இருந்தவர்.

ஒரு சிறந்த அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ்தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் அருந்தொண்டுகள் ஆற்றியவர். உற்றார்,உறவினர் மற்றும் சுற்றத்தினர் அனைவருக்கும் பாகுபாடின்றி உதவிகள் பல செய்தவர். பண்புடன் பழகும் பண்பினை பெற்றவர். அழகு தமிழ் மேடைப் பேசுகளில் காங்கிரஸ் அவைகளை அலங்கரித பெருமை கொண்டவர். சட்டப்படிப்பு முடியும் முன்பே சென்னை மாநகராட்சியில் உறுப்பினராகி காங்கிரஸ் கட்சியை வலுப்பெற செய்த பெருமைமிக்கவர். மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினாராகி மக்களுக்கு அரும் பணியாற்றி மகிழ்வுற்றவர். 


வீரத்தமிழருக்கு ஆவேச கடிதங்கள் என்ற கவிஞர் சுத்தானந்த பாரதியின் நூலில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அனந்தனாயகி இடம்பெற்றார். தன் தகுதிக்கும் உழைப்புக்கும் உகந்த எந்தப் பதவியும் எதிபாரமலும் அடையாமலும் உண்மையான தியாகியாகவே இறுதிவரை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்து வாழ்ந்து வந்தவர். 1975ல் நெருக்கடி காலத்தில் அவசரகோலத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது மனம் தளர்ந்து காங்கிரஸ்சில் இருந்து சிறிது ஒதுங்கி இருந்தார். இக்கால கட்டத்தில் தேவர் பேரவை தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. 

1970-களில் அவர் முதல்வராக இருந்த போது சட்டப்பேரவையில் ஒரு விவாதம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் மசோதாவை ஆதரித்து கருணாநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்க் கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.அனந்தநாயகி, ‘‘எதற்காக இந்த சட்டம்? எங்கள் ஊரில் உள்ள பிடாரி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்தான் பூசாரியாக இருக்கிறார். எனவே, இந்த சட்டம் தேவையில்லை’’ என்றார்.

அதற்கு, மசோதாவின் நோக்கத்தை விளக்கிய கருணாநிதி, ‘‘தாழ்த்தப்பட்டவர் கள் அர்ச்சகராக இருப்பதை பிடாரிகள்கூட ஏற்கிறார்கள். சில அடங்காப் பிடாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்’’ என்று கூற, அவையே சிரிப்பில் ஆழ்ந்தது.

விடாமல் அடுத்த கேள்வி தொடுத்தார் அனந்தநாயகி. ‘‘சாமி நம்பிக்கை இல்லாத முதல்வர் கருணாநிதிக்கு, கோயிலைப் பற்றி என்ன கவலை?’’ என்றார். அசராத கருணாநிதி, ‘‘கொலை செய்தவர்கள் மட்டுமா நீதிமன்றம் போகிறார்கள். வழக்கில் வாதாடும் வக்கீல்களும், நீதிபதிகளும் கூடத் தான் நீதிமன்றம் போகிறார்கள்’’ என்றார். கேள்வி கேட்ட அனந்தநாயகி உட்பட சபையே அவரது சாதுர்யத்தை ரசித்தது


தேசிய பாரம்பரியத்தின் உணர்வோடு தேசிய இயக்கத்தை வளர்ந்த அம்மையாரால் சாதிய உணர்வுகளையும் அதன் உட்பூசல்களையும் சகிக்க முடியாமல் அப்பதவியை உதறினார். நாடும் சமுதாயமும் தான் வளர்த்த காங்கிரஸ் இயக்கமும் நலிந்து வருவதை கண்டு கவலையுற்று தானும் நலிந்து இறுதிக்காலத்தை தன்  இல்லத்துக்குள்ளேயே முடித்துக்கொண்டார். தான் சார்ந்த இயக்கத்துக்கும் நாட்டுக்காகவும் உழைத்தாரே தவிர அந்த இயக்கத்தால் எந்த ஒரு பயனும் அடையாத புடம் போட்ட தியாகியாகவே வாழ்ந்து மறைந்தார்.


எதிரிகளுக்கும் உதவி செய்து சர்வகட்சித்தோழர் என்று புகழப்பட்டவர். ஒன்றியப்பெருந் தலைவர், மாவட்டச்செயலாளர், அமைச்சர் என் எந்த நிலையிலும் பிறந்த சமுதாயத்தை மறவாத இனப்பற்றாளர். கலைஞர் கருனாநியின் சட்டமன்ற நுழைவுக்கு 1957ல் குளித்தலை தொகுதியை வாயிலாக்கிய நாள் முதல் இறுதிமூச்சுவரை பிறருக்கு உதவி செய்தே புரவலர் எனப் போற்றப்பட்டவர்.


மொழி,நாடு, இயக்கம், இனம் என்ற பந்தங்களுக்கு குந்தகம் வராமல் பார்புகழ் மங்கையாக, தேசியவாதியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த நம் குல செல்வியை எண்ணி நாம் பெருமையும் பாடங்களும் கற்றுக்கொள்ள வேண்டும். அறிவிற் சிறந்தோர், ஆற்றல்மிகு பெரியோராகிய அனந்தநாயகி என்னும் அற்புத மங்கையின் புகழ் விண்ணும் மண்ணும் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்