செவ்வாய், 24 டிசம்பர், 2019

வாலிபால் வீரர் முத்துசாமி கண்டியர்




மன்னார்குடி  எடமேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (21). வாலிபால் வீரர். இந்திய கைப்பந்து அணி நேற்று முதல் வரும் 22 ம் தேதி வரை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்பர்க் நகரில் நடைபெறும் 21 வயதுக் குட்பட்டோருக்கான  பிரிக்ஸ் 2018 வாலிபால் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகிறது. பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக முத்துசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்துசாமி எடமேலையூரில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு வரை படித்தார்.

அப்போது உள்ளூர் வாலிபால் கழகத்தில் பயிற்சி பெற்ற போது, முத்துசாமியின் திறமையை அறிந்த சங்கத்தினர் அவரை திருச்சி, சென்னை, கோவையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் சேர்த்து பயிற்சி அளித்தனர். அப்போது முத்துசாமி பள்ளி மற்றும் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று  தனி முத்திரை பதித்தார். இதன் பின்னர் கல்லூரியிலும் வாலிபால் அணியில் இடம்பிடித்து சிறந்த வீரராக விளங்கினார். பல்கலைக்கழக அளவில் நடந்த போட்டிகளில் இவர் பங்கேற்ற அணிகள் வெற்றி வாகை சூடின.

பல்வேறு போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகனாக பரிசுகளை பெற்ற முத்துசாமிக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வேலை வழங்கியது. அத்துடன் அந்நிறுவனம் தனது கேரள அணியில் விளையாட முத்துசாமிக்கு அனுமதி வழங்கியது. இதை தொடர்ந்து இந்திய வாலிபால் அணியில் இடம் பிடித்த முத்துசாமி கடந்த 8 மாதமாக இந்திய அணியின் பயிற்சி முகாமில் கலந்து  கொண்டார். தற்போது இந்திய அணியின் கேப்டனாகவும் முத்துசாமி உயர்ந்துள்ளார். இதுகுறித்து முத்துசாமியின் தயார் பாப்பாத்தி கூறுகையில், கணவர் இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரும் சிறந்த கபடி வீரர் ஆவார். எனது மூன்றாவது பிள்ளை முத்துசாமி. எடமேலையூர் வாலிபால் கழகத் தினரின்  வழிகாட்டுதலில் தற்போது  இந்திய அணிக்கு கேப்டனாக உயரும் அளவிற்கு வந்துள்ளார். இது பெருமை அளிக்கிறது. முத்துசாமி இந்திய அணிக்கு கேப்டனாக சிறப்பாக விளையாடி பெருமைகளை பெற்று தருவார் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.

முத்துசாமி இந்திய வாலிபால் அணிக்கு கேப்டன் ஆனதை அறிந்த எடமேலையூர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடமேலை யூர் கிராம மக்கள் கூறுகையில், முத்துசாமி சிறந்த வாலிபால் வீரர். அவர் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தரும் அளவிற்கு சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.


கோவிந்தசாமி நந்தியார்



கோவிந்தசாமி நந்தியார்  - நிறுவனர்

ஸ்ரீ முருகன் , கிளாங், மலேசியா








திங்கள், 23 டிசம்பர், 2019

திருச்சி வரலாற்றில் திருச்சி மலைக்கோட்டை - கள்ளர்



தித்தன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு  சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த  சோழமன்னன். தித்தன் சிறந்த குதிரை வீரன். இவனது உறந்தைக் கோட்டைக்கு வெளியே கற்பாறைகள் நிறைந்த காவல்காடு இருந்தது. (இக்காலத்தில் திருச்சியில் உள்ள  மலைக்கோட்டை,  பொன்மலை முதலானவை அந்தக் ‘கல்முதிர் புறங்காடு’கள் எனலாம்)



தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்ற பெருமைக்குரிய திருச்சிராப்பள்ளி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்சினாப்பள்ளி என்றே அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்டது. மலைக்கோட்டையை அடையாளமாகக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் பெயரிலேயே மக்களவைத் தொகுதியும் அமைந்துள்ளது.



திருச்சி மாநகரத்தை சுற்றி கள்ளர் மரபினர்கள் நிறைந்து வாழும் பகுதிகள் ( புறநகர் அல்லாது)

வடக்கு பகுதி : வண்ணாரப்பேட்டை, உறையூர்,  பிச்சாண்டாவர்கோவில், பளூவூர்.

தெற்கு பகுதி: காஜாமலை, கொட்டபட்டு, சாத்தனூர், கல்லுக்குழி, இச்சிக்காமலைபட்டி, செங்குறிச்சி.

மத்திய பகுதி : ஒத்தக்கடை

மேற்கு பகுதி : சின்னமிளகுபாறை, கருமண்டபம், பெரியமிளகுபாறை, வயலூர், பெருங்குடி, எட்டுமான் திடல்.

கிழக்கு பகுதி:  ஜெயில்தெரு, பெரியகடை வீதி, முதலியார் சத்திரம், காந்தி மார்க்கெட், முடுக்குபட்டி, பொன்மலைபட்டி, கிழக்குறிச்சி, கல்க்கண்டார்கோட்டை, திருவெரும்பூர்.

நாம் திருச்சி மலைக்கோட்டையை பார்க்கும்போதெல்லாம், அதன் பிரமாண்ட அமைப்பும், மலைஉச்சியில் அமைந்துள்ள கோயிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் வரலாறு அறிந்தவர்களுக்கு, மலையின் உச்சியை மிஞ்சும் அளவிற்கு வீரம் மிகுந்த கள்ளர்கள் திருச்சி மலைக்கோட்டையில் செய்த போர்கள் நினைவுத்துளிகளில் வந்து வியப்பை ஏற்படுத்தும். வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட வீரம் செறிந்த நிகழ்வுகள் சிலவற்றை காண்போம்.


பீஜப்பூர் சுல்தான்களை தோற்கடித்தல்:


கிபி 1660 ல் பீஜப்பூர் சுல்தான்களின் படைத்தளபதிகள் முல்லா மற்றும் ஷாஜி என்பவர்கள் தலைமையில் துலுக்கர் படைகள் முதலில் நாயக்கர் வசம் இருந்த தஞ்சையை தாக்கினர். தாக்குதலை சமாளிக்க இயலாத தஞ்சை நாயக்க மன்னர் ஒடி மறைந்தார். தஞ்சையை சூரையாடிய பின் துலுக்கர்கள் திருச்சி கோட்டையை முற்றுகையிட்டனர். திருச்சி நாயக்கர் படைதளபதி லிங்கம நாயக்கர் தலைமையில் வலுவான படை இருந்ததால், கோட்டையை எளிதில் கைப்பற்ற இயலவில்லை. துலுக்கர் படையின் ஒரு பிரிவினர் திருச்சியின் மற்ற பகுதிகளை சூரையாடி மக்களை வதைக்க தொடங்கினர். இச்சமயத்தில் கள்ளர்கள் இரவு நேரங்களில்,எதிர்பாரா தாக்குதல்களை பீஜப்பூர் படை மீது நடத்தினர். அவர்களின் முகாம்களை தாக்கி சூரையாடி தவிடு பொடியாக்கினர். தாக்குதல்களை சமாளிக்க இயலாத பீஜப்பூர் படை திருச்சியை விட்டு அகன்றனர். அங்கு மதம் பரப்ப வந்த போதகர்கள் தங்களது குறிப்புகளில், தமிழகத்தின் மீது படையெடுத்த சுல்தான்கள், மன்னர்களின் படையைவிட, கள்ளர்களின் திடீர் தாக்குதல்களை கண்டே அஞ்சி நடுங்கியதாக கூறியுள்ளனர்.

(Tamilaham in 17th century: page 73)

மராத்தியரை விரட்டியடித்த கள்ளர்ப்படை:-


கிபி 1682ல் ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் வசம் இருந்த திருச்சி மலைக்கோட்டையை மராத்தியர் தாக்கினர் கைப்பற்றினர். தாக்குதலை சமாளிக்க இயலாத நாயக்கர், புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். அம்புநாட்டு கள்ளர்களுடன் தொண்டைமான் மலைக்கோட்டையை முற்றுகையிட்டுள்ளார். கோட்டையின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் கள்ளர்கள் பெரும் ஏணிகளை கொண்டும், கயிறுகளை பயன்படுத்தியும் கோட்டை மதில்களை தாண்டி உள்ளே சென்று, தொடர்ந்து போரிட்டு மராத்தியர்களை விரட்டியடித்தனர். இந்த உதவியால் மகிழ்ந்த திருச்சி நாயக்கர், அம்புநாட்டு கள்ளர்களை 12 மாவட்டங்களின் தலைமை காவல் அதிகாரிகளாக நியமித்தனர். புதுக்கோட்டை தொண்டைமானுக்கு திருச்சியை பாதுகாக்கும் அரசு காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.
(General history of pudukkottai state 1916 R Aiyar Page 121)

கர்நாடக நவாப்பை கருவறுத்தல் :-


கிபி 1741 ல், கர்நாடக நவாப் சந்தா சாகிப் வசமிருந்த திருச்சி கோட்டையை மீட்க, புதுக்கோட்டை கள்ளர்களும் தொண்டைமானும் மராத்தியரோடு சேர்ந்து நவாப்பை தாக்கினர். கள்ளர்களும், மராத்திய படையும் கூட்டணி அமைத்து தாக்குதல் நடத்தி மலைக்கோட்டையை கைப்பற்றினர். கோட்டையை ஆக்ரமித்து இருந்த சந்தா சாகிப் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை தொண்டைமான் வீரத்தை கண்டு வியந்த மராத்திய தளபதி வட்டா சிங் என்பவன், மன்னருக்கு வஜ்ஜிருடு எனும் பட்டத்தை அளித்தான். இதன் பொருள் " தன்னிகரற்ற போர்வீரர் " என பொருள்படும்.

(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 183 )

ஐதரதாபாத் நிசாம் படையை விரட்டியடித்த கள்ளர்கள்:


கிபி 1743 ல், ஐதராபாத் நிசாம் பெரும்படை கொண்டு தமிழகத்தை தாக்கினான். மதுரையும் நிசாமிடம் வீழ்ந்தது. திருச்சி கோட்டையை கைப்பற்ற தாக்குதல் நடந்து வந்தது,அச்சமயம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்கள் நிசாம் படையின் முகாம்கள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர். நிசாம் படையின் முகாம்களை துவம்சம் செய்து ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும் வண்டி மாடுகளை கவர்ந்து சென்றனர். நிசாம் படை இழந்ததை மீட்க கள்ளர் நாட்டை தாக்கியது. ஆனால் அவர்களை நினைத்ததை போல கள்ளர்களை எளிதில் வெல்லமுடியாததால் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நிசாம் படை ஒடிவிட்டதாக அங்கு மதபோதனைகள் செய்து வந்த பாதர்கள் குறித்துள்ளனர்.

(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 184)(The letter of madura mission to rome 1743)

மராத்திய படைகளை சூரையாடல்

.

கிபி 1745ல் நிசாம் வசமிருந்த திருச்சி கோட்டையை கைப்பற்ற மீண்டும் மராத்திய படை திருச்சியை தாக்கியது. திருச்சியை தாக்கியது மட்டுமில்லாமல், திருச்சி முதல் ஆவூர் வரையிலான பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கிறிஸ்தவர்கள் தப்பி புதுக்கோட்டை கள்ளர்களிடம் சரணடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பலிவாங்க கள்ளர்கள் திருச்சி கோட்டை அருகே முகாமிட்டு இருந்த மராத்தியரை தாக்கினர். கிட்டதட்ட 3000 பேர் கொண்ட மராத்தியரின் குதிரைப்படை கள்ளர்களால் சிதறடிக்கப்பட்டது. முகாமில் இருந்த தளவாடங்கள் கள்ளர்களால் கவரப்பட்டது. தாக்குதலுக்கு மிஞ்சிய மராத்திய குதிரைப்படை வீரர்கள் தங்களது குதிரைகளை விற்றுவிட்டு, மாறுவேடங்களில் நடந்தே தஞ்சைக்கு சென்றதாக மதபோதகர்கள் தங்களது குறிப்புகளில் எழுதியுள்ளனர்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 186)
(The letter of madura mission to rome 1746)

சந்தாசாகிப்போடு மற்றுமொரு போர்:


கிபி 1751ல் சந்தா சாகிப் மீண்டும் திருச்சியை கைப்பற்றினான். கர்நாடக நவாபின் மற்றொரு பிரதிநிதியான முகமது அலியும், பிரிட்டீசாரும் தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 400 பேர் கொண்ட குதிரைப்படையும், 3000 கள்ளர்களை கொண்ட காலாட்படையும் அனுப்பி திருச்சி கோட்டையை தாக்கி கைப்பற்றினார்.
(General history of pudukkottai state 1916 R Aiyar ,Page 189)

சந்தா சாகிப்பின் இறுதி நாள் :-

கிபி 1752ல் திருச்சியை இழந்த சந்தா சாகிப், ஆலம் கான் என்பவனிடம் உதவி கோரினான். ஆலம் கான் என்பவன் சந்தா சாகிப் படையில் பணியாற்றி தளபதிகளில் ஒருவன். 2000 பேர் கொண்ட குதிரைப்படையை திரட்டி மதுரை மற்றும் திருநெல்வேலியை கைப்பற்றுகிறான் ஆலம்கான். சந்தா சாகிப்பிற்கு உதவ திருச்சி நோக்கி விரைந்தான். தொண்டைமான் அரசவைக்கு சென்ற ஆலம் கான் தனக்கு உதவினால் பெரும் நிலப்பரப்பை தருவதாக கூறினான். ஆனால் தொண்டைமானோ, உதவ மறுத்துவிட்டார். திருச்சி கோட்டைக்கு தொண்டைமான் நாட்டில் இருந்து வரும் பொருட்களை தடுத்து நிறுத்த ஆலம் கான் புதுக்கோட்டை - திருச்சி சாலைகளில் தாக்குதல்களை நடத்தினான். இதையறிந்த தொண்டைமான் தனது படையுடன் சென்று ஆலம் கானை திருச்சி இரட்டைமலை பகுதி வரை விரட்டினார். அங்கு யானை மேல் அமர்ந்து இருந்த ஆலம் கான் பீரங்கி குண்டால் கொல்லப்பட்டான். 200 க்கும் மேற்பட்ட ஆலம்கான் படையினர் கொல்லப்பட்டனர். திருச்சி கோட்டை முழுவதும் தொண்டைமான் உதவியுடன் முகமது அலியின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.
(General history of pudukkottai state R aiyar page 191)

ப்ரெஞ்சுக்கு எதிராக போர்:


கிபி 1760 திருச்சி கோட்டையை கைப்பற்ற ப்ரெஞ்சு மற்றும் ஐதர் அலி கூட்டணி முயற்சி செய்தது. ஆங்கிலேயர் மற்றும் ஆர்காடு நவாப் தொண்டைமான் உதவியை நாடினர்.தொண்டைமான் 100 பேர் கொண்ட குதிரைப்படை மற்றும் 1000 பேர் கொண்ட காலாட்படையை அனுப்பி ப்ரெஞ்சு கூட்டணி தாக்குதலில் இருந்து திருச்சி கோட்டையை காத்தார்.
(General history of pudukkottai state R aiyar page 226)

ஐதர் அலியிடம் இருந்து திருச்சியை காத்தல் :

கிபி 1781 ல் ஐதர் அலி பெரும்படையோடு திருச்சி கோட்டையை தாக்கினான். தொண்டைமான் தனது படையை அனுப்பி ஐதர் அலி படையிடம் போரிட்டு திருச்சி கோட்டையை காத்தார். பின்வாங்கிய ஐதர் அலி படைகள் திருக்காட்டுப்பள்ளியை தாக்கி பலரை கொன்று குவித்தான். ஆங்கிலேயர் படைகள், தொண்டைமான் அனுப்பிய கள்ளர் படையுடன் சேர்ந்து ஐதர் அலி படைகளை திருக்காட்டுப்பள்ளியில் இருந்து பின்வாங்க செய்தது.
(General history of pudukkottai state R aiyar page 267)

திப்பு சுல்தானிடம் இருந்து திருச்சியை காத்தல் :


கிபி 1790 ல், ஐதர் அலியின் மகன், திப்பு சுல்தான் மீண்டும் திருச்சி கோட்டையை தாக்கினான். திருச்சியில் மக்களின் வீடுகள் தீ வைக்கப்பட்டு, மாடுகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் தொண்டைமானின் உதவியை நாடினர். தொண்டைமான் 1500 பேர் கொண்ட கள்ளர் படையை அனுப்பி, திப்புவின் படைகளை திருச்சியில் இருந்து பின்வாங்க செய்தார்.
(General history of pudukkottai state R aiyar page 291)


திருச்சியின் Kallar police force



கிபி 1816 ல் திருச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாராம்பரிய காவல் துறை முறை ஒழிக்கப்பட்டு ஆங்கிலேய காவல் முறை புகுத்தப்பட்டது.

 ஆனாலும் திருச்சி நகரத்தில் மட்டும் கள்ளர்களின் காவல் முறை தொடர்ந்தது. கள்ளர்களிடம் இருந்து திருச்சியின் காவல் உரிமையை மீட்க பிரிட்டீசார் செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என 1878 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Trichinopoly gazetter எனும் நூலில் Lewis Moore குறிப்பிட்டுள்ளார்....

 

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் திருச்சிராப்பள்ளி கோட்டைக்கும், கள்ளர்களுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பை நமக்கு உணர்த்தும். திருச்சி மலைக்கோட்டை பல செங்குறுதி வரலாறுகளை தன்னகத்தே கொண்டு, இன்று மௌன சாட்சியாக தனது பழம்பெருமைகளை அசை போட்டுக்கொண்டு உள்ளது.

ஆய்வு : சியாம் சுந்தர் சம்பட்டியார் 

சனி, 21 டிசம்பர், 2019

ஶ்ரீமான், வள்ளல் ரா.இராமலிங்கசுவாமி நாட்டாழ்வார் (ICS)




தஞ்சை, சீராளூர் (பெரம்புநாடு) அம்பலகாரர் ஶ்ரீமான், வள்ளல்!
ரா.இராமலிங்கசுவாமி வார் (ICS) ( London Bar in Law )

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அயல்நாட்டில் பயின்றவர் சீராளூருக்கு சொந்தக்காரர்; கள்ளர்களுக்காக உழைத்தவர்!

(அக்காலத்தில் வல்லம் 1ம் நம்பர் சாலையில் இரு கார்களுக்கு மட்டுமே இரவு 7 மணிக்கு மேல் அனுமதி ஒன்று ஆங்கிலேய ஆட்சியர்; இரண்டு இராமலிங்கசாமி நாட்டார் பயன்படுத்திய ரோல்ஸ் ராயல்)

மன்னர் அரசினர் சரபோஜி கல்லூரிக்கு 60வது ஏக்கர் நிலத்தினை தானமாக அளித்தவர் (இன்றும் இவரது பெயரில் விருதுகள் அக்கல்லூரியில் அளிக்கப்படுகின்றன)

பழனியில் பங்குனி உத்திர கள்ளர் மண்டகப்படிக்கு தலைவர்; அங்கே மண்டபமும் ஏற்படுத்தியுள்ளார்

முன்னாள் இராணுவ நலச்சங்கத்திற்கு ஒரத்தநாடு அருகே சுமார் 40 ஏக்கர் நிலத்தினை தானமாக அளித்தவர்

1969- ல் ₹9  லட்சத்தினை SBI ல் டெபாசிட் செய்தவர், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியை ஆரம்பித்தவர்.

ஏழை, எளியோருக்காக இயங்கும் செங்கிப்பட்டி (TB சானிடோரியத்திற்கு) 60 ஏக்கர் நிலத்தினை அளித்த கொடை வள்ளல் இன்றும் இவர் புகைப்படம் உள்ளது.

ராஜ மன்னார்சாமி நாட்டாழ்வார் 



தஞ்சையில் மருத்துவக்கல்லூரி அமைய காரணமான தளகர்த்தாக்களில் ஒருவர்.



மத்திய கூட்டுறவு வங்கிக்கு துணைத்தலைவர், இன்றும் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியில் இவர் புகைப்படம் உள்ளது.

முன்னாள் கெளரவத்தலைவர் சிறுவர் சீர்திருத்த பள்ளி தஞ்சாவூர்

மேனாள் தலைவர் கள்ளர் பெருமன்றம், தஞ்சாவூர்

அனைத்து வங்கிகளின் கெளரவ சட்ட ஆலோசகர்

இவருடைய சகோதரர் ராஜ மன்னார்சாமி நாட்டாழ்வார் ராசாளியாரின் வீட்டில் மணம் முடித்தவர்; இதேபோல இவருடைய தாத்தாவின் தங்கையை இரெகுநாதா இராமானுஜ ராசாளியாருக்கு மணம்முடித்துக்கொடுத்துள்ளனர். 

நடுக்காவேரி வேங்கடசாமி நாட்டார் குடும்பத்தினருடனும் உறவுமுறை உள்ளது.

இவர் மணம் முடித்தது கூனம்பட்டி ஜமீன் என்றழைக்க கூடிய மேற்கொண்டார் வீட்டில்.



இப்போது உள்ள ஐயா முருகையன் நாட்டாழ்வார் மணம் முடித்தது ஆற்காடு கூழாக்கியார் வீட்டில், இவருடைய தந்தை தண்டாயுதபாணி நாட்டாழ்வாருக்கு உற்ற தோழனாக விளங்கியவர் என் தாத்தா கருப்பையா கொல்லத்திரையர்.

மார்ஸ் அந்தோணிசாமி (அ. மார்க்ஸ்) தனது குறிப்பில் 

ஒரு நாள் விடுதியில் யாரொ வந்திருப்பதாகச் சொல்லி என்னை அழைத்தனர். வெள்ளைச் சாமிச் சோழகர். வெள்ளை உடை, சிவந்த உடல். கையில் தங்க மோதிரங்கள். முகம் நிறையச் சிரிப்பு. ஏதோ பேப்பர்களில் கையெழுத்துப் போடச் சொல்லி வாங்கிச் சென்றார்.

அடுத்த மாதம் எனக்கு ராமலிங்கசாமி ஸ்காலர்ஷிப் உத்தரவாகியது. அரசு உதவித் தொகையைக் காட்டிலும் 50ரூ கூட. ராமலிங்கசாமி என்கிற கள்ளர் சமூக நிலப் பிரபு ஒருவர் கல்வியால் பின் தங்கியிருந்த தனது சமூக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடங்கி வைத்த என்டோமென்ட் ஸ்காலர்ஷிப், நான் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன் இல்லை ஆயினும் அடுத்த மூன்றாண்டுகள் என்னக்குக் கிடைத்தது.

ஆய்வு : பரத் ராமகிருஷ்ணன் கூழாக்கியார் 

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

கள்ளப்பெரம்பூர்





கள்ளபெரம்பூர் வரலாறு.


தஞ்சாவூரில், சிவகங்கை பூங்காவை ஒட்டி பூதலூர் செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கள்ளப்பெரம்பூர் எனும் கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் பசுமை; நீர் சலசலக்கும் குளுமை. தஞ்சை- திருச்சி ரயில் மார்க்கத்தில், பூதலூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கள்ளப்பெரம்பூருக்கு சுமார் 9 கி.மீ. தொலைவு. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய ஒரு கல்வெட்டில், இந்த ஊர் பிரம்பில் என்றும், இராஜ சுந்தரி சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே அரசனின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலை ‘ஸ்ரீகயிலாயம்’ என்றும், ‘குலோத்துங்க சோழீச்சரம்’ என்றும் குறிப்பிடுகிறது.

இந்த கள்ளப்பெரம்பூரில் சைவ அடிகர்களான திருஞானசம்பந்தர், அப்பர் திருக்கோவில்களை எழுப்பி சைவ சமயத்தைக்காத்த கள்ளர் குடியின் நாட்டார்கள்.

கள்ளபெரம்பூர் முன்னாள் கிராம முன்சீப் ஏ. குமார் நாட்டார் ( பாபநாசத்தில், மூப்பனார் அவர்களுக்கு, வகுப்பு ஆசிரியராக விளங்கிய, புலவர் ஏகாம்பரநாட்டார் அவர்களின் இளைய புதல்வர் குமார் நாடார்)










தமிழகத்தில் தொன்மை வாய்ந்த அணை நமது கல்லணை. அதன் மிக அருகிலேயே அதே காலகட்டத்தில் கட்டப்பட்ட மற்றொரு அணையும் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னன் அழிசியின் என்பாரின் மகன் சேந்தன் என்பவன் கட்டிய அந்த அணை கச்சமங்கலம் எனுமிடத்தில் காணப்படுகிறது. கல்லணைக்கு கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் காவிரியின் துணை ஆறான வெண்ணாற்றில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள கச்சமங்கலம் எனும் ஊரில் இருக்கிறது இந்த அணை. 

ஒரு காலத்தில் இந்த இடத்தில் மூன்று மைல் தொலைவுக்கு ஏராளமான பாறைகள் கொண்ட ஒரு தொடர் மலை இருந்திருக்கிறது. திருச்சிக்கு அருகிலுள்ள தூவாகுடி மலையின் தொடர்ச்சி இந்த மலை. அதிலிருந்த மலைக் குன்று ஒன்றை அப்படியே பெயர்த்து எடுத்து சற்று தூரம் தள்ளி வைத்து பாறைகளைக் குடைந்து தடுப்பு சுவர் எழுப்பி விட்டார்கள். பாறைகள் பெயர்த்தெடுத்த இடம் பள்ளமாக ஆகிவிட்டது. அந்த இடத்தின் இரு புறத்திலும் பாறைகள் சுவர்போல உருவாகின. இதனை கற்சிறை என்கின்றனர்.








வெண்ணாற்றின் தண்ணீர் இந்த அணையில் நிரம்பியவுடன் அணையின் தென்கரை மதகு திறக்கப்பட்டு தண்ணீர் ஆனந்த காவேரி கால்வாய் மூலம் ராஜசுந்தரி சதுர்வேதமங்கலம் ஏரிக்குத் திருப்பிவிடப்படும். அந்த ஏரி இப்போது கள்ளப்பெரம்பூர் ஏரி என்று வழங்கப்படுகிறது. காவிரிக்கும் வெண்ணாற்றுக்கும் இடைப்பட்ட அந்த பகுதின் பெயர் ஆற்காட்டுக் கூற்றம். இது மேட்டு நிலம் இந்த ஏரி நிரம்பியவுடன் அணையின் வடக்கில் மதகுகள் மூலம் பிள்ளைக் கால்வாய் வழியாக தண்ணீர் வீரசிகாமணி பேரேரி வரை சென்றது. இது இப்போது அல்லூர் அழிசிகுடி ஏரி என்பதாகும். வீராணம் ஏரியை வெட்டிய பராந்தகச் சோழன்தான் இந்த ஏரியையும் வெட்டி வைத்தான்.

வடகரை மதகு 16ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் காலத்தில் சீர்செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்த கல்வெட்டு ஒன்றை இப்போதும் இந்த மதகில் காணலாம்.
ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்வக்கரை மந்தாரம் வாரணாசிவெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடிவிளமர் விராடபுரம் வேட்க ளத்தும்பெண்ணை யருட்டுறை தண்பெண் ணாகடம்பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்கண்ணை களர்க்காறை கழிப்பாலையும்கயிலாய நாதனையே காணலாமே.
_ திருநாவுக்கரசர்
(தேவாரம்-க்ஷேத்ரக்கோவை)


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

இங்குதான் ‘ஸ்ரீகயிலாசநாதர்’ என்ற திருநாமத்துடன் சிவனார் அருள் பாலிக்கும் பழைமையான ஒரு சிவாலயம் கம்பீரமாக அமைந்துள்ளது. ராஜ கோபுரம், மண்டபங்கள், அழகும் சிற்ப நயமும் நிறைந்த பரிவார விக்கிரகங்கள், திருக்குளம் என்று ஆலயம் சற்று விரிவாகவே உள்ளது.



ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

முன் காலத்தில் தஞ்சைப் பகுதியை ஒட்டி தென் பெரம்பூர், வெள்ளாம்பெரம்பூர், கள்ளப் பெரம்பூர் ஆகிய பகுதிகள் இருந்தன. இவை மொத்தமும் சேர்ந்து ‘பிரம்பு நாடு’ என்றே அழைக்கப்பட்டன. ‘தேவாரத்தில் அப்பரால் குறிக்கப்படும் ‘பிரம்பில்’ எனும் வைப்புத் தலம் தஞ்சைக்கு அருகில் உள்ள இந்தக் கள்ளப்பெரம்பூரே!’ என்று ஈரோடு தங்கவேலனார் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அதே நேரம், ‘அப்பர் குறிப்பிடும் பிரம்பில் திருத்தலம், மயிலாடுதுறைக்கு அருகில்- மங்கை நல்லூரை அடுத்துள்ள பெரம்பூராகும்’ என்று செங்கல்வராயப் பிள்ளை குறிப்பிடுகிறார். என்றாலும், கள்ளப்பெரம்பூரையே வைப்புத் தலமாக கொள்கிறார் கள் தஞ்சைவாசிகள். வழிபாட்டுக்கு வலு சேர்ப்பதில் தவறில்லைதான். இதுவே வைப்புத் தலம் என்பதற்குச் சில கல்வெட்டு ஆதாரங்களும் உண்டு என்கிறார்கள் தஞ்சைவாசிகள்.

‘சோழர்கள் காலத்திய ஆறு கல்வெட்டுகள் இந்த ஆலயத்துக்கென்று உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய ஒரு கல்வெட்டில், இந்த ஊர் பிரம்பில் என்றும், இராஜ சுந்தரி சதுர்வேதி மங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே அரசனின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலை ‘ஸ்ரீகயிலாயம்’ என்றும், ‘குலோத்துங்க சோழீச்சரம்’ என்றும் குறிப்பிடுகிறது. எனவே, தற்போது ஆலயத்தில் காணப்பெறும் கட்டுமான அமைப்பு, முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் செய்யப்பட்ட திருப்பணியே! அதாவது சுமார் 900 வருடங்களுக்கு முன்பு.

தவிர, மூன்றாம் ராஜேந்திரன், மூன்றாம் குலோத்துங் கன் ஆகிய சோழ அரசர்களின் கல்வெட்டுகளோடு, தஞ்சை நாயக்க அரசன் விஜயராகவன், இந்தக் கோயிலுக்கு அளித்த கொடை பற்றிய செய்தி கூறும் கல்வெட்டு ஒன்றும் உண்டு என்கிறது ஒரு குறிப்பு.


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

கந்த சஷ்டி பத்து நாள் உற்சவம் கோலாகலமாக நடக்கும். இதுல சூர சம்ஹாரம், கோயில் உபயம். அதுக்கான புறப்பாடு வாகனங்கள் எல்லாம் அப்ப இருந்தது. மடங்களும் அன்ன சத்திரங்களும் கோயிலுக்கு அருகே இருந்தன.


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

‘‘சூரிய பூஜை இங்கே சிறப்பு. ஒவ்வொரு வருஷமும் பங்குனி மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் செந்நிறக் கதிர்கள் கயிலாசநாதரை தரிசிக்கும் காட்சியைக் காணலாம். சூரிய பூஜையின்போது கயிலாசநாதரை தரிசிப்பது சிறப்பு. ஆலயத்துக்கு வெளியே சூரிய புஷ்கரணி. இதுதான் தலத்தின் தீர்த்தம். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் தரும் தலம் இது. அவர்கள் இங்கு வந்து ஸ்ரீகயிலாசநாதரை வழிபட்டு, அபிஷேகம் செய்து விளக்கேற்றி வழிபட்டால், நலம் பெறுவார்கள். 

ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

நுழைவுப் பகுதியில் இரண்டு பெரிய தூண்கள். இதுதான் கோயிலின் துவக்கம். இங்கு ஒரு ராஜ கோபுரம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். வெளியே திருக்குளம். சூரிய புஷ்கரணி. நீர் நிரம்பி அழகாகக் காட்சி தருகிறது. கொடிமரம் இல்லை. பலிபீடம். நந்தி மண்டபம். பிரதோஷ நந்திதேவர் இங்கே காட்சி தருகிறார். பழைய நந்திதேவரின் தலையை யாரோ விஷமிகள் சிலர் பின்னப்படுத்தி விட்டதால், புதிய நந்திதேவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய நந்தி தேவரும் அருகிலேயே இருக்கிறார். பிரதோஷ வழிபாடு நடந்து வருகிறது.

ஆலயத்தினுள் நுழையுமுன் _ அதாவது பிரதோஷ நந்திதேவருக்கு வலப் பக்கமாக அம்மன் சந்நிதி. முழுக்க முழுக்க செங்கல் கட்டுமானம்.

ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

அம்பாள் திருநாமம்: ப்ரமத்ஸ ஸ்ரீமதி நாயகி. தமிழில், பெரியநாயகி என்கிறார் கள். மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற விஸ்தாரமான அமைப்புடன் திகழ்கிறது அம்மன் சந்நிதி. தரைத் தளத்தை விட சற்று உயரத்தில்- அதாவது ஏழு படிகள் ஏறிச் சென்றே அன்னையை தரிசிக்க முடியும். அம்மனை வலம் வரும் வசதி உண்டு. ஆனால், செடிகள் மண்டிக் கிடக்கின் றன. செல்வது சிரமம். சந்நிதிக்கு விமா னம் உண்டு. முதலிலேயே, சக்தியைத் தரிசனம் செய்ததாலோ என்னவோ.... ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் ‘சக்தி கணபதி’ தரிசனம் தருகிறார். ஆலயம், கருங்கல் மற்றும் செங்கல் கட்டுமானம் கொண்டு விளங்குகிறது. அடுத்து வருவது ராஜகோபுரம்.

பிராகார வலம் வருவோம். துவக்கத்தில், மடப் பள்ளி. ஏகத்துக்கும் சிதிலமாகி காணப்படுகிறது. ‘‘தினமும் இரண்டு மரக்கால் அரிசி வடித்து பிரசாத விநியோ கம் நடந்த மடப்பள்ளி இது. பொங்கல், புளி சாதம், தயிர் சாதம் என்று வேளா வேளைக்கு விதம் விதமாக பிரசாதம் போடுவார்கள். இதெல்லாம் நானே பார்த்திருக்கிறேன். ஆனால், சமீபத்திய நிலைமையைச் சொல்லவே மனம் வேதனைப்படுகிறது. இந்த மடப் பள்ளி அடுப்பின் புகையைப் பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன’’ என்கிறார் தியாகராஜ ஐயர் என்பவர். இவர், இதே ஊர்க்காரர்.


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

கயிலாசநாதரின் கோஷ்டத்தில் திருஞான சம்பந்தரை தரிசிப்பது வித்தியாசமான ஒன்று. இதுபோல் அமைந்த திருத்தலங்கள் அபூர்வம். ‘அப்பரால் வைப்புத் தலமாகப் பாடப்பட்டிருப்பதால், திருஞானசம்பந்தர் இங்கு வந்து சென்றிருக்கலாம்’ என்பது ஆன்மிக பிரமுகர்கள் சிலரது கருத்து. தவிர கோஷ்டத்தில் நடராஜர், குக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகிய விக்கிரகங்கள் காட்சி தருகின்றன. கோஷ்டத்தில் இருக்க வேண்டிய பிரம்மா, துர்கை ஆகிய விக்கிரகங்கள் இல்லை. களவாடப்பட்டு விட்டனவாம். ஈஸ்வரனின் கோஷ்டத்தில் நடராஜர் இருப்பதும் வெகு அபூர்வம். தரிசிக்க வேண்டிய வடிவம் இது. பிராகாரத்தில் பரிவாரங்களாக நிருதி கணபதி, வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டி கேஸ்வரர் ஆகிய விக்கிரகங்களும் இருக்கின்றன. நான்கு திருக்கரங்களுடன் அழகாக, சிற்ப நயத்துடன் காணப்படுகிறது ஸ்ரீசுப்ரமண்யரது விக்கிரகம்.

பிராகாரத்தில் நெல் நிரப்பி வைப்பதற் காக இரண்டு பெரிய பத்தாயங்கள் (குதிர்கள்) இருக்கின்றன. ஆலயம் வசதியாக இருந்த காலத்தில் இவற்றில் நெல்லைக் கொட்டி வைத்து, மீதியை அம்பாள் சந்நிதிக்கு முன் சேகரித்து வைப்பார்களாம். பொருள் வைப்பு அறை, சேதமாகிப் போன ரிஷபம் மற்றும் மூஞ்சூறு ஆகிய வாகனங்களை இங்கே காணலாம். கோயிலின் தல விருட்சமான வன்னி மரம் சுமார் இருநூறு வருடங்கள் பழைமையானதாம்.


ஆலயம் தேடுவோம்! - கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர்

பைரவர், பசுபதீஸ்வரர், நாகர் போன்ற விக்கிரகங்களும் அருள் பாலிக்கின்றன. பிராகார வலம் முடிந்து ஸ்ரீகயிலாச நாதரை தரிசிக்கச் செல்கிறோம். சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தலத்தைக் கயிலாயம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் சோழ மன்னர்கள். பழைய ஓலைச் சுவடிகளில் இந்த ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றனவாம். அவ்வப்போது, ‘இந்தக் கயிலாசநாதருக்கு அபிஷேகம் செய்து வணங்க வேண்டும் என்று எங்கள் ஜோசியர் சொல்லி இருக்கிறார்’ என்று வெளியூர்களில் இருந்து அன்பர்கள் சிலர், கஷ்டப்பட்டு இந்த ஆலயத்தைத் தேடி வருவதும் உண்டாம்.


குறிப்பாக, சித்தப் பிரமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இந்த ஆலயம் பரிகாரமாகச் சொல்லப் பட்டுள்ளதாம். கள்ளப்பெரம்பூர் ஸ்ரீகயிலாசநாதர் ஒரு காலத்தில் கன ஜோராகத் தான் ஆட்சி செலுத்தி வந்திருக்கிறார்.

கிழக்கே பார்த்த லிங்கத் திருமேனி. முன்னால் ஒரு மண்டபத்தில் விநாயகர், இரண்டு லிங்க வடிவங்கள், தம்பதி சமேதராக சூரிய பகவான் அவரைச் சுற்றிலும் மற்ற நவக்கிரக மூர்த்திகள் ஆகியோரது சிலா திருமேனிகள் அருள் பாலிக்கின்றன. பள்ளியறை இருக்கிறது. மகா மண்டபத்தில் பலிபீடம்; நந்திதேவர். சமீப காலத்தில், அடியார்களின் திருக்கூட்டத்தைப் பெருமளவில் பார்த்திராத கயிலாசநாதர், கண் கொள்ளா தரிசனம் தருகிறார். 








கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்