வெள்ளி, 11 டிசம்பர், 2020

மாவீரர் இராமலிங்க ஓந்திரியர்




SS_Group_Hitler_intelligence_service


நேதாஜி அவர்கள் கிபி1942ல் பிரிட்டிஸின் ஒட்டுமொத்த சர்வாதிகாரத்தை எதிர்த்து வந்த, ஜெர்மனியின் நாசிக் தலைவரான அடால்ப் ஹிட்லரை சந்தித்தார்.

அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே நம்பர்:1 உளவுத்துறையாக கருதப்பட்டது, ஹிட்லரின் S.S Group intelligent service என்கிற அமைப்பாகும். நேதாஜி அவர்கள் ஹிட்லரிடம் இருந்து S.S Group செயல் திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து கொண்டு.

தன்னுடைய இந்திய தேசிய இராணுவத்தில் அதேபோல ஒரு Special bureau serviceஐ உருவாக்கினார். அதற்கு ஹிட்லரின் உளவுப்பிரிவு பெயரான S.S Group என்றே பெயருமிட்டார்.

இந்த S.S Group உளவுப்பிரிவில் தமிழ் நாட்டை சேர்ந்த அமரர் இராமலிங்க #ஓந்திரியர் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இராமலிங்க ஓந்திரியர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் திருமங்கலகோட்டை  கிராமத்தை சேர்ந்தவர். ஓந்திரியர் முதலில் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஸ் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்பு நேதாஜியின் INAவில் நேதாஜி முன்னிலையில் மலேசியாவில் இணைந்தார்.

மிகவும் அறிவுக்கூர்மையுள்ள ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் தன்னுடைய உளவுப்பிரிவான S.S Groupல் இனைத்துள்ளார். இந்த உளவுப்பிரிவானது பிரிட்டிஸ் இராணுவத்தின் படையின் போக்கு,ஆயுத கிடங்குகளின் பகுதிகள், போர் கப்பல்களின் நடவடிக்கை உள்ளிட்டவைகளை கண்காணித்து, அவைகளை அழிக்கும் செயல்களை #Mission மூலமாக திட்டம் தீட்டி செயல்படும்.

மலேசியாவில் இருந்து ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் ஒரு முக்கியமான உளவு சேவைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பிரிட்டிஸ் உளவுப்பிரிவால் ஓந்தியரை அடையாளம் கண்டு அவரை மடக்கிபிடித்தது.

இறுதியாக ஓந்திரியருக்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தால், மரண தண்டனை அளிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

வீரமும்,விவேகமிக்க ஓந்திரியரின் உயிரானது தாய்நாட்டின் சுதந்திரத்தை கண்களால் பார்க்காமலே, விண்ணுலகத்திற்கு பிரிந்து சென்றது.




தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் வங்கார்.


த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன் வங்கார். இவர் தஞ்சாவூரில் மார்ச் 23, 1970ல் பிறந்தார்.

சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். முதுகலை தமிழ் மற்றும் முதுகலை வரலாறு, நூலக அறிவியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவடியியல் சார்ந்த துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், கீழ்க்கண்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். காகித ஆவணங்களில் காணப்படும் செய்திகளை இன்றைய தமிழ் வடிவிற்கு மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார். சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி, குறவஞ்சி, சதகம் என்ற வகையில் முறையே அழகரந்தாதி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அறப்பளீசுர சதகம் என்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

தமிழ் எண்ணும் எழுத்தும் -நூலட்டை

தமிழறி மடந்தை கதை-நூலட்டை

• தமிழாய்வுக்கட்டுரைகள், 2012

• அழகர் அந்தாதி (பதிப்பாசிரியர்), 2012

• சரபேந்திர பூபாலக்குறவஞ்சி (பதிப்பாசிரியர்), 2013[1]

• அறப்பளீசுர சதகம் (பதிப்பாசிரியர்), 2014

• அதிவீரராம பாண்டியர் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி(பதிப்பாசிரியர்), 2016

• தமிழ் மருத்துவ முறைகள் (தலைமைப்பதிப்பாசிரியர்), 2017

• திருவேங்கட மாலை (பதிப்பாசிரியர்கள் : மணி.மாறன் மற்றும் கோ.ஜெயலெட்சுமி), 2017 

தமிழ் எண்ணும் எழுத்தும் மணி. மாறன் எழுதிய நூலாகும். ஓலை, சுவடி, ஆவணம், காகிதம் என்ற நிலைகளில் பல்வேறு காலகட்டத்தில் எழுத்தின் வரலாறும், எண்களின் பயன்பாடும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூலில் எழுத்தின் தோற்றம் தொடங்கி 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழறி மடந்தை கதை மணி. மாறன் எழுதிய நூலாகும். ஓர் அரசகுமாரியும், ஓர் அரசகுமாரனும் விரும்பி மணக்க முற்படும்போது விருப்பம் நிறைவேறாமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். பின்னர் மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வருவது இந்நூலில் தரப்பட்டுள்ளது. காப்புடன் தொடங்கும் இந்நூலில் கதையானது, வெண்பா மற்றும் பொருள் என்ற வடிவில் இடம் பெற்றுள்ளது.

• மூன்றே எழுத்தில் தமிழ் (வைஷ்மதி பதிப்பகம், தஞ்சாவூர்), 2004

• முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2015

• பண்டிதை அசலாம்பிகை அம்மையார், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2016

• தஞ்சையில் சமணம், (முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து) (ஏடகம், தஞ்சாவூர், 2018)

சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக நடைபெறும் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கண்டுபிடிப்புகள்

• சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு

• ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கு இப்போதும் சதய விழா தஞ்சை அருகே சிற்றூரில் அதிசயம் தினமலர், 29.4.2014

• சிதிலமடைந்த சோழர் கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? தினத்தந்தி, 11.3.2014

• ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் சிலைகள், தினமணி, 1.2.2014

• தஞ்சாவூர் அருகே சோழர் கால சிலைகள், தினமணி, 10.1.2014

• சோழர் கால சிற்பம் கண்டெடுப்பு தினமலர், 18.4.2013

• 9th century sculptures found near Thanjavur, The New Indian Express, 16.4.2013

• தஞ்சையில் சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுப்பு, தினமலர், 31.1.2013

• ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு தினமலர், 24.1.2013

• சிதைந்த கோவிலில் சோழர் கால நந்தி சிலை : சங்க கால புலவர் ஊரில் கண்டுபிடிப்பு, தினமலர், 3.9.2012

பெற்ற விருதுகள்

• இராசராசன் விருது, 2018 (ராஜராஜன் கல்வி அறிக்கட்டளை, தென்னமநாடு, தஞ்சாவூர் மாவட்டம்)

• 'தமிழ் எண்ணும் எழுத்தும்' நூல், (முதற்பதிப்பு, 2012; வெளியீடு: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)

• 'தமிழறி மடந்தை கதை', நூல், (முதற்பதிப்பு, 2013; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)


பசுபதி ஆர்சுத்தியார்



பசுபதி ஆர்சுத்தியார்

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதி
மே 18, 1969 அன்று தன் பிறந்தார்.

இவர் கூத்துப்பட்டறை முத்துசாமியின் மாணவர்

கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படத்தின் வில்லன் கொத்தாள தேவனாக நடித்ததன் மூலம் பசுபதி தீவிரமாக கவனிக்கப்படத் தொடங்கினார். அந்தப் படத்தில் ஒரு அசல் மதுரை மாவட்ட நபராகவே வாழ்ந்திருப்பார். அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த ‘வெய்யில்’ கடந்த ஆண்டு வெளியான ‘அசுரன்’ போன்ற படங்களில் தெக்கத்தி மனிதர்களைக் கண்முன் நிறுத்தியிருப்பார். இவர் சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். ஆனால் இவரது பூர்விகம் தஞ்சாவூர்  மதுக்கூர் அருகே - திருமங்கலக்கோட்டை -வடசேரி அருகில் உள்ள " அருமளை" என்கிற ஊரே அவரது சொந்த ஊர்.  இவரது தந்தை ராமசாமி ஆர்சுத்தியார்.


 1980-களில் சென்னையில் தீவிரமாக இயங்கி வந்த நாடக் குழுவான கூத்துப்பட்டறையில் இணைந்தார்.

எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் சிறப்பு. கிராமத்து எளியவர், சிறு நகரத்து மனிதர், பெருநகர பிரபலம், ரவுடி, தாதா, ஆசிரியர், மருத்துவர் என எப்படிப்பட்ட கதாபாத்திரத்தின் பின்னணி, சூழல், மண் சார்ந்த பழக்கவழக்கங்கள், உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக பிரதிபலிப்பவர் பசுபதி. அந்த வகையில் கூத்துப்பட்டறை நிறுவனரான எழுத்தாளரும் மாபெரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமியின் பெருமைக்குரிய சீடர்.



கூத்துப்பட்டறையில் அங்கம் வகித்த நடிகர் நாசர் மூலமாக பசுபதிக்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. கமலின் பிரம்மாண்டக் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் பசுபதி. ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. நாசர் இயக்கி நடித்த ‘மாயன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் பசுபதி. ‘ஹவுஸ்புல்’, ‘தூள்’, ’இயற்கை’, ‘அருள்’ என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 2004-ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த ‘விருமாண்டி’ படம்தான் பசுபதியின் திரை வாழ்வில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

நட்சத்திரமல்ல நடிகன்

அதன் பிறகு தொடர்ந்து 'சுள்ளான்', 'மதுர', 'திருப்பாச்சி' ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தவர் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார். ‘மஜா’ படத்தில் நாயகன் விக்ரமுக்கு இணையான வேடத்தில் வடிவேலுக்குப் போட்டியாக நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பினார். விருதுநகர் மக்களின் அனல் நிறைந்த வாழ்க்கையின் அசல் பதிவாக அமைந்த இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். எஸ்.பி.ஜனநாதனின் ‘ஈ’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

AMP

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெயில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாகப் பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி.

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெய்யில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாக பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி. ரஜினி படத்தில் நாயகன் 2008-ல் வெளியான ‘குசேலன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். ’கத பறயும்போள்’ என்ற ,மலையாளப் படத்தின் மறு ஆக்கமான இந்தப் படத்தில் பசுபதிதான் மையக் கதாபாத்திரம். சற்று விரிவான கெளரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தலைப்புக்கேற்ப ஏழையாக இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழும் சிகைதிருத்தக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்திருந்தார் பசுபதி. 2011-ல் வெளியான ’அரவான்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் வசந்த பாலனுடன் இணைந்தார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் 18ஆம் நூற்றாண்டு மதுரை வட்டாரத்தில் வாழ்ந்த பழங்குடித் தலைவனாக நடித்திருந்தார். இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, மையக் கதாபாத்திரம் என மாறி மாறி நடித்து ரசிகர்கள், விமர்சகர்கள் மனங்களில் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் சினிமா என்பது நாடகத்திலிருந்து முகிழ்ந்த கலை வடிவம் என்றாலும் மேடையிலிருந்து திரைக்கு வரும் பலர் மேடையை மறந்துவிடுவார்கள். ஆனால் பசுபதி மேடை நாடகங்களிலும் நடித்துவருகிறார். நாடக மேடை மீதான நன்றியுணர்வை மறக்காமல் இருக்கிறார். பசுபதியை நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்பது நடிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அவரோ தன் மனதுக்கு பிடித்த நல்ல வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதை 2016இல் வழங்கிய ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.

சிறந்த நடிகரான பசுபதிக்கு அவர் விரும்பும் கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் திரைப்படத் துறையில் அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்வோம்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கள்ளரின் உருவமைப்பு

 பிறருக்காக மற்றொருவர் நடுகல் எடுப்பது மரபு.. கள்ளன் தாழனுக்காக மன்றாடி என்பவன் எடுத்த நடுகல் இது...






திருவண்ணாமலையில் சாத்தனூர் வேதியப்பன் கோயிலில் பல்வேறு நடுகற்கள் பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. இங்குள்ள நடுகற்களில் ஒன்று பத்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். 


இக்கல்வெட்டு வாசகங்கள் பின்வருமாறு:



"கோப்பரகேசரி பர்மருக்கு யாண்டு நான்காபது  வேட்டுவதி அரையர் வாணகோவரையர் ஆள் ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் மேல் கோவலூர் நாட்டு அளவிப்பாடி தொறு மீட்டுப் பட்டான் மன்றாடி கல்" என குறிப்பிடுகிறது.


கிபி 911 ஆம் ஆண்டு முதலாம் பராந்தகன் ஆட்சி காலத்தில் மேற் கோவலூர் நாட்டில் அளவிப்பாடி எனும் பகுதியில் நடந்த ஆகொள் பூசல் எனும் ஆநிரை கவரும் போரில் ஆனைமங்கலம் எனும் பகுதியை சேர்ந்த கள்ளன் தாழன் என்பவர் ஆநிரைகளை காத்து தன்னுயிரை நீத்து வீர மரணம் அடைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. 


இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆனைமங்கலம் எனும் ஊர் இன்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூரின் அரையராக கள்ளன் தாழன் இருந்துள்ளதை அறிய முடிகிறது.


முதலாம் பராந்தக சோழன் காலத்தில் நடைபெற்ற ஆகோள் பூசலில் போரிட்டு உயிர் நீத்த கள்ளன் தாழனின் உருவமும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.


பத்தாம் நூற்றாண்டில் கள்ளரின் உருவமைப்பு


ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நடுகல் கல்வெட்டு அக்காலத்தில் இருந்த ஒரு கள்ளரின வீரனின் உருவ அமைப்பை நமக்கு எடுத்துரைக்கிறது. 


வலது கையில் பிச்சு வாளும்,  இடையில் குறு வாளும்,  இடது கையில் வில்லும் என ஒரே நேரத்தில் மூன்று ஆயுதங்களை கொண்டிருந்ததை இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது.


வலப்பக்க கொண்டை,  நீண்ட காது மடல்கள், சிறுத்த இடை என போர் வீரனுக்குரிய அனைத்து லட்சணங்களையும் இவ்வீரன் கொண்டு இருந்ததை அறிகிறோம்


இவ்வீரனின் தியாகத்தை போற்றி இன்றும் வழிபாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


ஆதாரம்: கல்வெட்டு எண் ARE 230/ 1971-1972


சிற்பத்தின் விளக்கம் அறிய உதவிய திரு. திருச்சி பார்த்தி அவர்களுக்கும் நன்றி.


தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார

மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்

 



தஞ்சாவூர் மாவட்டத்தில் சுலியக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஐயா மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்


*அகில மலேயாத் தமிழர்கள் முதலாம் மாநாட்டை நடத்தியவர்,

*ஈப்போ மாரியமன் கையில் கட்டியவர்,

*மலேசியாவில் ஈப்போவில் உள்ள ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார்.









தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் உறந்தைராயர்

 .


“தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் உறந்தைராயர்.



உறந்தைராயன் குடிக்காட்டில் பிறந்த கோ.இளவழகனுக்குப் பெற்றோர் கோவிந்தசாமி  உறந்தைராயர் - அமிர்தம் வைத்த பெயர் அப்பாவு என்பதுதான். அதை இளவழகன் என்று மாற்றி, இயக்கச் செயல்பாட்டாளராகவும் புத்தக ஈடுபாட்டாளராகவும் வளர்த்து வழிகாட்டியவர் புலவர் நக்கீரன்.

தமிழ் ஈடுபாடு வந்ததால், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட முன்னணி வீரராக மாணவப் பருவத்திலேயே எழுந்துவிட்டார் இளவழகன். பட்டுக்கோட்டை, திருச்சி சிறைகளில் நாற்பத்தெட்டு நாள் சிறைவாசியானார். அப்போது ஏற்பட்ட கா.காளிமுத்து தொடர்பு, இறுதிக் காலம் வரை இருவரையும் பிணைத்து வைத்திருந்தது. பெரியார், அண்ணா, பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் நூல்களோடு உறவாடுவதில் மகிழ்ந்த இளவழகன் மனம், மின்வாரியப் பணி சென்னை எண்ணூரில் கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தது. விரும்பிய புத்தகங்களை வேண்டிய அளவு வாங்க உடனடிப் பணி வாய்ப்பே தேவை என அவர் தீர்மானித்தார். மாணவர்போல இதழ்களையும் நூல்களையும் அடுக்கி எடுத்து அலுவலகம் செல்வது இளவழகன் வழக்கம். புதுவை எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அப்போது சென்னையில் வசித்துவந்தார். பழுத்த காந்தியரான அவர், சர்வோதய இயக்கப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்டுவந்தார். அவரோடு தங்கியிருந்தார் இளவழகன். அதனால் காந்திய, சர்வோதய இயக்க ஈடுபாடு மிகுந்தவரானார்.







நன்றி எதிர்பார்க்காமல் சமூகத்துக்குப் பயன்படும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற உறுதியை இளவழகனுக்கு வழங்கியவர் பெரியார். எளிமையாய் வாழக் கற்றுத்தந்தவர் புதுவை எஸ்.ஆர்.சுப்பிரமணியம். தமிழுக்கு வளமும் பாதுகாப்பும் வழங்குவதற்கு வாழ்வதே பயனுள்ள வாழ்வு என நெறிப்படுத்தியவர் புலவர் நக்கீரனார். இம்மூவரும் தந்த வழியே என் வழி என அடக்கமாகச் சொல்லி மகிழ்வது இளவழகனார் வழக்கம்.

தமிழ் மொழி – இனம் ஆகியவற்றை சீரழித்த ஆரியத்தையும், சமற்கிருதத்தையும் எதிர்க்கும் உணர்வினை இளமையிலேயே பெற்றவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி” அன்பராகி, பாவாணரின் பற்றாளராகி, ஒரத்தநாட்டில் “உலகத் தமிழ்க் கழகத்தை” நிறுவியவர்களில் முகாமையானவர் கோ. இளவழகன். தேவநேயப் பாவாணர் மன்றம் தொடங்கிச் செயல்பட்டார். இறுதிவரை தனித் தமிழில் பேசுவதை, எழுதுவதை தமது பண்பாகக் கொண்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேருதவியாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து, அதனால் பல இன்னல்களையும் ஏற்றவர். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்மொழி உரிமைகள், தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்கான செயல்பாடுகளிலும் பங்கேற்றவர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு பெரும் ஊக்கமளித்தவர்.

ஈழ விடுதலை இயக்கங்களோடு இரண்டறக் கலந்த பணிகளின் தொடர்ச்சியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இவர், தொடர்ந்து போராடி மீண்டும் பணியைப் பெற்றார். பணி கிடைத்ததும் ‘இப்போது நானே விலகுகிறேன்’ என்று விருப்ப ஓய்வுபெற்றார். பிறகு, தமக்கு விருப்பமான அச்சுத் தொழிலிலும் பதிப்புத் துறையிலும் கால்பதித்தார். ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணா மிருத சாகரம்’ நூலில் இவரின் பதிப்புப் பணி தொடங்கியது. தமிழறிஞர் படங்களைத் தேடித்தேடி அங்கே இடம்பெறச் செய்தார். படங்களைத் திரட்டுவதிலும் அறிஞர்களின் நூல்களைத் திரட்டுவதிலும் எந்த அவமதிப்பு நேர்ந்தாலும் பொருட்படுத்த மாட்டார். எவ்வளவு காலங்கடத்தினாலும் சோர்வடைய மாட்டார். முப்பதாண்டு பதிப்புப் பணியில் பாவாணர், மயிலை சீனி வேங்கடசாமி, சாமி.சிதம்பரனார், மா.இராஜ மாணிக்கனார், வெள்ளை வாரணனார், வா.சுப.மாணிக்கனார், திரு.வி.க., சாத்தான்குளம் அ.இராகவன், தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், ந.மு.வே.நாட்டார். வெ.சாமிநாத சர்மா,ச.மாமந்தரபாரதியார், ந.சி.கந்தையா, புலவர் குழந்தை, முடியரசன், கா.அப்பாத்துரையார், இரா.இளவரசு, புலவர் இரா.இளங்குமரனார் முதலிய அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் முழுமையான தொகுப்பாகத் திரட்டி வெளியிட்டுள்ள பெருஞ்சாதனை இளவழகனுடையது.

பாரதிதாசன் நூல்கள் அனைத்தையும் ‘பாவேந்தம்’ என 25 தொகுதிகளாக அழகுற வெளியிட்டுள்ளார். ‘செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்’ எனச் சொற்களின் பொருள் பிறந்ததற்கான காரணத்தை விளக்கும் இளங்குமரனாரின் அரிய பத்துத் தொகுதிகள் என்றும் பயன் தருபவை. ஆசிரியர் தி.வே.கோபாலய்யர் ‘அச்சேறுமா’ என்ற கவலையோடு தம் இலக்கணப் புலமையைப் பிழிந்து தந்திருந்த நூல்கள், ‘இலக்கணக் களஞ்சியம்’ எனத் ‘தமிழ்மண்’ பதிப்பகத்தால் இளவழகன் வழியாய் வெளியாயின. அண்ணாவை எழுத்தில் பார்த்து வியந்துகொண்டிருந்த இளவழகனுக்கு, அண்ணாவை நேரில் பார்த்தபோது பற்று கூடியது. ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ (வே.ஆனைமுத்து) தொகுப்பை 1974-ல் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, “அண்ணா அவர்களுக்கும் இப்படித் தொகுப்பு வர வேண்டும்” எனப் பேசியதைக் கேட்ட பின்பு வைராக்கியம் உருவெடுத்தது. அந்த வைராக்கியமே அறிஞர் அண்ணாவின் எழுத்து, பேச்சு அனைத்தையுமே ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ என 110 தொகுதிகளாக உருவாக்கும் உறுதியைத் தந்தது. முதற்கட்டமாக 64 தொகுதிகள் 21.12.2019-ல் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டன. எஞ்சிய 46 தொகுதிகள் வெளிவரும் சூழலை உருவாக்கி வைத்துவிட்டுத்தான் கோ.இளவழகனார் உலக வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஆபிரகாம் பண்டிதரில் தொடங்கி ‘தமிழ்மண்’ பதிப்பகம் கண்ட அவர், அறிஞர் அண்ணாவைத் தந்த நிறைவோடு விடைபெற்றுள்ளார். அறிஞர்களின் நூல்கள் ஒவ்வொன்றும் இளவழகனார் நினைவை என்றும் பேசியபடியே இருக்கும்.





“சங்க இலக்கியக் களஞ்சியம்” (22 தொகுப்புகள்), பாவவேந்தர் படைப்புத் தொகுப்புகள் (25 தொகுப்புகள்), நா.மு.வே. நாட்டார் தமிழ் உரைகள் (32 நூல்கள்), பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (53 நூல்கள்), நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் (10 நூல்கள்), தொல்காப்பிய பழைய உரைகள் (19 நூல்கள் – பதிப்பாசிரியர் : “இலக்கணக்கடல்” கோபாலய்யர்), அண்ணாவின் படைப்புத் தொகுப்புகள்… இவை போல் இன்னும் பல அரிய நூல்களுக்கு மறு உருவாக்கம் தந்தார்.



தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடன் நட்பு பாராட்டி, சென்னை புத்தகக்காட்சியில் “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” விற்பனை அரங்கம் முதன்முதலாகக் கிடைக்கத் துணை நின்றார். “தமிழ்த்தேசியம் – அரசியல், அறம், அமைப்பு” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை வெளியிட்டு சிறப்பித்தார்.

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் (பபாசி – BAPASI) பொறுப்பு வகித்து, அதன் வளர்ச்சிக்கும், ஆண்டுதோறும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறவும் பெருந்துணையாய் நின்றார். அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தாராளமாக வாங்கி, பதிப்பகங்களை ஊக்குவிக்க அமைச்சர்களுடன் பேசி பணியாற்றினார்.


வறண்ட பகுதியைப் பசுமையாக்கிய டி.எஸ்.பி அய்யர்சாமி

 

அய்யர்சாமி
அய்யர்சாமி

சுற்றுச்சூழல்


கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. அமராவதி, நொய்யல் நதிகள் பாய்கின்றன. ஆனால், மாவட்டத்தில் உள்ள 70 சதவிகிதப் பகுதிகள், வறட்சி மிகுந்த, வானம் பார்த்த பூமியாகவே உள்ளன.

சுண்ணாம்பு கலந்த மண்தான் இங்கு அதிகம் என்பதால், மழையையும் ஈர்க்காமல், எப்போதும் வெப்பமே நிலவுகிறது. ‘கரூர் மாவட்டத்தில் வெறும் 2.27 சதவிகிதம்தான் காடுகளின் அளவு உள்ளது. குறைந்தது 32 சதவிகிதம் அளவுக்குக் காடுகள் இருக்கும் இடத்தில்தான் மழை சீராகப் பெய்யும்’ என்று கரூர் மாவட்ட சூழலியல் ஆர்வலர்கள் புள்ளிவிவரத்தோடு, ‘வறட்சி நிலவரம்’ பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கற்றாழை
கற்றாழை

இந்த நிலையில், கரூர் ஆயுதப்படை டி.எஸ்.பியாக உள்ள அய்யர்சாமி, ஆயுதப்படை, எஸ்.பி அலுவலக வளாகங்களில் உள்ள காலியிடங்களில் மியாவாக்கி முறையில் இதுவரை 2,252 மரக்கன்றுகளையும், 1,400 பனைவிதைகளையும் விதைத்து, பசுமையைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதோடு, ஆயுதப்படை வளாகம், மைதானத்தில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல், மழைநீர்ச் சேகரிப்பு அமைப்புமூலம், பூமிக்குள் சேர்ப்பதால், கடந்த ஒரு வருடத்தில், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.


மரங்களுக்கு மூடாக்கு
மரங்களுக்கு மூடாக்கு

இவர் இங்கு பணிக்கு வருவதற்கு முன்புவரை வறண்ட பிரதேசமாகக் காட்சியளித்த ஆயுதப்படை வளாகம், இப்போது பசுமையாகக் காட்சியளிக்கிறது. அத்தனை மரக்கன்றுகளுக்கும் சொட்டுநீர்ப் பாசன வசதி செய்திருக்கிறார். மரக்கன்றுகளுக்கு நீர்ப் பாசன அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த அய்யர்சாமியைச் சந்தித்துப் பேசினோம்.

போர்வெல்லில் மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பு
போர்வெல்லில் மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பு

“எனக்குச் சொந்த ஊர் மதுரை பக்கமுள்ள கருமாத்தூர். விவசாயக் குடும்பம்தான். இயல்பாகவே எனக்கு இயற்கை மேல அதிக ஆர்வம். படிக்கிற காலத்திலேயே ஊருக்குள்ள மரக்கன்றுகள் வைக்கிறது, பொதுப்பிரச்னைக்காக மக்கள் பிரதிநிதிகள்கிட்ட மனுக்கொடுக்கிறதுனு செயல்படுவேன். இந்த நிலையிலதான், 1984-ம் வருஷம் போலீஸ் வேலைக்கு வந்தேன். கிடைக்குற ஓய்வுநேரத்தில மரக்கன்றுகளை நடுவேன். 2009-ம், வருஷம் பதவி உயர்வுல கோயமுத்தூர்ல இன்ஸ்பெக்டரா இருந்தேன். அப்ப, பள்ளிகள், காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், பொது இடங்கள்னு பல இடங்களுக்குச் சொந்த செலவுல மரக்கன்றுகளை வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல சொந்தமா நர்சரி போட்டு நாங்களே மரக்கன்றுகளை உற்பத்தி பண்ணினோம். அதை இலவசமா தர ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை இலவசமா கொடுத்தோம். நாங்க மட்டும் நேரடியாக 15,000 மரக்கன்றுகள் நட்டிருப்போம்’’ என்றவர் நடந்துகொண்டே பேசத்தொடங்கினார்.

‘‘ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, கரூர் ஆயுதப்படை பிரிவு டி.எஸ்.பியாகப் பதவி உயர்வு பெற்று, இங்க வந்தேன். வந்து இங்க பார்த்ததும், அதிர்ச்சியாயிட்டேன். காரணம், எங்கப் பார்த்தாலும் வறட்சி. கடுமையான வெப்பம் உடம்பைச் சுட்டெரிச்சது. ஆயுதப்படை வளாகத்தில 500 வேப்பமரங்கள் இருந்தாலும், அனல்காற்று அடிச்சது. ‘இங்க மரக்கன்றுகளை நட்டு, பசுமையைக் கட்டமைக்கவேண்டியது அவசியம்’னு நினைச்சேன். ஆனால், இங்க தண்ணி பிரச்னை. ரெண்டு போர்வெல் இருந்தும், மொத்தம் ஒருமணி நேரம்தான் தண்ணீர் சப்ளை கிடைச்சது. முதல்ல தண்ணிக்கு வழிவகைச் செய்யணும்னு நினைச்சேன். ஆயுதப்படை வளாகம், மைதானத்தில பெய்யுற மழைநீரை அப்படியே சிந்தாம சிதறாம, ரெண்டு போர்வெல் பக்கத்துல போய்ப் பூமிக்குள் சேரும்படி, மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பை அமைச்சோம். இதனால, நிலத்தடி நீர்மட்டம் மேலே வந்துச்சு. ரெண்டு போர்வெல்களும், அதுக்கு பிறகு தலா நாலுமணி நேரம்வரைக்கும் தண்ணீர் சப்ளை கொடுத்துச்சு.


அய்யர்சாமி
அய்யர்சாமி

‘இனி, மரக்கன்றுகள் வைக்கலாம்’னு நினைச்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, ரெண்டு போர்வெல்களையும் ஒட்டி இருந்த காலி இடத்தில, நெல்லி, மகோகனி, ஆலமரம், மா மரம்னு 370 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில நட்டோம். அதுக்கு, போர்வெல்ல இருந்து வாகனம்மூலம் தண்ணிக் கொண்டு வந்து ஊத்தினோம். நாலு மாசத்துக்கு முன்ன, மறுபடியும் 370 மரக்கன்றுகளை நட்டோம். மைதானத்தையொட்டியிருந்த இடத்தில, 327 வேப்ப மரக்கன்றுகளை நட்டோம்.

தொடர்ந்து, மியாவாக்கி முறையில 300 வேப்பமரக்கன்றுகள், எஸ்.பி அலுவலக வளாகத்துல பழ மரங்கள் 285, பின்னாடி புதர் மண்டிக்கிடந்த காலி இடத்தில ‘ப’ வடிவத்துல 400 பனைவிதைகளை விதைச்சோம். இப்ப ஒரு மாசத்துக்கு முன்னாடிக்கூட ஆயுதப்படை வளாகத்தில, வேம்பு, ஆலம், அரசு, புங்கன், புளினு 600 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில நட்டோம். இந்த மரக்கன்றுகளை ஒன்று 10 ரூபாய் விலையில வனத்துறையில வாங்குனோம். அது முழுக்க என்னோட சொந்தச் செலவுதான். நாங்க இதுவரைக்கும் நட்ட 2,252 மரக்கன்றுகளுக்கும், 400 பனைவிதைகளுக்கும், ஏற்கெனவே ஆயுதப்படை வளாகத்தில் வளர்ந்து நிக்குற 500 வேப்பமரங்களுக்கும் சேர்த்து, ரூ.1,89,000 செலவுல சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பை அமைச்சிருக்கோம்.

மரக்கன்றுகள் பராமரிப்புப் பணியில்
மரக்கன்றுகள் பராமரிப்புப் பணியில்



இதுல என்னோட பங்கு 20,000 ரூபாய் கோயமுத்தூர் வேளாண் விஞ்ஞானி மயில்சாமி 50,000 ரூபாய் கொடுத்தார். மீதிபணத்தை, அப்போதைய எஸ்.பி பாண்டியராஜன் சார், பராமரிப்பு நிதியில இருந்து கொடுத்தார். இதுல என்ன விசேஷம்னா, பனைக்கு முதன்முதலாகச் சொட்டு நீர் போட்டது நாங்களாதான் இருக்கும். ஆயுதப்படையில மொத்தம் 308 காவலர்கள் வேலை பார்க்குறாங்க. அதுல, எஸ்.ஐ அசோகன், தலைமை காவலர் அன்பழகன், பாண்டி, சங்கிலி முருகன், பாபுனு பத்துபேர் இதுல என்னோட ஆர்வமா செயல்படுறாங்க.

கடவூர் மலைப்பகுதியில இருக்கத் துப்பாக்கிசுடும் பயிற்சி எடுக்குற இடத்தில, 1,000 பனைவிதைகளை விதைச்சிருக்கிறோம். அதோட, ஆயுதப்படை வளாகத்தில என்னோட அலுவலகத்துக்கு எதிரே மஞ்சள் கரிசாலை, எலுமிச்சம் புல், மருதாணி, ஆடாதொடை, சிறுபீளை, சித்தரத்தை, வசம்பு, துளசி, வல்லாரைனு 35 வகையான மூலிகைச்செடிகளையும் வளர்த்துக்கிட்டு வர்றோம். நான் இங்க வேலையில இருக்குற வரைக்கும் மரக்கன்றுகளை வெச்சு, வளர்த்து, வறண்ட கரூரின் சூழலைப் பசுமையாக்குறதுல அணில் பங்கா இருந்து உதவணும்ங்கிற முடிவுல இருக்கிறேன். ஓய்வுக்குப்பிறகும், பொள்ளாச்சியில செட்டிலாகி, தொடர்ந்து இயற்கை சார்ந்து இயங்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக.

ஆறுமுகசாமி கொடும்பூரார்



கச்சத் தீவை இலங்கைக்கு மத்திய அரசு தர போகிறது என்று அறிந்தவுடன் அன்றைய தமிழக முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் ஜூன் 24 1974ல் கோட்டையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் அக்கூட்டத்தில் ம.போ.சி , இந்திரா காங்கிரஸ் மேலவை உறுப்பினர் பூதலூர் ஆறுமுகசாமி கொடும்பூரார். 


ஆவாரம்பட்டி ஐயாவின் பூர்வீகம் ஆகும். 

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்