எத்தனை சிலையெழுபது 😂😂
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
அண்மை காலங்களில் கம்பரால் எழுதப்பட்டதாக சிலையெழுபது நூல் வரிகள் இணையத்தில் உலா வருவதை காண முடிகிறது....
அரசினர் கீழ்திசை சுவடிகள் எனும் நூலகத்தில் இருக்கும் பல சுவடிகள் அந்த நூலகத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட " சிலையெழுபது " நூலின் முன்னுரையில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் இந்நூலின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது.
அதன்படி இந்த நூலின் ஆசிரியர் பெ சுபா குறிப்பிட்டுள்ளதாவது :-
" பதிப்பிற்காக வேறு வழியின்றி சுவடியை தேர்ந்தெடுத்தேன். ஏற்கனவே வெளிவந்த சிலையெழுபதும் நான் தேர்ந்தெடுத்த சிலையெழுபதும் பாடல்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளதை கண்டேன். இந்த மாற்றத்தை பதிவு செய்யும் வகையிலும் சுவடிப் பணிக்காகவும் ' இந்த' சிலையெழுபதை தேர்ந்தெடுத்தேன்"
" சிலையெழுபது என பெயர் கொண்ட மூன்று சுவடிகள் நூலகத்தில் கிடைத்தது. மூன்றிலும் ஏடுகளின் எண்ணிக்கை மாறுபட்டே இருந்தது. இந்த அனைத்து சுவடிகளிலும் பாடல்கள் ஒன்றிற்கொன்று மாறுபட்டே இருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
சிலையெழுபது எனும் பெயரில் கிடைக்கப்பட்ட சுவடிகளில் ஒன்றுக்கொன்று பாடல்கள் முற்றிலும் மாறுபட்டு இருந்ததை அறிகிறோம். கம்பர் எனும் ஒரு புலவர் எழுதியதாக கூறப்படும் பாடல்கள் எவ்வாறு வெவ்வேறு சுவடிகளில் வெவ்வேறு பாடல்களாக அமைய முடியும். இது நமக்கு உணர்த்துவது சிலையெழுபது எனும் பெயரில் பிற்கால இடைச்சொருகல்களாக சுவடிகள் எழுதி திணிக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். இதை அந்த நூலகம் சார்பாக வெளியிடப்பட்ட புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் சிலையெழுபது எனும் பெயரில் பல்வேறு இடைச்சொருகல்களை நிகழ்ந்துள்ளதை அறிகிறோம்.....