• கரூரின் தென்மேற்கு பகுதியில் குறவர் பழங்குடிகள் காவல் செய்து வந்தனர்.ஆனால் அதே பகுதியில் காளை மாடுகள் போன்ற கால்நடைகளுக்கு மட்டும் கள்ளர்களே காவலர்களாக இருந்தனர்.
• கரூர் மாவட்டத்தில் , ஒவ்வொரு கள்ளர் நாட்டார் காவல் பொறுப்பிலும் 3 முதல் 10 கிராமங்கள் வரை இருந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான கிராமங்களின் காவல் பொறுப்பு கள்ளர் சமூகத்தினரிடமே இருந்துள்ளது.
• அனைவரிடம் ஒரே அளவில் காவல் வரியை கள்ளர் காவல்காரர்கள் வசூலிக்கவில்லை.பணக்காரர்களிடம் கூட நியாமான அளவில் தான் காவல் வரி வசூலித்துள்ளனர்.பணக்காரர்களோடு ஒப்பிடும் போது ஏழைகளிடம் கம்மியாக தான் காவல் வரி வசூலித்துள்ளனர்.ஆங்கிலேயரை போல் ஏழை மக்களின் உழைப்பை வரி என்ற பெயரில் சுரண்ட கள்ளர் சமூக காவல்காரர்கள் விரும்பவில்லை.
ஆதார நூல்:- MADRAS DISTRICT GAZETTEERS - TRICHINOPOLY - VOLUME 1 - BOOK PAGE NUMBER 256.