" பச்சைத் தமிழன் "
பச்சைத் தமிழனாக இருந்தால் இச் செய்தியை பகிர்வான்..
இப்படியொரு வசனத்தை அடிக்கடி பார்த்திருப்போம்..
அதென்ன பச்சைத்தமிழன்...?
தமிழ்மொழியின் இளமையையும், பெருமையையும் குறிக்க பைந்தமிழ் என்ற சொல் இலக்கிய வழக்கில் உள்ளது..
ஆனால்...
பச்சைத் தமிழ் என்ற சொல் எங்குள்ளது..?
அட..
கல்வெட்டில் உள்ளது..
13 ஆம் நூற்றாண்டு காலக் கல்வெட்டில் உள்ளது.
திருநெல்வேலி.
நெல்லையப்பர் கோவில்.
அழகிய தமிழ் பாடல் வடிவக் கல்வெட்டு.
களப்பாளன் என்பவர்
நெல்லையப்பர் கோவிலுக்கு கற்களால் சுற்றுச்சுவர் எழுப்புகிறார். இச்செய்தியை கல்வெட்டு இவ்வாறு பதிவுசெய்கிறது..
" கல்வேலி செய்த களப்பாளன் சொல்வேலிப் பைச்சைத் தமிழீன்ற
பாவலர் "
அட...
பச்சைத்தமிழ்...
700 ஆண்டுகளுக்கு முன்பே..
அடுத்து...
"தமிழன்டா " என்ற சொல்லைக் கல்வெட்டில் தேடவேண்டும்...
கட்டுரை
ஐயா மா. மாரிராஜன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியது.
மேலே உள்ள குறிப்பிடப்படும் களப்பாளர் வழியினர் கள்ளர் மரபை சேர்ந்த களப்பாளர்கள் , கள்ளர் நாட்டின் ஒன்றான தென்னமநாட்டில்