சனி, 30 நவம்பர், 2019

முசிறி நாட்டாள்வான்



நாடு பாதி நாட்டார் பாதி என்பதற்கு ஏற்ப கள்ளர்களின் 

நாட்டாள்வார்
கரைய நாட்டாள்வார்
சக்கரப்பநாட்டாள்வார்
நாட்டார்
அருமைநாட்டார்
அருவாநாட்டார்
பாலைநாட்டர்
ஏனாதிநாட்டர்
கங்கநாட்டார்
சோழகங்கநாட்டார்
நாட்டரையர்

என்ற பட்டமுடைய கள்ளர்கள் சோழநாட்டில் சிறப்புடனும் , பெருமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

திருச்சி முசிறி பகுதியிலும் நாட்டார், நாட்டாள்வார் பட்டமுடையவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கள்ளர்களின் குல தெய்வம் அழகுநாச்சியம்மன் கோயில் முசிறியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ளது எவ்வளவு வெள்ளம் வந்தாலும் கோவிலை தாண்டி வரமுடியாது. காவிரி ஆறு உடைப்பெடுத்து வெள்ளம் போகாமல் அழகுநாச்சியம்மன் காத்துவருகிறார்.



மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள அழகுநாச்சியம்மன் மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். நான்கடி உயரத்தில் அழகிய திருவுருவமாக நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். வலதுபுறம் தனி சன்னதியில் பெரியாண்டவர் எழுந்தருளியுள்ளார். அழகு நாச்சியம்மனின் இருபுறமும் வரிசையாக நவகன்னியர்கள் காணப்படுகின்றனர். கருவறையின் வாசலில் பெரிய ஆண் பூதம் ஒன்றும், பெண் பூதம் ஓன்றும் நிற்கின்றனர்.

வேப்ப மரத்தடியில் மூன்றடி உயரமுள்ள பிடாரி அம்மன் தரிசனம் தருகிறார். காலடியில் ஒரு குழந்தை உள்ளது. ஊரின் காவல் தெய்வமாக உள்ளார்.

விநாயகர், மதுரை வீரன், கருப்பன், காத்தவராயன், காமாட்சி, ஆர்யமாலா என்று தனி தனி சன்னதிகள் உள்ளன.

அழகுநாச்சியம்மன் கோயிலில் நான்கு கரைகாரர்கள் தான் சொந்தம். நாட்டார் முதல் கரையை சேர்ந்தவர்கள். முதல் மறியாதை முத்தலாப்பட்டி காரர்களுக்கும் அடுத்து கள்ளர்களின் நாட்டார்களுக்கும் மேலும் வெள்ளாளர், பறையர்களுக்கும் அடுத்த அடுத்த மறியாதை தரப்படுகிறது.

35 வருடம் கழித்து 26.2.2018 அன்று மிகவும் சிரமப்பட்டு கும்பாபிஷேகம் செய்யபட்டது.

இங்கு உள்ள கள்ளர்களின் குலதெய்வமாக புளியஞ்சோலை மாசி பெரிய சாமியும், கொல்லிமலையில் தலைமை இடமாக இருக்கும் மாசி பெரியண்ணன் சாமியும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள்.

முசிறியில் கள்ளர் சமூகம் சார்ந்த வாழ்வியல் மிகவும் வலிமையானது , அவர்களில் அதிகம் பெண் எடுப்பது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தான் . நாட்டார், சர்க்கரைநாட்டார்,  கங்கநாட்டார் என்ற பட்டங்களில்  கங்கநாட்டார் வம்சத்தினர் தற்போதைய கொடைக்கானல் பகுதில் வாழ்ந்து திரும்ப தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் குடியேறி விட்டனர்


உமையாள்புரம் நாட்டாள்வார் தண்ணீர்ப்பந்தல்:





இறந்தவர் நினைவாக இது போல் தண்ணீர்ப்பந்தல் அமைப்பது காலங் காலமாய்த் தமிழ்நாட்டில் இருந்துவரும் மரபாகும். சிவலோகத்துக்கு எழுந்தருளின முதலாம் இராஜேந்திரசோழருக்கும் அவர் தேவி வீரமாதேவிக்கும் செய்யாறு வட்டம், பிரம்மதேசத்தில் வீரமாதேவியின் உடன்பிறந்தாரான மதுராந்தகன் தண்ணீர்ப்பந்தல் அமைந்ததைக் குறிப்பிடும் கல்வெட்டு நினைக்கத்தக்கது (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 30: 184).

முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறையில் பொறுப்பேற்ற பிறகு, துறை மாணவர்களுடன் சிராப்பள்ளி முசிறிச் சாலையில் உள்ள வரலாறு தொடர்புடைய அனைத்துக் கட்டுமானங்களையும் ஆய்வு வெளிச்சத்திற்குக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டபோது பல அரிய வரலாற்றுத் தகவல்கள் வெளிப்பட்டன.

அவற்றுள், ஏவூர்ப் பிரிவுச் சாலைக்கு முன்பு ஒன்றும் உமையாள்புரத்தில் மற்றொன்றுமாய் உள்ள தண்ணீர்ப்பந்தல்கள் குறிப்பிடத்தக்கன. பின்னது 95 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு இன்று பாழடைந்த நிலையில் தண்ணீர்ப்பந்தல் சத்திரமாக அமைந்துள்ளது.

காவிரியைப் பார்த்தவாறு உள்ள இத்தண்ணீர்ப் பந்தல், தங்குவதற்கான சத்திரமும் கொண்டுள்ளது. ஒருதளச் செங்கல் கட்டுமானமாய்க் காரைப்பூச்சுடன், முப்புறத்தும் காற்றோட்டத்திற்கும் வெளிச்சத்திற்கும் வாய்ப்பாகப் பெரிய அளவிலான சாளரங்கள் பெற்றுள்ள இதன் முன்புறத்தும், மேற்கிலும் ஓட்டுக் கூரையுடன் உள்ள தாழ்வாரம் கருங்கல் அடித்தளத்தின் மேல் செம்மையாகப் பரவியுள்ளது. கோயில் கட்டமைப்பில் காணப்படும் துணைத்தளம் போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் ஓரிடத்தும் சிதையாமல் பழைய பொலிவுடன் இன்னமும் வலிமை குன்றாமல் உள்ளது. அடித்தளத்தில் ஊன்றப்பட்டு ஓட்டுக்கூரையைத் தாங்கும் மரத்தூண்கள் பல இடங்களில் முழுமையாக உள்ளமையுடன் கோயில் தூண்களைப் போலவே தலையுறுப்புகள் கொண்டுள்ளன.

முதல் தளத்தின் கூரை வெளிநீட்டலுடன் கோயில் கட்டுமானக் கபோதம் போல வளைக்கப்பட்டுள்ளது. தளத்தின் மேல் நாற்புறத்தும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு மேற்பகுதி மொட்டை மாடியெனக் காட்சிதருகிறது. கட்டடத்தின் கிழக்குப் பகுதியில் இதை அடைவதற்கான படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டு அமைப்பின் மேற்பகுதியில் வெளிச்சத்திற்கும் காற்றோட்டத்திற்கும் வசதியாகச் சாளரம். சுற்றுச் சுவரின் தென்முகத்தில் மூன்று வளைவு மாடங்கள் காட்டி, அதன் இருபுறத்தும் பூச்சுருள் அலங்கரிப்புச் செய்துள்ளனர். மாடங்களின் இருபுறத்தும் சுதையாலான நந்திகளும் மயில்களும் காட்டப்பட்டுள்ளன. சுற்றுச் சுவர் அரைத்தூண்களின் முகப்புகள் அழகிய பூப்பதக்கங்கள் கொண்டுள்ளன.





வளைவு மாடங்களில் மேற்கில் யானைத்திருமகளும் கிழக்கில் விநாயகரும் சுதைவடிவங்களாய்ப் பொலிகின்றனர். யானைத்திருமகளின் இருபுறத்துமுள்ள யானைகள் தங்கள் துளைக்கைகளில் கொண்டிருக்கும் குடங்களிலுள்ள நீரை, அம்மை பின்கைகளில் ஏந்தியிருக்கும் தாமரைகளின் மேல் ஊற்றுமாறு காட்சி அமைந்துள்ளது. மூஞ்சுறு வாகனத்தில், இரண்டு கால்களையும் குத்துக்கால்களாக வைத்து அமர்ந்திருக்கும் விநாயகரின் பின்கைகளில் பாசம், அங்குசம். இந்த இரண்டு இறைவடிவங்களுமே பெருமளவிற்குச் சிதைவின்றிக் காட்சிதந்தபோதும் நடுவிலுள்ள மாடவளைவின் சுதைச் சிற்பம் மட்டும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு அழிந்துள்ளது.

கட்டடத்தின் உட்புறம் நுழைய இயலாதவாறு சிதைந்து தொங்கும் ஓட்டுக் கூரையிலிருந்து நழுவி நிற்கும் ஓடுகள் அச்சுறுத்துகின்றன. கட்டடத்தின் முப்புறத்தும் முட்செடிகளும் புதர்களும் காட்டுக் கொடிகளும் மண்டியுள்ளன. தாழ்வாரத்தின் மேற்பகுதியில் உடைந்த நிலையில் மரப்பெட்டி ஒன்றைக் காணமுடிகிறது. சத்திரத்தின் வாயிலை ஒட்டி வலப்புறத்தே சுவரில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு சத்திரத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகிறது.

குரோதன ஆண்டு, கார்த்திகை மாதம் 12ஆம் நாள் சுக்கிரவாரத்தன்று (27. 11. 1925 வெள்ளிக்கிழமை) இக்கட்டமைப்பில் புதுமனை புகுவிழா நிகழ்த்தப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இந்தத் தண்ணீர்ப்பந்தல் சத்திரம் முசிறி வட்டம், ஒமயபுரம் (உமையாள்புரம்) இராமசாமி நாடாள்வார் நினைவாக அவரது மகன் பழனியாண்டி நாடாள்வாரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது. சோழர் காலக் கல்வெட்டுகளில் தோற்றம் தரும் நாடாள்வார்களின் தொடர்ச்சியாக இந்நாடாள்வார்கள் தண்ணீர்ப்பந்தல் சத்திரம் உள்ளது.




ஆய்வு : முசிறி விஜி நாட்டார்

நன்றி: 

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் 
இணை இயக்குநர் பேராசிரியர் மு.நளினிக்கும்.

Varralaru. com

வியாழன், 21 நவம்பர், 2019

கே.கந்தசாமி தேவர்



தேவர் திருத்தொண்டராக திகழ்ந்தவர் அய்யா கே.கந்தசாமி அவர்கள்.1971 ல் நடைபெற்ற உசிலம்பட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர். அதன் பின்னர் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். அடிப்படை பார்வர்டுபிளாக்காரர். தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு பிறகு கள்ளர் கல்வி கழகத் தலைவராக இருந்தவர். பார்வர்டுபிளாக் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் களத்தில் இறங்கி குரல் கொடுத்தவர். 



மதுரை மாவட்டத்தில் காமராஜர் பெயரில் பல்கலைக்கழகம் அமைவதற்கு கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்தவர்.வீரம் விளைந்த மதுரை மண்ணில் காமராஜர் பெயரில் பல்கலைக்கழகம் அமைவதை ஏற்கமுடியாது என போராடியவர்.

1977 ல் உசிலை சந்தை திடல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இடமிருந்து வலம் கந்தசாமி பி.ஏ.பி.எல். எம்எல்ஏ

முதலில் காமராஜர் பல்கலைக்கழகம் என பெயர் வைக்கப்பட்டது. பின்னர் உசிலம்பட்டி மக்களின் பலத்த எதிர்ப்பினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது. இதன் சம்பந்தமாக சட்டமன்றத்தில் அய்யா கே.கந்தசாமி அவர்கள் முதல்வர் எம்ஜிஆரை பார்த்து, கருவாட்டுக்காரி என்ற கதையினை கூறி நீ கூத்தாடி பய தானே உனக்கு பெயர் மாற்றுவதெல்லாம் சாதாரணமான ஒன்று. ஆனால் எங்களுக்கு அப்படியில்லை என்று பேசி முதல்வரையே அச்சமடைய செய்தவர்.

19 02 1973 முக்கையாத்தேவர் எம்பி.. கந்தசாமி எம்எல்ஏ.. சந்தனம் சேர்மன்..இவரது காலத்தில
சிந்துபட்டி யி‌ல் திறக்கப்பட்ட அரசு பள்ளி


உசிலம்பட்டியில் உள்ள அரசு மருதுவமனையை கட்டியவர், அதோடு உசிலம்பட்டி மேற்கு கணவாய் சாத்தா கோவிலை நிருவி அதற்க்கு குடமுழுக்கு வைத்தவரும் ஐயா கந்தசாமி M,L,A,அவர்கள்.

தேவரின் திருத்தொண்டர் அய்யா கே.கந்தசாமி அவர்களின் வரலாற்றினை போற்றுவோம். 


கோரிப்பாளையம் தேவர் சிலை வரலாறு


பசும்பொன் தேவர் அவர்களுக்கு மதுரை கோரிப்பாளையத்தில் வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் 1963-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 அன்று தலைவர் தேவர் அவர்கள் மறைந்த போது தேவருடைய தொண்டர்கள் மனதில் கருக்கொண்ட எண்ணம் இது! 

1967-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள், "தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் தலைவர் தேவருக்கு சிலை வைக்க வேண்டும்" என்று நாடெங்கும் அலைந்து திரிந்து வசூல் செய்தார். சிற்பி ஜெகநாதனிடம் சிறுக சிறுக போய் சேர்ந்தது. சிலை மாடல் உருவானது. மதுரையில் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை,முதலமைச்சர் அண்ணா திறந்து வைக்கிறார் என்று முன்பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது. 

1969-ம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் மொத்த வட்டங்கள் 45-ல் திமுக கூட்டணியில் 9 இடங்களில் ரயில் இஞ்சின் சின்னத்தில் ஃபார்வர்டுபிளாக் போட்டியிட்டது. எஸ்.முத்துமாயத் தேவர், எல்.சோணையா சேர்வை ஆகியோர் தேர்தலில் வென்றனர். மா.பரமத்தேவர் 2 ஓட்டுகளில் தோற்றார். 5 ஓட்டு, 7 ஓட்டு என்ற வித்தியாசத்திலேயே ஃபார்வர்டுபிளாக் தோற்றது. 




நகராட்சி தலைவர் தேர்தல் நடந்தது. எஸ்.முத்து சேர்மன் ஆனார். அதை ஃபார்வர்டுபிளாக் ஆதரித்தது. துணைச் சேர்மன் தேர்தலில் ஃபார்வர்டுபிளாக் திமுகவை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் திரு.ஆனந்தம் வெற்றி பெற்றார். திமுக நகரசபை கவிழ்ந்து விடாமல் இருக்க ஃபார்வர்டுபிளாக் தயவு தேவை என்ற நிலை இருந்தது. எனவே எஸ்.முத்துமாயத்தேவர் நகரமைப்புக் குழு தலைவராக்கப்பட்டார். அப்போது தேவரின் சிலை வைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தான் கோரிப்பாளையம் ஆறு சாலை சந்திப்பு. அந்த இடம் தான் 28.09.1957-ல் காமராஜ் நாடார் ஆட்சியில் பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்ட இடம்.

அண்ணாதுரையின் மறைவால் சிலை திறப்பு விழா தள்ளிப்போயிற்று. மூன்று மாவட்டங்களில் பசும்பொன் தேவர் பெயர் கொண்ட கல்லூரிகள் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டன. 1971 பொதுத்தேர்தலில் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் இராமநாதபுரம் பாராளுமன்றத்திற்கும், உசிலம்பட்டி சட்டப்பேரவைக்கும் போட்டியிட்டார். 1971 பொதுத்தேர்தலில் தான் ஃபார்வர்டுபிளாக் வேட்பாளர்கள் எல்லோரும் சிங்கம் சின்னத்தில் போட்டியிட்டனர். 1967-ல் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களை தவிர மற்றவர்கள் எல்லாம் சுதந்திரா கட்சியின் நட்சத்திர சின்னத்திலேயே போட்டியிட்டனர். 

1971-ல் அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் ஹேமந்தகுமார் பாசு கொல்லப்பட்டதால் பி.கே.மூக்கையாத்தேவர் அகில இந்திய தலைவரானார். 1972-ல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கூடலூர் இராஜாங்கம் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் வந்தது. அந்த சமயத்திலே கருணாநிதிக்கும்,தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கும் நல்லூறவு இல்லை. கருணாநிதி மீது தலைவர் அதிருப்தியில் இருந்தார். தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களுக்கு பொன்விழா க.இராஜாராம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. 

பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. மேடையில் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், அமைச்சர் செ.மாதவன் மூலமாக சமாதானம் பேசப்பட்டது. ஏனெனில் திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் ஆதரவு தேவை.திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுகவை ஃபார்வர்டுபிளாக் ஆதரிப்பது என்றும் தேர்தலில் திமுக தோற்றாலும் ஜெயித்தாலும் தேவர் சிலை திறப்பு விழா செலவுக்கு ரூபாய் 40,000 தரவேண்டும் என்றும் பேசப்பட்டது. 

திமுக தரப்பில் ஒப்புதல் தரப்பட்டது. எதிர்பார்த்தது போலவே திமுக தோற்றது. ஃபார்வர்டுபிளாக் தலைவர்கள் ஏ.ஆர்.பெருமாள், சின்னப்பக் கவுண்டர், சக்திமோகன், சௌடி சுந்தரபாரதி, தவமணி, கே.கந்தசாமி, ரத்தினசாமி தேவர், முத்தையா ஆகியோர் ஒப்பந்தபடி பணம் கேட்ட போது, "தேவருக்கு செய்ததும் போதும், தேவமாருக்கு செய்ததும்" போதும்" என்று கருணாநிதி பதில் சொல்லியுள்ளார். கோபமடைந்த ஃபார்வர்டுபிளாக் தலைவர்களை சமாதானம் செய்த அன்பில் மற்றும் செ.மாதவன் சிலை திறப்பு விழா மலர் போடுங்கள், அதற்கு அரசு தரப்பு விளம்பரம் தருகிறோம் அதை வைத்து விழா செலவை சரிக்கட்டுங்கள் என்றனர். அதன்படி சிலை தயாரிப்பு விழா மலர் தயாரிக்கப்பட்டது. அதன்மூலம் அரசு விளம்பரம் கிடைக்கப் பெற்று ரூ 36,000 மட்டும் கிட்டியது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் எம்பியாக இருந்ததால் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அவர்களிடம் பசும்பொன் தேவர் சிலை திறக்க வரும்படி கேட்டார்.அவரும் சம்மதித்தார். 

5-1-1974 மாலை 3 மணிக்கு சிலை திறப்பு விழா முடிவு செய்யப்பட்டது. நகராட்சியாக இருந்த மதுரை மாநகராட்சி ஆனது.எஸ்.முத்து முதல் மேயர் ஆனார். இந்த காலகட்டத்தில் கருணாநிதிக்கும், முத்துவுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி குறிப்பிட்ட இடத்தில் பீடம் கட்ட கட்டிட பணி துவங்கியது. பாதி அஸ்திவாரம் தோண்டியதும் அந்த இடத்தில் பாலம் வந்து விட்டது. எனவே தோண்டிய இடத்தை மூடிவிட்டு அந்த இடத்திலிருந்து சுமார் 40 அடி தள்ளி தெற்கில் வானம் தோண்டி கட்டிட பணி தொடங்கப்பட்டது. பீடத்தின் உயரம் தளத்திலிருந்து 18 அடி என கணக்கிடப்பட்டது. சரியான அடை மழை.கட்டிட பணி தடைப்பட்டது. இரவோடு இரவாக மழையோடு மழையாக தென்னங்கீற்றால் முகட்டுக் கொட்டகை போடப்பட்டது. பணி தொடர்ந்தது.எஸ்.முத்துமாயத் தேவர் எம்.சி, நகரத் தலைவர் மா.பரமத்தேவர், நகரச் செயலாளர் எஸ்.அய்யாவு பண்டாரம், எஸ்.காஜாமைதீன் இவர்களோடு நானும் மற்றும் கட்டிட பணியாளர்கள் பீடம் கட்டவும் அரசு மருத்துவமனை (பனகல் ரோடு) சாலையில் ரோட்டை மறித்து 20×30 விழா மேடையை கருங்கல் சிமெண்ட் உபயோகித்து கட்டுவதற்கும் ஜம்புரோபுரத்தை சேர்ந்த திரு.ராமு சேர்வையிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.அய்யணன் அம்பலம், மாவட்ட ஆட்சியர் சீதாராமதாஸ் அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்கள். பக்கத்தில் இருக்கும் முருகவிலாஸ் ரைஸ் மில் தற்காலிக அலுவலகமாக மாறிவிட்டது. சென்னையிலிருந்து சிலை வந்துவிட்டது. வைக்கோல் கட்டுகளை மெத்தை போல போட்டு சிலை இறக்கி வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சிலையை லாரியில் சுமந்து வந்தவரின் பெயர் கந்தசாமி. பீடம் எழுந்து நின்றது. பீடத்தின் நான்கு மூலையிலும் திண்டுபோல நீட்டி கட்டப்பட்டது. அதில் நான்கு சிங்கங்கள் வைக்க வேண்டும், முன்னும் பின்னும் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறப்பு விழா கல்வெட்டுகளும், கிழக்கிலும் மேற்கிலும் தேவரின் பொன்மொழிகளும் வைக்க வேண்டும் என்ற திட்டம் முழுமை பெறவில்லை. கற்கள் வாங்க பணம் இல்லை. வந்த ஒரு கல்லில்,கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டது, தெய்வீகத் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் சிலை திறப்பு விழா நாள் 5.1.1974 தலைமை கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தமிழக முதல்வர் திறப்பாளர் வி.வி.கிரி அவர்கள் இந்திய ஜனாதிபதி சிலை அமைப்புக்குழுத்தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் எம்.பி.அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் தலைவர் என்று இருந்தது.




இதைப்பார்த்த சில ஃபார்வர்டுபிளாக் தலைவர்களுக்கு பயங்கர கோபம். தங்களுடைய பெயர் அதில் இல்லையே என்று. சிலையை பீடத்தில் ஏற்ற கிரேன் தேவைப்பட்டது. டிவிஎஸ் P.W.D கிரேன்கள் வந்தன்.கிரேனின் உச்சியில் இருந்த ராடு ஒன்று வளைந்து விட்டது. மீண்டும் கிரேன் தேடும் படலம் ஆரம்பமானது. பின்பு கிரேன் வந்து சேர சிலை பீடத்தின் மீது அமர்த்தப்பட்டது. கூடாக இருந்த சிலையின் தலையில் ஒரு அடி அகல வட்டமாக துளை இருந்தது. சுமார் 4 இஞ்ச் விட்டமுள்ள இரு கம்பிகள் இரண்டு தோள்களிலிருந்து பாதம் இருக்கும் அடிக்கல்லோடு பொருத்தப்பட்டது. உள்கூடு காங்கிரீட் கலவையால் இடுப்பு வரை நிரப்பப்பட்டது. அதன்பின் தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் மற்றும் சின்னப்பக்கவுண்டர் அவர்கள் வர, அதன் சில கற்கள்,ருத்ராட்ச மாலை,வேறு சில பொருட்கள் இடப்பட்டன. மட்டி கலவை பூசப்பட்டது. தின்னர் பூசப்பட்டது.மறுநாள் தங்க கலர் பெயிண்ட் ஸ்பிரே செய்யப்பட்டது. 


இன்று வரை இந்த வேலையை தைக்கால் தெருவில் உள்ள கார் பெயிண்ட் ஸ்பிரே செய்யும் செல்லம் சேர்வையும் அவரது புதல்வரும் செய்து வருகின்றனர். சிலை திறப்பு விழா மலர் வந்தது. ஜனாதிபதி,முதல்வர் மற்றும் ஆளுநர் வாழ்த்துரையுடன் "நெஞ்சமே அஞ்சாதே அந்த நாள் வரும்" என்ற பி.கே.மூக்கையாத்தேவர் அவர்களின் கட்டுரையை தொடர்ந்து ஏ.ஆர். பெருமாள் அவர்களின் கட்டுரை. கட்டுரையில் கருணாநிதியை உயர்த்தி கூறப்பட்டிருந்தது. இதே கருத்தை ஏ.ஆர். பெருமாள் அவர்கள் மேடையில் பேசினார் என்றால் அது சரியாக இருக்காதே என்ற எண்ணம் ஏற்பட்டது. 

மார்கழியில் மற்றொரு சித்திரை திருவிழா என்று சொல்லும்படியாக பிரம்மாண்டமான கூட்டம். சிலையின் பீடத்தை சுற்றிலும் பச்சைப்பட்டு விரித்தாற் போன்று முளைப்பாரிகள் வைக்கப்பட்டிருந்தது. விழா துவங்கியது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். 1957-ல் இந்த இடத்தில் கைது செய்யப்பட்ட தலைவர் தேவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. மாசு மருவற்ற தலைவர், சாதியவாதியாக சித்தரிக்கப்பட்டார். ஏனெனில் அன்று மாநில அரசும், மத்திய அரசும் தேவரின் விரோதிகள் கையில் இருந்தது. ஆனால் இன்று மாநில முதலமைச்சர் தலைமையில் இந்தியாவின் ஜனாதிபதி தேவர் சிலையை திறக்க இருக்கிறார். இன்றைக்கு மாநில அரசும்,மத்திய அரசும் தேவருக்கு வேண்டியவர்கள் கையில் உள்ளது. அன்று நடந்ததும் அரசியல்,இன்று நடப்பதும் அரசியல் என்று குறிப்பிட்டுவிட்டு பின்பு தேவர், வி.வி.கிரி இருவரின் தொடர்புகளை விவரித்து விட்டு அமர்ந்தார். 


முதல்வர் கருணாநிதி வழக்கம் போல பேசிவிட்டு அமர்ந்தார். வி.வி.கிரி 1937-ம் ஆண்டு தேர்தல் சூழல்களை எடுத்து விளக்கி விட்டு,பசும்பொன் தேவர் எனக்கு ஒரு வகையில் குரு.ஏனென்றால் எனக்கு அவர் தான் திருக்குறள் கற்றுக் கொடுத்தார்.இந்த பெருமைகளை தெரியாத,வரலாறு தெரியாத ஒரு சில சிறுவர்கள் தேவர் சிலையை திறக்க நான் வரக்கூடாது என்று எனக்கு கடிதம் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டார். சிற்பி ஜெகநாதன், கே.இராமு சேர்வை கௌரவிக்கப்பட்டனர். 



நன்றியுரை ஏ.ஆர்.பெருமாள் என்று கருணாநிதி சொன்னார். ஏ.ஆர். பெருமாள் எழுந்து மைக் முன்பு வருவதற்குள் தேசிய கீதம் இசைத்தட்டு போடப்பட்டு விட்டது. மேடையில் அனைவரும் அவசரமாய் எழுந்து நிற்க, விழா நன்றியுரை இல்லாமலேயே முடிந்தது. தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் கோப பார்வை செலுத்தினார். மேடைக்கு கீழே மைக் செட் ஆப்பரேட்டர் பெருமாள், மருதுபாண்டியன், ஒலிபெருக்கி உரிமையாளர் அழகிரிசாமி, தலைவர் மா.பரமத்தேவர், நான் ஆகியோர் மட்டுமே இருந்தோம்.பி.கே.மூக்கையாத்தேவரின் அக்கினிப் பார்வை எங்களையே மையம் கொண்டது. அவர் வழக்கமாக தங்கும் டி.பி.பக்கம் போகவே இல்லை.

நேதாஜி ஜெயந்தி விழாவிற்கு பின்பு சகஜமானோம்.ஒரு சிலை செய்யப்பட்டால் அரசு அனுமதி அளித்த இடத்தில் சிலை அமைத்த பின்பு உள்ளாட்சி அமைப்பிடம் முறைப்படி ஒப்படைக்க வேண்டும். கால் பங்கு தொகை பராமரிப்பு செலவாக செலுத்த வேண்டும். இப்போது சிலை மதிப்பை அப்படியே பராமரிப்பு செலவாக கட்ட வேண்டும். கால் பங்கு தொகை மதுரை மாநகராட்சிக்கு முழுமையாக செலுத்தப்படவில்லை. சிலையை சுற்றி சாலைத்திட்டு அமைக்கப்படவில்லை. விளக்குகள் போடப்படவில்லை. ஜெயந்தி விழா சமயத்தில் வண்ண விளக்குகள் கோபுரம் அமைக்க தற்காலிக மின் இணைப்பு பெறப்படும். 


1980-ம் ஆண்டு வரை இந்த நிலை நீடித்தது.பீ.பீ.குளம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்த பணியான் எஸ்.மாயாண்டி தலைமையில் மாநகராட்சி முன்பு மறியல் போராட்டம் நடத்தினோம். அப்போது போராட்ட குழுவை சந்தித்த அதிகாரிகள் பராமரிப்பு தொகை பாக்கி பற்றி விவரித்தனர். அதன்பின்பு சிலையை சுற்றி சாலைத்திட்டும், 2 போகஸ் லைட்டும் போடப்பட்டது. அதுவும் பெயர் பலகைக்கு மட்டுமே வெளிச்சம் காட்டியது. எம்ஜிஆர் ஆட்சியில் 1980-வது ஆண்டில் தான் ஏணி மற்றும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

நாங்கள் எல்லாம் அந்த நாளில் 1952 ஆம் ஆண்டிலிருந்து 1963 ஆம் ஆண்டு வரை திரு மூக்கையா தேவரை, அன்பொழுக "மூக்கையா" என்றுதான் அழைத்தோம். தேவர் மறைவுக்குப் பின்னால் 1963 ஆம் ஆண்டு முதல் 'தலைவர்' என்று அழைக்கிறோம்
நாளை தேவர் என்று அழைப்போம் என கூறியவர் A.R.பெருமாள்

ஃபார்வர்டுபிளாக் தலைவர் அய்யா வீ.எஸ். நவமணி அவர்கள் (மேடைமணி ஜனவரி மாத இதழ்).

ஞாயிறு, 17 நவம்பர், 2019

தும்மக்குண்டு நாடு, உடையான்பட்டி கப்பட்டையத்தேவன் பெரியகருப்பத்தேவன், தவசிதேவன்




கருமாத்தூர் கரிசல்பட்டி சின்னுடையான் மகன் சின்னாங்கி (சின்னாங்கன்) உடையாத்தேவன் தங்கி இடத்தின் ஊர்தான் உடையான்பட்டி அது மறுவி உடையாம்பட்டி என்றானது.

தும்மக்குண்டு நாடு, உடையான்பட்டி சிந்துபட்டி பெருமாள் கோயில் காவலின் போது ராணி மங்கமா காலத்தில், இஸ்லாமியர்களுடன் சண்டையிட்டு இறந்த மாவீரர்கள் பெரியகருப்பத்தேவனும் அவரது அண்ணன் கப்பட்டையனும் அவரது தம்பி தவசிதேவனின் புடைப்பு சிற்பங்கள்.






இறந்தவர்களில் இருவர் திருமணமானவர்கள், இருவரின் மனைவிகளும் உடன்கட்டை ஏறியுள்ளனர். அதனால்தான் இரு பெண்களும் உள்ளனர். இரு பெண்களும் உடன்கட்டை ஏறி தீயில் மாண்டபோதும் அவர்களின் சுண்டு விரல் வேகவில்லை.

ஒருவருக்கு திருமணமாகாததால் தனியாகவும் வைத்து உடையான பட்டி கொப்புடையான் வகையறா வழிபடுகிறார்கள் . (தற்போது சிந்துபட்டியில் பெருமாள் கோவில் உள்ளது..தும்மக்குண்டு பஞ்சாயத்தில் .உள்ள T. பெருமாள் கோவில்பட்டியில் உள்ள பெருமாள் கோவில் ) தற்போது கோவில் இருப்பிடம் தும்மக்குண்டு.

கொப்புடையானாத்தான் கப்பட்டையன் வகையரா என்று சொல்லுகிறார்கள், கோவில் பெயர் பட்டாங்கோவில் என்பதால் கப்பட்டையான் என்பது சரியாகவும் இருக்கலாம். ஓலைச்சுவடிகள் இருந்துள்ளன, காலப்போக்கில் அழிந்துவிட்டன.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தாத்தாவின் பெயர் சின்னாங்கி உடையத்தேவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 நவம்பர், 2019

1034 ஆவது சதய விழா நாயகர்கள்



1034 ஆவது சதய விழாவில் தமிழக அரசின் சதயவிழாக்குழுவின் "மாமன்னன் இராசராச சோழன்" விருதுபெற்ற சோழர்களின் வழி தோன்றல் ஐயா N.செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் ஐயா S.ராஜேந்திரன் தஞ்சிராயர் அவர்களை, உலகத் தமிழர்கள் சார்பாக வணங்குகிறோம்.








ஐயா N.செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் சத்திரபதி சிவாஜி மகாராஜ் வாரிசுதாரர் தஞ்சை மராட்டிய  இளவரசர் அவர்கள் தம்பியுடன்









மாமன்னர்  ஸ்ரீ...ஸ்ரீ... ராஜராஜ.....சிவபாத சேகரன்... சதயத்திற்கு சமர்ப்பணம்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்...

இராஜராஜீஸ்வரத்தில் நடைபெற்ற திருவிழாக்கள்:-




1. திருச்சதயத்திருநாள் : ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரம் அன்று விழா நடைபெற்றது. ஆக, வருடத்தின் 12 சதய நாட்களிலும் இராஜராஜீஸ்வரம் புதுமணம் காணும் மங்கையெனத் திருவிழாக்கோலம் பூண்டது.

2. ஸ்ரீஇராஜஜேஸ்வரமுடையார் ஆட்டை பெரிய திருவிழா : இது வருடம் ஓரு முறை நடக்கும் உற்சவம். (ஆட்டை - ஆண்டு). கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது.

3. சங்கிரமம் அல்லது சங்கிராந்தி : சூரியன் ஓரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குப் பிரவேசிப்பதே சங்கிராந்தி (மாதப்பிறப்பு) எனப்பட்டது. ஆக, 12 மாதப்பிறப்பும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன.

4. கார்த்திகைத் திருவிழா : கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரம் அன்று, ஓரு நாள் உற்சவமாக இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாக்கள் நடக்கும் நாட்களில் உற்சவத் திருமேனிகளுக்கு, ஒரு நாளில் மூன்றுமுறை திருமஞ்சனம் பாங்குடன் நடைபெற்றது. பெரிய செண்பக மொட்டுக்கள், ஏலவரிசிகள் (ஏலக்காய்) மற்றும் இலாமிச்சை (ஓரு வகையான வாசனை வேர்) வேர்கள் ஆக மூன்று வாசனையூட்டும் பொருட்களால் திருமஞ்சன நீர் சுகந்த மணமூட்டபட்டது. 
இந்நீர் கொண்டு உற்சவத் திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றது. முற்றிலும் இயற்கை வேதிக்கூறுகளைக் கொண்ட பொருட்கள். இவை மிகுந்த சுகந்த நறுமணம் தரக்கூடியவை.

திருமஞ்சனநீரை வாசனையூட்ட வேண்டிய மூன்று பொருட்களையும் பெறுவதற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. சிறுதனத்துப் பணிமகன் அருமொழிதேவவளநாட்டுப் புலியூர்நாட்டு முருகநல்லூருடையான் காடன்கணவதி உடையார் 56 காசு பொலிசையூட்டாகத் (வைப்புநிதி போன்றது) தஞ்சாவூர்க் கூற்றத்துப் புறம்படி திரிபுவனமாதேவி பேரங்காடி வணிகர்கள் சமூகத்திடம் வழங்கியுள்ளார். 

அவ்வணிகர்கள் 7 காசை வட்டியாகத் தரவேண்டும். வருடந்தோறும் இந்த 7 காசைக் கொண்டு செண்பகமொட்டுக்கள், ஏலவரிசிகள் திருமஞ்சனநீருக்குப் பெறப்பட்டன. மேலும், வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு மிறைக்கூற்றத்துப் பிரம்மதேய இராமனூர் சபையார் 29வது ஆட்சியாண்டு முதல் 30 காசைப் பொலிசையூட்டாகப் பெற்றுக்கொண்டு, வட்டியாகத் தரும் மூணேமுக்கால் காசிற்கு இலாமிச்சைவேருக்கு ஆன செலவுகளைச் செய்யவேண்டும் என்று நிவந்தம் அளிக்கப்பட்டது.

திருவிழா என்றால் மேளதாளம் இல்லாமலா? அதற்கும் நிவந்தம் அளிக்கப்பட்டது. 

இராஜேந்திரசிங்கவளநாட்டு மண்ணிநாட்டு நாட்டார்மங்கலத்துக் கடிகையான், உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர உடையார்க்குத் திருவாய்க்கேள்வி செய்யும் ராஜகேசரி கோதண்டராமனான ஜெயங்கொண்ட சோழகடிகைமாராயன் 29வது ஆண்டுவரை பொலிசையூட்டுக்காக 40 காசு வழங்கியுள்ளார். ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்துச் சபையார் 40 காசினை வருடந்தோறும் செலுத்தவேண்டும். அதில் அரைக்காசு வீதம், திருப்பறை அடிக்கும் கடிகையார் ஐவர் ஆட்டைதிருவிழா கொடியேற்று நாளில் பறை கொட்டுவதற்கு கூலியாகப் பெற்றுக்கொண்டனர். 

மேலும், ஆடவல்லான் திருச்சுற்று வைபவத்தின் போதும் பறைகொட்டுவதற்கு அரைக்காசு வீதம் 5 மேளக்காரர்களும் பெற்றுக்கொண்டனர். ஒருவேளை, முந்தைய ஆட்டைத் திருவிழாவின்போது பறைகொட்டியவர் கிடைக்கவில்லை என்றால், வேறு ஒருவர் இரு உற்சவங்களின்போதும் பறைகொட்டி ஒருகாசு வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிவந்தமளிக்கப்பட்டது.
அன்னமிடல் என்பது அந்நாளில் இயல்பாய் நடைபெற்ற ஒரு தர்மவழக்கமாக இருந்துள்ளது. 

 இராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர சதயவிழாவின் போதும், வருடாந்திர ஆட்டைத் திருவிழாவின் போதும், சிவயோகிகள் பதின்மரும் உடையார் சாலையிலே உண்ணக்கடவர் என்று பெயர் குறிப்பிடயியலாத  ஒரு பெருமகனார் நிவந்தமளித்துள்ளார். 25 கலம் நெல் ஒரு வருடத்திற்குத் தேவைப்பட்டது. ஒரு குறுணியும், 2 நாழி நெல்லும், ஆடவல்லான் என்னும் அளவையால் அளந்து சிவயோகிகளுக்கு ஒரு வேளை உணவிற்காகக் கொடுக்கப்பட்டது. 
திருவிழா நடந்த அத்தனை நாட்களிலும் 240 சிவயோகிகள் வயிறார உண்ண உணவளிக்கப்பட்டது.

பொலிசையூட்டாக 100 காசுகள் இதற்காகப் பெற்றுகொண்டவர்கள் நித்தவினோத வளநாட்டு வெண்ணிக்கூற்றத்துப் பிரம்மதேயத்துப் பெருநங்கைமங்கலத்துச் சபையார். பெற்றுக்கொண்ட பொலிசையூட்டுப் பணத்திற்கு அவர்கள் வட்டிவிகிதமாய் ஒரு காசிற்கு மூன்று குறுணி நெல் வருடந்தோறும் அளிக்க கட்டளையானது.

சூரியன் இருக்கும் திசைநோக்கி முகம் திருப்பும் சூரியகாந்தி மலரெனப் பல பெருந்தனத்து அதிகாரிகள் அன்று செயல்பட்டுள்ளனர். 

யதா ராஜக: ததா சேவக: என அவர்களில் ஒருவர் தான் ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையாருக்கு ஸ்ரீகாரியம் செய்த பொய்கை நாடுகிழவன் ஆதித்தன்சூரியனான தென்னவன் மூவேந்தவேளான். இவர் திருவிழாக்களின்போது இறைத்திருமேனிகளுக்குத் திருவமுது படைப்பதற்கான நிவந்தம் அளித்துள்ளார். பொலிசையூட்டாக 78 காசுகள் கொடுத்துள்ளார். இக்காசு ஒன்றுக்கு வட்டியாக மூன்று குறுணி நெல் வருடந்தோறும் தஞ்சைப் பெரிய பண்டாரத்தில் சேர்க்க வேண்டும்.

என்னென்ன திருவமுது 
படைத்தார்கள் என்றால், 

அப்பக்காய்க் கறியமுது, கைக்கறியமுது (பழங்களால் ஆனது), பொரிக்கறியமுது, புளியங்கறியமுது ஆகியன. இவற்றைச் சமைக்கத் தேவையான போனகபழவரிசி, பூரிநெல்லு, பருப்பு, மிளகு, கடுகு, சர்க்கரை, ஜீரகம், கொள்ளு, நெய், தயிர், உப்பு, புளியங்காய்கள், பழம் எனப் பலதும் வட்டி நெல்லிற்கு இணையாகப் பெறப்பட்டன. அமுதைப் படைப்பதற்கான வாழைக்குருத்து இலைகள், அடையக்காய் (பாக்கு), வெள்ளியிலை (வெற்றிலை) எல்லாம் பெறப்பட்டன. திருவமுது சமைப்பதற்கான விறகுக்கட்டைகள் பெறவும் வட்டிநெல் நிவந்தமளிக்கப்பட்டுள்ளது. 
வழிபாட்டின்போது தூபமேற்ற உரியுஞ்சிதாரி எனப்பட்ட தோலுடைய தூபப்பண்டம் உபயோகிக்கப்பட்டது. அதைப் பெறுவதற்கும் ஒரு நாழிநெல் ஒரு காசிற்கு வட்டியாகப் பண்டாரத்தில் வைக்கப்பட்டது.

திருவிழாக்களின்போது ஸ்ரீஇராஜராஜீஸ்வரமுடையாருக்கும், தட்சிணமேரு விடங்கருக்கும் விளக்கேற்றவும், தூபமிடவும் வேண்டுமல்லவா? தீபமேற்றக் கற்பூரங்களே உபயோகிக்கப்பட்டன.

 தீபம், தூபம் ஏற்றவும், திருவமுது படைக்கவும் மொத்தம் 94 காசுகள் தஞ்சைப் பண்டாரத்தில் பெருமகனார் ஆதித்தசூரியனால் பொலிசையூட்டாக வைக்கப்பட்டன. இப்பொலிசையூட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்துப் பிரம்மதேயப் பெருநங்கைமங்கலத்துச் சபையார், வட்டியாக நெல்லும் காசும் வருடந்தோறும் கொடுக்கக் கட்டளையானது.

இவ்வாறாக, அன்று ....

ஸ்ரீஇராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர, வருடாந்திரத் திருவிழாக்கள் களைகட்டின. அன்றுமுதல், இன்றுவரை திருச்சதயவிழா தவறாமல் நடைபெற்று வருகிறது. 
(என்ன, பல வேறுபாடுகள் உள்ளன.) 

சந்திர ஆதித்தவர் உள்ளவரை இந்தத் தர்மம் நடக்கக்கடவது என்று கல்லில் வெட்டிச் சென்றுள்ளர்கள். 

ஆதலால், சந்திர ஆதித்தவர் உள்ளவரை திருசதயத் திருநாள் இன்றும், என்றென்றும் கொண்டாடப்படும்.




பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரத்தாண்டு இராஜராஜ சோழனின் புகழ் நிலைக்க வேண்டும்.

தமிழ் உள்ளவரை, தமிழ்மண் உள்ளவரை.

நிலவு உள்ளவரை, பிரபஞ்சம் உள்ளவரை.

ஆதித்தன் உள்ளவரை, பொதிகைத் தென்றல் உள்ளவரை.

நன்றி. செல்வி அருண்குமார் , திருச்சி

வெள்ளி, 1 நவம்பர், 2019

கள்ளர் குல வரலாற்று ஆராய்ச்சியாளர் ஐயா ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்



இன்றும் தனது பெரும் முயற்சியிலும் மற்றும் பெரும் ஆராய்ச்சியிலும் நமது கள்ளர் வரலாற்று ஆவணங்களையும் மீட்டெடுத்து, இன்றும் தொடர்ச்சியாக கள்ளர் வரலாற்றை ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் ஐயாஜெ யராம் இராசகண்டியர் கிருபாகரன்.

B.Sc(Mech.Eng) M.Sc(Mech.Eng) MBA, M.I.Mech.E., M.I.Chem.E., Grad.Inst.B.E., A.Inst.Pet., C.Eng.,

Founder and General Secretary
INTERNATIONAL KALLAR PERAVAI
Kevin Garden. Little Smith Street. London. United Kingdom .

இவர் 10 .02.1958 ஆம் ஆண்டு பிறந்தார், இவரது தந்தை துரைராஜா இராசகண்டியன், தாயார் சம்பூரணத்தம்மாள் ஆவார்கள். இவருடைய சொந்த ஊர் தஞ்சையில் உள்ள மதுக்கூர் சிரமேல்குடி ஆகு‌ம்.

இவர் எழுதியுள்ள வரலாற்று நூல் " கள்ளர் வரலாற்று வரைவியல் " ஆகும். இதில் தேர்தெடுக்கப்பட்ட தலைப்புகளும் நூலுக்கு பெருமை படைக்கிறன. இதுவரை வெளிவந்துள்ள கள்ளர்கள் பற்றிய படைப்புகளில் மிகவும் வித்தியாசமானதாகவும் தெளிவான கருத்துக்களையும், வரலாற்று படிமங்களையும், கேட்டறியாத தகவல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்படைப்பு குறிப்பாக நம் இளைய தலைமுரையினர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

 சர்வதேச கள்ளர் பேரவை தலைவருக்கு மாலை அணிவிக்கும் கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் அவர்கள்


தஞ்சை பெரியகோவில் முன் வல்லுண்டார் மற்றும் மழவராயருடன் கண்டியர்


புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயிலில் பரிவட்டம் கட்டி மரியதையை ஏற்றுக்கொள்ளும் கண்டியருடன் திரு அருணாச்சலம் வில்லவராயர்.





வர் தம் கள்ளர் இன மக்களுக்கு சொல்லும் செய்தி :

முதிர்காலம், முதுகாலம், சங்காலம் முதல் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கிய குறுநில மன்னர் குடிகள் பலவாகும், அவற்றுள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை சிறப்பு வாய்ந்த கள்ளர்குல மரபுகள் பலவாகும் உயிரற்ற ஓலையில் உணர்வற்ற எழுத்தாணியால் எழுதி, படிக்கத் தெரியாத பெட்டகத்தில் பதுக்கி வைப்பவை மட்டும் வராலாற்று ஆதாரங்களாகி விடமுடியாது. காலங் காலமாக காதால் கேட்டு, மனதால் புடம் போட்டு வாயால் பேசுகின்ற மரபு வழிக்கதைகளும் பாடல்களும் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் முடியாத சான்றுகள்.

கள்ளர் அன்றும் இன்றும் என்றும் அவன் ஒரு சரித்திரம் அவனே அவனை உருவாக்கி அவனே அவனை அழித்தும் கொன்டுள்ளான். இதுவும் வரலாறு.

சோறுடைத்து சோணாடு என்ற சோழநாட்டின் தலைநகரை பீடார் உறந்தை என்பர்!

காவிரியின் கழிமுகத்தே சோழ்னின் கடற்கரை கோநகர் பட்டினமாம் ஒலிபுனல் புகார் என்பர்!

நன்னன் பெருமான் நல்லாட்சி தந்தவூர் பாழிப்பேரூர் என்பர்!

மலையமான் மலடர் கோமான் காரிவள்ளல் வாழ்ந்த வளமான ஊர் திருக்கோயிலூர்ப் பேரூர் என்பர்!

அதியமான் நெடுமான் அஞ்சி ஆய்ந்தவூர் தகடூர் என்பர்!

தொண்டைமானின் தொன்மையும் வளமையும் கொண்ட ஊர் காஞ்சி என்பர்!

வையாவிக் கோப்பெரும் போகனின் வளநகரை பொதினி என்பர்!

பல்லோருக்கும் வாரி வழங்கிய பாரிவள்லல் வழ்ந்த ஊர் பறம்புமலைப் பேரூர் என்பர்!

ஓரிவள்லல் வீற்றிருந்து ஒப்பற்ற ஆண்மையுடன் காத்துவந்த ஊர் கொல்லிமலைப் பேரூர் என்பர்!

வேளீர்கோன் குடியமர்ந்த குன்றமும் அழுந்தூர் என்பர்!

சோழ மண்ணை மீட்டெடுத்த விஜயலாயன் வாழ்ந்தவூர் பழையாறு என்பர்!

மாமன்னன் ராசராசன் பெருங்கோயில் படைத்த ஊர் தஞ்சை என்பர்!

அவன் மைந்தன் கொண்டவூர் கங்கைகொண்ட சோழபுரம் என்பர்!

இவ்வூர்களில் எல்லாம் மறப்பண்பு மிகுந்து அறப்பண்பு கொண்டு வளமுடன் வாழ்ந்தவர்கள் கள்ளர் என்பர்!

தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் என்று ஒரு சொலவடை சொல்லு வார்கள்.

தலையாட்டும் வர்க்கமாக இருக்காதீர்கள். தலைமை ஏற்கும் வர்க்கமாக மாறுங்கள்.

நியாயமாகவும், எதையும் எதிர்கொள்ளும் நேர்மையுடன் இருக்கும் போது எந்த நிகழ்வாலும் நம்மை சீர்குழைக்க முடியாது. நம் பாதையில் இடர் நீக்கி பயணிப்போம். நாம்பயணிக்க வேண்டியது நெடுந்தூரம். தற்பொழுது ஒரு முட்டுச் சந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம். ஆனால் வெகு விரைவில் நெடுஞ்சாலைக்கு வந்தாகவேண்டும் என்ற நோக்கில் நம் பயணம் அமைய வேண்டும். மறக்கக் கூடாத பட்டியலின் ஆரம்பமே இது.

தளர்ச்சியும், வளர்ச்சியும் வெவ்வேறு பரிமாணங்கள் என்பதனை உனர்ந்துகொள்வோம்

கள்ளர் குல கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை என்பன தொப்புள் கொடி உறவின் உணர்ச்சி மிக்க ஓர் உன்னதமான வரலாறு. புதுக்கோணத்தில் புதையலாய் குலமணம் மாறாமல் தொலைந்து போன மனிதாபிமானத்தைத் தோண்டியெடுக்கும் ஓர் கலாச்சாரப் பதிவாக அமைய வேண்டும். 

இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டிய ஒரு பாசப்போராட்டம். மூன்றாம்  தலைமுறைக்கு முதல்தலைமுறை பற்றிய பாசத்தை சொல்லும் ஒரு பதிவாக வேண்டும்.

கள்ளர் குல வரலாற்று செய்திகளை ஆய்ந்தறிந்து தொகுத்து பாதுகாத்திடல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையாகும்.

குலப்பெருமையும் உணராமல், இன உணர்வும் இல்லாமல், ஒற்றுமையுமின்றி மாற்றானுக்கு கொடிபிடித்தே மாயும் நம் இளைஞர்களை காத்திட உதவுங்கள்.

வேரை மறந்து வேறாய் மாறும் போது நமது முகவரியின் மரணம் அருகில் என்பதும் உறுதியாகிவிடும். செய்ய வேண்டிய கடமைகள் இருக்கும் போது யாசித்து பெற வேண்டிய உரிமைகளை துறந்திடுவோம்.

நம் குல பண்பாட்டையும், நாகரிகத்தையும் விளைநிலங்களான மாணவர்களின் மனவயலில் விதைத்திட உதவுங்கள் என்று சர்வதேச கள்ளர் பேரவை தங்களை உரிமையுடன் விரும்பி கேட்டுக்கொள்கிறது.



குறிப்பு:
ஐயா அவர்களின் வரலாற்று  ஆவனங்களை பெரும் பகுதியைப் கள்ளர் வரலாறு பக்கத்தில்  பதிவு செய்துள்ளேன்.

தோழர் பால்ராஜ்




தோழர்.பால்ராஜ், தோழர்.ஜீவாவின் மூத்த சீடன். ஜீவாவைப் பற்றியும்,அவரைப் பார்க்கவேண்டும், அவரது பேச்சைக் கேட்க வேண்டும் என்று பலரைத் தூண்டியவர். மேலும் வரலாற்று ஆய்வாளர் சுந்தர வாந்திய தேவர் அவர்களின் மூத்த தாய்மாமன்.

தோழர் பால்ராஜ் அவர்கள்தான் தனக்கு கம்யூனிச சித்தாந்தத்தை பற்றியும் அதனுடைய போராளித்தலைவர்களை பற்றியும் பள்ளி மாணவ பருவத்தில் தனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தனது நூலில் பெருமையுடன் குறிப்பிடுகிறார்

கள்ளர் குல வரலாற்று ஆய்வாளர் ஐயா திரு. சுந்தர வந்தியத்தேவர்



உசிலம்பட்டியைச் சேர்ந்த சுந்தர வந்தியத்தேவன்.’ ‘பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்’ என்ற அவருடைய புத்தகம் ஒரு சமூகத்தின் வரலாறு என்பதைத் தாண்டி, நல்ல படைப்பாக வந்திருக்கிறது. புத்தகத்தில் வந்திருக்கும் வரலாற்றை காட்டி லும், அந்தப் புத்தகம் வந்த கதையே முக்கிய மானது என்கிறார்கள் சுந்தர வந்தியத்தேவனை அறிந்தவர்கள்.

புத்தகங்களிலும், நூலகங்களிலும் மட்டும் குறிப்புகளை எடுக்காமல் களஆய்வின் மூலமாகவும் தரவுகளைச் சேகரித்திருக்கிறார் அதன் விளைவாகக் கள்ளர்களது சமூக அமைப்பு, நாட்டு அமைப்பு, குடும்ப உறவுகள், குலதெய்வ வழிபாடு, கள்ளர்களது அரசியல் பங்களிப்பு முதலியவற்றை எல்லாம் இந்நூலில் விரிவாகக் காணமுடிகிறது. குறிப்பாகப் பின்னிணைப்பில் அவர் கொடுத்திருக்கக்கூடிய ஆவணங்கள் மதிப்புமிக்கவை. கள்ளர்கள் பற்றிய ஆய்வில் இனிவரும் தலைமுறை இதனூடே பயணிக்காமல் செல்லவே முடியாது என்னும் அளவிற்கு, ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தக் கடுமையான உழைப்பிற்காகவும் விடாப்பிடியான முயற்சிக்காவும், அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தரமறிந்து வரிசையிடக்கூடிய வகையில் இந்நூலும் அமையும் என்பதை உரக்கக் கூறலாம்.

அவரைப்பற்றி இனி; ” என் அம்மா ‘பொன்னியின் செல்வன்’ வந்தியத்தேவனின் தீவிர ரசிகை. அதனால், எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். வந்தியத்தேவன்போல நான் வீராதிவீரனாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், நானோ பிறக்கும்போதே குறைபாட்டோடு பிறந்தேன். ‘பிளாஸ்டிக் பேபி’ என்பார்கள் என்னைப் போலப் பிறந்தவர்களை!

உடலின் தசைகள் இறுகிப்போய் கை கால்களை அசைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால், நான் நடக்க ஆரம் பிக்கவே ஐந்து வயதாகிவிட்டது.

நடக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குள் அடுத்த சிக்கல். உடல் உறுப்புகளின் எடையைத் தாங்கும் சக்தி தசைகளுக்கு இல்லை. அதனால், என் ஒட்டுமொத்த உடல் எடையும் முதுகெலும்பில் இறங்கி, முதுகெலும்பு வளைந்துவிட்டது. உணவை எடுத்துச் சாப்பிடவே கஷ்டம்.

அம்மா ஆசிரியையாகப் பணியாற்றிய பள்ளியிலேயே நான் படித்ததால், வகுப்பறைச் சங்கடங்களை ஓரளவுக்குச் சமாளிக்க முடிந்தது. பேனாவைப் பிடித்து எழுதுவதற்குக்கூட முடியாது. அப்புறம் கையெழுத்து எப்படி இருக்கும்? யாருக்குமே புரியாது!


எல்லோருக்கும் புரிவதுபோல எழுதவே ரொம்ப காலம் எடுத்துக்கொண்டேன். அப்போது எல்லாம் தேர்வுகளை நினைத்தாலே, மனம் நடுங்கும். ஆனால், பேச்சு கை கொடுத்தது. பேச்சுப் போட்டிகளில் பெயர் எடுத்தேன். கட்டுரைப் போட்டிகளில் நான் பங்கெடுத்துக்கொள்ள முடியாத நிலையில், என் கருத்துக்களை நண்பர்களிடம் சொல்லி அவர்களைப் பங்கெடுத் துக்கொள்ளச் சொன்னேன். அவர்களுடைய அழகிய கையெழுத்துக்களில் என் கருத்துக் கள் பரிசுகளை அள்ளின. ஒரு வழியாகச் சட்டம் படித்து முடித்தேன். வாசிப்பும் படிப்பும் பெரும் ஆறுதலாக இருந்தன. ஆனால், எழுத்து என்பது என்னைப் பொறுத்த அளவில் ஒரு பெரும் கனவாகவே இருந்தது.

இந்த நிலையில், என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது ஒரு புத்தகம். அது, ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய ‘கள்ளர் சரித்திரம்’. அந்த நூலை வாசிக்க வாசிக்க… நான் அதிர்ந்துபோனேன். வெறும் கொள்ளையர்களாகவும் குற்றப் பரம்பரையினராகவும் மட்டுமே ஓர் இனத்தைச் சித்திரித்து அந்த வரலாறு எழுதப்பட்டு இருந்தது. இந்த மண்ணின் பூர்வகுடிகளான பிறமலைக் கள்ளர்பற்றியோ, அவர்களுடைய எண்ணற்ற பழக்கவழக்கங்கள்பற்றியோ, வாழ்வியல் பண்புகள்பற்றியோ அதில் துளி அளவும் விஷயம் இல்லை.

ஒரு வேலை விஷயமாக மதுரைக்கு பால்டிமோரில் இருந்து வந்திருந்த பேராசிரியர் ஆனந்த பாண்டியனைச் சந்தித்தேன். அவருக்குப் பூர்வீகம் கம்பம் பள்ளத்தாக்கு. பிறமலைக் கள்ளர்பற்றி அவர் ஆய்வு செய்துவந்தார். அப்போது ‘கள்ளர் சரித்திரம்’ எனக்குள் ஏற்படுத்திஇருந்த பாதிப்பு அவருடைய ஆய்வில் என்னை நாட்டம்கொள்ளச் செய்தது. ஆய்வுப் பணி என்றால் என்ன என்று அவரிடம் கற்றுக்கொண்டேன்.

இதனிடையே சென்னையில் என் மாமாவின் முயற்சியால், தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சத்தியநாராயணன் அவர்களிடம் ஜூனியராகச் சேர்ந்தேன். என்னால் விரைந்து பணிகளை முடிக்க முடியாது. நான் ரொம்பவும் மெதுவாகவே வேலைகளைச் செய்வேன். இருந்தாலும், அவர் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தார். என் வளர்ச்சியில் பெரிய அக்கறை எடுத்துக்கொண்டார்.







ஆனாலும், என் மனம் முழுவதும் என் மக்களின் வரலாற்றைத் தேடித் தொகுக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. என் அம்மாவின் ஓய்வூதியப் பணத்தை மட்டுமே நம்பி நடந்த என் ஜீவனத்தையும் பேருந்தில் ஏறக்கூடப் பிறர் துணை தேவைப்படும் என் உடல்நிலையையும் சுட்டிக்காட்டி, என் ஆய்வுக்குத் தடை போட்டார்கள் சொந்தக்காரர்கள்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வக்கீல் தொழில் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டு ஆய்வுப் பணிக்காக கிராமம் கிராமமாகச் சுற்றத் தொடங்கினேன்.

சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்… கிராமத்து மக்கள் ஓடி ஓடி உதவினார்கள். தங்கள் ஊரார் வாழ்க்கை, தங்கள் முன்னோரின் வரலாறு பதிவுசெய்யப்படுகிறது என்கிற ஆர்வம்!

இதை ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வாகப் பார்க்கக் கூடாது. நம் சமூகத்தில் எந்த இனத்தவரும் தனி வாழ்க்கை வாழ்ந்துவிடவில்லையே? கள்ளர் இன மக்களின் வாழ்வும் பிற இன மக்களின் வாழ்வோடு ஒருங்கிணைந்தே அமைந்து இருந்தது. அதனால், இந்த வரலாற்றுப் பதிவு பல்வேறு இன மக்கள் வாழ்வோடும் இணைந்ததுதான். இதை யார் புரிந்துகொண்டார்களோ இல்லையோ… கிராமத்து மக்கள் நன்றாகப் புரிந்துவைத்திருந்தார்கள். எனக்கு எல்லா இன மக்களின் ஆதரவும் கிடைத்தது. அனைத்துத் தரப்பினருமே உதவினார்கள்.

ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்… ஒரு நாள் என் காலில் இருந்து செருப்பு நழுவி விழுந்துவிட்டது. என்னால் கால் விரலை நகற்றி செருப்பை அணிந்துகொள்ள முடியாது. அப்போது ஒரு பெரியவர் தன் கைகளால் என் கால் விரல்களை விலக்கி செருப்பைப் போட்டுவிட்டார். என்னை நெகிழவைத்து, அழவைத்த சம்பவம் அது!

எட்டாண்டு காலம் எவ்வளவோ கஷ்டங்களுக்குப் பிறகுதான் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைத் தேடிப்போய் என் ஆய்வுப் பணியை முடித்தேன். மக்களின் குரல்களைப் பதிவுசெய்தேன்.

ஆனால், அப்போது எல்லாம் ஏற்படாத சவால், நான் பதிவுசெய்ததை எழுத உட்கார்ந்தபோது ஏற்பட்டது. பேனா என்னைப் பயமுறுத்தியது. அப்போதுதான் கொச்சம்மாள் எனக்கு உதவ முன்வந்தார். தலித் பெண்ணான அவருடைய அழகான கையெழுத்தில்தான் என்னுடைய எழுத்துக் கனவு சாத்தியமானது. பல்வேறு தடைகள், அவமானங்கள், துரோகங்களைத் தாண்டி இந்த நூல் வெளிவந்து உள்ளது.

இந்த ஆய்வுக்காகப் பல விஷயங்களை விரும்பி ஏற்றுக்கொண்டேன். என் வயது நாற்பதை எட்டவிருக்கிறது. இன்னமும் திருமணம் முடியவில்லை. வருமானம் என்று அம்மாவின் ஓய்வூதியத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு திருப்தி இருக்கிறது!

இதுவரை நம்முடைய வரலாறு சேர, சோழ, பாண்டியர்களின் வரலாறாகத்தான் இருக்கிறது. மக்களின் வரலாற்றுக்கு அதில் இடமே இல்லை. நான் ஒரு சின்ன முன்னெடுப்பை ஆரம்பித்துவைத்திருக்கிறேன். இன்னமும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. மக்கள் கதைகளுக்குப் பஞ்சமா என்ன?” – வலியை மீறி வார்த்தை கள் வெளிப்படுகின்றன சுந்தர வந்தியத்தேவனிடம் இருந்து!



பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் ( Piramalai Kallar - Vaazhvum Varalarum )
Author: இரா. சுந்தரவந்தியத்தேவன் (R. Sundaravanthiyadevan)
Publisher: Sandhya Publications
Number of Pages: 720
Language: Tamil
ISBN Paperback: 9789381319840

TAKING THE ROAD LESS TRAVELLED 
by A.Shrikumar (The Hindu)

**Interview**Author and advocate R. Sundaravandhiya Thevan talks about his book in which he has documented the life and history of Tamil folk clans

Captain Rumley and his troops marched into Vellalore village near Melur and brutally killed over 5,000 Kallars in a single day as they vehemently refused to pay tax to the British Company Raj’ – (Page 516, Piramalai Kallar Vazhvum Varalarum ).

“The carnage that happened in 1767 is recorded in the year’s gazette,” notes R. Sundaravandhiya Thevan. “See how history hails king Kattabomman and the Marudhu brothers as heroes who fought the tax system. But we have comfortably forgotten those 5,000 martyrs — simply because they are no kings. They are just common people!”

Sitting under the neem tree in his modest home at Usilampatti, Sundaravandhiya Thevan discusses Communism, Antonio Gramsci’s Marxist writings and correlates socialist theories and populist ideas to native Indian communities and their ways of life.

“In India, classical literature has always glorified kings and their kingdoms. The people who lived on the fringes of society never found a mention in these. Even Tamil Sangam literature bears only minimum references to those who lived outside the royal fold,” alleges Sundar. “But, folk history,” he asserts, “can never perish. The tales are still alive among the farmers and workers in the villages. And I have documented and scrutinised these stories in my book.”

Sundar’s book 'Piramalai Kallar Vazhvum Varalarum' , released two years ago by Sandhya Pathipagam, is a result of extensive research spanning eight years. It takes a holistic look at the life and socio-economic structure of all the classes of the subaltern. The first part records the numerous oral stories that are in circulation even today and the second half analyses rare documents and historical evidences. “I travelled to nearly 500 villages all over southern Tamil Nadu and ended up with a dozen notebooks of hints and famous tales,” beams Sundar. Nearly 2,000 copies of the book have already been sold.

Living beyond generations
-----------------------------------
It was at a roadside tea stall that Sundar found his calling. “I heard a school boy narrate a story about his ancestors. And it struck me that I had read the same story in Louis Dumont’s 'A South Indian Subcaste' that was written in 1947. That’s when I realised that these stories live beyond generations and centuries.” In the course of his research, there were times when Sundar encountered discouraging statements from family, friends and strangers.

American-Indian anthropologist Ananda Pandian who was doing a study on the Cumbum Valley Kallars, played a major role in inspiring Sundar to continue his research. “He encouraged me to write about the sufferings and struggles of the folk communities. Caste histories have always been promoted. I wanted to present plain truth,” he says. “Every caste group claims a royal lineage today. Unfortunately, they are unaware of the fact that aristocracy can easily be uprooted and overthrown. But it’s the working clans that survive time and the onslaught of invasions and wars.”

An anthropological thesis
----------------------------------
“Caste should be seen as a system and not a sentiment. The deciding factors of caste have differed during various time periods. Once, it was based on clothes and food. Then, occupation demarcated the various castes. And today, political and economical status translates into caste which everyone clings to,” observes the Economics graduate. “My book is not a casteist creation. It’s an anthropological thesis that brings to the fore the realistic issues our society faced at a time,” he asserts. According to Sundar, geographical divisions of the erstwhile Tamil land had a great impact on the behavioural and cultural patterns of the communities that lived in the regions. “Those who lived in the fertile plains and rich forests naturally had a better socio-economic condition, as we were largely an agrarian society in the past,” he notes. “But the clans that lived in dry regions were oppressed and relegated by the successive ruling classes. And till date, economic policies of the Government remain biased.”

Sundar cites the example of the Periyar and Sirumalai irrigation channels that were laid during the British Raj. Wherever the water reached, the farmers became a rich clan. And where it didn’t, the community continued to struggle and their behaviour remained rugged and they were called ‘uncivilised’. “When they resisted the tax system, they were branded ‘criminals’ and that’s how the Criminal Tribes Act came into being,” says Sundar, showing copies of related documents from 1871 onwards. The latter chapters of Sundar’s book give an in-depth idea of the Act.

Sundar is currently involved in a research on the folk religion of native Tamil people. “My desire is not to preserve history but to properly document it,” he says.

Folk history can never perish. The tales are still alive among the farmers and workers in the villages. And I have documented these stories in my book.


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்