தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கிராமத்தில் கோவில் உள்ளது! வருடா வருடம் குருபூஜை நடக்கிறது. உலகிலேயே ஒரு தமிழ் பண்டிதருக்கு கோவிலும்,வழிபாடும் உண்டெனில் அது நா.மு.வேங்கடசாமி நாட்டார் ஐயா ஒருவருக்கு மட்டுமே. ஐம்பெருங்காப்பியங்களுக்கு நடைவுறையை ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.
தமிழ் தொண்டர் நாட்டார் அவர்கள் என்றால் தவறில்லை. கள்ளருக்காக மட்டும் பாடுபடவில்லை தமிழுக்காக பாடுபட்டுள்ளார்.
குடும்ப வரலாறு :
யோகப்புலி நாட்டார்
வீரு நாட்டார்
முத்துச்சாமி நாட்டார்
நா.மு.வேங்கடசாமி நாட்டார்(1884_1944)
நடராஜன் நாட்டார்
வேங்கடசாமி நாட்டார்
நான் யார் என்றே அவர்களுக்கு தெரியாது ஆனால் அங்கு சென்றவுடன் தண்ணீர்,மோர் என உசரிப்பு போக அன்பளிப்பாக "கள்ளர் சரித்திரம் ", யோகப்புலி நாட்டார் வரலாற்று புத்தகங்கள். அதுதான் பண்டிதர் நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டாரின் பாரம்பரியமிக்க குடும்பம்.
அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். நாட்டார் ஐயா அவர்கள் தன் தந்தை முத்துச்சாமி நாட்டாரிடம் தன் வீட்டு திண்ணையில் கற்றதே தமிழ்.
சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரை தமிழ்சங்கத்தில்
1.பிரவேச பண்டிதம்
2.பால பண்டிதம்
3.பால பண்டிதர் இவை ஒவ்வொன்றும் 3 வருடங்கள் மொத்தம் 9 வருடங்கள் படிக்க வேண்டும் ஆனால் நாட்டார் ஐயா அவர்கள் 9 வருட படிப்பை ஒரே 1 வருடத்தில் படித்து முடித்துவள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் "தோடா" (தங்கத்தால் செய்யப்பட்ட காப்பு வாங்கியவர்) பெற்றார்.
250 வருடமாக,8 தலைமுறையாக ஓர் வீட்டில் வாழும் குடும்பம் என்றால் அது நாட்டார் ஐயாவின் குடும்பம் மட்டுந்தான் என்றால் மிகையில்லை.
திருச்சி பிஷப் ஃபீபர் கல்லூரியில் பணியாற்றியபோது நாட்டார் ஐயா அவர்கள் சுவாச பிரச்சினையில் இருந்துள்ளார் அப்போது பாரதியார் அவர்கள் வந்துள்ளார் சிலப்பதிகாரத்தில் சந்தேகங்களை கேட்டுள்ளார் அவை அனைத்திற்கும் கண்களை மூடிக்கொண்டே பதிலளித்துள்ளார் நாட்டார் அவர்கள். உடல்நிலை சரியில்லையாதலால் பின்பு மாணாக்கர்களிடம் யார் வந்தது என கேட்ட பிறகு மாணாக்கர் சொல்லியவுடன் நாட்டார் ஐயா அவர்கள் மனம் சங்கடப்பட்டுள்ளார்.
சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார்.
(1) அகத்தியர் தேவாரத் திரட்டு, (2)தண்டியலங்காரப் பழைய உரை, (3) யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றிற்குத் தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க உரைத்திருத் தங்களும் எழுதினார்.
- திருவிளையாடல் புராணம் (அ.ச.ஞானசம்பந்தன் அவர்தம் தந்தையார் அ.மு.சரவண முதலியாருடன் இணைந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்டது)
தமிழ்பல்கலைகழகம் மூன்று புத்தகங்களை இவரை பற்றி வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் தமிழ் என்றாலும், கள்ளர் வரலாறு என்றாலும் ஐயா அவர்களை புறக்கணிக்க முடியாது. அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியாற்றியுள்ளார்.
தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார்.
வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது. இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர்.
தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலயம் என்னும் காண்டீப விருது பெற்ற குன்னங்கோட்டை நாட்டார் மடத்தை நிறுவிய வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் உதவியுடன் முயன்றார்.மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் தனது சொத்துக்களிலிருந்து 200 ஏக்கர் நிலம் கல்லூரி நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினார்.பிற்காலததில் அது பலரால் தையகப்படுத்தப்பட்டு விட்டது.அதற்கான ஆதாரம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் வாரிசுகளிடம் உள்ளது.
1980களில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்.
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் நாவலர் கனவு கண்ட திருவருள் கல்லூரியையும் அதே பெயரில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ்க் கல்லூரியாக நிறுவி நடத்தி வருகிறார்கள்.
ஆய்வு : பரத் இராமகிருஷ்ணன் கூழாக்கியார்