முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரைநாழிகை யளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது, அதில் செங்கல்லாலய கோட்டை மதிலின் அடிப்பகுதியம், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன.
கோட்டைக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்துகிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற்பார்த்துள்ளேம்.
ஒரு மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர்
'செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா'
எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர்.
துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் பதிலுக்கு அழித்துவிட்டார்கள் கூழாக்கியார்கள்.
அதாவது மராட்டிய படைகள் வருவதற்கு முன்பே மழைக்காலத்திலேயும் கட்டுமரம் போன்ற எவ்வித வசதியும் இன்றி விண்ணாற்றை நீந்தி கடந்து அதேபோல இரவோடு இரவாக தொண்டராயன்பாடி கோட்டையை கள்ளர்குல கூழாக்கியார்கள் அழித்துவிட்டனர்.
இன்றும் கோட்டை மேடுகள் தொண்டராயன்பாடியிலும், பழைய சிவன் கோவில் ஆற்காட்டிலும் உள்ளது.
தகவல் : கள்ளர் சரித்திரம்
ஆய்வு : உயர்திரு . பரத் கூழாக்கியார்