கள்ளர் ( நாகர் - வேளிர் - சோழர்)
நாகர்கள் வழி வந்தவர்களே கள்ளர்கள் மற்றும் மறவர்கள் என்பதை நாம் அறிந்ததே. வேளிர், நாகர் வழி வந்தவர்கள் என்பதற்கும் , சோழர்கள் வேளிர் வழி வந்தவர்கள் என்பதற்கும் உள்ள தரவுகளை பர்போப்போம்.
கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்த பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் வேள், ஆள், பெருமகன் (பருமகன், பருமகள், பருமக) போன்ற பட்டப் பெயர்கள் மேலும் இலங்கையின் தமிழ் பகுதியில் கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர் அரசர்களின் மூன்று இராசதானிகள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நாகர்கள் வழி வந்தவர்களே கள்ளர்கள் மற்றும் மறவர்கள் என்பதை நாம் அறிந்ததே. வேளிர், நாகர் வழி வந்தவர்கள் என்பதற்கும் , சோழர்கள் வேளிர் வழி வந்தவர்கள் என்பதற்கும் உள்ள தரவுகளை பர்போப்போம்.
கல்லடிச்சேனை வேரம் எனும் இடத்தில் வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பத்துக்கு மேற்ப்பட்ட கருங்கற்தூண்கள் மிக ஆழமான நிலையில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ளது எனவும், அவற்றுள் நிலத்திற்கு மேலாகவுள்ள 7' 6' நீளமும் 1' அகலமும் உடைய தூணையும், 9' 10' நீளமும்1'அகமும் உடைய தூணையும் ஆய்வு செய்த போது அதில் தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டன.
அதில் வேள் நாகன் மகன் வேள் நாகன்' என நாகர் அரசர்களின் பெயரும் 'வேள் நாகன் பள்ளி' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் கருத்து நாகர் அரசர்களின் அரண்மனையை குறிப்பதாகும். மற்றுமொரு தூணில் நாக பந்தத்தின் உருவமும் காணப்பட்டன. (பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள். சமணர் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. அங்கே கல்வி அளிக்கப்பட்டமையால்தான் பள்ளி என்ற சொல்லே வந்தது)
பாவுகை கல் ஒன்றில் மணி நாகன் பள்ளி என காணப்பட்டன. இதன் கருத்து நாகர் அரசர்களின் வழிபாட்டுத் தலம் ஆகும். இங்கு 'வேள்' எனக் குறிப்பிடப்படுவது அரசர்களுக்கு வழங்கப்படும் உயரிய சிறப்புப் பட்டம் ஆகும். இங்கு கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து சான்றுகளிலும் வேள்நாகன், வேள் கண்ணன் எனவும் தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டிருந்தன. அத்தோடு 5'6' விட்டம் உடையை அரைவட்டக் கல்லிலும் 2'5' விட்டமுடைய கருங்கல்லிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகர் கல்வெட்டு சாசனங்கள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன் அவர்களினால் ஆலய முன்றலில் இருந்த இரு கருங்கற் தூண்கள் அரைவட்ட வடிவ கருங்கல்லிலும் எழுத்துக்கள் இருப்பதை அவதானிக்கப்படதையடுத்து அவற்றை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் தெரியப்படுத்தியதை அடுத்து பேராசிரியர் கல்வெட்டினை ஆய்வு செய்து பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்தினார்.
ஆலய முன்றலில் காணப்பட்ட 5அடி 8 அங்குலம் உடைய அரை வட்டக் கருங்கல்லை ஆய்வு செய்தபோது அதில் கி. மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்hட்டது. குறித்த கல்லில் குறிப்பிடப்படும் விடயமானது மணி நாகன் பள்ளி வேள் கண்ணன் என எழுதப்பட்டுள்ளது.
மணிநாகன் என்பது நாகர்களது வழிபாட்டு தெய்வமாகிய நாகதேவனை குறிப்பதாகும், மணிநாகன் பள்ளி என்பது நாகர்களது வழிபாட்டு தலம் என்பதாகும். மணிநாகன் பள்ளி வேள் கண்ணன் என்பது வேள் கண்ணன் எனும் நாகமன்னனால் அமைக்கப்பட்ட ஆலயம் என்பதாகும். வேள் கண்ணன் என்பது நாகரசனின் நாமம் ஆகும். வேள் என்பது அரசர்களுககு வழங்கும் சிறப்பு பட்டமாகும்.
“நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்” என்ற பாடல் வேளிர் அரசர்கள் திருமால் வழிவந்த அரசர்கள் என்று தொல்காப்பியம் உரைக்கிறது. நாவலர் வேங்கடசாமி நாட்டார் “வேளிர் வரலாறு" என்ற நூலில் வேளிர் என்பார் வடநாட்டினின்று வந்தவரல்லர், அவர்கள் தமிழ் நாட்டுப் பழங்குடியினர் என நிறுவியுள்ளார்.
Add caption |
ரா. இராகவ ஐயங்கார் வேளிர் நாகர் பற்றிய கூறிய தகவல் கீழே உள்ளது.
பெருவயல் செப்பேட்டில் ஒப்பம் இட்டிட்ருக்கும் ஒவ்வொரு கள்ளர் குல நாட்டர்கள் தங்களை நாராயணப்பேரரசு வழிவந்த கள்ளர் படைத்தலைவர்கள் என கூறியுள்ளனர்.
தமிழகத்தில் வேந்தராட்சி (சேர, சோழ, பாண்டியர்) உருவாகி நிலைபெறுவதற்கு முன் வேள் ஆட்சி உருவாகி நிலைபெற்றது. தொல்குடிகளின் இரத்த உறவினால் வேள் (குடித்தலைவன்) எழுச்சி பெற்றான். சங்க காலத்திற்கு முன்பே வேளிர் உருவாகிவிட்டனர். தொல்குடிகளில் இருந்த மக்களுக்கும் வேளுக்குமிடையிலான உறவு இரத்த உறவின் அடிப்படையில் உறுதிப்பட்டு நின்றது. ஆகோள் பூசலில்தான் முதலில் வேள் உருவானான். காலப்போக்கில் பூசல் காலங்கள் மட்டுமின்றி அமைதிக் காலங்களில் வேளாகவே நிலைபெற்றான்.
- கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்.
- ..அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்
- வேள் ஊர் அவ்வன் பதவன்
வேளிர் எழுச்சி பெற்றமைக்கு ஆகோட் பூசலும் காரணமாகும். சங்க காலத்திற்கு முன்பும், சங்க காலத்திலும் ஆகோள் பூசல் தொடர்ந்து நடைபெற்றது. ஆகோள் பூசலில் ஈடுபட்டு வீரங்காட்டிய மறவர் (மழவர்?) களின் தலைவன் வேள் என்று கருதப்பெற்றான். ஆகோள் பூசலில் தலைமை தாங்கி நடத்திய தலைவன் வேள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகோள் பூசலின்போது பூசல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழககம் ஆபபிரிக்கக் கால்நடை வளாப்பவர்களிடையிலும், வேதகால மேய்ப்பர்களிடையிலும் காணப்பட்ட இயல்பாகும். பின்னர் அமைதிக் காலங்களிலும் அவர்கள் மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். உலகம் முழுவதிலுமுள்ள கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் காணப்பட்ட தலைவர் முறை வேளிர் வரலாற்றிலும் நிலைபெற்றிருக்க வேண்டும்.
வேளிர் ஆகோள் பூசலின் தொடர்பினை விளங்கிக் கொள்ள செங்கம்-தருமபுரி நடுகற்களே சிறந்த சான்றுகள். இப்பகுதியில் வேளிர்களே நிறைந்திருந்தார்கள். நன்னன், கங்கன், கட்டி, அதியன், பாணன் போன்ற தலைவர்கள் இப்பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்பெறுகின்றனர். சங்க காலத்திலும் இப்பகுதியல் நிரைகோடல் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. வேளிர்களுக்கிடையில் முரண்பாடுகளும், உடன்பாடுகளும் மாறிமாறியிருந்தன. மேலே கூறப்பெற்ற நன்னன் வேள் என்ற நிலையில் ஆட்சி செய்திருக்க வேண்டும். அந்த வேளின் கீழ் வாழ்ந்த குடிகள் ஒரு குறிப்பிட்ட குலத்தினைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உறவுமுறை இரத்த உறவினால் பிணைக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ கள்ள சோழன் நடுகல்லும் இதனை நமக்கு உணர்த்தும்
கற்கால நெறிமுறைகள் தெரியாத குடிகளால்.
கள்ளர்களும் கொண்டையங்கோட்டை மறவர்களும் ஆகோள் பூசலில் முழு மெட்ராஸ் ப்ரெசிடென்சியில், அதாவது ஆந்திர ஒடிசா எல்லை வரை அவர்களுக்கு நிகராக யாரும் இல்லை என்கிறார்கள் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள். அது அவர்களுக்கு நீங்காத சந்தோஷத்தை கொடுத்தது என்கிறார்கள். அது புறநானுற்றில் சொல்லப்பட்ட போர்குடி பழக்கம் என்பதால் பிற்காலத்திலும் ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. முழு உலகிலும்
பழங்கால கடவுள்களுக்கும் , அரசர்களும் மாவீரர்களும் மட்டுமே உரித்தான ஒரு போர் நெறிமுறை ஆகோள் பூசல்.
துவரை என்னும் நகரில் செம்பாலான கோட்டை இருந்தது. அவ்வூர் வள்ளண்மையால் சிறப்புற்று விளங்கியது. வேளிர் குடியினர் அதனைத் தலைநகராகக் கொண்டு தொன்றுதொட்டு ஆட்சிபுரிந்து வந்தனர். அக்குடி வடபால் முனிவனாகிய வசிட்டன் தவம் செய்த காட்டில் வாழ்ந்துவந்தது. அக்குடியில் நாற்பத்தொன்பதாவது கால்வழியில் வந்தவன் இருங்கோவேள். துவரை என்னும் இந்த நகர் வடநாட்டிலுள்ள துவாரகை அன்று. வடபால் துவரை என்பது மைசூரைச் சார்ந்த துவாரசமுத்திரம் என்னும் நகரம். தென்பால் துவரை என்பது திருவாரூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி. இது எவ்வி, புலிகடி மாஅல் ஆகிய வேளிர்குடி அரசர்களின் தலைநகர்.
இருங்கோவேளை புலிகடிமால் என்கிறார். மால்- திருமால், திருமால் வழி வந்தவன். துவாரகை நகரை ஆண்டு 49 தலைமுறைகள் தொன்றுதொட்டு வந்த வேளிர் குல வேந்தரில் சிறந்த வேளிர் வேந்தன் நீ என அவனை புகழ்கிறார். ஆனால் உண் முன்னோரில் ஒருவன் கழாத்தலை புலவனை இகழ்ந்ததன் காரணமாகவே அந்நகரங்கள் அழிவை சந்தித்தன என்கிறார்.
வேளிர்கள் கிருட்டிணனது நாட்டினர் என்றும் அவர்களில் 18 பிரிவினரை அகத்தியர் தமிழகம் அழைத்து வந்தார் என்ற விடயத்தை நச்சினார்கினியார் (14 ஆம் நூற்றாண்டு) கூறுகிறார். இவை கபிலர் பாடல் மூலமும் தெரியவருகிறது. ஆனால் கபிலர் வடபான் முனிவன் என்றே குறிப்பிடுகிறார் மேலும் அம்முனிவன் அகத்தியர் என்று கூறவில்லை.
வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாகவும் எழுதுதற்குச் சுகமாகவும் இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் உடன்படுவதில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். "வேளாண்மையாகிய உழவுத் தொழில்" செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:
“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத்தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது.”(தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)
துவாரகையை ஆண்ட கண்ணனின் (திருமால்) வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை' எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.
தமிழகத்துமுழைஞ்சுகளில் பொறிக்கப் பெற்ற (வேள் அறை நிகம் என்றும், வேண்காசிபன் (வேள்காசிபன்)என்றும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கூறப்பெறுகின்றது. அரிட்டாபட்டியில் உளியன்(வொளியன்) என்று ஒருவன் பெயரைக் கூறும் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஒளியன் என்பது வேளைக் குறிக்கும்.
கொடுமணலில் நடைபெற்ற அகழ்வாய்வில் இரண்டு பானை ஓடுகளில் வேள் என்று எழுதப்பெற்றிருந்தது. இவை கொடுமணல் வேள் ஆட்சியின் கீழ் இருந்தமையைச் சுட்டுகின்றன எனலாம்.
ஈழத்தில் கிடைக்கின்ற பிராமிக் கல் வெட்டுகளில் பத்துக்கும் மேற்பட்டவற்றில் வேள்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ்ப்பகுதிகளிலேயே கிடைக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணப் பகுதியில் வெளி என்று எழுதப் பெற்ற பானையோடு ஒன்று சிடைத்துள்ளது. ஆகையால் தமிழ்நாட்டில் வேள் ஆட்சி சிறப்புற்றிருந்த காலம் ஒன்றிருந்தது என்று உறுதியாகக் கூறலாம். இது முரண்பட்ட இயல்பு. ஆனால் வேள் என்றுகூறப்படாத சிற்றரசர்களைக் கூட வேள் என்று கொள்ளலாம்.
வேளிர், வேள் என்பதன் பன்மைச் சொல், வேள் என்பதற்கு பேராசிரியர் மொ.அ. துரைஅரங்கசாமி வெள், வெளிச்சம் ஆகியவற்றிலிருந்து உருவான சொல் என்று கூறுவார். மேலும் வேள் என்பது ஒளி என்ற பொருளைத் தந்தது என்று கூறும் அவர் ஆய்வினை மேற்கோள் காட்டுவது பயனுடையது.
வெளியன், வெளிமான் போன்ற சொற்கள். வேளிர் என்ற சொல்லைப் பற்றி ஆராயும்போது குறிக்கப்பட்டன. ஒளியரே வெளியர் என்றால் ஒளி வெளி ஒரே பொருளைக் குறிப்பனவாகும். தற்காலத்துப் பேச்சு வழக்கில் வெளிச்சம் என்னும் சொல் ஒளி என்னும் பொருளிலேயே வழங்குகிறது. வெள்ளை, வெண்மை, வெள்ளி என்ற சொற்கள் எல்லாம் வெண்மை நிறம் அல்லது ஒளியுடைய என்ற பொருள் தரும் வெள் என்ற அடிச்சொல்லின் அடியாகப் பிறந்தன எனலாம். வேள் என்ற சொல்லும் இதனடியாகப் பிறந்தது எனக்கொண்டால் அச்சொல் புகழ்பெற்ற ஒள்ளியராய் விளங்குவோர் என்ற பொருளைத் தருவதாலும அல்லது பழங்கலாத்தில் அரசர்களைப் பற்றிப் பொதுவாக நிலவிய நம்பிக்கையின்படி வேளிரிடத்துள்ள ஒளி அல்லது கடவுள் தன்மை என்ற பொருளைத் தருவதாகலாம்.
அரங்கசாமியின் ஆய்வு முடிவுகள் வேள் என்ற சொல்லினி உண்மைப் பொருளை விளங்கிக் கொள்ளப் பெரிதும் துணை நிற்பது வேள், ஒளி ஆகிய விளக்குவார்.
இளையர் இன முறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும். (698)
இக்குறளுக்குப் பொருள் அரசரை இளையவர், தமக்கு இன்ன முறையுடையபவர் என்ற அமைதியானது அவரிடத்தில் உள்ள ஒளியோடு பொருத்த ஒழுக வேண்டும் என்பதே. ஈண்டு பரிமேலழகர் ஒளியானது அரசர் உறங்கா நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை என்று கூறுவார்.
பட்டினப்பாலையில் "பல்ஒளியர் பணி பொருங்க" என்று பயின்றுவரும் அடி எடுத்துக் காட்டத்தக்கது. இவ்வடியில் பல் ஒளியர் என்று கூறுவது வேளிர்களையே எனலாம். வேளிர்க்கு ஒளியர் என்ற சொல்லும் பயன்படுத்தப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வேள், ஒளி ஆகிய சொற்கள் ஒரு பொருள் நுதலிய சொற்கள். அவை ஒளியையும், தலைவளையும் குறித்து வந்தன. செந்தமிழ் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளைப் குறிப்பிடும் ஒரு பாடலில் வேணாடு என்று கூறப்பெறுகின்றது. அதே செய்தி பற்றி மற்றொரு பாடலில் வேணாடு என்பதற்குப் பதிலாக ஒளிநாடு எனக் கூறப்பெறுகின்றது.
ஆகையால் வேள், ஒளி ஆகிய சொற்கள் ஒரு பொருள் நுதலியன எனலாம். மேலும் வேளிரும், ஒளியரும் அவ்வாறே எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையே தரும் எனலாம். பாண்டியர் செப்பேட்டில் (வேள்விக்குடி செப்பேடு) ஒளிநகர் அழிந்து என்று கூறுவது கூட வேள்நகரை அழித்து என்றும் பொருள். இதுவும் ஒளிக்கும், வேளிருக்கும் இடையிலுள்ள தொடர்பினை உறுதிப்படுததுகின்றது. ஒளிக்கும் வேளுக்கும் இடையில் உள்ள தொடர்பினை வலியுறுத்த அணமையில் கண்டுபிடிக்கப் பெற்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு சான்று பகர்கின்றது. அக்கல்வெட்டில் "நெல்வெலி சழிவன் வொளியன் முழகை செய்பிதோன்" என்று பயின்று வரும். கல்வெட்டில் வரும் ஒளியன் என்ற சொல் எடுத்துக் காட்டத்தக்கது. தலைவனை வொளியன் என்று கூறுவது, ஒளியன் என்று கூறும் மரபும் உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.
பசிபிக் கடலில் பரந்து விரிந்து கிடக்கும் தீவுக் கூட்டங்களில் வாழும் பாலினேசிய மக்களிடையில் தொல்குடி அமைப்பு வேள் ஆட்சி இரண்டுக்கும் இடைப்பட்ட படி நிலைகள் ஆகியவை நிலை பெற்றுள்ளன. அது போலவே கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் இந்தச் சமூக அமைப்புகளைக் காட்டும் நிலைகளைக் காணலாம். இவற்றில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு தமிழக வேள் ஆட்சி எழுச்சி பற்றி ஆய்வு செய்யலாம். பசிபிக் சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் வாழும் பாலினேசியர்கள் தங்கள் (தலைவர்) அரசர்களை மன என அழைப்பர். அதற்கு ஒளி, கடவுள் தன்மை என்று பொருள். குஷான மன்னன் கனிஷ்க என்ற பெயருக்கும் ஒளி, கடவுள்தன்மை என்ற இரு பொருள்கள் உண்டு. இதுபோல பல சான்றுகளைக் காட்டிச் சொல்லலாம். குடியில் ஒளிமிக்க ஒருவன் பிற மக்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது. காலகதியில் வேள் என்பது சிறந்து நிற்போருக்கு அளிக்கப்பெறும் விருதாக நின்றுவிட்டது. வேளாளரில் மகட்கொடைக்குரியோரைக் குறிக்கும் போது வேள் எனவும், அரசு எனவும் உரிமையெய்தினோரும் என்ற நச்சினார்க்கினியர் கூறுவார். ஆகையால் குறிப்பிட்ட குடித்தலைவரை மட்டுமின்றி பிற தலைவர்களையும் வேள் என்று கூறுவதைக் காண்கின்றோம்.
வேள் என்பதன் பன்மை வேளிர் என்பதாகும். சங்ககாலத் தமிழகத்தில் வேள். ஆய்வேள், அழுத்தூர் வேள், அழும்பில் வேள், மையூர் கிழான் வேள்மான், வெளியன், வேள்மான், பிவூர் வேள்மான், நெடுவேள் ஆதன், இருங்கோவேன் போன்ற வேளிர் குறிக்கப் பெறுகின்றனர். அகநானூற்றில் பதினான்கு வேளிர் (135) பதினொரு வேளிரு (246) ஐம்பெரும் வேளிர் எனப்பன்மையிலும் வேளிர் கூறப்பெறுகின்றனர். வேளிருக்குள்ளும் போர்பூசல் நடைபெற்றன என்பதற்குச் சான்றுகள் கிடைதுள்ளன. வேளிர்கள் பூசல் தலைவர்கள்.
பெருவேள், நெடுவேள், மாவேள் என்று கூறுவர் வேளிர்க்குள்ளும் அதிகார அடுக்கு உருவாகிவிட்டதையே காட்டுகின்றது. முருகன் பெருவேள் என்று பெருங்கதையில் குறிக்கப் பெறுகின்றான். வேளிர்களையும், கடவுளரையும் பெருவேள் என்று கூறும் மரபு உருவாகி விட்டதையே இது காட்டுகின்றது. தமிழ் இலக்கிய மரவின் மகன், பெருமகன், கோ நொடுமான் (நேடு மகன்) நெடுமிடல் போன்ற அடைமொழியும் சங்ககால அரசியலில் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களையும், குடித்தலைவர்களையும் குறித்தன. குடிப்பெயர்களுடன் மகன், பெருமகன் அடைமொழி பயின்று வரக் காண்கிறோம். அண்டர்மகன் குறுவழுதி, அதியர் பெருமகன் போன்ற தலைமை நிலை வேள் ஆட்சி ஏற்படுவதற்கு முன் உருவான இனக்குழுத் தலைவர்களைக் குறிக்கவில்லை. கால அடைவில் மகன், பெருமகன் இரத்த உறவின் டிப்படையில் அல்லாமல் வேறு தலைவர்களைக் குறிக்கவும் ஆளப்பெற்றன. இளையர் பெருமகன் (புறம்) என்பன வீரர் கூட்டத்திற்குத் தலைவன் என்ற பொருளில் ஆளப்பட்டதே அன்றி இனக்குழு தலைவன் என்ற அடிப்படையில் ஆளப்பெறவில்லை. மகன் என்பது வழிமுறையில் வந்தவன் என்றும் குலத்தோன்றல் என்றும் கொள்ளலாம். மெசபடோமிய நாகரிகத்திலும் அரசரை பெருமகன் என்று பொருள்படும் சொற்களால் அழைக்கின்றனர். (கள்வர் பெருமகன் - தென்னன்)
உலகம் முழுவதும் குடி ஆட்சியிலிருந்து வேள் ஆட்சிக்கு மாறும்போது வேள் ஆட்சியைப் புனிதம் என்று கருத வைப்பதற்கும், நிலை நிறுத்துவதற்கும் தொன்மை (மரபுத்தோற்றக் கதைகள்) படைத்துக கொள்ளப் பெற்றன. தலைவன் ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் பிறகுடிகளில் அங்கீகாரம் பெறுவதற்கும் மரவுத் தோற்றக் கதைகள் (தொன்மை) படைத்துக் கொள்ளப் பெற்றது. மேலும் வேள் (தலைவன்) கடவுள் சம்பந்தம் உடையவன் என்பதைக் காட்டவும் இக்கதைகள் உருவாக்கப்பெற்றன. தொன்மை தொல்காப்பியத்தில் ஓர் இலக்கிய வகையாகப் பேசப்படுகின்றது.
குடி மரபுத் தோற்றம் பற்றிய கதைகளைப் படைத்துக கொள்வதற்கும் இன்றும் பல அத்தியாவசிய காரணங்களும் இருந்தன. நற்குடிப் பிறப்பு தலைவனுக்கு (மன்னனுக்கு) படைத்துக் கொள்ளப் பெற்றது. அவனுடைய குடி முன்னோர்கள் வீறார்ந்தவர்கள். வாய்மையின் பால் பற்று கொண்டவர்கள். தியாகசீலர்கள், கடவுட் தன்மையுடையவர்கள் என்ற கதை கட்டப்பெற்றது. அரியணைக்குரிய ஆற்றல் உடையவர்கள் என்ற கதை சுட்டப்பெற்றது. அரியணைக்குரிய குலம் வேளின் குலம் என்பதை வலியுறுத்தவே புராணங்கள் படைத்துக் கொள்ளப் பெற்றன. மேலும் பாண்கடன் ஆற்றும் பெருமை, வழிமுறை (வம்சாவழி) ஆகியவை புராணங்களில் பயின்று வரக் காணலாம். இந்தியப் புராணங்களில் வரும் வம்சானு சரிதம் அரசர்கள் வரலாற்றை வரிசைப்படுத்தி உரைப்பது ஆகும்.
புகழ்மிக்க குடி மரபு தோற்றம் பற்றிய கதைகள் வேதம் (நாராசம்சிகள்) கதைகள், தானஸ்துதிகள், ஆக்யாணங்கள் போன்றவற்றில் பொதிந்து கிடக்கின்றன.
இவற்றில் வேளின் குடிப்பிறப்பு வீரம் மானவிறல், கொடை, மடம்படாமை ஆகியன சிறப்பித்துப் பேசப்படுகின்றன. இக்கதைகள் ஆரம்பத்தில் பிராகிருத மொழியிலும் பின்னாளில் சூதர்களிடமிருந்து பிராமணர் கைக்கு மாறிய போது சமஸ்கிரது மொழியிலும் பயின்று வரத்தொடங்கின.
இந்தப் பின்னணியில் வேளிர் பற்றிய தோற்ற மரபுக் கதைகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். தென்னிந்தியாவில் பரவியிருந்த பல்வேறு குடிகள் அரசினை உருவாக்கி ஆளத்தொடங்கிய போது இத்தகைய கதைகள் படைத்துக் கொள்ளப் பெற்றன. பல்லவர், சாளுக்கியர், கதம்பர், கங்கர், இச்சுவாகு, வாடகர், சாலங்காயனர், விஷ்ணு குண்டியர், பாணர், அதியமான்கள், மலையமான்கள், இராட்டிரகூடர், சம்புவரையர், போசளர், விஜயநகர் போன்ற குடியினர் அரசினை உருவாக்கி ஆண்டபோது குலமரபு தோற்றக் கதைகள் படைத்துக் கொள்ளப் பெற்றன. பின்னாளில் படைத்துக் கொள்ளப் பெற்ற குலமரபு தோற்றக்கதைகள் சிலவற்றிற்கு கபிலர் புறநானூற்றுப் பாடலே மூலமாக இருந்துள்ளது.
".................. நீயே
வடபான் முனிவன்த டவினூட்டோன்றிசி
செம்பு புனைந்தி யற்றிய சேணெடும்புரிசை
உவராவீகைத்து வரையாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை பந்த
வேளிருள் வேளே."
இந்தப்பாடல் வேளிர் எழுச்சியின் போதே வேள்குடித் தோற்றம் பற்றிய புராணக் கதைகளும் தோன்றி விட்டன என்பதை வலியுறுத்துகின்றது. இந்த இயல்பினை முதல் முதலில் கண்டு காட்டியவர் டி.என்.சுப்பிரமணியம் ஆவார்.
பொன்றாப்புகழும். நீண்ட வரலாற்றுப் பின்னணியும் வேளிர் ஆளத்தகுதி உடையவர்கள் என்பதை விலயுறுத்தவே ஆகும். இந்த வகையில் படைக்கப் பெற்ற வேறு தொன்மைகளையும் எடுத்துக் காட்டலாம். அதியமான்கள் தேவலோகத்திலிருந்து கரும்பினைக் கொண்டு வந்த கதையும், தொண்டைமான் மாயோன் வழித்தோன்றல் என்றும் கூறும் கதையும், நல்லியக்கோடன் முருகனின் வழித் தோன்றல் என்றும் கூறப்பெறுவதும், முருகனிடமிருந்து வேலைப் பெற்று மாற்றாரைத் தோற்கடித்தான் என்ற கதையும் குலமரபுத் தோற்றம் பற்றிய கதைகளுக்குச் சங்கப்பாடல்களில் பயின்று வரும் சான்றுகள் எனலாம். இன்னும் பல சான்றுகள் உண்டு. இந்த தொன்மையை மானிடவியல் கண்ணோட்டத்தில் அணுகினால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.
வேளிருக்கும் வேளாண்மைக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி சங்க இலக்கியம் கூறுவதாக செண்பகலட்சுமி கூறுவார். பெருங்கற் சின்னத்தினை உருவாக்கியவர்கள் என்று கூறப்படும் வேளிர் ஊர்களில் நெல் மிகுந்ததிருந்தமை கொண்டு வேளிர் பெருஙகற் சின்னங்கள். நெல்விளைவு ஆகியவற்றிற்கிடையில் வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு என்று அவர் கூறுகூர். ஆனால் இச்சான்றுகள் ஒன்றிற்கொன்று தொடாபில்லாதவை. வேளிர்களுக்கும், பெருங்கற்சின்னத்திற்கும் இடையிலான தொடர்பிற்கு வேறு காரணம் உண்டு.
வேளாண்மைக்கும், வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பலபடி நிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு, சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல்விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளரின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை.
வேளிர்க்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பு குறிப்பிடத்தக்கது. வேளிர் தொறுப்பூசல் காரணமாக எழுச்சி பெற்ற மழவர் தலைவனாகத் தொறுபூசலில் ஈடுபட்டனன். தொறுப்பூசல் வீரமிக்க வேளிர்கள் உருவாவதற்குக் காரணமாயிற்று. இந்த வேளிர்களே பின்னாளில் பல்வேறு தொழில் செய்யும் மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாக (வேள்) உருவானபோது பல்வேறு தொழிலில் கிடைத்த வருவாய் வேளிர்க்குக் கிடைத்தன. அவற்றில் ஒன்று வேளாண் வருவாய் (நெல் போன்றவை) ஆகையால் வேளிர்க்கும் வேளாளர்க்குமிடையிலான தொடர்பு வேறு கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் உருவான வேளிர்க்கும், வேளாண் மக்களுக்குமிடையில் உள்ள தொடர்பு நட்பு அடிப்படையிலானது. குடிபெயரும் தன்மையற்ற வேளாண் மக்களுக்கும், போர்வலியையும், குடிபெயரும் தன்மையும் மிக்க வேளிர்க்குமிடையில் நட்பு அடிப்படையில் உறவு இருந்திருக்க வேண்டும். இந்த வகையில் தொமிலாதாப்பர் முல்லை போர் மறவர்களுக்கும் (வேளிர்) வேளாண்மை செய்பவர்களுக்குமிடையில் உள்ள நட்பு வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதை எடுத்துக கூறலாம். வேதகால ஆரியர்களுக்கும், வேளாண் அரசர்களுக்குமிடையில் உள்ள இணைதிற வாழ்வு குறிப்பிடத்தக்கது. பதியெழல் அறியா வேளாண்மை மக்களை மாறாமைந்துடைய கால்நடை மறவர்கள் அடக்கி ஆள்வது வரலாற்றில் புதுமையன்று. வேளாண்மைக்குகந்த பகுதியில் வாழும் வேளாண் மக்கள் நாடோடி கால்நடை மேய்ப்பவாகளுக்கும், வேளாண்மை செய்பவர்களுக்குமிடையில் உள்ள உறவு இணைதிற வாழ்வு அடிப்படையில் எழுந்தது. கால்நடையாளர்கள் வேளாண்மை செய்வோருக்குப் பாதுகாப்பு அளித்தனர். அதற்குக் கைம்மாறாக கால்நடையாளர்கள் அறுவடை செய்த வயலில் கிடைக்கும் வைக்கோலை மாட்டுத தீவனமாகப் பெறுவர். மைம்மாறாக வேளாண்மை மக்களுக்குக் கால்நடையாளர்கள் (வேளிர்கள்) பாதுகாப்பு அளித்தனர். இந்த இணைதிற வாழ்வே இரு பிரிவினரையும் ஒத்த பண்புடையவராகக் (ஒதே குழு) காட்சியளிக்கச் செய்தது.
இந்தப் பின்னணியில் வேளிர், வேளாண்மைத் தொடர்பினை அணுக வேண்டும். வேளிர் இல்லங்களில் நெற்களஞ்சியம் இருந்தது என்று கூறுவது காணிக்கையாக வந்த நெல்லின் குவியலாகும். வேளிரே உழுது பயிர் செய்ததன்று.
மதுரைக்குரிய பழைய பெயராகிய கூடல் என்ற பெயர் காலந்தோறும் வழங்கி வந்ததுள்ளது. அக்கூடலின் வேள் அகுதை என்பவன் பாண்டியருக்கு முன ஆடசி செய்தவன். கூடல் முதலில் இவன் முனனோர்கள் ஆதிக்கத்திலும், இவன் ஆதிக்கத்திலும் நிலை பெற்றிருந்தது. பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்தார்கள் ஆகையால் கூடல் முதலில் வேறு யாருக்கோ உரியதாக இருந்திருக்க வேண்டும். கூடலை ஆண்டவர்கள் பற்றியும் சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன. பாண்டியருக்கு முன் ஆவ்வூரை ஆட்சி செய்தவன் அகுதை என்ற வேள். இந்த உண்மையைப் புறப்பாடல் (347) வலியுறுத்துகின்றது.
".................................... மறப்போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன
குவை இருங்கூந்தல் வருமுன் சேப்ப"
இப்பாடலில் கூடல் அகுதை ஆட்சியிலிருந்த ஊர் என்பதை வலியுறுத்துகின்றது. இவனும், இவன் தந்தையும் பரிசிலர்க்கு வரையாது வாங்கிச் சிறப்புப் பெற்றனர் என்பது சங்கப் பாடல்களால் விளங்குகின்றனது. அவற்றுள் குறுந்தொகைப் (298) பாடல் ஒன்று விரிவாகப் பேசுசின்றது.
"புன்றலை மடப்பிடி யகவுநர்ப் பெருமகன்
மான்சு வண்மகிழ் அகுதைப் போற்றிக்
காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்
இளங்கட் கமழு நெய்தலஞ்செறுவின்
வளங்கெழு நன்னாடன்ன வென்தோற்" (113)
இப்பாலில் அகுதை கோசர்களுடன் தொடர்புடையவனாகக் கூறப் பெறுசின்றான். யானையை நெறிப்படுத்தும் அகவுநர் தலைவன் என்று கூறுவதும் எடுத்துக் காட்டத்தக்கது. இதுவரையில் எடுத்துக்காட்டப் பெற்ற சங்கப்பாடல்களில் அகுதை யானைகளுடன் தொடர்பு படுததியே பேசப்பெறுகிறான். யானையைக் கொடையாகக் கொடுத்தவனாகவோ அல்லது யானைகளைப் பெறிருப்பவனாகவோ அவன் வருணிக்கப் பெறுகின்றான். அதனால் அகுதை யானைகள் மிகுந்த மலைப்பகுதியன் தலைவனாகவும் புகழ்பெற்றிருகக வேண்டும். (கள்வர் கோமான் புல்லி ஆட்சி செய்த வேங்கட நாட்டில் யானைகள் மிகுதி என்பதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன) அதனால் தான் பரிசிலர்களுக்கு யானையை மிகுதியாகக் கொடுத்துள்ளான் என்று கருத வேண்டியுள்ளது.
அகுதையின் கீழ் கோசர்கள் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. அகுதை வேளிடமிருந்து பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டமை ஆகும். அத்தகைய கையகப்படுத்தும் முயற்சியின் விளைவே கூடல். கூடல் பாண்டியர்கள் தோன்றிச் சிறப்பு அடைந்த நகரமன்று. மாறாக வேளிர் நகரமாக பாண்டியர்க்கு முன புகழ் பெற்றது.
பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்து வென்ற செய்தி சங்கப்பாடலால் உறுதி பெறுகின்றது. கூடல் வெற்றியை அகப்பாடல் ஒன்று விரிவாகப் பேசுகின்றது.
"..................... பரப்பிற்
பல்மீன் கொள்பவர் முகந்த விப்பி
நாரரிநறவின் மகிழ் நொடைக்கூட்டும்
பேரிசைக் கொற்கைப் பொருநன் வேண்வேல்
கடும்பகட்டியானை நெடுந்தேர்ச் செழியன்
மலைபுரை நெடுநகர் கூடல் நீடிய மனிதரு கம்பலை போல
அலராகின்றது பலர் வாய்ப்பட்டே" (அகம் 296)
இப்பாடலில் பேரிசைக் கொற்கைப் பொருநன். நெடுந்தேர்ச் செழியன் என்று கூறுவது எடுத்துக்காட்டத்தக்கது. கொற்கைத் தலைவனாக விளங்கும் நெடுந்தேர்ச் செழியன் கூடல் முற்றுமைகயில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தான் என்று கூறுவது பாண்டியர்கள் முதலில் கொற்கையில் ஆடசி செய்தவர்கள் என்பதும, நாடு பாவும் அல்லது நாடு கண்ணகற்றும் கொள்கையினால் அவர்கள் கூடல் மீது படையெடுத்துத் தங்களுடையதாக்கிக் கொண்டனர் என்பதும் உறுதி பெறுகின்றது.
கொடும்பாளூர் வேளிர்
இடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார்.
கொடும்பாளூர் இருக்குவேளிரான இருங்கள்ளர் குலத்தவர்கள். இருக்குவேளிர்---->இருங்கோவளர்----->இருங்கோளர்----->இருங்கள்ளர்.
இருக்குவேளிர் என்பன ஒருபொருட் பெயர்கள். இவ்வார்த்தைகள் மருவி தற்போது இருங்கோவேள், இருங்கோளர், இருங்களர், இருங்கள்ளர் என்று வந்துள்ளன. இவைகள் யாவும், இப்போதும் கள்ளர்களின் பட்டப்பெயர்களாக வழங்கிவருகின்றன. மேலும், வேளான் என்ற பெயர் மருவி தற்போது வேளார், வேள் என்ற பட்டப்பெயர்களாக கள்ளர்களுக்கு தற்போதும் வழங்கிவருகின்றன. வேளிரை குறிக்கும் ஒளிகொண்டார் ஒளிப்பிரியர் ஒளியாண்டார் ஒளியாளார் ஒளியாளியார். ஒளியாட்சியார் ஒளியுடையார், ஒளியுடையர் ஒளிராயார். ஒளிவிராயர் பட்டப்பெயர்களாக கள்ளர்களுக்கு தற்போதும் வழங்கிவருகின்றன.
கள்ளர்களின் கொடும்பாளூர் ராயர் காலப்போக்கில் கொடும்புராயர்....கொடும்புறார் ஆகிவிட்டது .... வேளிர் என்பது இன்னாளில் வேளார் ஆகி இருக்கிறது... பேராவூரணி பக்கம் வேளார் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கள்ளர்களின் கொடும்பாளூர் ராயர் காலப்போக்கில் கொடும்புராயர்....கொடும்புறார் ஆகிவிட்டது .... வேளிர் என்பது இன்னாளில் வேளார் ஆகி இருக்கிறது... பேராவூரணி பக்கம் வேளார் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கொடும்பாளூர் வேளிர்கள் 'யது வம்ச கேது(வால்)' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் கள்ளர் மரபினர் என கல்வெட்டு ஆய்வாளர் திரு. மகாதேவன் கூறுகிறார்.
கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடி
“கோனாட்டுக் கொடும்பாளூர் வேளிர் குலத்து அரசன்
ஆதித்தன் புகழ் மரபிற்குடி முதலோன்” (சேக்கிழார்-பெரியபுராணம் பக்.491)
“கொங்கிற் கனகமணிந்த ஆதித்தன் குல முதலோன்
இருக்குவேள் மன்ன இடங்கழியே” (நம்பியாண்டார் நம்பி-திருவந்தாதி)
“இருக்குவேளிர் குலத்தலைவர் இடங்கழியார், பொன்வேய்ந்த ஆதித்தன்
மரபோர்” (சேக்கிழார் திருத்தொண்டர் புராண சாரம் பக்.52)
புதுக்கோட்டை கொடும்பாளூர் வேளிர் -- சோழர்கள் மண உறவுகளில் சில
* உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னி கி.பி 2ம் நூற்றாண்டில் அரசுபுரிந்தவன். கரிகால் சோழனின் தந்தையுமாவான். இவன் மனைவி கள்ளரின அழுந்தூர் வேளிர் குல இளவரசியாவாள்.
* கரிகால் சோழனின் மனைவி கள்ளரின திருநாங்கூர் வேளிர் குல இளவரசியாவாள் (The cholas by sastri pag 48)
* கிபி 9 ஆம் நூற்றாண்டில் கொடும்பாளூர் மன்னன் சமரபிராமா விஜயாலய சோழனின் மகளான அனுபாமாவை மணந்தார். (Ins 129 of 1907)
* கொடும்பாளூர் மன்னன் சமரபிராமா வின் மகளான பூதி மகாதேவியை ஆதித்தய சோழனின் மகனான கன்னரத்தேவன் மணந்தார். (Sii vol 19 : velirs)
*தென்னவன் இளங்கோவேள் என அழைக்கப்பட்ட மறவன் பூதியாரின் மகளான பூதி ஆதித்தபடாரியை கிபி 910 ல் பராந்தக சோழரின் மகனான அரிகுலகேசரி சோழன் மணமுடித்துள்ளான். ( Sii vol 3 :96). இவள் கள்ளன் ஆதித்தபடாரி என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறாள். (Sii vol 8 ,975)
* கி பி 960 ல் சுந்தர சோழனின் தங்கையான வரகுண பெருமானாரை பராந்தகன் சிறிய வேளார் மணந்தார். (Sii vol 13 :233)
* உத்தம சோழன் (கி.பி. 957 - 970) கள்ளரினத்தின் இருங்களார் என்னும் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவி என்பவளை மணந்திருந்தான் (Ins. 494 of1925, Ins 298 of 1906)
* இராஜராஜ சோழன் கொடும்பாளூர் இளவரசியான வானவன் மாதேவி எனும் திரிபுவன மாதேவியை மணந்தார். இவர் ராஜேந்திர சோழனின் தாயார் ஆவாள். (The cholas. Neelakanda sastri pg 252)
* முதலாம் ராஜேந்திர சோழன், கொடும்பாளூர் வேளிர் குல இளவரசியான வீரமாதேவியை மணந்திருந்தான். ராஜேந்திர சோழன் இறந்தபின்பு உடன்கட்டை ஏறியவள் (Ins 260/1915)
* கிபி 940 ல் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு " தென்னவன் இளங்கோவேளிரின் மகளான ஆதித்தபடாரியை " கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கல்லன் ஆதித்த படாரி" என இந்த வேளிர் குல அரசி அளித்த கொடையை குறிப்பிடுகிறது.( Sii vol 8. No 975)
* இவரது சமகாலத்தவராக செம்பியன் இருக்குவேள் எனும் பூதி ஆதித்தபடாரன் குறிக்கப்படுகிறார். பூதி ஆதித்தபடாரன் பிரம்மதேயத்தில் கிபி 935 ல் ஆதித்தபடாரி என்பவள் அளித்த கொடை பற்றி கூறுகிறது. ( Sii vol 8 no 601)
* கிபி 924 ல் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு, கள்ளன் அச்சப்பிடாரி எனும் இருக்குவேளிர் அரசியை குறிக்கிறது." கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கல்லன் அச்சப்பிடாரி என குறிப்பிடுகிறது. (ins no 140-1928)
* இவரது பெயரை ஒத்த மதுராந்தகன் அச்சப்பிடாரன் கிபி 987 ஆம் ஆண்டு கல்வெட்டில் குறிக்கப்படுகிறார். "கொனாட்டு கொடும்பாளூர் வீர சோழ இளங்கோவேளாரின் மகன் மதுராநுதகன் அச்சப்பிடாரன்" என இவர் குறிக்கப்படுகிறார். (Sii vol 13 no 33)
* தென்னவன் இளங்கோவேளார் எனும் மறவன் பூதி பராந்தக சோழன் கால கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறார். இவரது மகளான பூதி ஆதித்தபடாரி, அரிஞ்சய சோழனின் மனைவி என கிபி 910 ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. (Sii¬ vol 3 no 96, sii vol 19).
(பூதி ஆதிச்சபடாரி, மறவன் பூதி, கள்ளன் ஆதிச்சப்படாரி, பூதி அதித்தபடாரன், கள்ளன் அச்சப்படாரி, மதுராந்தகன் அச்சப்படாரன் ஆகிய வேளிர் குடும்பத்தினர் கல்வெட்டுகளில் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றனர்)
இருக்கு வேளிர் கள்ளர் எனஆதாரத்துடன் வெளியிட்ட இந்திய அரசு ஆவணம்
The cholas vol one (p 150), historic series part-9,published by university of madras, madras presidency. Year 1935
Chief editor-- historian neelakanda sastri
மதுரைக்கொண்ட பரகேசரி வர்மனின், திருப்பழனம் கல்வெட்டில் (No.140) "கள்ளன் அச்சப் பிடாரி" என்ற கொடும்பாளூர் அரசியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது :- "Damaged and incomplete. Gift of gold by a lady named Kallan-Achchapidari of Kodumbalur in Urattur-Kurram for a lamp in the temple" (A.R.E. No. 140 of 1927-28), Parakesari Varman, 17th year), (Tanjore district, Tiruppalanam, on the north wall of the central shrine in the Apatsahayesvara temple
Chief editor-- historian neelakanda sastri
மதுரைக்கொண்ட பரகேசரி வர்மனின், திருப்பழனம் கல்வெட்டில் (No.140) "கள்ளன் அச்சப் பிடாரி" என்ற கொடும்பாளூர் அரசியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது :- "Damaged and incomplete. Gift of gold by a lady named Kallan-Achchapidari of Kodumbalur in Urattur-Kurram for a lamp in the temple" (A.R.E. No. 140 of 1927-28), Parakesari Varman, 17th year), (Tanjore district, Tiruppalanam, on the north wall of the central shrine in the Apatsahayesvara temple
திரு நீலகண்ட சாஸ்திரி அவர்கள் சோழர்கள் புத்தகத்தில் கொடும்பாளூர் வேளிர்கள் கள்ளர் இனம் என்று குறிப்பிடுகிறார். திருப்பழனம் கல்வெட்டில் (No.169) "கள்வன் அமரக்காலன்" என்ற மன்னர் குறிப்பிடபடுகிறான்.
அதைப்போலவே, மதுரைக்கொண்ட பரகேசரி வர்மனின், திருப்பழனம் கல்வெட்டில் (No.140) "கள்ளன் அச்சப் பிடாரி" என்ற கொடும்பாளூர் அரசியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழவர்களை வென்ற கள்ளர் கோமானான இருக்குவேள்:
கழல் புனை திருந்தடிக் களவர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61) (மாமூலனார் பாடியது)
பொருள்..வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீர்ர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழைப்பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.
வேளிரும் மறவர் என பெயர் கொண்டிருந்தனர், அதிலும் கொடும்பை வேளிர் தொன்மறவன் (தொன்மையான மறவன்) என குறிக்க பட்டுள்ளனர்.
பூதிவிக்ரமகேஸரியின் கொடும்பாளூர் கல்வெட்டு
கல்வெட்டு அமைந்துள்ள இடம், திருச்சி மாவட்டத்தில் குளத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ளது கொடும்பாளூர் என்னும் சிற்றூர். இவ்வூரில் மூவர் கோவில் என்று புகழ்பெற்ற கோவிலொன்று அமைந்துள்ளது. அதன் கருவறையின் தெற்குச் சுவரில் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.
இந்தக் கல்வெட்டு 1907 ஆம் ஆண்டறிக்கையின் 129 ஆம் எண்ணாக குறிப்பிடப் பட்டிருந்தது. அதன் பின்னர் தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி இருபத்து மூன்றில் 129 ஆம் எண்ணாகப் பதிப்பிக்கப் பட்டது. இதன் பதிப்பாளராக ஸ்ரீ.ஜீ.வீ.ஸ்ரீனிவாஸ ராவ் அவர்களும் பொதுப்பதிப்பாளராக முனைவர்.ஜீ.எஸ். கை அவர்களும் இருந்தனர்.
குறிப்புரை தரும் தகவல்கள் :
இந்தக் கல்வெட்டு வடமொழியில் பழைய க்ரந்த எழுத்துக்களாலானது. இது கொடும்பாளூரை ஆண்ட தலைவர்களின் மரபைத் தருகிறது. இதன் முதல் வரி அழிந்து பட்டதால் குலமுதல்வனின் பெயர் அறியக்கூடவில்லை. அவன் எதிரிப் படையிலிருந்து யானைப் படையைக் கைப்பற்றியது தெளிவாகிறது. அவனுடைய குலத்தில் பரவீரஜித் வீரதுங்கன் பிறந்தான். அவனுடைய மகன் இணையற்ற (அனுபம) அதீவீரன். அவனுடைய மகன் ஸங்கக்ருத். அவனுக்கு ந்ருபகேஸரி மகனாகப் பிறந்தான். அவனுடைய மகன் பரதுர்கமர்த்தனன். அவன் பெருமை மிக்க வாதாபியை வென்றவன். அவனுக்கு ஸமராபிராமன் பிறந்தான். அவன் அதிராஜமங்கலத்தில் நிகழ்ந்த போரில் சளுக்கியைக் கொன்றவன். அவன் சோழமன்னனின் மகளான அனுபமையை மணந்தவன். அவனுடைய மகன் பூதி எனப் பட்டவன். அவன் போரில் தன்னுடையப் பராக்ரமத்தால் விக்ரமகேஸரி என வழங்கப் பட்டான். அவன் பல்லவனோடு போரிட்டு அந்தப் படையினர் குருதியால் காவிரி நீரை செந்நீராக்கியவன். அவன் வீரபாண்டியனை வென்று வஞ்சிவேளையும் அழித்தவன். அவன் தன் மனைவியரான கற்றளி மற்றும் வரகுணையோடு கொடும்பாளூரில் வாழ்பவன். முதல்மனைவியினிடத்தில் பராந்தகவர்மன் மற்றும் ஆதித்யவர்மனைப் பெற்றெடுத்தவன். அத்தகைய பூதிவிக்ரமகேஸரி தனக்காக ஒன்று, தன் மனைவியருக்காக இரண்டு என்று மூன்று கற்றளிகளை பரமேச்வரனுக்காக்க் கொடும்பாளூரில் உருவாக்கியிருக்கிறான். அதனை மதுரையின் மல்லிகார்ஜுனரின் மடத்திற்குப் பரிசாக அளித்தான். அவர் காளாமுக சைவர்களின் ஆசிரியர். அவருக்கு 50 துறவியருக்கு உணவளிக்க பதினோரு சிற்றூர்களையும் தானமாக அளித்தான்.
இந்த பூதிவிக்ரமகேஸரி என்னும் மன்னன் முதலாம் ஆதித்ய சோழனின் சிற்றரசன் என்று மற்றைய கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கிறது. இவனே தென்னவன் இளங்கோவேள் என்று அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இவன் பல்லவன்படையைச் சீரழித்த நிகழ்வு முதலாம் ஆதித்ய சோழன் சுமார் கி.பி 890 க்கு முன்பு அபராஜித பல்லவனை போரில் வீழ்த்திய நிழ்வாகவே இருக்கலாம் என்றும் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு கொள்ளும் போது வீரபாண்டியனைக் கொன்றதாகக் கூறுவது பொருத்தமற்றதாகிறது. இரண்டாம் ஆதித்யகரிகாலன் வீரபாண்டியனை வீழ்த்தியது (1908 ஆண்டறிக்கை, இரண்டாம் பாகம் 88 ஆம் பத்தி) 70 ஆண்டிற்குப் பிறகு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. ஆகவே இவன் முதலாம் பராந்தக வீரநாராயணனின் சமகாலத்தவனாகவும் பாண்டிய வழியைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம். (K.V. Subrahmanya Iyer QJMS Vol XLIII, Nos 3&4)
கல்வெட்டு வரிகள்
......................... நாதகஜயூதஹர: புராஸீத்.
தலைவனின் யானைப்படையை கவர்ந்தவன் இருந்தான்.
தத்-வம்ஶ்ய: பரவீரஜின்-மளவஜித்-ஸ்ரீவீரதுங்கோ-முதோ
ஜாதோ-அஸ்மாத்-அதிவீர இதி அனுபம: தஸ்மாத் அபூத் ஸங்கக்ருத்.
அஸ்மாத் ஸ்ரீந்ருபகேஸரீ விவத்ருதே யோ பால ஏவ உரகை:
தத்-ஸூனு: பரதுர்க்கமர்த்தன இதி க்யாத: ஸ வாதாபிஜித்
வ்ருத்தம்(பாவகை) - ஶார்தூலவிக்ரீடிதம் (அடிக்கு பத்தொன்பது எழுத்துக்கள்)
அந்த வம்சத்தைச் சேர்ந்தவனான பரவீரஜித்(எதிரி வீர்ர்களை வென்றவன்) மழவர்களை வென்றவன். அவனிடமிருந்து வீரதுங்கன்(வீரத்தில் உயர்ந்தவன்) பிறந்தான். அவனிடமிருந்து அதிவீரன்(பெரும் வீரன்) என்னும் இணையற்றவன் (அனுபமன்) தோன்றினான். அவனுக்கு ஸங்கக்ருத்(சங்கத்தைச் உருவாக்கியவன்) பிறந்தான். அவனிடமிருந்து ஸ்ரீந்ருபகேஸரீ(அரசர்களுள் சிங்கம் போன்றவன்) என்பவன் பிறந்தான். அவன் சிறுபிராயத்திலேயே நாகங்களால் வளர்க்கப் பட்டவன். அவனுடைய மகனாக பரதுர்க்கமர்த்தனன்(எதிரிகளின் கோட்டைகளை அழிப்பவன்) என்னும் புகழ்பெற்றவன் பிறந்தான். அவன் வாதாபியை வென்றவன்.
தஸ்ய ஸமராபிராம: புத்ர: ஸுத்ராம-தேஜஸ:
அதிராஜமங்கள-ஆஜௌ யோ நிஜகான சளுக்கிம்
வ்ருத்தம் – அனுஷ்டுப் (அடிக்கு எட்டெழுத்துக்கள்)
அவனுக்கு ஸமராபிராமன்(போர்க்களத்தில் மனம் கவர்பவன்) என்பவன் மகனாவான். அவன் இந்திரனையொத்த வலிமை கொண்டவன். அவன் அதிராஜமங்கலத்தில் நடந்த போரில் சளுக்கியைக் கொன்றவன்.
தஸ்ய அச்யுதஸ்ய கமலேவ ஸரஸ்வதீவ
பத்மோத்பவஸ்ய கிரிஜேவ ஹரஸ்ய ஸாக்ஷாத்
ப்ரேயஸீ அபூத் அனுபமா இதி யதார்த்த-நாம்னா
ஸ்ரீசோள-ராஜ-துஹிதா யது-வம்ஶ-கேதோ:
வ்ருத்தம் – இந்த்ரவஜ்ரா (அடிக்கு பதினோரு எழுத்துக்கள்)
யதுவம்சத்தின் கொடி போன்ற அவனுக்கு அச்யுதனுக்குத் திருமகளைப் போலவும் தாமரையில் தோன்றிய நான்முகனுக்குக் கலைமகளைப் போலவும் சிவபெருமானுக்கு மலைமகளைப் போலவும் சோழமன்னின் மகளான அனுபமா மனைவியானாள். அவள் பெயர் தகுந்த பொருளை உடையது (அனுபமா - உவமையற்றவள்).
தஸ்யாம் அஸ்ய பபூவ பூதிம் அபராம் மீனாமளாக்யாம் ததன்
ஸ்ரீமான் விக்ரமகேஸரீ இதி ஸமரே லப்த-அன்ய-நாமா ந்ருப:
காவேரீ-வாரி சோணம் ஸமக்ருத ருதிரை: பல்லவஸ்ய த்வஜின்யா:
யோ வீரோ வீரபாண்ட்யம் வ்யஜயத ஸமரே வஞ்சிவேளந்தகோ அபூத்
வ்ருத்தம் – முதலிரு அடிகள் சார்தூல விக்ரீடிதம்
இறுதியிரு அடிகள் ஸ்ரக்தரா (அடிக்கு 21 எழுத்துக்கள்)
அவனுக்கு அந்த மனைவியினிடத்தில் மீனாமழன் (மீனவன் வேள்?) என்றும் பூதி என்றும் பெயர் படைத்த திருவுடையவன் பிறந்தான். அவன் போரில் விக்ரமகேஸரி என்னும் வேறு பெயரைப் பெற்றவன். அவன் பல்லவர்களின் படையின் குருதியால் காவேரி நீரை சிவப்பாக்கினான். போரில் வீரபாண்டியனை வென்ற வீரன். வஞ்சிவேளுக்குக் கூற்றானவன்.
மத்தாரி-ஸாமஜான் ஹத்வா வஸன் விக்ரம-கேஸரீ
கொடும்பாளுப்-புராத்ர-இந்த்ர-மாளிகா-விவரோதரே
வ்ருத்தம் - அனுஷ்டுப்
மதம் கொண்ட எதிரியானைகளைக் கொன்ற விக்ரமகேஸரி (வீரமுடைய சிங்கம் அல்லது அந்தப் பெயருடையவன் என்று சிலேடை) கொடும்பாளூரில் மலைகளில் இந்திரன் போன்ற மாளிகையின் குகை போன்ற நடுவறையில் வீற்றிருக்கிறான் (இந்தச் செய்யுளில் வினைச் சொல் இடம் பெறவில்லை).
வித்வத்-கல்ப-தரௌ க்ஷிதீஶ்வர-கர-த்வந்த்வ-அம்புஜ-இந்தௌ புவம்
யஸ்மின் ஶாஸதி மேதினீம் ஜய-ரமா-ஸ்ரீ-கீர்த்தி-வாக்-வல்லபே
தைக்ஷண்யம் நேத்ர-யுகே ப்ருவோ: சலனதா கேஶேஷு கார்ஷ்ண்யம் தனௌ
தன்விதாம் தனுதா அபவத் ஸ்தனயுகே ச அன்யோன்ய-ஸம்பாதனம்
வ்ருத்தம் - ஶார்தூலவிக்ரீடிதம்
அறிஞர்களுக்கு கற்பகத்தருவும் புவியாளும் மன்னர்களின் கையாகிய தாமரையிணைகளுக்கு நிலவும் (நிலவைக் கண்ட தாமரையைப் போல கைகள் குவிவது நயமாகக் கையாளப் பட்டுள்ளது.) வெற்றித் திருமகள், செல்வம், புகழ், கல்வி ஆகியவற்றிற்குத் தலைவனுமான அந்த அரசன் புவியை ஆளும் போது (பெண்களின்) கண்களில் மட்டுமே கொடுங்கூர்மையும், புருவங்களிணையில் சலனமும், கேசங்களில் கருமையும், உடலில் மெலிவும், கொங்கையிணைகளில் ஒன்றுக்கொன்று மோதலும் நடைபெற்றன. (மக்களின் மனத்தில் இல்லை என்பது பொருள்)
தஸ்ய அபூத் தேவ்யௌ கற்றளி-வரகுண-ஸமாஹ்வயே ஸத்யௌ
கற்றளி அபவத் ஜனனீ பராந்தக-ஆதித்ய-வர்மணோ கம்ரக்க(கம்ரகம்ராணாம்)
வ்ருத்தம் – ப்ருஹதி (ஜாதி)
அவனுக்கு கற்றளி வரகுணா என்ற பெயருடைய இரு பதிவ்ரதைகள் மனைவியையிருந்தனர். அவர்களில் கற்றளி பராந்தகவர்மன், ஆதித்யவர்மன் என்னும் இருவருக்குத் தாயானாள். (இங்கு கம்ரகம்ராணாம் (மிக்க அழகியவர்களுக்கு) என்னும் சொல் பாவிலக்கணப்படி எங்கும் சேராமல் தொக்கி நிற்கிறது.)
ஆத்ரேய-கோத்ரஜ: ஸ்ரீமான் மாதுரோ நகேந்த்ர-பாரக:
வித்யாராஶே: தபோராஶே: ஶிஷ்யோ அஸ்ய மல்லிகார்ஜுன:
வ்ருத்தம் - அனுஷ்டுப்
ஆத்ரேயகோத்ரத்தில் பிறந்தவரும் திருவுடையவரும் மதுரையைச் சேர்ந்தவரும் நகேந்திரத்தில் (நகேந்திர என்றால் மலைகளில் இந்திரன் என்பது பொருள். ஆயின் இங்கு பொருந்தவில்லை. ம்ருகேந்த்ர என்றிருந்தால் சைவ ஆகமத்தையேனும் குறிக்கும். இதன் பொருள் சரிவர விளங்கவில்லை). வித்யாராசி மற்றும் தபோராசியின் சிஷ்யரான மல்லிகார்ஜுனர் இருந்தார்.
ஸ்தான-த்ரயம் உத்தாப்ய ப்ரதிஷ்டாப்ய மஹேஶ்வரம்
ஸ்வநாம்னா ப்ரியயோ: நாம்னா ஸ அதாத் ப்ருஹன்-மடம்
வ்ருத்தம் - அனுஷ்டுப்
அவன் தன் பெயராலும் தன் மனைவியர் பெயராலும் மூன்று கோயில்களை எடுப்பித்து அவற்றில் மஹேச்வரனை ப்ரதிஷ்டை செய்தான். பெரும் மடத்தையும் அளித்தான்.
தஸ்மை காலமுக-ஆக்யான-யதி-முக்யாய யாதவ:
ப்ராதாத் ஏகாதச-க்ராம-வினிபந்தம் ப்ருஹன்-மடம்
வ்ருத்தம் – அனுஷ்டுப்
யதுவம்சத்தில் தோன்றிய அவன் காளாமுகர் என்னும் பெயர்கொண்ட துறவிகளில் முக்கியமானவரான அவருக்கு பதினோரு சிற்றூர்களை நிவந்தமாகக் கொண்ட பெரும் மடத்தை அளித்தான்.
பஞ்சாஶதாம் ஆஸீத் தத்ர தபோதனானாம்
புக்த்யை ப்ருஹன்மடம் குரவே ஸ ராஜா
நைவேத்ய-கந்த-தூப-தீப-தாம்பூல..................
.................................................................மஹேஶ்வரஸ்ய
வ்ருத்தம் – வஸந்ததிலகா (பாவிலக்கணம் பிறண்டுள்ளது)
அங்கு அந்த மடத்தில் ஐம்பது தபோதனர்களுக்கு உணவிடுவதற்காகவும் பரமேச்வரனின் நைவேத்யம், வாசனைப் பொருட்கள், தூபம், தீபம், தாம்பூலம் முதலியவற்றிற்காகவும் தனது குருவிடம் அந்த அரசன்(தானமளித்தான்).
நன்றி :
திரு.காலிங்கராய தேவர், பாரிவேள், சம்பந்த மூர்த்தி மழவராயர், முனைவர்.இரா.பூங்குன்றன், இயக்குனர் (ப.நி)