திங்கள், 16 ஏப்ரல், 2018

கல்விக்கண் கொடுத்த ஐயா வி.கே.சி. நடராஜன் I.A.S



பிறந்த மண்ணிற்கு என்னால் ஆன எல்லாவற்றையும் செய்வேன் என்று இரத்தத்தால் கையெழுத்திட்டு சபதம் செய்து அதை முடித்து காட்டியவர் ஐயா நடராஜன் I.A.S. நாட்டுக்கும், கைரேகை சட்டத்தால் பாதிக்கப்பட்ட தன் இன மக்களுக்காக வாழ்க்கையே அர்ப்பணித்தவர்.

புண்ணியம் செய்தவர்கள் புவியில் விடிவெள்ளியாக மிளிர்வர் அப்படி விடிவெள்ளியாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், விளாம்பட்டி என்ற சிறிய கிராமத்தில், 23 .12 .1923 -ம் ஆண்டு கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் தோன்றிய ஐயா வி .கே .சி. நடராஜன் பெற்றோர்கள் வெள்ளையத்தேவர், பேசியம்மாள், உடன் பிறந்த மூன்று சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.

ஐயா வி.கே .சி .நடராஜன் அவர்கள் ஏழ்மை நிலையில், வரட்ச்சி பகுதியில் பிறந்து உசிலம்பட்டி கள்ளர் பள்ளியில் படித்து IAS சேர்ந்த முதல் மாமனிதர். 1923 -ம் ஆண்டு தோன்றினாலும் 1948 க்குள் மதுரை அமெரிக்கன் கல்லூரி ,அண்ணாமலை பல்கலை கழகத்தில் பயின்று படிப்பை முடித்து பேராசிரியராக பணியாற்றும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்த உத்தமர் ஐயா வி.கே .சி . நடராஜன் அவர்கள்.

வாழ்க்கையில் உயரவேண்டும் என்று முயற்சியால் முன்னேறி பண்பாளர். ஐயா வி.கே.சி. நடராஜன் அவர்கள் பேராசிரியராக பணியாற்றும் பேறு, நெல்லை மதிதா இந்து கல்லூரிக்கும், மதுரை அமெரிக்கன் கல்லுருக்கும், காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கும் கிடைத்தது .

பேராசிரியராக இருந்து கொண்டே ஆட்சியர் தேர்வில் பங்கு பெற்று வென்று தேர்வும் பெற்றார். காவல் துறை இவரது சேவைக்காக காத்து இருந்த போதும், அது வேண்டாம் என்று துணை ஆட்சியாளர் பொறுப்பை 1950 ஆம் ஆண்டில் ஏற்றார். விசாகபட்டினத்தில் பயிற்சிக்காக சென்றபோதும் கற்கின்ற ஆசை அவரை விட்டுப்போகவில்லை. அப்போதும் கற்று, தெலுங்கு மொழியில் விற்பன்னர் ஆயினார் இவர். "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்பதை உணர்ந்தவர் என்பதால் இவர் ஆயுள் முழுவதும் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

திருக்கோவிலூர், இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்து£ர், சென்னை ஆகிய இடங்களில் பணியாற்றி, தாம் அமர்ந்த பதவிகளுக்கெல்லாம் பெருமை சேர்த்தவர். அவர் காட்டிய வழி, அவர் ஏற்றிய ஒளி பற்பல பெரிய அலுவலர்களைத் தோற்றுவித்தது. உலகுக்கு வழிகாட்டியாக விளங்க வல்லது என்பதை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிறகு உலகுக்கு தெள்ளத் தெளிய உணர்த்தியவர் இவர்.


இவரது இல்லற வாழ்வும் சிறப்புற அமையப்பெற்று இருந்தது. நல்லமனம் காதல் வயப்படுவது இயல்பு, ஐயா வி.கே.சி நடராசன் அவர்களும் காதலித்து மணம் புரிந்து கொண்டவர்தான் தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான் மகாளான திருமதி. இராசசேசுவரி அம்மையார் அவர்கள், குணநலமும் மதிநுட்பமும் வாய்க்கப்பெற்ற அவ்வம்மையார் பாலோடு சேர்ந்த் சர்க்கரை போல திரு.நடராசன் அவர்களின் வாழ்வுக்கு இனிமை கூட்டினார். நல்ல மக்கள் செல்வங்களை ஈன்று வளர்த்தார். திரு. பாலபாஸ்கர் மி.கி.ஷி., திருமதி டாக்டர். உமா, திருமதி சித்ரா, திரு. ஜவஹர் கணேசு ஆகிய அந்த நான்கு செல்வங்களும் இன்று வாழ்வில் சிறந்த நிலையில் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு திருமதி இராசேசுவரி அம்மையார் அவர்கள் பெய்து ஊட்டிய பண்பும் காராணமாகும்.

அலுவலக வாழ்வும் இல்லறமும் இனிதே அமையப்பெற்றதால் தேனுண்ட கரடியாய் பலர் இருந்து விடுவது உண்டு. ஆனால் வி.கே.சி.நடராசன் அவர்கள் தான் சமூகத்திலிருந்து பெற்ற பலன்களைவிட தான் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை எண்ணிப்பார்த்தவர். தன்னால் தன்னைச் சார்ந்தவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து தன் பிறப்பின் பலனை, அடைந்தவர், நம்மவர் படிக்க ஒரு கல்லூரி வேண்டும் என்று அந்த நல்ல மனம் நினைத்தது. அதற்கு முதல் படியாக -'கள்ளர் வளர்ச்சி மன்றத்தை' கள்ளர் கல்விக் கழகமாக மாற்றினார்.

அந்த கழகத்தின் ஆதரவில் தேவர் பெருமகன் பெயரைப் பாறசாற்றிக் கொண்டிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி உசிலம்பட்டியிலே எழுந்தது. வெறும் செம்மண் நிலமாக இருந்த பூமி அறிவைப் பெருக்கும் கல்விக் களமாக மாறியது. வறுமை வாட்டிட அறியாமை இருளில் காலம் காலமாக அமிழ்ந்து செய்வது அறியாது திரிந்த அந்தப்பகுதி மக்களுக்குக் கல்விக்கண் கொடுத்த முதல் பெருமை, முதல் மரியாதை திரு.வி.கே.சி நடராசன் அவர்களையே சாரும். இவருக்கு மைத்துனர் முறையான தலைவர் மறைந்த திரு. மூக்கையாத்தேவர் அவர்களும் இவரும், இவருக்குப்பிறகு திருமதி. இராசசேசுவரி அம்மையார் அவர்களும் இந்தக் நு£ற்றுக்கணக்கில் பட்டதாரிகள் தோன்றி இருக்கிறார்கள். இந்த நன்மை செய்து கொடுத்ததற்காக, ஐயா வி.கே.சி. நடராசன் அவர்களுக்கு நமது சமுதாயம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

தான் பிறந்த மண்ணில் இருக்கும் 'திடியன் மலையில் அமர்ந்து நண்பர்களோடு சேர்த்து இரத்தத்தால் கையெழுத்து இட்டு சபதம் ஏற்றார். நான் பிறந்த மண்ணுக்கு என்னால் ஆன எல்லாவற்றையும் செய்வேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார்.

இவை தவிர, இலக்கியத்திலும் திரு.நடராசன் தணியாத ஆர்வம் காட்டி வந்தார். சென்னையில் "தமிழ் வட்டம்" என்ற இலக்கிய அமைப்பை, செயலாளராக இருந்து நடத்தி வந்தார். இந்த இலக்கியப்பணியை பாராட்டி பேரறிஞர் அண்ணா அவர்களே சிறப்பாகப் பேசி இருக்கின்றார் என்றால் இவர் ஆற்றிய இலக்கியப்பணி எவ்வளவு பெருமைக்கு உரியது என்பதை உணரலாம்.

யாராவது உதவி என்று கூறி விடுவது மனித இயல்வு. ஆனால் ஐயா திரு.நடராசன் இந்த இயல்பை மாற்றப்பிறந்தவர். மாற்றி அமைத்தவர்.

"பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே" என்ற உத்வேகம் பின்னே பிடித்துக்தள்ளத்தள்ள, எல்லாவற்றையும் இழுத்துப்‘போட்டுக்கொண்டு வேலைசெய்தவர். தன் ஆளுகைக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் கூட தனக்குச் சமமானவராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அவரை அன்புடன் அணுகி தன்னை அறிமுகம் செய்து கொண்டு, இவருக்கு உங்களால் ஒரு நல்லது நடக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள் என்று உதவி வேண்டி வந்த வரையும் அறிமுகம் செய்வித்து ஆகக்கூடாத காரியத்தையும் ஆகப்பண்ணும் திறமையும், பண்பும், அவரிடம் இருந்தது.

இந்தப்பண்பு நம்மவர் எல்லாரிடத்திலும் இருந்து விட்டால் நம்சமுதாயம் முன்னேறாமல் இருக்க வாய்ப்பே இல்லை. வீட்டுக்கு ஒருமரம் என்பது போல ஒவ்வொரு செல்வந்தரும் ஒவ்வொரு அலுவலரும் ஒரு ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும். ஐயா திரு. நடராசனைப்போல கைதுக்கிவிட வேண்டும் என்ற கொள்கையும் நினைப்பும் இருக்க வேண்டும்.

இவர் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவும்,சுறு சுறுப்பாகவும் இருக்குமாம். தலைமைச் செயகத்திற்கு அவர் சென்றால் அத்தனை அதிகாரிகளும் அவரை அன்போடு வரவேற்று உபசரிப்பார்களாம். ஏழை, பணக்காரர், அறிந்தவர், அறியாதவர் என்று யார் தன்னை நாடி வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று, அவர்கள் வேண்டும் நல்ல காரியங்களை தவறாது செய்து கொடுப்பாராம்.


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக 1964 - 1965 ல் இருந்தார்.








நல்லவர்களையெல்லாம் ஆண்டவன் அவசரமாகத்தன்னிடம் அழைத்துக் கொள்ளவராம்! 50 ஆண்டுகளே வாழ்ந்த ஐயா திரு.வி.கே.சி நடராசன் அவர்களை ஆண்டவன் மிக அவசரமாகவே தன்னிடம் அழைத்துக் கொண்டார். சமூக சேவைக்கு எல்லை வகுக்காத அவர், 

1967 நாளன்-று விண்ணுலகம் அடைந்தார்.

வாழ்க ஐயா வி.கே.சி நடராசன் புகழ்!

நன்றி : கள்ளர் முரசு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்