புதன், 13 மார்ச், 2024

ஆண்டி கண்டியத்தேவர்‌ வழிபாடு

 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில்‌ கருக்காடிபட்டி என்ற கிராமம்‌ உள்ளது. இக்கிராமம்‌ பத்தை, காரப்‌பத்தை, கருக்காடிப்பத்தை என்றெல்லாம்‌ பெயர்‌ வழங்கிவந்து தற்போது கருக்காடிப்பட்டி என்றழைக்கப்படுகிறது. இங்கு மிகப்‌ பெரும்பான்மையாகக்‌ கள்ளரின மக்களின்‌ கண்டியர்‌ என்ற பட்டப்‌ பெயர்‌ கொண்டவர்களே உள்ளனர்‌. இவர்கள்‌ ஆண்டி கண்டியத்தேவர்‌, பெத்தாயி வளவாயி, தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்‌. ஊர்மக்கள்‌ கண்டியத்தேவர்‌, நரியாண்டி, பெத்தாயி, வனவாயி ஆகியோர்களின்‌ செயல்பாடுகளினால்‌ அவர்களைத்‌ தெய்வமாக ஏற்றுக்கொண்டு கண்டியத்தேவர்‌ர்‌ மாண்ட இடத்தில்‌ கோவில்‌ கட்டியிருக்கின்றனர்‌. தேவரை மய்யத்தில்‌ வைத்து அவருக்கு இருபுறமும்‌ பெத்தாயி, வளவாயியை வைத்திருக்கிறார்கள்‌. கோவிலுக்கு வெளியே நரியாண்டிக்கு வளைவு கட்டி வைத்திருக்‌ கிறார்கள்‌.









வியாழன், 7 மார்ச், 2024

உத்ராபதி விசுவராயர்





உத்ராபதி விசுவராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் அமைந்த அம்மாபேட்டை கிராமத்தில் கள்ளர் மரபில் 07-09-1909 இல் பிறந்தார். இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் இயக்கத்தில் சேர்ந்தார், அதே ஆண்டு வெளிநாட்டு துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் மற்றும் 1941 இல் தனிநபர் சத்தியாகிரகம் ஆகியவற்றில் பங்கேற்றார். இதில் கைது செய்யப்பட்டு ஆங்கிலேய அரசால் தண்டனை விதிக்கப்பட்டு 1933, 1941 மற்றும் 1942 இல் சிறைவாசம் அனுபவித்தார். நான்கு ஆண்டுகள் திருச்சிராப்பள்ளி, பெல்லாரி சிறைகளில் வைக்கப்பட்டார். 24 ஆண்டுகள் பாபநாசம் தாலுகா காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்தார். 09-2-1956 இல் இறந்தார்.

சாமி அய்யா பசும்படியார்


சாமி அய்யா பசும்படியார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு அம்மாப்பேட்டை பகுதி உடையார்கோயில் கிராமத்தில் இல் 20-12-1904 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் சாமி அய்யா பசும்படியார் பிறந்தார். இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 ஆம் ஆண்டு கீழ்படியாமை இயக்கத்தில் சேர்ந்தார், 1930 இல் உப்பு சத்தியாகிரகம், 1932 இல் வரி இல்லா இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 34 வருடம் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் மரணமடைந்தார்.



*Sami Ayya Pasumpadiar, O. N. : b. 20-12-1904 - e. literate - Joined the movement in 1930 - Took part in Salt Satyagraha in 1930, No Tax Movement in 1932, Individual Satyagraha in 1940 and Quit India Movement, 1942 - Courted imprisonment in 1932-33 and kept in Tiruchirappalli jail for 34 years - Died-Address : Udayar Koil, Ammapet, Thanjavur District.


Who S Who Of Freedom Fighters Vol 2

கந்தசாமி சோழங்கதேவர்



கந்தசாமி சோழங்கதேவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தில் உள்ள விண்ணணூர்பட்டி கிராமத்தில் 12-9-1912 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் பிறந்தார். இவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 ஆம் ஆண்டு கீழ்படியாமை இயக்கத்தில் சேர்ந்தார், 1930 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 1930 இல் அலிபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டார்.[1]1965 ஆம் ஆண்டு இறந்தார்.



Sholanga Thevar, Kandasami_ b. 12-9-1912 : e. literate - Joined the movement in 1930 and took part in Toddy shop picketing, in 1930 Courted imprisonment and kept in Alipuram Jail in 1930 - Died in 1965 Address: Vinuanoorpatti, Thanjavur Taluk, Thanjavur district.


Who S Who Of Freedom Fighters Vol 2

சுப்ரமணிய சோணாடுகொண்டான்

Subramania Sonadukondan - s. Veeramuthu Sonadukondar : b, 1888Took part in Salt Satyagraha, 1930 arrested and sentenced to 41 days in 1930 - Again took part in Quit India Movement, 1942, and sentenced to 3 months- Kept in Tiruchirappalli and Alipuram jails Address : Sembankudi, Papanasam Taluk, Thanjavur district.


Who S Who Of Freedom Fighters Vol 2

துரைராஜா சோணாடுகொண்டார்




துரைராஜா சோணாடுகொண்டார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில், உள்ள பூதலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் இல் 1910 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் எஸ். மருதையா சோணாடுகொண்டார் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் எழுத்தறிவு பெற்றவர், 1936 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் 188, எல்பிசி பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 9 மாதம் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


சனி, 3 பிப்ரவரி, 2024

அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி அள்ளி கொடுத்த ஆயி பூரணம்மாள்




கள்ளர் மரபில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியத் தேவர், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

படிப்பு எவ்வளவு முக்கியம்.. என்பதை தாய்மை தான் உளப்பூர்வமாக உணரும்.. நம்மிடையே மாசற்ற மனிதருள் மாணிக்கங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எத்தனை லட்சம் கோடி கொடுத்தாலும் இப்படிப்பட்ட உள்ளம் கிடைப்பது அரிதினும் அரிது.


நினைவில் வாழும் ஜனனிக்கும், பூரணத்தம்மாளுக்கும் பேரன்புகள்❤️🙏

புதன், 31 ஜனவரி, 2024

ஜல்லிக்கட்டு கள்ளர் வீரர்கள்


2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  முதல் மூன்று பரிசையும் தட்டிச் சென்ற 

கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கள்ளன் பெற்ற வீரனும், ஜல்லிக்கட்டில் காளை முட்டி சரியும் குடலே மாலையாக இடும், போர்குடி கள்ளர் மரபின் அம்பலங்கள்

1 பரிசு கருப்பாயூரணி கார்த்தி அம்பலம் 

2 ஆம் பரிசு பூவந்தி அபிசித்தர் அம்பலம்

3 ஆம் பரிசு குன்னத்தூர் திவாகர் அம்பலம் 





மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து மகேந்திரா தார் கார் மற்றும் ஒரு லட்சம் ரொக்க பண தட்டிச் சென்றார் அபிசித்தர்_அம்பலம்  





அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாவீரன் சங்கங் கோட்டை ஸ்ரீதர் தேவர்



2020 கிள்ளனுர் ஜல்லிகட்டில் PK ஹரி சோழகர் முதல் பரிசு Bike பெற்றார்



2020 நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டுவில் மணி ஓணயர் அவர்கள் முதல் பரிசு பெற்ற தருணம்




2022 ஆண்டு தை மாதம் திருச்சியில் உள்ள கள்ளர் நாடான பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னலூர் யோகேஷ் மழவராயர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.




2022 ஆம் ஆண்டு தை மாதம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்செல்வன் சாமந்தர் (சாமந்தர் - படைதலைவர்)   அவர்களுடைய காளை முதலிடம்




புதன், 24 ஜனவரி, 2024

தொ பரமசிவன் பார்வையில் கள்ளர்கள்




பண்பாட்டு அசைவுகள்  - தொ பரமசிவன்   


கள்ளரும்‌ அழகரும்‌ கள்ளழகரும்‌


அழகர்கோயிலில்‌ ஆண்டுதோறும்‌ சித்திரை மாதம்‌ ஒன்பது நாள்‌ நடைபெறும்‌ சித்திரைத்‌ திருவிழாவின்போது நான்காம்‌ திருநாளன்று அழகர்‌, கள்ளர்‌ திருக்கோலத்துடன்‌ மதுரைக்குப்‌ புறப்படுகிறார்‌. ஒன்பதாம்‌ திருநாளன்று இரவு கோயிலுக்குத்‌ திரும்பவும்‌ வந்து சேர்கிறார்‌.

“துர்வாச முனிவரால்‌ தவளையாகும்படி சபிக்கப்பட்ட சுதபஸ்‌ முனிவரின்‌ சாபவிமோசனத்தின்‌ நிமித்தமாகவும்‌, சுந்தரத்தோளுடையான்‌ என்று ஸ்ரீ ஆண்டாள்‌ மங்களாசாசனம்‌ செய்த சுந்தரத்‌ தோள்களுக்கு வருஷம்‌ ஒருமுறை ஆண்டாள்‌ சாற்றிக்‌ கொடுத்தத்‌ இருமாலையை ஏற்றுக்கொள்ளும்‌ பொருட்டும்‌ ஸ்ரீசுந்தரராஜன்‌ 'கள்ளழகர்‌' திருக்‌ கோலத்துடன்‌ மதுரைக்கு எழுந்தருளுகிறார்‌" என்று கோயில்‌ அழைப்பிதழ்‌, அழகர்‌ மதுரைக்கு வருவதன்‌ காரணத்தைக்‌ கூறுகிறது.'

இத்திருவிழாவில்‌ அழகர்‌, கள்ளர்‌ திருக்கோலம்‌ பூண்டு வருகிறார்‌. 'நீ ஒருவர்க்கும்‌ மெய்யனல்லை என்று பெரியாழ்வாரும்‌, 'வஞ்சக்‌ கள்வன்‌ மாமாயன்‌' என்று நம்மாழ்வாரும்‌, இத்தலத்து இறைவனான - அழகரைப்‌ பாடியிருப்பதைக காட்டி: அதுகாரணமாகவே அழகர்‌, கள்ளா வேடம்‌ பூண்டு வருகிறார்‌ என்று புராணிகர்கள்‌ கூறுகின்றனர்‌. இக்கருத்து பொருத்த

கள்ளர்‌ என்ற சாதியாரில்‌ அழகர்மலைப்‌ பகுதியிலும்‌ மேலூர்‌ பகுதியிலும்‌ வாழ்கின்ற 'மேலநாட்டுக்‌ கள்ளர்‌' என்ற பிரிவினர்‌ போல அழகர்‌ வேடமிட்டு வருகிறார்‌. அச்சாதியினரின்‌ அசாரங்களுக்கேற்ற வேடத்தையே அழகர்‌ புனைந்து வருகிறார்‌ என்பது தெளிவு. கைக்கொன்றாக வளதடி எனப்படும்‌ வளரித்தடி, சாட்டை போன்ற கம்பு, மேலநாட்டுக்‌ கள்ளர்‌ சாதி ஆண்கள்‌ இடுகின்ற கொண்டை, தலையில்‌ உருமால்‌, அவர்கள்‌ பெரிதும்‌ விரும்பி அணியும்‌ வண்டிக்கடுக்கன்‌ - இவ்வாறு அமைகிறது கள்ளர்‌ வேடம்‌.











அறியப்படாத தமிழகம் - தொ பரமசிவன்

சங்கும்‌ சாமியும்‌ 

மதுரை மாவட்டம்‌ மேலூர்‌ கள்ளர்‌ சாதியினரில்‌ மணப்பெண்ணை மணமேடைக்கு அழைத்து வரும்பொழுது மணமகனின்‌ சகோதரி துிருச்சங்கு ஊதி அழைத்து வருகிறாள்‌. இவை தமிழர்கள்‌ இடத்தில்‌ முச்சங்க வழக்கம்‌ இருந்ததற்கான எச்சங்களாகும்‌.





தெய்வம் என்பதோர் தொ பரமசிவன்

மரபும்‌ மீறலும்‌ -- சாதி சமய அரசியல்‌ பின்னணி

தேவகோட்டை, சிவகங்கைப்‌ பகுதிகளில்‌ கள்ளர்‌ சாதியினரின்‌ 'நாடு' அமைப்பு இன்னும்‌ இருந்து வருகிறது. இதன்‌ வழி எல்லாச்‌ சாதியினர்‌ மீதும்‌ அதிகாரம்‌ செலுத்த அவர்களால்‌ முடியும்‌. அண்மைக்‌ காலம்வரை அரசுக்குப்‌ போட்டியாகப்‌ பொதுவளங்களை அதாவது புறம்போக்கு மர ஏலம்‌, கண்மாய்‌, மீன்பாட்டம்‌, கள்ளச்‌ சாராயம்‌ காய்ச்சுதல்‌ ஆகியவற்றில்‌ பிற சாதியினர்மீது அவர்கள்‌ மேலாதிக்கம்‌ செலுத்திவந்தனர்‌.


1980இல்‌ தேவகோட்டை அருகே பாகனேரி பில்வ நாயகி அம்மன்‌ கோயிலில்‌ பிற்படுத்தப்பட்ட 'நாட்டார்‌ கள்ளர்‌' வகுப்பினரோடு போராடியே தாழ்த்தப்பட்ட மக்கள்‌ கோயில்‌ நுழைவு உரிமை பெற்றது இதற்கு ஒரு சான்றாகும்‌. ஆக, 1930களின்‌ இறுதியில்‌ முடிந்துபோனதாக அரசியல்‌ கட்சிகள்‌ கருதிய ஒரு சமூக உரிமைச்‌ சிக்கல்‌, நாடு விடுதலை பெற்று 50 ஆண்டுக்காலம்‌ கழித்துச்‌ சமூக அரசியல்‌ உரிமைச்‌ சிக்கலாகப்‌ புதிய வடிவம்‌ காட்டுகிறது.





நீராட்டும் ஆறாட்டும் தொ பரமசிவன்

குடும்பப்‌ பெயர்களை இடும்‌ வழக்கு நம்மிடம்‌ இல்லை. தஞ்சாவூர்‌ பகுதி கள்ளர்‌ மக்களிடையே மட்டுமே அந்த வழக்கு இருந்துவருகிறது.





கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்